Add1
logo
தமிழ் மொழியை காக்க 26–ந்தேதி கலந்தாய்வு - ராமதாஸ் || இலவச மின்சாரம் வந்தது எப்படி? - குமரிஅனந்தன் || தேர்தல் கமி‌ஷன் திறமையாக செயல்பட்டால் பண பட்டுவாடாவை முடக்கலாம் - சரத்குமார் || தொப்பி அணிந்து ஆர்.கே.நகரில் - தினகரன் பிரசாரம் தொடங்கினார் || தமிழகத்தில் 11 முக்கிய அணைகள் வறண்டன || சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிக்காக ரூபாய் 10 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தினார் ஐகோர்ட் நீதிபதி || டீசல் மீதான வரி உயர்வை கண்டித்து 30ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் 4 லட்சம் லாரிகள் ஓடாது || மணப்பாறையில், வீடு வீடாக சென்று கமிஷனர் வரி வசூலிக்கிறார் || பாய்மரப் படகு மூலம் உலகை சுற்றி வர இருக்கும் இந்திய கடற்படை பெண்கள் || 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவேன் - டோனி || ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சுவாரஸ்யமாகவும் சவாலானதாகவும் இருக்கும் - ஜி.கே.வாசன் பேச்சு || காணாமல் போன ஏரியைக் கண்டுபிடித்தார்! கலெக்டருக்கு குவியும் வாழ்த்து! || 25000 மெட்ரிக் டன் எடை தாதுமணல் பறிமுதல் (படங்கள்) ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
......................................
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
......................................
மாசி மக மகத்துவம்!
......................................
மார்ச் மாத ராசி பலன்கள்
......................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
......................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
......................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
......................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
......................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
......................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
......................................
யாதுமாகி நின்றாள்!
......................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
......................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
......................................
01-03-17

ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)


அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே! இனிமையான சுபாவத்தால் பிறரை எளிதில் வசப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். சுபகாரியங்கள் கைகூடும். கடன்களும் படிப்படியாகக் குறையும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். ஆண்டின் தொடக்கத்தில் 5-ல் சஞ்சாரிக்கும் குரு ஆவணி 27-ஆம் தேதிமுதல் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதாலும் ஐப்பசி 9-ஆம் தேதிமுதல் சனி 8-ஆம் வீட்டிற்கு மாறுதலாவதால் அஷ்டமச்சனி தொடங்கவுள்ளதாலும் ஆண்டின் பிற்பாதியில் கவனமாக செயல்படுவதே உத்தமம். நெருங்கியவர் களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு மறைமுக எதிர்ப்புகள், வேலையாட்களின் ஒத்துழைப்பற்ற நிலை போன்றவற்றால் அபிவிருத்தி குறையும். கொடுக்கல்- வாங்கலில் நம்பிய வர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பெரிய தொகையை ஈடுபடுத் தும் போது கவனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொண்டால் மட்டுமே அன்றாடப்பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு அஷ்டமச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதி என்பதால் அதிக கெடுதியைச் செய்யமாட்டார். ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல், தொழிலில் வீண்பிரச்சினை ஏற்படும் என்றாலும் ஆவணி 2-ஆம் தேதி ஏற்படவிருக்கும் சர்ப்ப கிரக மாற்றத்திற்குப் பிறகு 3-ல் ராகு, 9-ல் கேது சஞ்சரிக்க இருப்பதால் குரு, சனி சாதகமற்று சஞ்சரித்தாலும் எதையும் சமாளித்து முன்னேற்றங்களை பெற முடியும்.

குடும்பம், பொருளாதார நிலை


குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அவ்வப்போது சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஆண்டின் முற்பாதியில் சாதகமான பலன்களை அடைய முடியும். ஐப்பசி மாதம் 9-ஆம் தேதி முதல் அஷ்டமச்சனி தொடங்க இருப்பதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது. உற்றார்- உறவினர்களால் தேவையற்ற மனக் கவலைகள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்


உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் பெரிய கெடுதிகள் இல்லை. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது மன நிம்மதியை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொலைதூரப் பயணங்களால் அலைச்சல் அதிகரித்து உடல்நிலை சற்று சோர்வடைந்தாலும் அதன்மூலம் அனுகூலப் பலன்களை அடையமுடியும். குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்வீர்கள்.

உத்தியோகம்


ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். ஊதிய உயர்வுகளால் வாழ்க்கைத்தரம் உயரும். பணியில் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி உயர்வை அடைவீர்கள். பிற்பாதியில் எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர திகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

தொழில், வியாபாரம்


தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெரிய முதலீடுகளில் தொடங்க நினைக்கும் தொழிலை ஆண்டின் முற்பாதியில் செய்வது நல்லது. புதிய கூட்டாளிகளின் சேர்க்கை கிடைக்கப்பெறும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் அலைச்சல் இருந்தாலும் ஓரளவுக்கு அனுகூலமும் இருக்கும். அரசு கடனுதவிகள் தாமதப்படும். 

கொடுக்கல்- வாங்கல்


கமிஷன், ஏஜென்சி, கான்டிராக்ட் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளிக்க முடியும்.

அரசியல்


செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமை யாவும் உயரும். ஆண்டின் முற்பாதி வரையில் ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். மாண்புமிகு உயர்பதவிகள் கிடைக்கப் பெறும். பிற்பாதியில் மக்களின் தேவையை உணர்ந்து அவற்றை நிறைவேற்றினால் மட்டுமே நற்பெயரை எடுப்பீர்கள்.

விவசாயிகள்


மகசூல் சிறப்பாக இருக்கும். விளைபொருட்கள் நல்ல விலைபோகும். தாராள தனவரவுகள் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபம் பெறுவீர்கள். ஆழ்கிணறு தோண்டுவது, புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவையும் நிறைவேறும். ஆண்டின் பிற்பாதியில் பங்காளிகளை அனுசரித்துச் செல்வதும், வாய்க்கால்- வரப்பு பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் மிகவும் நல்லது.

கலைஞர்கள்


எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் கொண்ட படவாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமையும். இசை மற்றும் பாடல் துறைகளில் உள்ளவர்களும் ஏற்றமிகு பலன்களைப் பெற முடியும். ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார நிலையில்  நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் சுக வாழ்வு பாதிப்படையும்.  

பெண்கள்


தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி தரும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியம் அமையும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனை அடையமுடியும். புதிய பொருட் சேர்க்கைகளும், ஆடை, ஆபரணமும் சேரும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பணிபுரியும் பெண்கள் ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறுவார்கள்.

மாணவ- மாணவியர்


கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சாதனைகள் படைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோர், ஆசிரியருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிக்கும் நற்பெயரை வாங்கித் தருவீர்கள். ஆண்டின் பிற்பாதியில்  நண்பர்களிடம் பழகும்போது கவனமாக இருப்பது நல்லது.

மாதப் பலன்

சித்திரை


ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். சிவபெருமானை வழிபடவும்.

வைகாசி


ஜென்ம ராசியில் செவ்வாய், சூரியன் இருப்பதால் கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. ராசியாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்திலும், குரு 5-லும் இருப்பதால் பல்வேறு வகையில் சாதாகமான பலன்களை அடைவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பாராத தனசேர்க்கைகள் கிடைக்கப்பெற்று உங்களது பிரச்சினைகள் எல்லாம் குறையும். உத்தியோகஸ்தர்கள் பிறர்செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்கக்கூடும் என்பதால் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது உத்தமம். முருகப்பெருமானை வழிபடவும்.

ஆனி


பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுக்குப் பஞ்சமிருக்காது என்றாலும் சூரியன், செவ்வாய் 2-ல் இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு ஏற்படும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை முன்னேற்றமாக இருக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி ஏற்படும். தொழில், வியாபாரம் லாபம் தரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபடவும்.

ஆடி


ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். 5-ல் குரு இருப்பதால் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். தொழில், பொருளாதார ரீதியாக ஏற்றங்களை அடைவீர்கள். வாழ்வில் இருக்கும் பிரச்சினைகள் குறையும். உடல்நிலை முன்னேற்றமடையும். விலகியிருந்த உறவுகளும் நட்பு பாராட்டும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் அமையும்.  கொடுக்கல்- வாங்கலில் வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்திலிருக்கும் போட்டிகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். சனிக்குப் பரிகாரம் செய்யவும்.

ஆவணி


இம்மாதம் 2-ஆம் தேதி முதல் சர்ப்ப கிரகங்களான ராகு 3-லும், கேது 9-லும் சஞ்சரிக்க இருப்பதால் வீண்பிரச்சினைகள் குறையும். 3-ல் செவ்வாய், 4-ல் புதன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் வலிமையை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். இம் மாதம் 27-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப் பெயர்ச்சிக்குப்பிறகு குரு 6-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது சற்று கவனம் தேவை. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

புரட்டாசி


உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் சுக்கிரன், புதன் இருப்பதால் நற்பலனை அடைவீர்கள். என்றாலும் குரு 6-ல் இருப்பதால் பணவிஷயத்தில் கவனத்தோடிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்தே ஏற்றம் பெறமுடியும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச்செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சனிபகவானை வழிபடவும்.

ஐப்பசி


இம்மாதம் மாதக் கோளான சூரியன் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் விலகி நிம்மதி ஏற்படும். 5-ல் சுக்கிரன் இருப்பதால் புதிய பொருட்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். இம்மாதம் 9-ஆம் தேதி முதல் உங்களுக்கு அஷ்டமச்சனி தொடங்க இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்தமானநிலை இருக்கும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

கார்த்திகை


குரு 6-லும், சூரியன் 7-லும் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாகச் செயல்பட்டால்தான் நற்பலனை அடையமுடியும். 7-ல் புதன், 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிவரும். நெருங்கியவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெறமுடியும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

மார்கழி


செவ்வாய் 6-லும் சுக்கிரன் 7லும் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். என்றாலும் 8-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் சிறுசிறு உடல் பாதிப்புகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகளால் கணவன்- மனைவி ஒற்றுமை குறையும்.  நெருங்கிய வர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எந்த காரியத்தையும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதன்மூலம் நற்பலன்களைப் பெறமுடியும். பொருளாதாரநிலை திருப்தியளிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியிருக்கும். சிவனை வழிபடவும்.

தை


உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 9-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு. சனி சாதகமற்றிருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட்டால் மட்டுமே சாதகப்பலனை அடைய முடியும். பிறர்விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தினால் வீண்விரயங்களை சந்திக்க நேரிடும். குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். பணவரவுகளில் ஏற்றத் தாழ்வுகள் நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பாராத இடமாற்றம் அலைச்சலை உண்டாக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

மாசி


சூரியனும், ராசியாதிபதி சுக்கிரனும் 10-ல் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில் ரீதியாக ஏற்றங்கள் ஏற்படும். பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். உற்றார்- உறவினர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் மறையும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். உடல்நிலை சுமாராக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. நினைத்த காரியங்களை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் உண்டாகும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

பங்குனி


ஜென்ம ராசிக்கு 11-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார உயர்வுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணம் சேரும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். வெளியூர், வெளிநாடுகள் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். அம்மனை வழிபடவும்.

அதிர்ஷ்டம் அளிப்பை


எண்     :     5, 6, 8.
நிறம்:    வெண்மை, நீலம்.
கிழமை:    வெள்ளி, சனி.
கல்:        வைரம்.
திசை:    தென்கிழக்கு.
தெய்வம்:     விஷ்ணு, லட்சுமி.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :