Add1
logo
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு || தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-1714-4-2017 முதல் 13-4-2018 வரை
12 ராசியினருக்கும் ஓராண்டு வழிகாட்டி!

கணித்தவர் ஜோதிட மாமணி முனைவர்
முருகு பாலமுருகன்


மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)


அன்புள்ள மேஷ ராசி நேயர்களே! நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும், தன்னை நம்பியவர்களை எந்த கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றக்கூடிய தர்ம குணமும் கொண்ட உங்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடத்தில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால், ஆண்டில் முற்பாதியில் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமாக நடந்து கொள்வது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் அதிசாரமாக 9-ல் சஞ்சரிக்கும் சனி ஆனி 6-ஆம் தேதி முதல் ஜப்பசி 9-ஆம் தேதி வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கவுள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. இக்காலங்களில் உழைப்பிற்கான பலனை அடைவதிலும் சில இடையூறுகள் உண்டாகும்.  ஆண்டின் முற்பாதியில் சில தடைகளை சந்தித்தாலும், ஜப்பசி 9-ஆம் தேதி முதல் சனி முழுமையாக 9-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதும், ஆவணி 27-ஆம் தேதி ஏற்படவுள்ள மாற்றத்தின் மூலம் குரு உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் பிற்பாதியில் அதிகப்படியான லாபத்தை அடைய முடியும். போட்டிகள், எதிர்ப்புகள் யாவும் படிப்படியாகக் குறைந்து எல்லா வகையிலும் அனுகூலப் பலனை அடைவீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் ஆவணி மாதத்திற்குப் பிறகு எளிதில் கைகூடும். இவ்வருடம் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்களும் நடைபெறும். பொருளாதாரநிலையில் முற்பாதியில் சில தடைகள் நிலவினாலும், பிற்பாதியில் பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும், பதவி உயர்வுகளும் கிடைக்கப் பெறுவதோடு திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். ஆண்டின் முற்பாதியில் கவனமுடன் செயல்பட்டால் ஆண்டின் பிற்பாதியில் நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் 5, 11-ல் சஞ்சரிக்கும் சர்ப்ப கிரகங்களான ராகு- கேது ஆவணி 2-ஆம் தேதி முதல் கேந்திர ஸ்தானங்களான 4, 10-ல் சஞ்சரிக்க இருப்பது தேவையற்ற அலைச்சல்கள், இருப்பதை அனுபவிக்கத் தடைகள், அசையா சொத்து வழியில் சுபச்செலவுகள் போன்றவற்றை ஏற்படுத்தும். என்றாலும் குரு, சனியின் சாதகமான சஞ்சாரத்தால் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை


குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் விலகி அன்யோன்யம் உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிய பொருள் சேர்க்கைகள் அமையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பு சாதகமான பலன்கள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்


உடல் நிலையிலிருக்கும் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். அடிக்கடி சிறுசிறு பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சியுடனே அமைவார்கள். எதிர்பாராத சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களைக் குறைத்துக்கொண்டால் ஆரோக்கியமான உடல் நிலை அமையும்.

உத்தியோகம்


உத்தியோகஸ்தர்கள் ஆண்டின் முற்பாதியில் சுமாரான பலனை அடைய நேர்ந்தாலும் ஆண்டின் பிற்பாதியில் அனுகூலமான  பலன்களைப் பெறுவீர்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிட்டும். விரும்பிய இடமாற்றங்களையும் பெறமுடியும். திறமைக்கேற்ற உயர்வுகளும் அதிகாரிகளின் ஆதரவுகளும் கிடைத்து மனமகிழ்ச்சியை அடைவீர்கள்.

தொழில், வியாபாரம்


ஆண்டின் தொடக்கத்தில் பெரிய முதலீடு செய்து தொடங்க நினைக்கும் காரியங்களில் சற்று கவனம் தேவை. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம். தேவையற்ற சோதனைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தாலும் ஆண்டின் பிற்பாதியில் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெறும். அரசு வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்


கமிஷன், ஏஜென்சி, கான்டிராக்ட் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பொருளாதார நிலை உயர்வாக அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் கிட்டும்.

அரசியல்


எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெரிய மனிதர்களின் மத்தியில் உங்கள் புகழ், கௌரவம் யாவும் கூடும். உங்களின் வார்த்தைக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். மக்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். நல்ல பதவி தேடி வரும்.

விவசாயிகள்


ஆண்டின் தொடக்கத்தில் வாய்க்கால், வரப்பு பிரச்சினைகளால் தேவையற்ற வீண்விரயங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாவதோடு விளைச்சலும் பெருகும். சந்தையிலும் விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்க முடியும். பூமி, மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். கால்நடைகளாலும் நல்ல லாபம் உண்டு.

கலைஞர்கள்


ஆண்டின் முற்பாதியில் சில சோதனைகளை சந்தித்தாலும், பிற்பாதியில் முன்னேற்றம் அடைவீர்கள். தடைப்பட்ட பணவரவுகள் கிடைக்கப்பெறும். தொழிலில் சாதனைகள் பலசெய்து ரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வெளிநாடு சென்று படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் அமையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

பெண்கள்


ஆண்டின் முற்பாதியில் சிறுசிறு சோதனைகளை சந்திக்க நேர்ந்தாலும் ஆண்டின் பிற்பாதியில் நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். தாய்வழியில் ஆதரவு கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து பொன், பொருள் சேரும். புத்திரர்களின் ஆதரவு சிறப்பாக அமையும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகத்தைப் பெறுவார்கள். பணிபுரியும் பெண்கள் ஆண்டின் பிற்பாதியில் ஏற்றத்தைப் பெறுவார்கள்.

மாணவ- மாணவியர்


ஆண்டின் முற்பாதியில் கல்வியில் ஈடுபாடற்ற நிலை ஏற்பட்டாலும் ஆண்டின் பிற்பாதியில் கல்வியில் நிலவிய மந்தநிலைகள் மாறி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். விளையாட்டுத் துறைகளிலும் ஈடுபட்டு வெற்றி பெறமுடியும். சக நண்பர்களின் ஆதரவுகளும் கிடைக்கும். விடுமுறை நாட்களை நல்ல விதமாக கழிக்க சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

மாதப் பலன்

சித்திரை


ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. குரு வக்ரகதியில் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களால் உடல்நிலையிலும் பாதிப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவதன் மூலம் வேலையில் நன்மதிப்பைப் பெறலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப்பெறும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

வைகாசி


உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இம்மாதம் 13-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள். நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சினைகள் யாவும் மறைந்து முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் ஏற்படும். உற்றார்- உறவினர்களிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நனவாகும். கொடுக்கல்- வாங்கலில் சரள நிலை இருக்கும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

ஆனி


இம்மாதம் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் செவ்வாய், சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றமிகு பலன்கள் ஏற்படும். சுக்கிரன் ஜென்ம ராசியில் பலமாக இருப்பதால் புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தொழில், பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகளால் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெறும். குருபகவானை வழிபடுவது உத்தமம்.

ஆடி


உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் 6-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதாலும் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரம் ஓரளவுக்கு லாபம் தரும். குடும்பத்தில் பணப்பிரச்சினை இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைப்பதில் தாமதங்கள் உண்டாகும். சிவன், முருக வழிபாடு செய்வது நல்லது.

ஆவணி


இம்மாதம் 2-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப்ப கிரக மாற்றத்திற்குப்பிறகு 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிக்கவிருப்பதால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்கும் நிலை, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். 27-ஆம் தேதி முதல் 7-ல் குரு சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் நல்லது. சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார உயர்வுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.    

புரட்டாசி


ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். பழைய கடன்கள் படிப்படியாகக் குறையும். புதிய பொருள் சேர்க்கைகள் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் முயற்சிகள் பலன் அளிக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவார்கள்.

ஐப்பசி


ராசியாதிபதி செவ்வாய் 6-ல் பலமாக அமையப்பெற்றிருப்பதாலும், 7-ல் குரு சஞ்சரிப்பதாலும் தாராள பணவரவுகள் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி சாதகப் பலனை அடைவீர்கள். சூரியன் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இம்மாதம் 9-ஆம் தேதி ஏற்படும் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு அஷ்டமச்சனி உங்களுக்கு முழுமையாக முடிவடைய இருப்பதால் இனி உங்கள் வாழ்வில் எல்லா வகையிலும் முன்னேற்றம் அடைவீர்கள். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அபரிமிதமான லாபம் பெறுவார்கள். துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

கார்த்திகை


உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சங்கள் அதிகரிக்கும். என்றாலும் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்களும் குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்து லாபம்காண முடியும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவதோடு அதிகாரிகளின் ஆதரவையும் பெறமுடியும். சிவபெருமானை வழிபடுவது சிறப்பு.

மார்கழி


சம சப்தமமான ஸ்தானமான 7-ல் குரு அமைந்து ஜென்ம ராசியைப் பார்வை செய்வதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைவீர்கள். சூரியன் 9-ல் இருப்பதால் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பெரியோர்களின் ஆசியால் உங்கள் கஷ்டங்கள் விலகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களும் குறையும். உடல் ஆரோக்கியமும் சுறுசுறுப்பாக அமையும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் போட்டிகள் ஏற்பட்டாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். முருகப் பெருமானை வழிபடவும்.

தை


குரு 7-லும், மாதக் கோளான சூரியன், சுக்கிரன் 10-லும் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். தொழில், பொருளாதாரரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவர்களால் லாபம் கிட்டும். நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடைவார்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார், உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.   

மாசி


இம்மாதம் குரு 7-லும், சூரியன், சுக்கிரன் 11-லும் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். செவ்வாய் 8-ல் இருப்பதால் வாகனங்களில் செல்லும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி தடபுடலாக நடைபெறும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். சமுதாயத்தில் பெயர், புகழ், அந்தஸ்து உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். முருகப் பெருமானை வழிபடவும்.

பங்குனி


உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் குரு வக்ரகதியில் இருப்பதாலும் பணவரவில் தடை, வீண்அலைச்சல் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் ஏற்படும். உடல்நிலையில் சற்று சோர்வு, மந்தமான நிலை உண்டாகும். வாகனங்களால் வீண்செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். தொழிலில் உள்ள பிரச்சினைகள் ஓரளவு குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பை


எண்:           1, 2, 3, 9.     
நிறம்:     ஆழ் சிவப்பு.
கிழமை:     செவ்வாய்.
கல்:         பவளம்.
திசை:     தெற்கு.
தெய்வம்:     முருகன்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :