Add1
logo
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் || இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி || கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் || சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம் || உங்களுக்காக காத்திருக்கிறேன்! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்! || நல்ல பஸ் எப்ப விடுவீங்க... ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர் || நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-17


மாசி மகம்- 11-3-2017
பொற்குன்றம் சுகந்தன்


மாசி மக நாளில் புனித நீராடுதல் சிறப்பிக்கப்படுகிறது. அதற்கான தீர்த்தங்களும் ஆலயங்களும் பல உள்ளன. அவற்றிலொன்று நூற்றெட்டு வைணவத் தலங்களுள் ஒன்றான திருக்கோட்டியூர்.

இரண்யகசிபுவை அழிக்க கயிலைநாதனான சிவபெருமான், வைகுண்டவாசனான மகாவிஷ்ணு, படைப்புத் தொழிலை மேற்கொண்டுள்ள பிரம்மதேவன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒன்றுகூடி முடிவெடுத்த தலமாதலால் இது திருக்கோட்டியூர் (திருக்கோஷ்டியூர்) எனப்பட்டது.

புராணக்கூற்றின்படி, இரண்யகசிபுவை நரசிம்மாவதாரம் எடுத்து வதம் செய்வதற்குமுன், நரசிம்மாவதாரத் தோற்றம் எப்படியிருக்கும் என்பதை தேவர்களும் கதம்ப முனிவரும் வேண்டிக்கொண்டதற்கிணங்க காட்டியருளினார் மகாவிஷ்ணு. அதைக்கண்டு மகிழ்ந்த தேவர்களும் கதம்ப முனிவரும், இதற்குமுன் எடுத்த அவதாரக் கோலங்களையும் காட்டி யருளுமாறு வேண்டவே, அதன்படி நின்ற, இருந்த, கிடந்த, நடந்த ஆகிய நான்கு கோலங்களையும் காட்டியருளினார் மகாவிஷ்ணு.  இது நிகழ்ந்த இடமும் திருக்கோட்டியூர்தான்.

இங்கு அமைந்துள்ள சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவில் மூலவர் "உகரமெல்லணையான்' புஜங்க சயனமாக கிழக்கு நோக்கிய வண்ணம் அருள்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரும் அருள்கின்றனர். மேலும் இங்கு மது, கைடபர், இந்திரன், புரூருவ சக்கரவர்த்தி, கதம்ப முனிவர், பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, ஸ்ரீசந்தான கிருஷ்ணர் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

உற்சவர் சௌமிய நாராயணர். தாயார் "திருமாமகள்' என்ற திருநாமத் துடன் தனிச்சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

இத்திருக்கோவில் அமைந்துள்ள திருக்கோட்டியூரில்தான் ஸ்ரீராமானுஜர் ஆன்மிகத்தில் பெரும் புரட்சி செய்தார். இத்தலத்தில் "வைணவத்தின் சாரத்தினை கரைத்துக் குடித்தவர்' என்று பெயரெடுத்த நம்பி என்பவர் இருந்தார். அவரிடம் மந்திரோபதேசம் பெறுவதற்காக பலர் காத்திருந்தார்கள். அந்த சமயத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்த ராமானுஜர் திருக்கோட்டியூருக்கு தன் இரு சீடர்களுடன் வந்தார்.

ஒவ்வொரு மந்திரத்தின் உட்கருத்தையும் தன் சீடர்களுக்கு விளக்கி அருளுரை வழங்கும் நம்பி, வைணவத்தின் உயிர் மூச்சான எட்டெழுத்து மந்திரத்தை மட்டும் தகுந்தவருக்கு மட்டுமே உபதேசிப்பார்.

ஸ்ரீரங்கத்திலிருந்து வந்த ராமானுஜர் நம்பியை வணங்கினார். அவரை ஏறெடுத்துப் பார்த்தார் நம்பி.
""நான் ஸ்ரீரங்கத்திலிருந்து வருகிறேன். என் பெயர் ராமானுஜன். தங்களிடம் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் பெற நான் வந்துள்ளேன்'' என்றார்.

""ம்...ம்... "நான்' செத்தபிறகு வா. நீ இப்பொழுது போகலாம்'' என்றார் நம்பி.

குழப்பத்துடன் ஸ்ரீரங்கம் திரும்பினார் ராமானுஜர்.

சில நாட்கள் கழித்து மீண்டும் திருக்கோட்டியூர் வந்த ராமானுஜர் நம்பியை சந்தித்தார். நம்பி, ராமானுஜரை உற்றுப்பார்த்தார். "நம்மை அடை யாளம் தெரியவில்லை போலிருக்கிறது' என்றெண்ணிய ராமானுஜர், ""நான் ராமானுஜன். ஸ்ரீரங்கத்திலிருந்து வருகிறேன். தங்களிடம் எட்டெழுத்து மந்திரோபதேசம் பெற வந்துள்ளேன்'' என்றார்.

அப்பொழுதும், ""நான் செத்த பிறகு வா'' என்றார் நம்பி. ஏமாற்றத்துடன் ராமானுஜர் ஸ்ரீரங்கம் திரும்பினார்.

இதுபோல் 18 முறை இந்த நிகழ்ச்சி நடந்தது.

அப்போதுதான் ராமானுஜருக்கு நம்பி கூறியதன் பொருள் விளங்கியது. "நான்' என்னும் அகங்காரம் செத்த பின்- அதாவது அழிந்தபின் வருமாறு கூறுகிறார் என்பதைப் புரிந்துகொண்டார்.

இந்த முறை, "அடியேன் ராமானுஜன், தங்கள் தாசன். என்னை ஆசிர்வதித்து மந்திரோபதேசம் அருள வேண்டும்' என்று வேண்டினார். ராமானுஜரின் பணிவு நம்பியைக் கவர்ந்தது. அவரை தனியாக அழைத்துச்சென்ற நம்பி, ""இந்த எட்டெழுத்து மந்திரத்தை நீ உபதேசம் பெற்றபின் யாருக்கும் அறிவிக்கவோ, உபதேசம் செய்யவோ கூடாது. என் கட்டளையை மீறினால், நீ நரகம் செல்வாய்'' என்ற கண்டிப்புடன் உறுதிமொழி பெற்றபின், "ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜரின் காதில் உபதேசித்தார். ராமானுஜரை ஆசிர்வதித்த நம்பி, ""என் கட்டளையை மீறாதே- இது வைகுண்டம் செல்ல வழிவகுக்கும் மந்திரம். மிக ரகசியமானது''
என்று அறிவுரை கூறி விடையளித்தார்.

நம்பியிடம் மந்திரோபதேசம் பெற்றதும், ராமானுஜர் உடலில் புதிய ஒளி தென் பட்டது. அந்த மந்திரத்தை மனதிற்குள் ஜெபித்துக்கொண்டே வந்தவர் தன்னுடன் வந்த இரு சீடர்களைப் பார்த்துப் புன்னகைத்தார். எதிரே ஸ்ரீசௌமிய நாராயணன் கோவில் தெரிந்தது. அங்கு சென்று ஆலயத்திலிருக்கும் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டவர், அருகே இருந்த தீர்த்தக்கிணறான சிம்மக் கிணறைக் கண்டு எட்டிப்பார்த்தார். அதிலிருந்த நீரில் மகாவிஷ்ணு காட்சி தந்தார். கைகூப்பி வணங்கினார் ராமானுஜர். உடனிருந்த சீடர்களான முதலியாண்டான், கூரத்தாழ்வான் ஆகியோருக்கு குருநாதரின் செயல் வியப்பைத் தந்தது.

அங்கிருந்து புறப்பட்ட ராமானுஜர் கோவில் கோபுரத்தின் மேல் ஏறி அதன் உச்சியிலிருந்து ஊர் மக்களைக்கூவி அழைத்தார். அனைவரும் அங்கே கூடினார்கள். அவர்கள் முகங்களில் ஒருவித அச்சம் தெரிந்தது.

"இந்த முறையும் நம்பி இவருக்கு மந்திரோப தேசம் செய்யாமல் விரட்டிவிட்டதால் விரக்தியடைந்தது, கீழே விழுந்து உயிர்விடத் துணிந்துவிட்டாரோ' என்று அங்கு கூடியிருந்த மக்கள் கிசுகிசுத்தார்கள்.

மக்கள் கூட்டத்தைப் பார்த்து கைகூப்பி வணங்கினார். ""அன்பார்ந்த பக்தர்களே, நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். என் உபதேசம் வருங்காலத்தில் நீங்கள் வைகுண்டம் செல்ல வழிவகுக்கும்'' என்று அறைகூவல் விடுத்தவர், "ஓம் நமோ நாராயணாய' என்று மூன்றுமுறை கூறினார். கோபுரத்தின்கீழ் கூடியிருந்த மக்கள் அனைவரும் அந்த எட்டெழுத்து மந்திரத்தை மூன்றுமுறை கூறினார்கள்.

குருநாதர் வாக்கை மீறியதற்காக தான் நரகம் சென்றாலும் பரவாயில்லை; உலக மக்கள் அனைவரும் இந்த நாராயண மந்திரத்தை அறிந்துகொண்டு நற்கதி பெறவேண்டும் என்பதற்காகவே இத்தகைய புரட்சிகரமான- அக்காலத்தில் எவரும் சிந்திக்க அஞ்சும் செயலைச் செய்தார் ராமானுஜர். இப்படிப்பட்ட புனித நிகழ்வு நடந்த திருத்தலம் திருக்கோட்டியூர்.

இந்தக் கோவில் விமானத்தில் ராமானுஜ ரின் திருவுருவமும், அவருக்கருகில் நம்பியின் திருவுருவமும் உள்ளது. இத்திருக்கோவிலில் சீதாதேவி, ராமபிரான், லட்சுமணன், அனுமன் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது.

இத்தலம் சிவகங்கை மாவட்டம் திருப் பத்தூரிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. தரிசன நேரம்: காலை 7.00 மணியிலிருந்து 12.30 மணிவரை; மாலை 4.30 மணியிலிருந்து இரவு 8.30 மணிவரை. வாகன வசதிகள் உள்ளன.

இத்தகைய பெருமை வாய்ந்த இத்திருக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று இரவு தெப்ப விளக்குத் திருவிழா நடைபெறும். அப்போது பெருமாளும் தாயாரும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்கள். அந்த நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குளக்கரையில் தீபங்கள் ஏற்றி வழிபடுவார்கள். இதுவொரு வித்தியாசமான விளக்குப் பரிகார வழிபாடு என்று கூறப்படுகிறது.

விளக்குப் பிரார்த்தனை செய்பவர்கள் ஓர் அகல்விளக்கை கோவிலில் வாங்கி வீட்டிற்கு எடுத்துச்செல்வர். அந்த விளக்கில் ஒரு ரூபாய் நாணயம் மற்றும் துளசி போட்டு பூஜையறையில் வைத்து வழிபடுவார்கள். இந்த விளக்கில் திருக்கோட்டியூர் பெருமாளும் மகாவிஷ்ணுவும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இந்த வழிபாட்டினால் அவர்களது வேண்டுதல்களும் பிரார்த்தனைகளும் உடனே நிறைவேறுவதாக நம்புகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், அடுத்த ஆண்டு மாசி மகத்தன்று நடைபெறும் தெப்ப விளக்குத் திருவிழாவின்போது, தாங்கள் வீட்டில் வைத்து வழிபட்ட அகல்விளக்கு டன் மற்றொரு நெய் விளக்கை ஏற்றி குளக்கரையில் வைத்து வழிபடுவார்கள். அந்த நேரத்தில் புதிதாகப் பிரார்த்தனை செய்பவர்கள், பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் கொண்டு வந்து வைத்த விளக்கை எடுத்துச் செல்வார்கள். இந்த விளக்குப் பிரார்த்தனை வேண்டுதல்களை பெருமாள் நிச்சயம் நிறைவேற்றி அருள்புரிகிறார் என்று கூறப்படுகிறது. இத்தகைய வழிபாடு இத்தலத்தில் மட்டும்தான் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

இந்த விளக்குப் பரிகார வழிபாட்டில் கலந்து கொள்ள இயலாதவர்கள், இக்கோவிலில் அருள்புரியும் சந்தான கோபாலகிருஷ்ணர் சந்நிதிமுன் விளக்கேற்றி அர்ச்சனைசெய்து வழிபட்டபின், அந்த விளக்கை வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜைசெய்து வந்தாலும் காரிய சித்தி உண்டாகும்; வேண்டிய பிரார்த் தனைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :