|
|
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
எதையும் மனதில் வைத்துகொள்ளாமல் வெளிப் படையாகப் பேசும் குணமும், எதையும் திருத்தமாக செய்து முடிக்கும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!லாப ஸ்தானத்திற்கு மாறுதலான சனி பகவான் கடந்த ஆறு மாத காலமாக உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் வக்ரகதியில் சஞ்சாரம் செய்ததால் தொழில், வியாபார, உத்தியோகரீதியாக சிறுசிறு இடையூறுகளை சந்தித்தீர்கள். என்றாலும் வாக்கிய கணிதப்படி வரும் 12-9-2012 முதல் 16-12-2014 வரை சனி லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்களது பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக விலகி வாழ்வில் மறுமலர்ச்சியினை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் யாவும் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உற்றார்- உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். பண வரவுகளில் நல்ல மேன்மைகள் ஏற்படுவதால் கடன்கள் யாவும் தீரும். அசையும்- அசையா சொத்துகள் வாங்ககூடிய யோகத்தினைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். சனி உச்சம் பெற்று லாப ஸ்தானத்தில் அமைந்து பல நற்பலன்களை வாரி வழங்கும் இக்காலங்களில், பொன்னவனான குருபகவான் வரும் 28-5-2013 வரை ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். 28-5-2013 முதல் 13-6-2014 வரை சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. 13-6-2014 முதல் 5-7-2015 வரை அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.உடல் ஆரோக்கியம்: உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நீண்டநாள் உடல் ஆரோக்கிய பிரச்சினைகளுக்காக மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் படிப்படியான முன்னேற்றம் தெரியும். அன்றாடப் பணிகளில் சோர்வில்லாமல் செயல்பட முடியும். மனைவி, பிள்ளைகளும், குடும்பத்திலுள்ள வயதில் மூத்தவர்களும் நலமாக இருப்பார்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறைவடையும். குடும்பம்- பொருளாதார நிலை: பொருளாதார நிலையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் குடியேறும். கணவன்- மனைவியிடையே கடந்த காலங்களிலிருந்த மனசஞ்சலங்கள் விலகி அந்நியோன்னியம் அதிகரிக்கும். அழகான குழந்தைச் செல்வமும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். சிலர் மனதில் நினைத்தவரையே கைபிடித்து மகிழ்வர். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். புதிய வீடு, கார் போன்றவை வாங்கும் யோகமும் உண்டாகும். இதுநாள் வரை பகைமை பாராட்டிய உற்றார்- உறவினர்கள்கூட தேடி வந்து நட்புடன் பழகுவார்கள். கடன்களும் படிப்படியாகக் குறைந்து சேமிப்பு பெருகும்.உத்தியோகம்: உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கௌரவமிக்கப் பதவிகளைப் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். பணியிலிருந்த நெருக்கடிகள், வீண் பழிச்சொற்கள் யாவும் படிப்படியாக விலகும். உயரதிகாரிகள் உங்கள் திறமைகளைப் புரிந்துகொண்டு பாராட்டுவார்கள். சிலர் எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய நினைப்பவரின் விருப்பமும் நிறைவேறும். புதிய வேலைவாய்ப்பும் தகுதிக்கேற்றபடி கிடைக்கும்.தொழில், வியாபாரம்: கடந்த காலங்களிலிருந்து வந்த போட்டி, பொறாமைகள் யாவும் விலகி தொழில், வியாபாரம் சிறப்பாக முன்னேற்றமடையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகும். குறித்த நேரத்தில் பணிகளை முடித்துக் கொடுத்து நல்ல பெயரையும் எடுப்பீர்கள். புதிய புதிய வாய்ப்பு களும் தேடி வரும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் லாபங்கள் அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றாலும் அனுகூலங்கள் உண்டாகும். மறைமுக எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.பெண்கள்: கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அழகான குழந்தைச் செல்வத்தைப் பெற்றெடுப்பீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். உற்றார்- உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியங்களை நிறைவேற்றி சாதனை படைப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு உயர்வுகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கல்: பணவரவுகள் தடையின்றி இருப்பதால் கொடுக்கல்- வாங்கலும் சரளமாக இருக்கும். பெரிய முதலீடு களையும் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போர்க்கு எதிர்பார்த்தபடி லாபங்கள் கிடைக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய மனிதர்களின் நட்பும் கிட்டும்.அரசியல்: அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயர்வடையும். உங்கள் வார்த்தைகளுக்கு மக்களிடையே மதிப்பும் மரியாதையும் உயரும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். மறைமுக வருவாய்களும் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று வருவீர்கள்.விவசாயிகள்: பயிர் விளைச்சல் சிறப்பாக அமைந்து லாபத்தை அள்ளித் தரும். பட்ட பாட்டுக்கு இரு மடங்கு ஊதியத்தைப் பெறுவீர்கள். உங்களின் விளைபொருட்கள் சந்தையில் நல்ல விலைக்குப் போகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய பூமி, நிலம் போன்றவற்றையும் வாங்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராது கிடைக்கும் மானியங்களால் கடன்கள் நிவர்த்தியாகும். சேமிப்பும் பெருகும்.கலைஞர்கள்: புதிய புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெறும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். சிலருக்கு திருமண சுபகாரியங் களும் நடைபெறும். படப்பிடிப்பிற்காக வெளியூர், வெளிநாடு களுக்குச் சென்று வருவீர்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும்.மாணவ- மாணவியர்: கல்வியில் பல சாதனைகள் படைக்கும் காலமாக இருக்கும். சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். அரசு வழியிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். விளையாட்டுப் போட்டி களிலும் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். பல சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும்.சனி பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 12-9-2012 முதல் 9-11-2012 வரைசனி பகவான் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அற்புதமான நற்பலன்களை வாரி வழங்குவார். தனகாரகன் குரு பகவானும் 6-ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும் பண நெருக்கடிகளை உண்டாக்காமல் காப்பாற்றுவார். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனடி யாக சரியாகிவிடும். ராகு 12-ஆம் வீட்டிலிருப்பதால் அனுகூலமான பயணங்கள் அமையும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து முன்னேற முடியும்.சனி பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 10-11-2012 முதல் 16-2-2013 வரைசனி பகவான் சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 6-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வரும் 2-12-2012 முதல் சர்ப்ப கிரகங்களான கேது 5-ஆம் வீட்டிலும்; ராகு லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கவிருப்பதால் ஆன்மிக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். அனுகூலமான பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.சனி பகவான் வக்ரகதியில் 17-2-2013 முதல் 4-7-2013 வரைசனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும் வக்ரகதியிலிருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தனகாரகன் குரு பகவான் 28-5-2013 முதல் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரத்திலும் லாபம் பெருகும்.சனி பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 5-7-2013 முதல் 13-12-2013 வரைசனி பகவான் லாப ஸ்தானத்தில் ராகுவுடன் சஞ்சரிப்பதும் குரு 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். எதிர் பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமையும். புதிய பூமி, நிலம், வண்டி, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இட மாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். கடன்களும் குறையும்.சனி பகவான் விசாக நட்சத்திரத்தில் 14-12-2013 முதல் 1-3-2014 வரைசனி பகவான் குருவின் நட்சத்திரத்தில் ராகு சேர்க்கையுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். தொழில், வியாபாரரீதியாக இருந்து வந்த போட்டிகள் குறையும். கூட்டாளிகளால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். பணவரவுகள் எதிர்பார்த்தபடி இருக்கும். பூர்வீக சொத்து வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது நிதானமுடனிருப்பது நல்லது.சனி பகவான் வக்ரகதியில் 2-3-2014 முதல் 17-7-2014 வரைசனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திப்பீர்கள். 13-6-2014 முதல் குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பணவிஷயங்களில் வீண் நெருக்கடிகள் உண்டாகும். 21-6-2014 முதல் சர்ப்ப கிரகங்களான கேது 4-லும், ராகு 10-லும் சஞ்சாரம் செய்வதும் அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறிவிட முடியாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கப் பெற்றாலும், பெரிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.சனி பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 18-7-2014 முதல் 8-9-2014 வரைசனி பகவான் லாப ஸ்தானத்தில் சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எடுக்கும் காரியங்களை இனிதே நிறைவேற்றுவீர்கள். குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருப்பதால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுக்காமலிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் லாபம் தடைப்படாது. உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.சனி பகவான் விசாக நட்சத்திரத்தில் 9-9-2014 முதல் 16-12-2014 வரைசனி பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். குரு அஷ்டம ஸ்தானத்திலிருப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலப் பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கௌரவமான நிலையினைப் பெறமுடியும். என்றாலும் வேலைப் பளு சற்று அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கவனமுடன் செயல்பட்டால் லாபங்கள் உங்களுக்கே கிடைக்கும்.மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு: தனக்குப் பிடித்தவர் களிடம் அன்பாகவும், பிடிக்காத வர்களிடம் கோபமாகவும் நடந்துகொள்ளும் இயல்புகொண்ட உங்களுக்கு, சனி பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். கடந்த காலங்களிலிருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகும். பொருளாதார நிலை உயர்வடையும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மங்களகர மான சுபகாரியங்கள் நடைபெறும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும்.பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு: எந்தச் சூழ்நிலையிலும் நல்லதையே நினைக்கும் மனப்பக்குவம் கொண்ட உங்களுக்கு சனி பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். உத்தியோ கஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெறமுடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லகூடிய வாய்ப்புகளும் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.உத்திராடம் 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு: பொறுப்புள்ளவர்களாகவும் காரியவாதிகளாகவும் விளங்கும் உங்களுக்கு சனி பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். புதிய கார், பங்களா வாங்கும் யோகம் கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உற்றார்- உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர் களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்திலும் முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் குறையும்.அதிர்ஷ்டம் தருபவைஎண்: 1, 2, 3, 9, 10, 11.கிழமை: வியாழன், ஞாயிறு.நிறம்: மஞ்சள், சிவப்பு.கல்: புஷ்பராகம்.திசை: வடகிழக்கு.தெய்வம்: தட்சிணாமூர்த்தி.பரிகாரம்சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். குரு சாதகமற்று சஞ்சரிக்கும் காலங்களில் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
|
|