Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
மேஷம்
 ................................................................
சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
 ................................................................
பீமாசங்கர்!
 ................................................................
ஐஸ்வர்யங்கள் சேர்க்கும்
 ................................................................
ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிராதேவி
 ................................................................
நன்மைகள் அருளும் நன்னையூர்
 ................................................................
மனிதன்ன வாழ்வில் மிகவும்...
 ................................................................
செப்டம்பர் மாத எண்ணியல்
 ................................................................
காளிகாம்பாள் அற்புதங்கள்!
 ................................................................
வானமும் வையமும்...
 ................................................................
பகையை பாசமாக்கும்
 ................................................................
தேடியதை உடனே அருளும் திண்டுக்கல்
 ................................................................
செப்டம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
கல்வி, ஞானம் தரும் யோக ஹயக்ரீவர்!
 ................................................................
குருவே சரணம்!
 ................................................................
அனுமன் மகிமை!
 ................................................................
அம்மன் அருள்!
 ................................................................
கண்ணன் வணங்குபவள் ராதா
 ................................................................
01-09-14னி பகவானை நம்பினார் கெடுவதில்லை

சனீஸ்வரர் என்றவுடன் எல்லாருக்கும் அச்சம் வருகிறது. ஆனால் அவர் எல்லாருக்கும் நல்லவர். நீதி, நேர்மையை நிலைநாட்டுபவர். மகான்கள், மகாராஜா என்றோ, சாதாரண மக்கள் என்றோ பாகுபாடில்லாமல் தன் கடமையைச் செய்கிறவர். தவறு செய்யாதவர்களை அவர் எப்போதும் தண்டித்ததில்லை.

 நீதி, நேர்மையுடன் வாழ்கின்றவர்களுக்கு அவர் அள்ளிக்கொடுப்பவர். எனவேதான் "சனி பகவானைப்போல் கொடுப்பவர் யாருமில்லை; 30 ஆண்டுகளுக்குமேல் ஓகோவென்று வாழ்ந்தவருமில்லை; 30 ஆண்டுகளுக்குமேல் கெட்டுப்போனவரும் இல்லை' என்பார்கள்.

சனி பகவான் அவரவர் செய்த தவறுக்கு ஏற்றவாறு கண்டிக்கக்கூடியவர். திருந்தியவர்களை உயர்த்திவிடுவார். மிகவும் கொடியவர்களை மட்டுமே அவர் தண்டிப்பார்.

ஒரு மாவட்டத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கும் காவல்துறை அதிகாரி வந்துவிட்டாரென்றால், அவரைக்கண்டு எல்லாரும் பயப்படுவதில்லை. குற்றச்செயலில் ஈடுபடுகிறவர்கள், கொள்ளையடிப்பவர்கள் போன்றவர்கள்தான் தண்டனை கிடைத்துவிடுமே என்று அவரைக்கண்டு பயப்படுவார்கள். நல்லவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் அவர் நல்ல நண்பராக விளங்குவார். அதுபோலதான் சனி பகவானும். எனவே நல்ல உள்ளத்தோடும், நீதி, நேர்மையுடனும் வாழ்ந்து அவரை வணங்கி வந்தால் நன்மைகளை அடையலாம்.

சந்திரன் நின்ற ராசிக்கு 12-ல் சனி பகவான் வரும்போது ஏழரைச் சனி ஆரம்பம். அந்த இடத்தில் இரண்டரை ஆண்டுகள் இருப்பார். இது விரயச் சனியாகும். அடுத்து இரண்டரை வருடங்களுக்கு ராசிக்கே வருவார். இதை ஜென்மச் சனி என்கிறோம். பிறகு அங்கிருந்து மாறி, ஜென்ம ராசிக்கு 2-ல் இரண்டரை ஆண்டு தங்குவார். இது பாதச்சனி- வாக்குச் சனி என்று அழைக்கப்படும்.

ராசிக்கு 4-ல் சனி வரும்போது அர்த்தாஷ்டமச் சனி என்றும்; 7-ல் வரும்போது கண்டச் சனி என்றும்; 8-ல் வரும்போது அஷ்டமச் சனி என்றும் கூறுகிறோம்.

சனி பகவானின் இந்தச் சுழற்சியில் மனிதர்கள் தங்களைத் திருத்திக்கொள்கிறார்கள். கொடுமையானவர்கள் சனி பகவானால் தண்டிக்கப்பட்டு, உலகைவிட்டு மறைந்துவிடுகிறார்கள். நல்லவர்கள் சனி பகவானால் உயர்த்தப்பட்டு நல்வாழ்க்கை வாழ்கிறார்கள்.

சனி பகவான் வரலாறு

புராணங்கள் வாயிலாக பார்க்கும்போது, சப்த ரிஷிகளில் முதலாவது ரிஷியான மரீசியின் புத்திரர் காசிப மகரிஷியின் முதல் மனைவிக்குப் பிறந்தவர் சூரிய பகவான். சூரியனுக்கு சமுக்ஞா, பிரபை, ரைவத நாட்டு இளவரசி, சாயாதேவி ஆகிய நான்கு மனைவிகள் இருந்தனர். அவர்களில் சமுக்ஞாவிற்கு, வைவஸ்தமனு, யமன், இரட்டையர்களான அசுவினி ஆகியோர் பிறந்தனர். பிரபைக்கு பிரதவன் பிறந்தார். ரைவத நாட்டு இளவரசிக்கு ரைவதன் பிறந்தார். சாயாதேவிக்கு தபதி, விரட்டி என்ற இரண்டு பெண்களும்; சாவர்ணி, சனி ஆகிய ஆண்களும் என நான்கு பிள்ளைகள் பிறந்தனர். இதில் சனி பகவான் சிவபெருமானின் அருள்பெற்று, ஈஸ்வர பட்டம் பெற்று, ஆயுளை நிர்ணயிக்கிறவராக நவகிரகங்களுள் ஒன்றானார். தர்மத்தின் நிலைக்கு பக்கபலமாக நின்று, நீதி தவறாமல் சனீஸ்வரர் என்ற பெயருடன் விளங்கினார்.

பின்னாளில் அவர் நீலா எனப்படும் நீலாவதியை மணந்தார். சனி பகவானுக்கு குளிகன் என்ற ஒரு பிள்ளையும் உண்டு. இந்த குளிகன் நவகிரகங்களில் ஒன்றினார். குளிகன் காலத்தில் செய்யும் காரியங்கள் நல்ல காரியங்களாக இருந்தால், அடுத்தடுத்து நல்ல காரியங்கள் அமையும். அசுபகாரியங்கள் செய்யக்கூடாது.

சனி பகவான் முரட்டுத்தனமான மூடர்களிடமிருந்து எளியவர்களைக் காப்பாற்ற கலியுகக் கடவுளாக எழுந்தருளியுள்ளார்.

 வாக்கியப் பஞ்சாங்கப்படி நிகழும் ஜய வருடம், மார்கழி மாதம், 1-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 16-12-2014 அன்று மதியம் 2.16 மணிக்கு விசாக நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில், துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். விருச்சிக ராசியில் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தியில் மூன்று வருடம், இரண்டு நாட்கள் வரை சனி உலா வருகிறார்.

இதற்குமேல் சனி பகவான் 18-12-2017-ல் மாலை 4.04-மணிக்கு தனுசு ராசிக்கு மாற்றமாகிறார்.

ஜனன ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் அமையப் பெற்றவர்களுக்கும், தசாபுக்திகள் நல்லநிலையில் உள்ளவர்களுக்கும் தற்போதைய சனிப்பெயர்ச்சியால் பாதிப்பு எதுவும் வராது.

அனைத்து ராசிக்காரர்களும் சனிப்பெயர்ச்சியின்போது அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்று சனி பகவானை வணங்கி வரவேண்டும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரரை வழிபட்டு வரலாம். அல்லது குச்சனூர் சென்று சனீஸ்வரரை வழிபட்டு வரலாம். அல்லது சிவகங்கை நகரத்தில் அமைந்துள்ள சனீஸ்வரரை வழிபட்டு வரலாம்.

இந்த கோவில்களுக்கு செல்லமுடியாதவர்கள் நாட்டுக்கருவேல மரத்தின் இலைகள் மற்றும் அதன் பூவை சேகரித்து, ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு உங்கள் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள். அதில் சனி பகவான் அருள்பாலித்து தீமைகளிலிருந்து காப்பாற்றுவார். இது அனுபவப் பரிகாரம்.

திருநள்ளாறு சனீஸ்வரர்

திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம் புதுச்சேரி மாநிலம், காரைக்காலுக்கு அருகிலுள்ளது. இங்குள்ள நளதீர்த்தத்தில் நீராடி, விநாயகரை வணங்கி, பின்பு சனீஸ்வரை வணங்கி வரவேண்டும். இங்கு வந்துசெல்லும் பக்தர்களை சனி பகவான் எப்போதும் காத்துவருகிறார்.  சனியின் தாக்கம் வரும்போதுதான் வணங்க வேண்டுமென்பது ஒரு சிலரது கருத்து. சனி பகவானை எப்போதும் வணங்கிவருபவர்களை, ஏற்படவிருக்கும் கஷ்டங்களிலிருந்து காத்தருள்வார்.

குச்சனூர் சனீஸ்வரர்

இந்த திருத்தலம் தற்போதைய தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. குச்சனூர் சனீஸ்வரர் சுயம்புவாகத் தோன்றியவர். இந்த திருத்தலத்துக்கு தேனி வழியாகவும் செல்லலாம்; சின்னமனூர் வழியாகவும் செல்லலாம். குச்சனூர் சனீஸ்வரர் ஆலயம் எதிரில் ஆற்றுப்படுகை உள்ளது. இந்த ஆற்றில் குளித்துவிட்டு சனீஸ்வரரை வணங்கிவரலாம். கஷ்டத்தைப் போக்கி நல்ல பலன்களை வழங்குவார்.

சிவகங்கை சனீஸ்வரர்

சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை நகரில் 20 ஆண்டுகளுக்கு முன்னர், முத்துக்கருப்பன் ஆசாரி என்பவரின் பெரும் முயற்சியால், சனீஸ்வரர் ஆலயம் நிறுவப்பட்டது. இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வந்து சனீஸ்வரரின் அருள்பெற்றுச் செல்கின்றனர். இந்த ஊரில் சனி கலியுகக் கடவுளாக உள்ளார்.

இந்த சனீஸ்வரர் ஆலயத்தில் நீராட குளம் எதுவுமில்லை.

எனவே பக்தர்கள் இங்கு வரும்போது நீராட வேண்டிய நிலை வராது. சனீஸ்வரர் ஆலயம் வந்து தரிசனம் செய்துசெல்பவர்கள், சனீஸ்வரர் அருளையும் பெற்றுச்செல்கின்றனர்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : கே.ஜசோதரன் Date & Time : 11/12/2014 10:00:29 AM
-----------------------------------------------------------------------------------------------------
அப்ப சனி பகவான் பிறக்க முன் ஒருவருக்கும் சனி பிடிக்க வில்லையா ,"சூரியனுக்கு சமுக்ஞா, பிரபை, ரைவத நாட்டு இளவரசி, சாயாதேவி ஆகிய நான்கு மனைவிகள் இருந்தனர்." என்றால் அவர்களுக்கு சனி தோசம் முன்பு பிடிக்கவில்லையா ?
-----------------------------------------------------------------------------------------------------