Add1
logo
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் || இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி || கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் || சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம் || உங்களுக்காக காத்திருக்கிறேன்! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்! || நல்ல பஸ் எப்ப விடுவீங்க... ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர் || நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-17மேஷம்

ந்த மாதம் முழுவதும் அட்டமச்சனி ஒருபுறம் உங்களுக்கு நடந்தபோதிலும், குரு 12-ஆம் தேதி 7-ல் இருந்து ராசியைப் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகும். எனவே, உங்கள் காரியங்களில் நிலவிய தடை, தாமதங்களின் வேகம் குறையும். சோகம் தணியும். 12-ஆம் தேதி மீண்டும் கன்னி ராசிக்கு குரு மாறினாலும், குடும்ப ஸ்தானத்தை (2-ஆம் இடத்தை) பார்ப்பதோடு சனியும் பார்க்கக்கூடும். அதனால் பொருளாதாரத்தடை விலகும். சரளமான பணப்புழக்கம் உருவாகும். குடும்பத்திலும் நல்லிணக்கம் நிலவும். பருவ வயதினருக்கு திருமணம் கைகூடும். பாக்கியாதிபதி குரு கன்னியில் நின்று 2-ஆம் இடத்தைப் பார்க்கும் காலம், வரவேண்டிய பணம் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடன் கொடுக்கப்படும் ஆரோக்கியத்தில் தெளிவான நிலை உருவாகும். சிலருக்கு தவிர்க்கமுடியாத பயணம் ஏற்பட் டாலும், அதனால் ஆதாயமும் லாபமும் எதிர்பார்க்கலாம். 10-க்குடைய சனி 10-ஆம் இடத்தைப் பார்ப்பதோடு, மாதப்பிற்பகுதியில் குருவும் 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்ம கர்மாதிபதி யோகம் என்பதால், செல்வாக் கும் பிரபல்யமும் உண்டா கும். அட்டமச்சனி வேகம் குறைய சனிக்கிழமை தோறும் கால பைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் தொடர்ந்து 11-ல் உச்சம் என்பதால், உங்கள் தொழில், வாழ்க்கை, உத்தியோகம் இவற்றில் எந்த பாதிப்பும் இல்லாமல் இயங்கும். நான்குவழிச் சாலையில் (பைபாஸ் ரோட்டில்) ஸ்பீடு பிரேக்கர் (வேகத்தடை) இல்லாத ரோட்டில் வாகனம் 100 கிலோமீட்டர் வேகத்தில் போவதுபோல இயங்கும். மாத முற்பகுதிவரை குரு 6-ல் மறைவாக இருப்பதால் கடன், போட்டி, பொறாமை காணப்பட்டாலும், ராசிக்கு யோகாதிபதியும் தர்மகர்மாதிபதியுமான சனி ராசியைப் பார்ப்பது பரிகாரம் ஆகும். மாதப் பிற்பகுதியில் குரு 5-ல் மாறியதும் ராசியைப் பார்ப்பதோடு ராசியாதிபதியான சுக்கிரனையும் பார்க்கப்போவதால் தடைகள் உடைபடும். ஆக்கப்பூர்வமான செயல்களை ஊக்கமாக செயல்படுத்தலாம். உங்களுக்குப் போட்டியாகவும் எதிரியாகவும் தொல்லை கொடுத்தவர்கள் எல்லாம் எல்லை கடந்து போய்விடுவார்கள். ஆக, எதிர்ப்பே இல்லாத ஏகமனதான தேர்வுக்கு ஆளாவீர்கள். பொருளாதாரத்திலும் ஆரோக்கியத்திலும் இனி எல்லாம் இனிதான பலனைச் சந்திக்கலாம். திருநாவலூர் சென்று சுக்கிர லிங்கத்தை வழிபடவும். சுந்தரர் அவதரித்த தலம்.

மிதுனம்

இந்த மாதம் உங்கள் ராசியை குரு பார்ப்பதால் எடுத்த காரியங்கள் எல்லாம் இனிதே ஈடேறும். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகளில் எதிர்பார்த்த மாதிரி அமையும். சனி 6-ல் இருப்பதால் கடன், எதிரி, போட்டி, பொறாமைகள் மறைந்துவிடும். நோயின் தாக்கமும் குறைந்துவடும். தைரியமாக சில முயற்சி களில் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். ஒருசிலருக்கு (எதிரிகளுக்கு) அது பாதகமாக இருந்தாலும், நண்பர்களுக்கும் நல்லவர்களுக்கும் அது சாதகமாக அமையும். எப்போதுமே ஒரு பக்கம் மேடாக உயர்ந்தால் இன்னொரு பக்கம் பள்ளமாகத்தானே இருக்கும். இயற்கையின் அமைப்பே அதுதானே! கிரக அமைப்பின்படி சொந்தம் சுற்றத்தார் பந்தபாசமாக இருந்தால், வெளியில் நண்பர்கள் வட்டாரத்தில் இணக்கமும் நெருக்கமும் குறைவாக இருக்கும். அதாவது, பிளஸ் என்று இருந்தால், மைனஸ் என்று ஒன்று இருப்பதுதானே இயற்கை! உத்தியோகத்தில், தொழில்துறையில் உயர்வும் மகிழ்ச்சியும் மனநிறைவும் இருந்தால் குடும்பத்தில் பிரச்சினை இருக்கலாம். எல்லாருக்கும் எல்லாமும் நிறைவாக இருப்பதில்லையே! லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நிறைவு உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது, 5-ல் சனி! மதிப்பு, மரியாதை, செல்வாக்கு எல்லாம் திருப்திகரமாக அமையும். வேலை, உத்தியோகத்தில் மேலிடத்தாரின் பாராட்டும் அன்பும் ஆதரவும் பெருகும். பம்பரமாகச் சுற்றி எல்லாப் பணிகளையும் செவ்வனே செய்து முடிக்கலாம். உயரதிகாரிகளின்  அல்லது முதலாளிகளின் நோக்கமறிந்து, எள் என்பதற்குள் எண்ணெய்போல செயல்பட்டு சிறப்படையலாம். குடும்பத்திலும் அன்பும் ஆதரவும் ஒற்றுமையுமாகத் திகழலாம். ஆனால், பொருளாதாரத்தில் மட்டும் பூரண நிறைவுக்கு இடமில்லை. அதற்காக வறுமையும் தரித்திரமும் என்றும் கூறமுடியாது. அறுசுவை நளபாகமாகச் செய்யப்பட்ட உணவில் சில அயிட்டத்தில் உப்புகூடியும் சில அயிட்டத்தில் உப்பு குறைவாகவும் இருந்தால் சாப்பாட்டில் திருப்தி ஏற்படாது அல்லவா! அதுமாதிரி ஒரு சூழ்நிலை! என்றாலும் அதைப் பொருட்படுத்தாமல் கடமையைச் செய்- பலனை எதிர்பார்க்காதே என்று செயல்படுவீர்கள். உடனடியாக இல்லாவிட்டாலும் பிறகு அந்த உழைப்பிற்கேற்ற பலன் உங்களை வந்தடையும். சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு அல்லது அந்த மந்திர ஜெபம் செய்யலாம்.

சிம்மம்

சிம்ம ராசியில் ஜென்ம ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பதால், உங்களுடைய செயல்களிலும் முயற்சிகளிலும் இடையூறு களும் தடைகளும் காணப்படலாம். சனி 4-ல் நின்று ராசியைப் பார்ப்பதும் நல்லதல்ல. இதன் பலன் மூன்று வகைப்படும். அதாவது, கோடி கோடியாகப் பணம் சேர்ந்தாலும் சொத்துக்குவிப்பு வழக்கு பாயும். அதன் பலனாக விசாரணையும் தண்டனையும் ஏற்படலாம். இரண்டாவது, சராசரி வாழ்க்கையாக- உழைப்புக்கேற்ற ஊதியமாக- அளந்து படிபோட்ட மாதிரி பொருளாதார நிலை காணப்படும். கிணற்றில் ஊற்று நீர் வற்றியதும் ஊறஊறக் காத்திருந்து தண்ணீரை இறைக்க வேண்டும். அதுபோல கையில் இருப்பு கடைசி 100 ரூபாய் இருக்கும்வரை, அடுத்த வரவு வராது. அது தீர்ந்ததும் ஆயிரக்கணக்கில் வரவு வரும். மூன்றாவது வகை- நித்திய கண்டம் பூரண ஆயுசாகவும், என்றும் சிரஞ்சீவிபோல ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் ஒரேமாதிரியாக இருக்கும். முதல் வகை வற்றாத ஜீவநதிபோல- கங்கை போல! இரண்டாவது வகை கண்மாய்- மழைபெய்யும்போது நீர் நிறையும். மூன்றாவது வகை ஆறு, குளம், குட்டைபோல அவ்வப்போது நீர் ஓடும். ஜென்ம ராகுவின் வேகம் தணிய காளஹஸ்தி சென்று வழிபடலாம்.

கன்னி

கன்னி ராசிக்கு 12-ல் ராகு, 6-ல் கேது, 3-ல் சனி. பாவ கிரகங்கள் பாவ ஸ்தானங்களில் நிற்பது- மைனஸ் ஷ் மைனஸ்= பிளஸ் என்பது மாதிரி. கெட்ட கிரகம் கெட்ட ஸ்தானத்தில் இருப்பதால் கெடுதல்கள் விலகும். தண்டச்செலவு, வெட்டிச்செலவு எல்லாம் குறைந்துவிடும். அப்படிச் சொல்வதைவிட அறவே நீங்கிவிடும் எனலாம். 3-ல் சனி நிற்பதால் பங்காளி வகையில் சிலருக்கு சொத்துப் பிரச்சினை ஏற்படலாம். சிலருக்கு பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான பிரச்சினைகள் தலைவலியைத் தரலாம். சிலர் ஏற்கெனவே வாங்கிப் போட்ட இடத்தில் தனக்கு உரிமையுண்டு என்று சிக்கலை உருவாக்கலாம். அதைக் கட்டப்பஞ்சாயத்துமூலம் சமாதானப்படுத்துவதா அல்லது சட்டரீதியாகச் சந்திக்கலாமா என்பது குழப்ப நிலையாக அமையும். குடும்பத்தில் திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். அல்லது புத்திர சம்பந்தமான விசேடங்கள் கைகூடும். பொதுவாக, ஆரோக்கியத்தில் பாதிப்புக்கு இடமில்லை. சிறுசிறு பீடைகள் ஏற்பட்டாலும் உடனே நிவர்த்தியாகிவிடும். சிலருக்கு வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் உண்டாகும். கும்பகோணம் அருகில் குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபடவும்.

துலாம்

துலா ராசிக்கு ஏழரைச்சனியில் கடைசிக்கூறு பாதச்சனி நடக்கிறது. 2017 டிசம்பரில்தான் சனிப்பெயர்ச்சி. அப்போதுதான் ஏழரைச்சனி முழுமையாக விலகும். தற்சமயம் சனி அதிசாரமாக தனுசு ராசிக்கு மாறியதாகவும், அதனால் துலா ராசிக்கு ஏழரைச்சனி விலகி விட்டதாகவும் சொல்லுகிறார்கள். அது திருக்கணித பஞ்சாங்கப்படி சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கமே பெரும்பான்மையாக அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக் கோவில்கள் அனைத்திலும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேதுப் பெயர்ச்சி போன்ற கிரகப் பெயர்ச்சிகள் எல்லாம் வாக்கியப் பஞ்சாங்க தேதி, நேரப்படிதான் நடக்கிறது. ஜோதிடரீதியாக அனுபவத்தில் எது சரியாக இருக்கிறது என்பதைப் பொருத்துத்தான் முடிவும் தீர்வும் அமையும். தீர்ப்பு என்பது வேறு; தீர்வு என்பது வேறு! ஆங்கில வைத்தியம் அலோபதி சரியா? ஆயுர்வேதம் சரியா? ஹோமியோபதி சரியா? சித்த வைத்தியம் சரியா? யுனானி வைத்தியம் சரியா? நோயாளியின் நோய் எந்த வைத்தியத்தில் சரியாகிறது என்பதைப் பொருத்தே அந்த வைத்தியம் சரி! எனவே, ஏழரைச்சனியால் குடும்பம், வாழ்க்கை, தொழில் என சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆஞ்சனேயரை வழிபட்டால் ஆறுதல் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரம் அனுகூலமாக இருக்கிறது. ஆனால், ஜென்மச்சனியின் சஞ்சாரம் அனுகூலமில்லை. அதனால் உங்கள் நிலை தமிழ்நாட்டு அரசியல் நிலைபோல நிர்ணயிக்க முடியாத நிலையாக இருக்கிறது. துணிவோடு முடிவெடுக்க முடியாத தற்காலி முதல்வர், பயத்தால் விலைபோன எம்.எல்.ஏக்கள், பதவி ஆசையால் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று மதில் மேல் பூனையாக நிற்கும் கட்சியாளர்கள், எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மத்தியஸ்தர்- இப்படி நீங்கள் தொழில், குடும்பம், பொருளாதாரம், மனைவி- மக்கள், சொந்த பந்தம் என்று எல்லாவற்றிலும் அவஸ்தைப்படும் நிலை! ஆனால் உணவு, உடை, உறைவிடம் என்ற வகையில் பஞ்சமில்லை, வறுமையில்லை. ஆனால் சில சமயம் கௌரவப் பிச்சையெடுத்து பொருளாதாரத்தைச் சரிக்கட்டும் நிலை. இதில் குடும்ப உறுப்பினர்களை ஒருவரை சரிக்கட்டி ஆதரவு காட்டினால் இன்னொருவருக்கு வருத்தம் அல்லது பகை! தர்மசங்கடமான நிலையில் தவிப்பீர்கள். வாசுதேவநல்லூர் அருகில் தாருகாபுரம் சென்று மத்தியஸ்தநாதரை வழிபடவும்.

தனுசு

தனுசு ராசிக்கு 11-ல் குரு அதிசாரமாக இருப்பது ஒருவகையில் பலம்தான். அடுத்து வக்ரமாகி 10-ல் மாறினாலும் குற்றமில்லை. மதிப்பு, மரியாதை, செல்வாக்குக்கு குறைவில்லை. அதேசமயம் விரயச்சனி 2017 டிசம்பர் வரை இருப்பதால், தவிர்க்க முடியாத செலவுகளும் அத்தியாவசியமான பயணங்களும் இருக்கும். சிலசமயம் மற்றவர்கள் செலவில் ஊர்சுற்றிப் பார்க்கலாம். ஸ்டார் ஹோட்டலில் தங்கலாம். சிலசமயம் சொந்தச் செலவில் இதை அனுபவிக்கலாம். சிலசமயம் செலவழித்து அழைத்துப்போய் அம்போ என்று நடுவழியில் விட்டுவிட்டுப் போய்விடலாம். அப்படியே போய்விட்டாலும், வேறு ஒரு நண்பர் அழைத்துப்போய் வீட்டில் விடலாம். இது ஒரு உதாரணம்தான். இப்படி உங்கள் காரியங்களும் செயல்களும் ஒருவர் ஆரம்பித்து வைக்க இன்னொருவரால் முடிவு பெற்றுவிடும். அதாவது, பஸ் ஸ்டாண்டில் வரிசையாக பஸ் நிற்கும். எந்த பஸ் முதலில் போகும் என்று தெரியாமல் எதிலும் ஏறாமல் நிற்பார்கள். டிரைவர் வந்ததும் இது முதலில் புறப்படும் என்று ஏறி உட்கார்ந்ததும், அந்த பஸ்ஸை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு இறங்கிப் போய்விடுவார். அதற்குள் இன்னொரு பஸ் புறப்பட்டுப் போய்விடும். இதுபோன்ற அனுபவங்கள் ஏற்படலாம். சித்தர்களின் ஜீவசமாதிகளை வழிபடவும்.

மகரம்

மகர ராசிநாதன் சனி 11-ல் பலம் பெற்று ராசியைப் பார்க்கிறார். 10-ல் குரு அதிசாரமாக இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை வென்று லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். குரு 10-ல் இருந்தாலும், அடுத்து 9-க்கு மாறினாலும் குருவால் பாதகம் ஏதும் வராது. சிலருக்கு தொழில் மாற்றம் அல்லது இட மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு குடியிருப்பு மாற்றம் வரலாம். அல்லது தொழிலில் சீர்திருத்தம் செய்யலாம். சிலர் கடன் வாங்கி புதிய தொழிலைச் செய்யலாம். அல்லது பழைய தொழிலை அபிவிருத்தி செய்யலாம். புதிய கிளைகளைத் தொடங்கலாம். முதலீட்டு வசதிக்காக சிலர் புதிய பார்ட்னர் சேர்க்கலாம். பேரன்- பேத்திக்காகவும் அல்லது வாரிசுக்காகவும் எதிர்கால முதலீடு செய்யலாம். பிள்ளைகளின் படிப்புக்காக சிலர் தீவிர முயற்சியும் முதலீடும் செய்யலாம். ஆரோக்கியம், பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். ராஜபாளையம்- சங்கரன் கோவில் பாதையில் கரிவலம்வந்தநல்லூர் மெயின் ரோட்டில் பொதி சுவாமி ஜீவசமாதி உள்ளது. பௌர்ணமிதோறும் சிறப்புப் பூஜை நடக்கும். கலந்துகொள்ளவும்.

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி 10-ல் இருக்கிறார். 2, 11-க்குடைய குரு 9-ல் இருக்கிறார். இது அதிசார கதி. அடுத்து அவர் 8-ல் மறைந் தாலும் 2-ஆம் இடத்தைப் பார்க்கலாம். அதனால் குடும்பம், வாக்கு, தனம் இவற்றில் எந்த பாதிப்பும் பங்கமும் வராது. குரு ராசியைப் பார்ப்பதால் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் செல்வாக்கு உயரும். மதிப்பும் மரியாதையும் பெருகும். சனி 10-ல் இருப்பதால் சிலருக்கு தாயின் சுகம் பாதிக்கலாம். சிலருக்கு தொழில் மாற்றம் ஏற்படலாம். ஒருசிலரின் நிலை அனுதாபத்துக்குரியதாக அமையும். அதாவது, ஜெயலலிதாவுக்குப் பிறகு அந்தக் கட்சியில் பிளவு ஏற்பட்ட மாதிரி ஒரு குழப்ப நிலை குடும்பத்தில் உருவாகலாம். சிலர் உங்களை வெளியேற்ற நினைக்கலாம். சிலர் உங்களை நேரடியாக ஆதரிக்கலாம். அல்லது மறைமுக ஆதரவு காட்டலாம். நீங்கள் எதற்கும் கவலைப்படாமல் "இந்த மடம் இல்லாவிட்டால் சந்தை மடம்' என்று தைரியமாக இருக்கலாம். "பொறுத்தார் பூமியாள்வார்' என்பது உங்களைப் பொருத்தவகையில் உண்மையாகவும் இருக்கும்; நன்மையாகவும் முடியும். கும்ப ராசிக்காரர்களுக்குரிய கோவில் எய்யலூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில். அங்குசென்று வழிபடவும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு அதிசாரமாக 8-ல் துலா ராசிக்கு மாறியுள்ளார். ஆரம்பத்தில் குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை. பிறகு குரு 8-ல் மறைந்தாலும் ராசிக்கு பார்வை. மொத்தத்தில் மீன ராசிக்காரர்களுக்கு மாதம் முழுவதும் தெளிந்த நீரோடையாக நற்பலன்கள் நடக்கும். 6-ல் ராகு, 12-ல் கேது. கெட்ட இடங்களில் கெட்ட கிரகங்கள் இருப்பதால் கெடுதல்கள் விலகும். நல்லது வந்து ஒட்டிக்கொள்ளும். தொழில் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, சரளமான பணப்புழக்கம் என அனுகூலமான பலன்களாக அமையும். ஒரு வகையில் நீங்கள் காக்கைக்குச் சமம். காக்கைக்கு உணவு படைத்தால் மற்ற எல்லா காக்கைகளையும் கூவியழைத்துப் பகிர்ந்துண்ணும். அதேபோல நீங்கள் தொழில், சம்பாத்தியத்தில் எல்லா வகையிலும் நண்பர்களையும் உறவினர்களையும் இணைத்து செயல்படுவீர்கள். "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதுபோல செயல்படுவதால், இறைக்க இறைக்க ஊறும் நீர்போல- வற்றாத செல்வமும் தட்டாத நிலையும் அமையும். அறந்தாங்கி- திருப்புனவாசல் அருகில் தீயத்தூர் சென்று சஹஸ்ரலக்ஷ்மீஸ்வரரை வழிபடவும்.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :