Add1
logo
இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர்களின் நடவடிக்கையை கண்டித்து பவானிசாகரில் நாளை கடையடைப்பு போராட்டம் || சென்னையில் ரூ.1கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்! || மீரா குமாருக்கு தமிழக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் || நீதிபதி கர்ணன் கைதை கண்டித்து விருத்தாசலம் அருகே கண்டன ஊர்வலம்! || சட்டப்பேரவை வளாகத்தில் கணினி பயிற்றுநர்கள் திடீர் தர்ணா || 54 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதி - சி.வி.சண்முகம் || டில்லியில் இ.பி.எஸ்: ஆனந்த குமார் இல்லத்தில் சந்திப்பு || தீவிபத்தில் இடிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்து லாக்கர் மீட்பு || சண்முகத்தை பாராட்டிய துரைமுருகன் || கீழ்ப்பாக்கத்தில் ரூ.1 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல் || மீரா குமார் வெற்றி பெற வாழ்த்துக்கள் - மு.க. ஸ்டாலின் || எந்த விசாரணையையும் சந்திக்க தயார்: கவர்னர்க்கு நாராயணசாமி பதில் || ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் பலி ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-17

மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)


அன்புள்ள மிதுன ராசி நேயர்களே! பலர் ரசிக்கும்படி பேசக்கூடிய ஆற்றலும், சமூகவாழ்வில் ஆர்வம் உடையவராகவும் விளங்கும் உங்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சனி அதிசாரமாக 7-ல் சஞ்சரிப்பதாலும், ஆண்டுக் கோளான குரு, சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் அலைச்சல், டென்ஷன், அசையா சொத்துகளால் வீண்விரயங்கள் ஏற்படும். என்றாலும் சனிபகவான் ஆனி 6-ஆம் தேதிமுதல் ஜப்பசி 9-ஆம் தேதிவரை ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் இருக்கும். 3-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உற்றார்- உறவினர்களின் உதவியால் எந்தவித நெருக்கடிகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். ஆவணி 27-ஆம் தேதிமுதல் குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். அழகிய குழந்தை பாக்கியம் அமையும். பணவரவு தாராளமாக இருப்பதால் வாகனங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும்.  பிள்ளைகளால் மகிழ்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடைபெறும். பூர்வீகச் சொத்து வழியில் இருக்கும் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் அதனால் பொருளாதார மேன்மைகளும் உண்டாகும். உங்கள் ராசிக்கு 3, 9-ல் சஞ்சரிக்கும் சர்ப்ப கிரகங்கள் ஆவணி 2-ஆம் தேதிக்குப் பிறகு 2-ல் ராகு, 8-ல் கேதுவாக சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு போன்றவையும் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்வீர்கள். சனி ஐப்பசி 9-ஆம் தேதிமுதல் 7-ஆம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளதால் கண்டச் சனி தொடங்கவுள்ளது. இதனால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை


குடும்பச்சூழல் ஓரளவுக்கு மகிழ்ச்சிகரமாகவே இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளித்து விடமுடியும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு திருப்தி தரும். வருட முற்பாதியில் குரு 4-ல் உள்ளதால் எதிலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகள் ஆவணி மாதத்திற்குப் பிறகு எளிதில் கைகூடும், வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கடன்கள் உண்டாகும். 

உடல் ஆரோக்கியம்


உடல்நிலை சுறுசுறுப்பாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களால் அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும். சுபச்செய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். என்றாலும் அலைச்சலும் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருப்பதன்மூலம் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

உத்தியோகம்


உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றாலும் அதனால் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். சில நேரங்களில் எவ்வளவுதான் பாடுபட்டாலும் எடுத்த பணிகளை ஒழுங்காக முடிக்க முடியாமல் போகும். எந்தக் காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

தொழில், வியாபாரம்


தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளை எதிர் கொண்டாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம் தடையின்றிக் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் இருந்த தேக்க நிலை படிப்படியாக விலகி முன்னேற்றங்கள் ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மட்டும் கவனமுடன் செயல்பட்டால் வீண்விரயங்களைத் தவிர்க்க முடியும். கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது, வேலையாட்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்


கமிஷன், ஏஜென்சி, கான்டிராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சில தடைகள் நிலவினாலும் திருப்திகரமாக வசூலாகும்.

அரசியல்


பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மக்களின் ஆதரவைப் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிவரும். தேடிவரும் கௌரவப் பதவிகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வருவாய்க்குக் குறை இருக்காது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல், உடல்நிலையில் பாதிப்பு போன்றவை உண்டாகும்.

விவசாயிகள்


விவசாயத்தில் உழைப்புக்கேற்ற பலனைப் பெற்றுவிடமுடியும். சில நேரங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டாலும் தகுந்த நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை முடித்து விடுவீர்கள். காய்கனி மற்றும் பழவகை, கீரை வகைகளாலும் லாபம் கிட்டும். கால்நடைகளுக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவற்றின் மூலம் அடைய வேண்டிய லாபங்களை அடைந்துவிடலாம்.

கலைஞர்கள்


புதிய வாய்ப்புகள் சிறப்பாக இருந்தாலும் பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். வரவேண்டிய பாக்கி பணத்தொகைகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். இடைவிடாத பயணங்களால் உடல்நிலை சோர்வடையும். விடாமுயற்சியுடன் பாடுபட்டால் வெற்றிகளைப் பெற்று விடுவீர்கள்.

பெண்கள்


பொருளாதார நிலை சிறப்பாக அமையும் என்றாலும் வரவுக்குமீறிய செலவுகளும் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் ஆவணி மாதத்திற்குப்பிறகு கைகூடும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனை அடைவீர்கள். புதிய பொருள்சேர்க்கைகள் அமையும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும்.

மாணவ- மாணவியர்


கல்வியில் கடின முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது நல்லது. உயர்கல்விக்காக எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் அமையும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு திருப்திகரமாக இருக்கும். 

மாதப் பலன்

சித்திரை


உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். சுபகாரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்களுக்கிடையே இருக்கும். கருத்து வேறுபாடுகள் விலகி ஒன்றுசேருவார்கள். தெய்வ தரிசனங் களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

வைகாசி


ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுக்குப் பஞ்சமிருக்காது. சூரியன், செவ்வாய் 12-ல் இருப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். பணவிஷயத்தில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் தடைப்படாது. உத்தியோகஸ்தர்களின் தகுதிக்கேற்ற ஊதிய உயர்வுகள் கிடைக்கப்பெறும். சுபகாரிய முயற்சிகளில் காலதாமதங்கள் நிலவும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

ஆனி


ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் 3-ல் ராகு, மாத முற்பாதியில் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து நற்பலன்களை அடைவீர்கள். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தொழில், வியாபாரம் மந்தமாக நடைபெற்றாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் வீண்விரயங்களை சந்திக்க நேரிடும் என்பதால் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

ஆடி


ராகு 3-லும், சனி 6-லும் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். 2-ல் சூரியன், செவ்வாய் இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார ரீதியாக ஏற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர் களுக்கு கௌரவப் பணிகள் கிட்டும். பெரிய மனிதர்களின் ஆசியும், ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலப் பலன்களும் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சனிக்குரிய பரிகாரங் களைச் செய்வது உத்தமம்.

ஆவணி


சூரியன், புதன் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். சனி 6-ல் இருப்பதால் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இம்மாதம் 2-ஆம் தேதி ஏற்படும் சர்ப்ப கிரக மாற்றத்துக்குப்பிறகு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு. என்றாலும் 27-ஆம் தேதிமுதல் குரு 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் கஷ்டங்கள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உற்றார்- உறவினர்களிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். பொருளாதார நிலையும் சிறப்பாக அமையும். சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.

புரட்டாசி


உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் நற்பலன்களை அடைவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். பழைய கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் திருப்தி அளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்திலிருக்கும் தடைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் நற்பலன்கள் அடையலாம். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

ஐப்பசி


சுக்கிரன் 4-லும், குரு, புதன் 5-லும் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி பிரச்சினைகள் எல்லாம் குறையும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றிக் கிட்டும். பெரிய முதலீடு செய்து தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

கார்த்திகை


ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பல்வேறுவகையில் லாபகரமான பலன்கள் உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாக அமையும். கடன்கள் தீரும். பொன் பொருள், ஆடை ஆபரணம் சேரும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறுவார்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

மார்கழி


தனகாரகன் குரு 5-ல் பலமாக இருப்பது பொருளாதாரரீதியாக நற்பலனை தரும் அமைப்பு என்றாலும் 2-ல் ராகு, 7-ல் சூரியன், சனி இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல்நிலையில் கவனம் செலுத்த நேரிடும். எந்த காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை திருப்தியளிக்கும் என்றாலும் தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்ய எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

தை


ராகு 2-ல், சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். என்றாலும் 5-ல் குரு சஞ்சரிப்பதால்  எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். பொருளாதார நிலை திருப்தியாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

மாசி


இம்மாதம் 5-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும், ஒற்றுமையும் நிலவும். சுபகாரியங்கள் கைகூடும். உற்றார்- உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். சேமிப்பு பெருகும். தொழிலில் லாபம் கிட்டும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

பங்குனி


உங்கள் ராசியாதிபதி புதன், சூரியன், சுக்கிரனுடன் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மேன்மைகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படும். இதுவரை தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்களுக்கிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். பழைய கடன்கள் குறைந்துவிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

அதிர்ஷடம் அளிப்பை


எண்:         5, 6, 8.
நிறம்:     பச்சை, வெள்ளை.
கிழமை:     புதன், வெள்ளி.
கல்:         மரகதம்.
திசை:     வடக்கு.
தெய்வம்:     விஷ்ணு.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :