Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-17யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் சொற்பொழிவுகள், கட்டுரைகள் அடங்கிய ஆங்கில நூல் "தெய்வீகக் காதல்' என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இந்நூலிலின் வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த் நூலை வெளியிட, யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப் பின் பொதுச்செயலாளர் சுவாமி ஸ்மரணானந்த கிரி, பொருளாளர் சுத்தானந்த கிரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த விழாவில் ரஜினிகாந்த் நிகழ்த்திய உரை...

""நான் சிறுவனாக இருந்தபோது என் அண்ணன் தாசரின் கீர்த்தனைகளைப் பாடுவார். மனித ஜென்மம் மிகப்பெரியது. அதைப் பாழாக்கிவிடாதீர்கள் என்று அந்த தாசர் பாடுவார். மனித ஜென்மம் கிடைப்பது மிக அபூர்வம். எத்தனையோ ஜென்மங்களைத் தாண்டி, ஆயிரம் ஆயிரம் ஜென்மங்களைத் தாண்டி மனித ஜென்மத்தை அடைகிறோம். அதை அடைந்தபிறகு இந்த சம்சாரத்தில் மூழ்கி, பணம், காசு, உற்றார், உறவினர், மனைவி, பிள்ளை, புகழ், சுகம் என இதிலேயே மூழ்கிவிடுகிறோம். நான் யார், எங்கிருந்து வந்தேன், இறந்த பிறகு எங்கே போகப்போகிறேன், அந்த கடவுள் யார், ஆத்மா என்றால் என்ன என்ற கேள்வி வருவதே அபூர்வம். அந்த மாதிரி கேள்வி வந்தபிறகு, அதற்கு விடை கொடுக்கிற குரு கிடைப்பது அதைவிட அபூர்வம். குரு கிடைத்த பிறகு, அவருடைய அருள் கிடைத்து, அவரது போதனை கிடைப்பது அதைவிட மிக அபூர்வம். இந்த நான்கும் கிடைத்த பிறகு அதை வீணாக்கக் கூடாது.நான் ஒரு ஆன்மிகவாதி என்று சொல்லிலிக் கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இது ஆண்டவன் கொடுத்த பிச்சை. என்னுடைய பிராப்தம். போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம். நான் ஒரு சினிமா நடிகன், பெரிய ஸ்டார் என சொல்லிலிக்கொள்வதைவிட ஒரு ஆன்மிகவாதி என சொல்லிலிக் கொள்வதையே நான் பெருமைப்படுகிறேன். இந்த பணம், பெயர், புகழ் இவையெல்லா வற்றையும் வைத்து, இது வேண்டுமா அல்லது ஆன்மிகம் வேண்டுமா என்றால், நான் ஆன்மிகத்தைதான் நாடிப் போவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் ஆன்மிகத்துக்கு அவ்வளவு சக்தி உள்ளது.

ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு அதிபுத்திசாலிலி மந்திரி இருந்தார்.   மந்திரி இல்லாமல் ராஜாவால் இருக்க முடியாது. அந்த மந்திரிக்கு சகல சௌகரியங்களும் ராஜா  செய்துகொடுத்திருந்தார். ஒரு கால கட்டத்திற்குமேல் அந்த மந்திரி ராஜாவிடம் வந்து, 'ராஜா, நான் நிம்மதியைத் தேடி எங்கேயோ போகிறேன்' என்றார்.

அதற்கு ராஜா, "உனக்கு என்ன வேண்டும்? நிம்மதியாக வாழ பணம் இல்லையா, புகழ் இல்லையா, பொருள் இல்லையா, ஐஸ்வர்யம் இல்லையா?' என்று கேட்டார்.

அதற்கு மந்திரி, "என்னை விட்டுவிடுங்கள். நான் போகிறேன்' என்று சொன்னார். அப்போதும் ராஜாவுக்கு மனம் வரவில்லை. இருப்பினும் வேறுவழியில்லாமல் சரி போங்கள் என விட்டுவிட்டார். ஒரு மூன்று, நான்கு வருடங்கள் கழித்து மந்திரி மீண்டும் நாட்டுக்குத் திரும்பி வந்தார். சந்நியாசியாக வந்தவர் ஊருக்கு வெளியே ஒரு குடிசையைப் போட்டு தங்கியிருந்தார். இதைக் கேள்விப்பட்ட ராஜா, மந்திரியைத் தேடிப் போனார். ஒரு சிறிய குடிசை. தரையில் பாய். ஒரு சின்ன செம்பில் தண்ணீர். ஒரு சின்னத் தட்டு- அவ்வளவுதான்.

"என்ன மந்திரி, எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போனீர்கள். என்ன சாதித்தீர்கள். இப்படி கஷ்டப்படுகிறீர் களே' என ராஜா கேட்டார். அதற்கு மந்திரி, "ராஜா, அப்போது நீங்கள் உட்கார்ந்திருப்பீர்கள். நான் நின்றுகொண்டிருப் பேன். இப்போது நான் உட்கார்ந்திருக்கிறேன். நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள்' என்றார், அதுதான் ஆன்மிகத்தின் சக்தி.

என்னுடைய ஆன்மிக ஈடுபாடு பற்றி சிலருக்கு சந்தேகம் உள்ளது. நானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவதாகக் கூறுகிறார்கள். அதாவது, ஒருமுறை ராகவேந்திர சுவாமி என்கிறேன். இன்னொருமுறை ரமண மகரிஷி என்கிறேன். இன்னொருமுறை தயானந்த சரஸ்வதி என்கிறேன், சச்சிதானந்தர் என்று சொல்கிறேன், திடீ ரென்று பாபாஜி என்கிறேன். ஒரு இடத்தில் நிலையாக இருக்க மாட்டேனா என்பது அவர்களது கேள்வி.

இந்த குருவுக்கு இந்த சீடன் என்று முன்னரே எழுதப்பட்டிருக்கும். சீடன் பக்குவப்பட்டபிறகுதான் குருவே தோன்றுவார். என் ஆன்மிகப் பாதையில் முதல் குரு என் அண்ணன் சத்தியநாராயணன்.

அவர்தான் என்னை ஆன்மிகத்தில் ஈடுபடுத்தினார். எங்கே ஆன்மிக, தெய்வீக நிகழ்ச்சி நடந்தாலும் என்னை சிறுவயதிலேயே கையைப் பிடித்து அழைத்துச் செல்வார். என்னை ராமகிருஷ்ணர் ஆசிரமத்தில் சேர்த்ததே அவர்தான். ராமகிருஷ்ண பரமஹம்சர் என்னுடைய இரண்டாவது குரு. ராமகிருஷ்ண ஆசிரமத்தில் நான் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன். நமது சம்பிரதாயம், பாரம்பரியம், வேதங்களைக் கற்றுக்கொண்டேன்.

ராகவேந்திரா ஆசிரமத்தில் நான் பக்தியைக் கற்றுக்கொண்டேன். ரமண மகரிஷியிடம் நான் யார் என்று கேள்வி எழும்புவதைக் கற்றுக்கொண் டேன். தயானந்த சரஸ்வதியிடம் சமூகப் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டேன். வேதத்தில் உள்ள சில நுணுக்கங் களைத் தெரிந்து கொண்டேன். சச்சிதானந்தர்தான் எனக்கு உபதேசம் செய்தவர். அதற்கு அப்புறமும் எனக்கு ஒரு தேடல் இருந்து கொண்டே இருந்தது.

நான் நடிகனான பின்னர்- 1978-க்குப் பிறகு விமான நிலையத்திற்குப் போகும் போதெல்லாம் புத்தக நிலையத்தில் ஒரு புத்தகம் இருப்பதைப் பார்ப்பேன். அதில் ஒரு சுவாமிஜியுடைய படம் இருக்கும். எனக்கு அந்த சாமி ஆணா, பெண்ணா என்று சந்தேகம். அந்த புத்தகத்தை நான் வாங்கவில்லை. ஆனால், அந்த கண்கள் மட்டும் என்னையே பார்க்கிற மாதிரி இருக்கும்.

அதன்பிறகு ஒருநாள் அந்தப் புத்தகத்தை வாங்கினேன். ஆனால் அது புரிந்துகொள்ள சிரமமாக இருந்தது. ஏனென்றால் ஆங்கிலம் எனக்கு சரியாகத் தெரியாது. அதனால் அப்படியே வைத்துவிட்டேன்.

ஒரு 20 வருடம், 25 வருடம் என் நூலகத்தில் அப்படியே அது இருந்தது. அதன்பிறகு "படையப்பா' படமெல்லாம் முடித்துவிட்டு, இனி படத்திலெல்லாம் நடிக்கக்கூடாதென்று வெறுத்து என்ன செய்வ தென்று தெரியாமல் இருந்தபோது, சச்சிதானந்தர் அமெரிக்காவில் உள்ள ஆசிரமத்துக்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்று அவருடன் சுமார் ஒரு மாதம் இருந்தேன். அப்போது, அந்தப் புத்தகத்தைக் கொண்டு போயிருந்தேன். எனக்கே தெரியாமல் நான் அதை எடுத்து வைத்திருந்தேன். அங்கு வேறு வேலை கிடையாது. மிகவும் குளிராக இருக்கும்.

அப்போது அந்தப் புத்தகத்தைப் படித்தேன். 35, 40 பக்கம் போன பின்னர் அந்தப் புத்தகத்தை கீழே வைக்க மனம் வரவில்லை. பாபாஜியுடைய பக்கம் வரும்போது, அது எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு சுவாமிஜி எனக்கு மந்திர உபதேசம் செய்தார்.

அப்போது நான் "நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை; விட்டுவிடலாம் என இருக்கிறேன்' என்று சொன்னேன். அதற்கு அவர், "சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். எங்களைப்போன்ற 100 துறவிகள் சொல்வதைவிட, உங்களைப்போன்ற நடிகர்கள் சொல்லும்போது அது எல்லா மக்களிடமும் விரைவில் போய் சேரும்' என்றார்.

பெங்களூருவில் என் அப்பார்ட்மென்ட் டில் இருந்தபோது, அந்தப் புத்தகத்தை மறுபடியும் படித்தேன். காலையில் 9.30 மணி அளவில் அந்தப் புத்தகத்தில் இருந்த மகான் பாபாஜி படத்திலிருந்து ஒரு ஒளி என்னை நோக்கி வருவதுபோன்று எனக்குள் ஒரு உணர்வு. அதன்பிறகு படுத்துக்கொள்ளு மாறு ஒரு உணர்வு தோன்றியது. புத்தகத்தை வைத்துவிட்டு பேப்பர் படித்தேன். டி.வி. பார்த்தேன். இருந்தாலும் அந்த புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்று மீண்டும் தோன்றியது. புத்தகத்தைப் பார்த்தபோது அந்த ஒளி என்னை நோக்கி வருவதைப்போல உணர்ந்தேன். என்னால் தாங்க முடியாமல் அப்படியே படுத்துவிட்டேன். அதன்பிறகு யாரோ எனக்குக் கட்டளையிடுவதுபோல தோன்றியது. தலையணையை எடு என்றது. எடுத்தேன். போர்வையை எடு என்றது. எடுத்தேன். தரையில் விரித்துப் படுக்கச் சொன்னது. உடம்பில் படாமல் கையை விரித்து வை என்றது. ஒரு 45 விநாடிகள் இருக்கும். அந்த ஒளி என் உடலிலில் புகுவதுபோல் இருந்தது. உடம்பெல்லாம் வேர்த்தது. உடனே எழுந்துபோய் அந்தப் புத்தகத்தைப் பார்த்தேன். அப்போது அதிலிருந்து ஒளி வரவில்லை.

அன்று மாலை "பாபா' படத்தின் கதை என் மனதில் தோன்றியது. காட்சிகள் இப்படி இருக்க வேண்டும் என்று அவர் கட்டளையிடுவது போன்று எனக்குத் தோன்றியது. "பாபா' என்னும் தலைப்பு தோன்றியது. பெங்களூருவில் இன்னும் 20 நாட்கள் எனக்கு வேலை இருந்தது. அதைவிட்டுவிட்டு உடனே சென்னை வந்து நானே "பாபா' படத்தைத் தயாரித்து, திரைக்கதை எழுதி படமாக்கினேன். அந்தப் படம் வியாபார ரீதியாக வெற்றியடையவில்லை என்று சொன்னதும், இது லாப நோக்கோடு எடுக்கப்பட்ட படமல்ல; விஷயம் மக்களிடம்போய்ச் சேர வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படம். எனவே, யார் நஷ்டமடைந்தார்களோ அவர்களுக்குப் பணத்தை திருப்பிக் கொடுத்தேன்.

அதன்பிறகு பரமஹம்ச யோகானந்தரின் யோகதா சத்சங்க சொசைட்டியில் கிரியா யோகத்தைக் கற்றுக் கொண்டேன். மனித மனதைத் தூய்மையாக்கி, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த கிரியா யோகம் அருமையான கருவி. தெய்வீக ரகசியங்கள் அடங்கிய கிரியா யோகம் என் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

நாம் எல்லாரும் கஷ்டப்படுவது, பாடுபடுவது சந்தோஷமாக இருப்பதற்கு, மனம் நிம்மதியாக இருப்பதற்கு. அது கிடைத்துவிடும். அதற்கு முன்னால் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. நிலத்தில் ஏதாவது ஒரு விதை போடவேண்டுமென்றால் பூமியை பதப்படுத்த வேண்டும். களையெடுத்து, தேவையான சத்துக்களைப் போட்டு, அதற்குப் பிறகுதான் விதைகளைப் போட வேண்டும்.

ஒரு விருந்தாளியை நீங்கள் வீட்டுக்குக் கூப்பிட்டால், விருந்தாளி வருகிறார்கள் என வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருப்பீர்கள். ஒரு விருந்தாளி வருவதற்கே இப்படியென்றால், கடவுள் உங்கள் மனதில் விருந்தாளி யாக வர வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் மனதை எந்த அளவுக்கு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்? மனம் தூய்மையாக இருந்தால்தான் பலன் கிடைக்கும். இல்லையென்றால் அது சாத்தியமில்லை.

திருதராஷ்டிரன் கிருஷ்ணனிடம், "கிருஷ்ணா, நீ அர்ஜுனனுக்கே எல்லா உபதேசமும் செய்து கொண்டிருக்கிறாய். என் மகன் துரியோதனனுக்கும் உபதேசம் செய்' என்றார். சரி என்று துரியோதனனுக்கும் உபதேசம் செய்ய கிருஷ்ணன் போனார்.

அப்போது துரியோதனன்,  "கண்ணா, எனக்கு எது நல்லது, எது கெட்டது என தெரியும். எது தர்மம்- எது அதர்மம் என தெரியும். எதைச் செய்தால் புண்ணியம் என்று தெரியும், எதைச் செய்தால் பாவம் என்றும் தெரியும். ஆனால் செய்ய முடியவில்லை. செய்யவும் மாட்டேன். அங்கே அர்ஜுனன் இருக்கிறான். அவனுக்கு நல்லதும் தெரியாது, கெட்டதும் தெரியாது. எது செய்ய வேண்டுமென்றும் தெரியாது, எது செய்யக்கூடாதென் றும் தெரியாது. அவனிடம் போய் உபதேசம் செய்' என்றான் துரியோதனன்.

எனவே, ஒருவிதத்தில் நாம் எல்லாரும் துரியோதனர்கள்தான். நமக்குத் தெரியும் எது நல்லது, எது கெட்டது என்று. ஆனால் செய்ய மாட்டோம். பொய் சொல்லக்கூடாது என்று  தெரியும். பொய் சொல்லுவோம். மோசம் செய்யக்கூடாது என்று தெரியும். மோசம் செய்வோம். ஆசைப்படக் கூடாது என்று தெரியும். ஆசைப்படுவோம். எனவே, துரியோதனனாக இல்லாமல், அர்ஜுனனாக மாறினால், நமது தகுதி உயரும். நாம் கடவுளிடம் போகலாம்.

தொகுப்பு: ராஜவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :