Add1
logo
முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்! || நான் விரும்பி வெடிக்கும் வெடி... நாஞ்சில் சம்பத் தீபாவளி சிறப்புப் பேட்டி! || அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி! || தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி || தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம் || தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் || சேலம் அருகே மதுபான லாரி கவிழ்ந்து விபத்து || மருத்துவம், கல்விக்கு 2 லட்சம் கலைஞர் வழங்கினார் || நீதிபதி வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளிபொருட்கள் கொள்ளை || தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: 7.03 லட்சம் பறிமுதல் || டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை || சபரிமலையில் முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு || ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக சோனியா முடிவு ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-17திருவொற்றியூர் மகிழடி சேவை 11-3-2017
மும்பை ராமகிருஷ்ணன்


திருவொற்றியூர்- சென்னையிலுள்ள சிவத்திருத்தலம். மூவரும் பாடிய தலம். ஆதிபுரி என்று பெயர். மண்ணுருவில் சிவலிங்கம். தியாகராஜ திருத்தலம். மகிழமரம் தல மரம். பிரம்ம தீர்த்தம் உள்ளது. ஆதிசங்கரர் வழிபட்ட தலம். வட்டப்பாறை அம்மன் உக்கிரமாக இருந்ததால், அதனை ஆதிசங்கரர் தணித்த தலம். அப்பர் இவ்வாறு பாடுவார்-

"ஒற்றியூரும் ஒளிமதி பாம்பினை
ஒற்றியூரும் பாம்பும் அதனையே
ஒற்றியூர் ஒருசடை வைத்தவன்
ஒற்றியூர் தொழ நம் வினை ஓயுமே.'

ஆக, வினை களையும் தலம். இங்கு 27 நட்சத்திரங்களுக்குரிய சிவலிங்கங்களைக் காணலாம். ராமலிங்க சுவாமிகள் 24 வருடங்கள் இத்தல சிவனையும் அம்பிகையையும் தொழுது பாடியுள்ளார். பட்டினத்தார் ஜீவசமாதியும் அருகே காணலாம். தியாகராஜர் தரிசித்து அன்னையைப் பாடிய தலம்.

இவ்வாலயத்தில் 11-3-2017 அன்று மகிழடி சேவை நடைபெறுகிறது. இது சுந்தரருக்குத் தொடர்புடையது. சுந்தரரின் காலம் கி.பி.700-730 என்பர்.

ஒருசமயம் சிவபெருமான் தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டாராம். சுந்தரசிவன் தன் அழகான உருவைக் கண்ணாடியில் கண்டு வியப்புற்று, அந்த உருவை "சுந்தரா வருக' என்று சொல்ல, கண்ணாடியில் தெரிந்த அவரது பிம்பம் உருப்பெற்று அவர் அருகே வந்து நின்றது. ஆக, அவர் பெயர் சுந்தரர் ஆயிற்று.

அமிர்தம் பெற பாற்கடலைக் கடைந்தபோது முதலில் வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சுந்தரரே ஏந்தி வந்து சிவனிடம் கொடுத்தார். அதனால் ஆலால சுந்தரர் ஆனார்.

கணங்களுக்குத் தலைவரானார் சுந்தரர். பூப்பறித்து மாலை கட்டுதல், திருநீறு ஏந்துதல் போன்ற பணிகளைச் செய்து சிவனருகிலேயே இருந் தார்.

ஒருசமயம் சுந்தரர்

நந்தவனத்தில் பூப்பறிக்கும்போது அங்கு வந்த அனிந்திகை, கமலினி ஆகிய இரு சேடிகளைக் கண்டு, அவர்களது அழகில் அவர் மனம் தடுமாறியது. இதனை அறியாதவரா சிவன்? ""நீ பூலோகத்தில் பிறந்து இருவரையும் மணந்து சுகவாழ்வு பெற்று பின்பு என்னை அடைவாயாக'' என்றார். தன் தவறை உணர்ந்த சுந்தரர் வருந்தி, ""சுவாமி, பூவுலகில் என் மனம் தடுமாறினால், தீங்குகள் நிகழ்ந்தால் தாங்கள் தவறாது காத்தருள வேண்டும்'' என்று வேண்டினார். சிவனும் அருளினார்.

திருநாவலூரில் சடையனார்- இசை ஞானியார் தம்பதிக்கு மகனாக, ஆடி சுவாதியில் பிறந்தார் சுந்தரர். அவருக் குப் பெற்றோர் இட்ட பெயர் நம்பியாரூரன். குழந்தை நன்கு வளர்ந்தது; பக்தியில் பெற்றோரைப்போல திளைத்தது.

ஒருநாள் அரசர்

நரசிங்கமுனையார் அவ்
வூருக்கு வந்தபோது, தெருவில் மற்ற குழந்தை களுடன் விளையாடிக் கொண்டிருந்த நம்பி யாரூரனைக் கண்டு வியந்து, குழந்தையைக் கையிலேந்திக்கொண்டு சடையனார் இல்லத்துக் குச் சென்றார். குழந்தையைத் தன் கண்காணிப்பில் வளர்க்க அனுமதி கேட்டார். சடையனார் இசைய வேண்டியதாயிற்று. (எனவேதான் தேவார- திருவாசக நால்வருள் சுந்தரர் மட்டும் கிரீடத் துடன் காணப்படுகிறார்.)

நம்பியாரூரனுக்கு 16 வயதானபோது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. புத்தூரில் மணவிழா. அப்போது முதியவர் வடிவில் அங்கு வந்த சிவபெருமான் திருமணத்தை நிறுத்தி, திருவெண்ணெய்நல்லூர் அழைத்துச்சென்று தடுத்தாட்கொண்டார். பின் சுந்தரருக்கு தரிசனம் தந்து, "பித்தா' என்று அடியெடுத்துக் கொடுத் துப் பாடச்சொல்ல, "பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' என்று பாடத் தொடங்கினார் சுந்தரர்.

பின்னர் திருவாரூர் வருமாறு ஈசன் ஆணை கிடைத்தது. சீர்காழி, திருக்கோலக்கா, திருப்புன்கூர், திருமயிலாடு துறை, அம்பர் மாகாளம், திருப்புகலூர் முதலிய சிவத்தலங்களை தரிசித்து ஆங்காங்கே திருப்பதிகங்கள் பாடினார்.

திருவாரூர் சேரும் சமயம், சிவன், "தன் தொண்டன் வருகிறான்; அவனை மிகுந்த மரியாதையுடன் அழைத்து வரவேற்க வேண்டும்' என்று சிவத்தொண்டர்களுக்கு கனவில் ஆணையிட்டார். அவ்வாறே அவர்கள் வீதியெங்கும் தோரணங்கள் கட்டி, மங்கள வாத்தியங்கள் முழங்க சுந்தரரை அழைத்துச்சென்றனர். திருவாரூரீ சனை தரிசனம் செய்து பல பதிகங்கள் பாடி நெகிழ்ந்தார் சுந்தரர்.

இத்தலத்தில் "தில்லை வாழ் அந்தணர்கள்' என்று சிவன் அடியெடுத்துக் கொடுக்க, 88 வரிகளில் திருத்தொண்டர்தொகை பாடினார் சுந்தரர். இது சிவனடியார்களின் சிறப்பைச் சொல்வது.

இதனைக் கொண்டே சேக்கிழார் பெரிய புராணம் எழுதினார்.

திருவாரூரில் ருத்ர கணிகையர் குலத்தில் பிறந்த பரவை நாச்சியார் இருந்தார். (திருக்கயிலையில் சுந்தரர் கண்ட கமலினியின் மறு அவதாரம்).

ஒருசமயம் சுந்தரர் சிவத்தொண்டர்களுடன் கோவிலுக்கு வர, பரவையார் தன் தோழிகளுடன் வர, இருவர் கண்களும் சந்தித்தன. அந்த சந்திப்பே இருவர் மனதிலும் ஏதோ செய்தது.

அந்தப் பெண்ணின் மீது காதல்கொண்ட சுந்தரர், "திருவாரூர் சிவனே, புத்தூரில் மணமேடையில் இருந்த வனை நீ அடிமை என தடுத்தாண்டு கொண்டாய். இந்தப் பெண்ணைக் கண்டதும் என் மனம் பேதலிக் கிறது. எனக்கு அவள் மனைவியாக நீ துணை புரியவேண்டும்' என்று வேண்டினார்.

பரவையாரும், ""என் மனது ஏன் இவ்வாறு படபடக்கிறது? அவர் யார்?'' என்று தோழி களிடம் வினவ, ""சிவன் தோழராம்; தொண்ட ராம்; நம்பியாரூரர், வன்தொண்டர், தம்பிரான் தோழர் என்றெல்லாம் பெயர். அழகாக அரசனைப் போல் இருப்பவர். திருநாவலூரில் தோன்றி, நரசிங்கமுனையார் அரசனால் வளர்க்கப்பட்டவர்'' என்றனர். அவளோ "சிவச்சித்தம் யாதோ' என்று எண்ணி அயர்ந்தாள்.

பக்தன் வேண்டு தலைப் பூர்த்திசெய்பவர் சங்கரன், சிவன். அது காரணப் பெயராயிற்றே. மங்களமே செய்பவர் சங்கரன்.

ஆக, திருவாரூர் ஈசன் அன்று சிவத் தொண்டர்கள், சுந்தரர், பரவையார் கனவில் தோன்றி, "திருமணம்' என்று கூறிட, சிவனருளால் சுந்தரர்- பரவையார் திருமணம் இனிதே நடந்தது. தனியாகச் செய்த சிவத்தொண்டை இப்போது தம்பதியராக ஆழ்ந்த பக்தியுடன் செய்தனர்.

இந்த நிலையில், திருவொற்றியூர் ஈசனை தரிசிக்க வேண்டுமென்ற பேரார்வம் சுந்தரர் மனதில் உதித்தது. எனவே, பரவையாரிடம் விடை பெற்றுக் கொண்டு திருவொற்றியூர் சேர்ந்தார் சுந்தரர். அங்கே ஈசனை தரிசித்து வியந்து பாடியவண்ணம் ஒரு மடத்தில் தங்கியிருந்தார். ஒருநாள் சிவனை வழிபட மாலையுடன் வந்த ஒரு பெண்ணைக் கண்டு மையலுற்றார். ஞாயிறு கிழார் என்பவரின் மகள் சங்கிலி நாச்சியாரே அந்தப் பெண். கயிலையில் சுந்தரர் கண்ட அனிந்திகையின் மறுபிறப்பே அவள்.

சுந்தரர் திருவொற்றயூர் ஈசனிடம் அந்தப் பெண்ணை மணம்புரிய அருளவேண்டும் என்று வேண்டினர்.

அதையேற்ற சிவன் சங்கிலியார் கனவில் தோன்றி, ""சுந்தரரை திருமணம் செய்து கொள்'' என்றார்.

""அவர் ஏற்கெனவே மணமானவராயிற்றே'' என்று சங்கிலியார் சொல்ல, ""உன்னைப் பிரியமாட்டேன் என்று சபதம் செய்யச் சொல்கிறேன்'' என்றார் சிவன்.

பின்னர் சிவன் சுந்தரர் கனவில் தோன்றி விவரம் கூற, ""நான் பல தலங்கள் சென்று தரிசிக்க ஆவலுள்ளவன். அந்தப் பெண்ணைப் பிரியாமல் என்னால் இருக்கமுடியாது. அதே சமயம் அவளை நான் மணக்கவும் வேண்டும். எனவே, உன் சந்நிதியில் அவளுக்கு நான் வாக்கு கொடுக்கும் சமயம், நீ கருவறையிலிருந்து அகன்று மகிழமரத்தின் கீழ் இரு'' என்று சிவனுக்கே கட்டளையிட்டார் சுந்தரர்.

சிவன் சம்மதித்தார். மறுநாள் சுந்தரருக்கும் சங்கிலியாருக்கும் திருமணம். அப்போது சங்கிலியார், ""சுந்தரரே, நீவிர் சிவத்தொண்டரானதால், என்னைப் பிரிய மாட்டேனென்று கருவறைமுன் உறுதி சொல்லத் தேவையில்லை. மகிழமரத்தின்கீழ் சொன்னால் போதும்'' என்றாள்.
வேறுவழியின்றி சிவன் சாந்நித்யம் கொண்டிருந்த மகிழமரத்தின்கீழ் உறுதியளித்தார் சுந்தரர். நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறதே என்று, பல மாதங்கள் திருவொற்றியூரிலேயே தங்கியிருந்தார் சுந்தரர்.

இந்த நிலையில் திருவாரூர் தியாகேசருக்கு வசந்தோற்சவம் நெருங்குவதை உணர்ந்த சுந்தரர், அங்கு செல்ல ஆவல் கொண்டார். அதேசமயம் திருவொற்றியூரை விட்டுச் செல்லமாட்டேன் என்று சிவன் முன்னிலையில் சங்கிலியாரிடம் உறுதி சொன்னது அவரைத் தடுத்தது. என்றாலும் ஆவல் தணியாமல் துணிந்து திருவொற்றியூர் எல்லை கடந்தார். சிவ சத்தியம் மீறியதால் அவரது பார்வை பறி போயிற்று.

அப்போது அவர் திருவொற்றியூர் ஈசனி டமே,

"மூன்று கண்ணுடைய நீ அடியேன் கண்
    கொள்வதே கணக்கு வழக்காகில்
ஊன்ற கோலெனக்கு ஆவது ஒன்று அருளாய்'

என்று வேண்ட, சிவனும் ஊன்றுகோல் தந்தார். அதனைப்பற்றி சிவத்திருத்தலங்களுக்குச் செல்ல ஆரம்பித்தார். திருமுல்லைவாயில், திருவேற்காடு, திருவாலங் காடு தலங்களை வணங்கி காஞ்சி வந்து சேர்ந்தார்.

"விண்ணவர் தொழுதேத்த நின்றானை
    வேதம் தான் விரித்து ஓத வல்லானை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
    நாளும் நலம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழான் உமை நங்கை
    என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற
கண்ணு மூன்றுடையானை கம்பன் எம்மானை
    காணக்கண் அடியேன் பெற்றவாறே'

என்ற பதிகத்தை அங்கே பாட, கச்சி ஏகம்பன் இடக்கண் பார்வையைத் தந்தருளினார். (கண்நோய், பார்வை மங்கியிருப்பவர்கள் இந்த பதிகம் பாடி முக்கண்ணன் அருளால் நலமடையலாம்).

அடுத்து திருவாரூர் சென்றார். அங்கு-

"விற்றுக்கொள்ளீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்ததில்லை சொத்தை ஆக்கீனிர்
எற்றுக்கடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
மற்றைக்கண்தான் தாராதொழிந்தால் வாழ்ந்து போதீரே'

என்ற பாட, ஈசன் வலக்கண் பார்வையும் தந்தார்.

பின்னர் பல தலங் களுக்கும் சென்று பதிகம் பாடி ஈசனை வணங்கிய சுந்தரர், தான் பூவுலகம் வந்ததான் காரணம் முடிவுற்ற நிலையில், மீண்டும் கயிலை சேர்ந்து கணங்களுக்குத் தலைவரானார். சங்கிலியாரும் பரவையாரும் கயிலை சேர்ந்து, முன்னைப்போல கமலினி, அனிந்திகையாகி சிவத்தொண்டில் ஈடுபட்ட னர்.

சங்கிலியார்- சுந்தரர் சம்பந்தப்பட்ட திருவொற்றியூர் நிகழ்வுகளே மகிழடி சேவை என்னும் பெயரில் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சர்வம் சிவமயம்.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :