Add1
logo
ஜெ. முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உடல் தகனம் || கொடநாடு கொலை : மேலும் 5 பேருக்கு வலைவீச்சு || பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலைக்கு மலர்மாலை வைத்து போராட்டம்! (படம்) || 50% இடஒதுக்கீடு ரத்தான விவகாரம்: கோவில்பட்டியில் அரசு மருத்துவர்கள் ஊர்வலம் (படம்) || தனியார் மருத்துவமனை ஊழியர் வீட்டில் ரூ.1லட்சம் மதிப்பிலான நகை திருட்டு! || கொடநாடு கொலை - சயானிடம் கேரள போலீசார் விசாரணை || ஒரு நாள் விவசாயியாக இருந்து பாருங்க புத்தி வரும் : எச். ராஜா மீது இயக்குநர் பாண்டிராஜன் தாக்கு || இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவும் சேவ் பார்மர்ஸ் இயக்கம்! (படங்கள்) || நூறு நாள் வேலையின் கூலியை வங்கிக்கடனில் வரவு வைப்பதா? கோபத்தில் பொதுமக்கள் || அதிமுக உடைவதற்கும், இணைவதில் உள்ள சிக்கலுக்கும் பாஜகவே காரணம்: திருநாவுக்கரசர் || ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி || நம்பிக்கை குறைந்துவிட்டது : கடும் அதிர்ச்சியில் சசிகலா || கட்சியும், ஆட்சியும் நன்றாக செயல்படுகிறது: ராஜேந்திர பாலாஜி ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
......................................
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
......................................
மாசி மக மகத்துவம்!
......................................
மார்ச் மாத ராசி பலன்கள்
......................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
......................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
......................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
......................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
......................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
......................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
......................................
யாதுமாகி நின்றாள்!
......................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
......................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
......................................
01-03-17முனைவர் இரா. இராஜேஸ்வரன்

சிருங்கேரி மடத்தின் 34-ஆவது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகர பாரதீ சுவாமிகள் (1912-1954) முற்றும் துறந்தவரானதால், மடத்தின் பீடாதிபதி என்கிற பொறுப்பை தொடர்ந்து சுமக்க விரும்பவில்லை. உலகத்தையே மறந்து ஆத்ம நிஷ்டராகவே (தன்னையே மறந்த நிலையில் இறைவனை வழிபடுவது) இருக்க விரும்பினார். பல நாட்கள் உணவுண்ணாமலும், உறக்கமின்றியும் தவத்திலேயே இருப்பார். இதனால் மடத்தின் அன்றாட நிர்வாகத்தை கவனிக்க 14 வயது பாலகனான ஸ்ரீனிவாசன் என்கிற பிரம்மச்சாரியைத் தமது சீடராக ஏற்று, அவருக்கு "ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்தர்' என்கிற யோகப்பட்டத்தையும் அளித்தார்.

சிருங்கேரி மடத்தின் குரு பரம்பரையில் 35-ஆவது பீடாதிபதியான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் கைபு ராமா சாஸ்திரிகள்- வெங்கடலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாக, பெங்களூருவில் தீபாவளி தினத்தில் 13-11-1917-ல் பிறந்தார். கர்நாடக சங்கீதத்தில் மூம்மூர்த்திகளுள் ஒருவராகத் திகழ்ந்த ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் இந்தக் குடும்பத்தின் ஒரு பிரிவைச் சார்ந்தவர்.

இளம்வயதிலேயே இறை சிந்தனையுடன் எப்பொழுதும் இருப்பார். பூஜை செய்வது, ஆன்மிக நூல்களைப் படிப்பதில் ஈடுபாடு அதிகம். பெங்களூருவில் ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர் வேத சாஸ்திர மேற்படிப்புக்காக சிருங்கேரி பாட சாலையில் சேர்ந்தார். சிறுவயதிலேயே சமஸ்கிருத  மொழியில் பண்டிதராக இருந்தார்.

நல்ல ஒழுக்கத்துடனும், வேத சாஸ்திரத்தில் ஞான சூரியனாகவும் விளங்கிய இந்த பாலகனை, அன்றைய பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகர பாரதீ சுவாமிகள் மேலும் உற்சாகமூட்டி, வேத சாஸ்திரங்களை சரிவரக் கற்க சிறப்பு ஏற்பாடு செய்தார். தமக்குப் பின்பு மடத்தை கவனிக்க சரியான சீடர் வேண்டும் என்னும் எண்ணத்தில் இருந்த அவருக்கு, மடத்தின் அதிதேவதையான ஸ்ரீசாரதாம்பாளின் உத்தரவின் பேரில், 22-5-1931 அன்று ஸ்ரீனிவாசனுக்கு சந்நியாசம் வழங்கி, ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்தர் என்கிற யோகப் பட்டத்தை வழங்கி அருளாசி புரிந்தார். மடத்தின் பாரம்பரிய மரபுகள், விதிமுறைகள் பற்றி தகுந்த பண்டிதர்கள்மூலம் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இளம்வயதிலேயே சகல சாஸ்திரங் களையும், மடத்தின் நிர்வாகத்தையும் நன்கு கற்றுக்கொண்டார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமது குருவுக்கு சேவை செய்து அவரது உபதேசத்தைப் பெற்று மடத்தின் நிர்வாகப் பொறுப்பை திறம்பட கவனித்தார். ஸ்ரீசந்திரசேகர பாரதீ ஸ்வாமிகள் 1954-ஆம் ஆண்டு முக்தி அடைந்த பின்னர், அவரது அதிஷ்டான கோவிலை (சமாதி) நரசிம்ம வனத்தில்கட்ட ஏற்பாடு செய்தார். அதே ஆண்டில் பீடாதிபதிக்கான பட்டாபிஷேகமும் நடைபெற்றது.

1955-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்தர் தென் மாநிலத்திற்கு யாத்திரை செய்யத் தொடங்கினார். பல கிராமங்கள் தோறும் சென்று, நமது மதத்தில் கூறப்பட்ட நல்ல கருத்துக் களையும், சாஸ்திரங்களையும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் அவரவருக்கு ஏற்ற தாய்மொழியில் பேசி தர்மப்பிரச்சாரத்தைச் (அருளுரை) செய்தார். அப்போது ஆங்காங்கு சிருங்கேரி மடத்தின் கிளை அமைப்புகளை ஏற்படுத்தினார். மடத்தின் சார்பில் கோவில் கள், திருமண மண்டபங்கள், வேத பாட சாலை, மருத்துவமனை, பள்ளிகள் என பலதரப்பட்ட சமய, சமூக திருப்பணிகளைச் செய்தார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை யாத்திரை மேற்கொண்ட இவர் 1967-ல் நேபாளத்திற்குச் சென்றார். ஸ்ரீஆதிசங்கரருக்குப் பின்பு நேபாளத் திற்கு விஜய யாத்திரை செய்த பெருமை இவரையே சாரும்.

சிருங்கேரிக்கு வருகைதரும் பக்தர்களுக்கு நல்ல இட வசதி கொண்ட தங்கும் விடுதிகளை ஏற்படுத்தினார். அதேபோன்று துங்கா நதிக்கரை யில் நடைபாதை பாலத்தைக்கட்ட ஏற்பாடு செய்தார்.

மலைப்பிரதேசமான சிருங்கேரி யில் நவீன தொழில்நுட்பத்துடன் ஒரு மருத்துவமனையை ஏற்படுத்தினார். இது அங்கு வாழ்பவர்களுக் கும், குறிப்பாக மலைவாசிகளுக் கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் தர்க்கம், மீமாம்சை, வேதாந்தம் முதலிய வற்றில் ஒப்புயர்வற்ற பண்டிதராவார்.

ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரிடமும் அன்பாகப் பழகினார்.

ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தர் தமது வாரிசாக தற்போதைய பீடாதிபதியான ஸ்ரீபாரதீ தீர்த்தரை 1974-ஆம் ஆண்டு நியமித்தார். 1989-ல் சிருங்கேரியில் ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தர் முக்தியடைந்தார்.

ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் தன்னை நாடிவரும் பக்தர்களின் மனக்குறைகளைக் கேட்டறிந்து இன்முகத்துடன் அவரவர்களுக்குத் தகுந்த வண்ணம் நல்லுப தேசம் செய்துவந்த பாங்கே தனியாகும்.

அவர் பிறந்த இந்த நூறாவது ஆண்டில் (1917-2017) அந்த மகானைத் தொழுது குரு பக்தியைக் காணிக்கையாக்குவோம்.

சிருங்கேரி தங்க கோபுரத்திற்கு கும்பாபிஷேகம்

ஸ்ரீஆதிசங்கரரால் கி.பி. 8-ஆம் நுற்றாண்
டில் கர்நாடக மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்ட சிருங்கேரி மடத்தின் அதிதேவதையாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பவள் ஸ்ரீசாரதா என அழைக்கப்படும் ஸ்ரீசாரதாம் பாள். (சரஸ்வதி).

முதன்முதலில், துங்கா நதிக்கரையில் ஸ்ரீஆதிசங்கரரால் ஒரு பாறையின் மேல் வரையப்பட்ட ஸ்ரீசக்கரத்தின்மீது, சந்தன மரத்தில் செய்யப்பட்ட ஸ்ரீசாரதாம்பாள் மூர்த்தி இருந்தது. சிறிதாக இருந்த அந்த ஆலயத்தை, பின்னர் பீடாதிபதிகளாக விளங்கிய  ஸ்ரீ பாரதீ கிருஷ்ண தீர்த்த சுவாமி களும் (கி.பி. 1333-1375), ஸ்ரீவித்யாரண்ய சுவாமிகளும் (கி.பி.1375-1386) சற்று விரிவுபடுத்தினர். ஸ்ரீவித்யாரண்யர் தங்கத்தினாலான விக்ரகத்தை அழகுறச் செய்தார்.

அதன்பின்னர் ஆலயத்தை விரிவாக்கும் திருப்பணியை சிருங்கேரி மடத்தின் 33-ஆவது பீடாதிபதியான ஸ்ரீசச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதீ ஸ்வாமிகளும் (1879-1912), அவரது சீடரான ஸ்ரீசந்திரசேகர பாரதீ சுவாமிகளும் (1912-1954) செய்தனர். இவரது முயற்சியால் தற்போது இருக்கும் ஆலயம் 1916-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலயத்தின் முக மண்டபத்தை 35-ஆவது பீடாதிபதியான ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் கட்டினார்.

தொன்மைவாய்ந்த இந்த ஆலய கோபுரத்தை தங்க முலாம் பூசப்பட்ட தகடால் மேலும் பொலிவுறச் செய்ய எண்ணினார் தற்போதைய பீடாதிபதியான ஸ்ரீபாரதீ தீர்த்த சுவாமிகள். அதன்படி குறுகிய காலத்தில் இந்தத் திருப்பணி நிறைவு செய்யப்பட்டது. லலிதா பஞ்சமி தினமான 1-2-2017 அன்று புதிய தங்க கோபுரத்திற்கு கும்பாபிஷேகத்தை ஸ்ரீபாரதீ தீர்த்த சுவாமிகளும், இளையவர் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகளும் சாஸ்திர முறைப்படி செய்தனர்.

இதையொட்டி சிருங்கேரியில் ஒரு லட்சம் மோதகத்தைக் (கொழுக்கட்டை) கொண்டு கணபதி ஹோமமும், உலக நன்மைக்காக அதிருத்ர மகா ஹோமமும், கோடி குங்குமார்ச்சனையும், சகஸ்சர சண்டி ஹோமமும் பிப்ரவரி 13-ஆம் தேதிவரை சிறப்பாக நடைபெற்றது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :