Add1
logo
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் || இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி || கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் || சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம் || உங்களுக்காக காத்திருக்கிறேன்! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்! || நல்ல பஸ் எப்ப விடுவீங்க... ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர் || நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-17
1, 10, 19, 28-ஆம் தேதிகளில்
பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முழுவதும் நீங்கள் எந்த காரியத்தைச் செய்தாலும் நன்மையாகவும் லாபமாகவும் அமையும். சிலருக்கு தந்தைவழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வழக்கும் வரும் வாய்ப்புள்ளது. எனவே, பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியம் இந்த மாதம் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகளுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். பணவரவுகளில் ஏமாற்றம் இல்லை. உழைப்புக்கேற்ற பலன் உடனே கிடைக்கும். தொழிலை அப்படியே செய்து வரவேண்டும். விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை. அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடி மாறுதல் கிடைக்கும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். மாணவர்கள் எதிர்பார்த்தபடி மேற்படிப்பு அமையும். ஒருசிலர் ராணுவத்துறையில் பணியாற்றச் செல்வார்கள். வியாபாரிகள் அதிகம் முதலீடு செய்யக்கூடாது. மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பப் பெண்களால் கணவருக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். மாமன், மைத்துனர் உதவி கிடைக்கும். வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் வரும். அயல்நாட்டுப் பயணம் உயர்வைத்தரும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 3, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எந்த காரியத்தைச் செய்தாலும் அதை ஆர்வமுடன் செய்வீர்கள். அதனால் உற்றார்- உறவினர் மற்றும் வெளியிடத்திலும் மதிப்பு கூடும். இதுவரை உங்களை வாட்டி வதைத்த கடன் தொந்தரவு குறையும். சரியான வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை அமையும். வீட்டில் இதுவரை இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகள் தாய், தந்தையர் பேச்சைக்கேட்டு நடப்பார்கள். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கும் திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில் பொறுமையாக செயல்படவேண்டும். பொதுமக்கள் எதிர்ப்புகள் வரும். இதனால் மேலதிகாரிகள் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உடன் பணி புரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கணவன்- மனைவி ஒற்றுமை மேலோங்கும். வியாபாரிகள் நல்ல வருமானம் பெறுவார்கள். இதுவரை வசூலாகாத பாக்கிகள் வசூலாகும். மாணவர்கள் உயர்படிப்பு எண்ணம் நிறைவேறும். அரசியலில் உள்ளவர்கள் எதிர்பாராத பதவிகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 2, 11, 20, 29; 14; 7, 25.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 26; 9, 18.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களது சிந்தனைகளை செயலாக்கிக் காட்டுவீர்கள். கலைத்துறையில் பணியாற்றுபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வாய்ப்புகள் வந்துசேரும். எல்லாத் தரப்பு தொழில்புரிவோருக்கும் இந்த மாதம் கூடுதல் வரவுகள் வரும். அதேபோல செலவுகளும் வந்துசேரும். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கான கடன் எளிதாகக் கிடைக்கும். உங்களைவிட்டுப் பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். பிள்ளைகளால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடையும் மாதம். குடும்பத்தில் சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உழைப்பாலும், தங்கள் உழைப்பாலும் புதிய தொழில்களைத் தொடங்குவார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் எதிர்பார்த்தபடி வரும். உடல்நிலையில் தெம்பாக இருப்பீர்கள். ஒருசிலருக்கு சிறுவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வாகனங்களில் நிதானமாகச் செல்லவேண்டும். அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் பாராட் டைப் பெறுவார்கள். வேலைப்பளு கூடும். சிலருக்கு கட்டாய மாறுதல் திடீரென வரும். அது உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் வேலையில் சேர்வது நல்லது. அந்த மாறுதல் சிறப்பானதாக இருக்கும். ஒருசிலருக்கு வீடு கட்டும் திட்டம் நிறைவேறும்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 8, 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நீங்கள் மனவுறுதி அதிகம் கொண்டவர்கள். இந்த மாதம் நீங்கள் எடுத்துக்கொண்ட காரியம் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். இந்த எண்ணில் பிறந்த மாணவர்களில் சிலர் தேர்வில் முதல் மதிப்பெண்களைப் பெற்று தமிழகம் முழுவதும் பாராட்டைப் பெறுவார்கள். எதிர்பார்த்தபடி உயர்படிப்பும் கைகூடும். பெற்றோர்கள் ஆதரவு எப்போதும் உண்டு. உடல்நிலையை சற்று கவனித்துக் கொள்ளவேண்டும். தகுந்த மருத்துவ சிகிச்சை நல்ல பலன் தரும். பணவரவுகள் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகக் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு வரவேண்டிய சலுகைகள் கேட்காமலேயே வந்துசேரும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் கவனமாகச் செயல்படவேண்டும். காவல்துறை வழக்குகள் வரும் வாய்ப்புள்ளது. வீட்டில் இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியம் இனிதே நடக்கும். தொழிலதிபர்கள் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்வார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பெண்களுக்கு உயர்படிப்பு கைகூடும். இதுவரை விலகியிருந்த சொந்தம் உங்கள் வீட்டில் பெண் எடுக்க அல்லது கொடுக்க சம்மதித்தால் யோசித்து செய்யுங்கள்; சில பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. தொழிலாளர்கள் கோரிக்கைகளை, முதலாளிகள் நிறைவேற்றுவார்கள். ஒரு சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிர மணியர், துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நீங்கள் சமயோசிதமாகப் பேசும் திறமை உள்ளவர்கள். இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியம் இனிதே நடைபெறும். உடல்நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பமான சூழ்நிலைகள் மாறி, நல்ல நிலைக்கு வரும். பிள்ளைகளின் உயர்கல்வி திட்டமிட்டப்படி நடக்கும். திருமணமாகாமல் உள்ள இளைஞர்களுக்கு திடீர் திருமணம் நடக்கலாம். சிலர் திட்டமிட்டபடி வெளிநாடு செல்வார்கள். உடன்பிறந்த மூத்த சகோதரி உங்களுக்கு எதிராக செயல்படக்கூடும். பூர்வீக சொத்துகளில் பிரச்சினைகள் வந்து நீங்கும். மாணவர்கள் பிடிவாத குணம் அதிகரித்து பெற்றோருக்கு சிரமத்தைக் கொடுக்கலாம். வியாபாரிகள் கூடுதலாக கொள்முதல் செய்தால் நல்ல லாபம் வரும். வியாபாரம் சிறப்பாக நடக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலையை நினைத்தபடி விரிவுபடுத்தலாம். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கலைத்துறையினர் ஏற்றம் பெறும் மாதம். சிலர் வாகனத்தில் சிறுவிபத்துகளை சந்திக்க நேரலாம். எச்சரிக்கையாக செல்லவேண்டும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 9, 14; 23.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்களால் மற்றவர்கள் பயன் பெறுவார்கள். இந்த மாதம் நீங்கள் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடிப்பீர் கள். வியாபாரிகள் இரட்டிப்பு லாபம் பெறுவீர்கள். ஹோட்டலில் பணிபுரிவோர் தனியாகத் தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கைகூடும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். இதுவரை சென்றுவர முடியாத தெய்வ தரிசனப் பயணம் தடையின்றி நடக்கும். பெற்றோர் உடல்நிலையில் மருத்துவச் செலவுகள் வரலாம். உங்களை நேசித்த நண்பரைப் பிரியவேண்டி வரலாம். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியம் இனிதே நடக்கும். தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள்.  வெளியூர்ப் பயணம் செல்லும்போது கைப்பொருளை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். தொழிலதிபர்கள், தொழிலாளிகள் பிரச்சினை வந்து சுமுகமாக நீங்கும். லாபம் குறையாது. புதிய யுக்திகளைக் கையாண்டு உற்பத்தியைப் பெருக்குவீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பிரிந்துவாழ்ந்த தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். மாணவர்களின்  உயர்கல்வித் திட்டம் நிறைவேறும். அரசாங்க ஊழியர்களுக்கு, எதிர்பார்த்தபடி மாறுதல் கிட்டும். மனதுக்கு தெம்பளிக்கும் வகையில் அது இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் செயலால் மற்றவர்கள் பயன் பெறும் மாதம். பணப்புழக்கம் அதிகரிக்கும். எனினும் சிலர், மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக- கௌரவத்துக்காக கடன் வாங்கி செலவு செய்வார்கள். அதனால் சிரமத்தை அடைவார்கள். தொழிலதிபர்கள் நினைத்தபடி தொழிலை விருத்தி செய்வார்கள். வியாபாரிகள், மறைமுக எதிரிகளால் லாபம் குறையும் நிலையை அடைய நேரும். எனவே, நிதானமான வியாபாரம் நன்மையைத் தரும். கணவன்- மனைவி ஒற்றுமைக்குறைவு வரக்கூடும். பிள்ளைகள் உதவியாக இருப் பார்கள். இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். வெளிவட்டாரத் தொடர்புடையவர்களின் காரியம் வெற்றிபெறும். அரசியல் பிரமுகர்கள் திட்டமிட்டபடி வேலைகளைச் செய்து பொதுமக்களின் பாராட்டைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் சிலர் தற்காலிகமாக வேறு ஊருக்கு மாறுதலில் சென்று மீண்டும் நினைத்த இடத்திற்கு வருவார்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். காவல்துறையில் பணிபுரிவோர் கூடுதல் வேலைப் பளுவை சந்திப்பார்கள். புதிதாக திருமணமான தம்பதியர் இருவீட்டாராலும் போற்றப் படுவார்கள். இதுவரை பெற்றோருக்கு அடங்காமல் இருந்துவந்த பிள்ளைகள், பெற்றோர் சொல்லைக்கேட்டு நடப்பார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 2, 11, 20; 1, 10, 19.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16, 25.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நீங்கள் எப்போதுமே வேலைகளை சுணக்கமின்றி செய்வீர்கள். இந்த மாதம் முழுவதும் பொருளாதாரம் உயரும். தடைப்பட்டு வந்த சுபகாரியம் நடைபெறும். விலகிச் சென்றவர்கள் வந்து சேர்வார்கள். மற்றவர்களுக்காக செலவு செய்யும் நீங்கள் இந்த மாதம் குடும்பத்தாரையும் நினைப்பீர்கள். தொழிற்சாலைகளில் தொழிலாளிகள் உண்மையோடு உழைப்பார்கள். எனவே, தொழிலாளி பிரச்சினை மாறும். வியாபாரிகள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். இதுவரை இருந்துவந்த நோய் உபாதைகள் குறையும். உங்கள் பேச்சைக் கேட்காமல் இருந்துவந்த பிள்ளைகள் இனி நல்லபடி யாக நடப்பார்கள். வியாபாரிகள் அலைச்சலை சந்தித்தாலும், அதற்கேற்றவாறு வருமானம் கூடும். அரசு ஊழியர்கள் உடன்பணிபுரிவோரின் ஒத்துழைப்பைப் பெறுவதோடு அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவார்கள். தற்காலிகப் பணிநீக்கத்தில் உள்ள சிலருக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிட்டும். வரவேண்டிய பாக்கிகளும் கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி உயர்கல்வியை அடைவார்கள். குழந்தை இல்லையே என்று ஏங்கும் தம்பதியருக்கு இறைவன் அருளால் குழந்தை பாக்கியம் கிட்டும். பெண்களுக்கு வரவேண்டிய பூர்வீக சொத்துகள் வந்துசேரும். அரசியல் பிரமுகர்கள் சமூகத்தில் மதிப்பு, மரியாதை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: ஸ்ரீவேங்கடா சலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். இதுவரை உங்களை வாட்டி வதைத்த உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். உடன்பிறந்த சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். சிலர் வெளிநாடு செல்லும் திட்டம் இனிதே நிறைவேறும். படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள சிலர் ராணுவம் போன்ற அரசுத் துறைகளுக்குச் செல்வார்கள். பெண்கள் குடும்பத்தாரால் பாராட்டப்படுவார்கள். பணவரவுகள் கூடுதலாக இருக்கும். பிள்ளைகளுக்கான சுபகாரிய நிகழ்ச்சிகள்  இனிதே நடக்கும். மகான்களின் தரிசனம் கிட்டும். அரசியல் செல்வாக்கு கூடும். புதுமனைப் புகுவிழா, திருமணம் போன்ற சுபகாரியங்களில் தலைமையேற்று நடத்துவார்கள். ஆன்மிக சுற்றுலா செல்லலாம். தொழிலதிபர்கள், வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசு ஊழியர்கள் பணியை சிறப்பாக, மகிழ்ச்சி யோடு செய்வார்கள். இதுவரை ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகி, அரசாங்கத்தில் வரவேண்டிய பாக்கி நிலுவைகள் தாமதமின்றிக் கிடைக்கும். புதிய வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். மனைவி, கணவரின் அன்பைப் பெறுவார். மாணவர்கள் திட்டமிட்டபடி உயர்கல்விக்குச் செல்வார்கள். ஒருசிலருக்கு வெளிநாட்டுப் படிப்பு கைகூடும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :