அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
Logo
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
மேஷம்
......................................
சனிப்பெயர்ச்சி பலன்கள்
......................................
கிருஷ்ணரின் முடிவை
......................................
அர்த்தநாரீஸ்வர தத்துவம்!
......................................
ராசிபலன்கள்
......................................
யுகக் யுகமாய்...
......................................
தென்பொதிகையில்...
......................................
நான்மறை ஓதிய...
......................................
அனுமனின் கதையே...
......................................
ஒருத்தி மகனாய்ப் பிறந்து...
......................................
ஆங்கோர் தாம் அதிசயம்!
......................................
முருகனுக்கு மாப்பிள்ளை!
......................................
ஆகஸ்ட் மாத எண்ணியல்
......................................
ஆளவந்தாரா... அருளவந்தாரா?
......................................
எதிர்ப்புகளை விலக்கி ...
......................................
பாரதப் போருக்காக...
......................................
அறம், அரசியல், இறைப்பணி...
......................................
என்றும் வாழும் சித்தர்கள்
......................................
பாசுரம் கேட்டு பக்தவத்சலனை...
......................................

கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

எதிலும் பிறரைக் கலந்தாலோசித்து பல விஷயங் களைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி நடைபெற்றாலும் கடந்த ஆறு மாதகாலங்களாக சனி பகவான் வக்ரகதியில் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்ததால் உடல் ஆரோக்கியத்தில்  பாதிப்புகளையும், தேவையற்ற பிரச்சினை களையும் சந்தித்தீர்கள். வாக்கிய சித்தாந்தப்படி சனி பகவான் வரும் 12-9-2012 முதல் 16-12-2014 வரை மீண்டும் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டிலேயே உச்சம் பெற்று சஞ்சாரம் செய்யவுள்ளதால் ஏழரைச் சனியில் பாதச் சனி நடைபெறவுள்ளது. என்றாலும் நீங்கள் ஏழரைச் சனி காலங் களை முக்கால் வாசி கடந்து வந்துவிட்டதால் இந்த இரண்டரை ஆண்டு காலங்களிலும் எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் ஓரளவுக்கு சாதகப்பலனை அடை வீர்கள். கணவன்- மனைவி யிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்ப தால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. சனி உங்கள் ராசியாதி பதிக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்ய மாட்டார். சனி பகவான் 2-ல் சஞ்சரித்து ஏழரைச் சனி நடைபெறும் இக்காலங்களில் 28-5-2013 வரை ஆண்டுக் கோளான குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செல்வம், செல்வாக்கு சேரும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களையும் நடத்திவிடமுடியும். பூர்வீக சொத்துகளால் லாபம் அமையும். 28-5-2013 முதல் 13-6-2014 வரை குரு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களும் வீண் பழிகளைச் சுமக்க வேண்டிவரும். 13-6-2014 முதல் 5-7-2015 வரை குரு லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பது அற்புதமான அமைப்பாகும். ஏழரைச் சனியால் உண்டாகக் கூடிய பிரச்சினைகள் யாவும் குறையும். பொன், பொருள் சேரும். சொந்த வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். தொழில், வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகஸ் தர்களுக்கும் உயர்வுகள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்: உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் ஏழரைச் சனியில் பாதச் சனி நடைபெறுகிறது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சிலநேரங்களில் நெருங்கியவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். எந்தக் காரியத்தையும் சரிவரச் செய்ய இயலாது.

குடும்பம்- பொருளாதார நிலை: குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களிடமும் உற்றார்- உறவினர்களிடமும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் குடும்பத்தில் வீண் பிரச்சினைகளை உண்டாக்கும். திருமண சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பொன், பொருள் சேரும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும்.  பணவரவுகள் தாராளமாகவே இருக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.

உத்தியோகம்: உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று வேலைப் பளு அதிகரித்தாலும் உயர்வுகள் தடைப்படாது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் பெயர் புகழுக்கு- கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும். ஊதிய உயர்வுகள் உண்டாவதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன்மூலம் வீண் பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்க்க முடியும். அதிக நேரம் பணிபுரிவதைத் தவிர்க்கவும்.

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள் நிறைய உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளும் ஏற்படும். என்றாலும் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். வரவேண்டிய வாய்ப்புகள் கை நழுவினாலும் இருக்கும் வாய்ப்புகளைக் கொண்டே முன்னேற்றத்தினைப் பெற்று விடுவீர்கள். தேவையற்ற பயணங் களைத் தவிர்ப்பதால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களால் சிறுசிறு மன சஞ்சலங் களை சந்திப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். அபிவிருத்தி பெருகும்.

பெண்கள்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். கணவன்- மனைவியிடையே உண்டாகக் கூடிய மனசஞ்சலங்களால் நிம்மதி குறையும். எவ்வளவுதான் நீங்கள் மற்றவர்களுக்கு உதவிகள் செய்தாலும் பிறர் உங்களைக் குறை கூறிக்கொண்டேதான் இருப்பார்கள். எதிலும் சிந்தித்து செயல்படுவது, அனைவரையும் அனுசரித்து நடப்பது போன்ற வற்றால் ஓரளவுக்கு சாதகப்பலனைப் பெறமுடியும். வேலைப்பளு கூடும்.

கொடுக்கல்- வாங்கல்: பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. நம்பியவர்களே துரோகம் செய்யத் துணியக்கூடிய காலம் என்பதால் உடனிருப்பவர்களிடம் கவனம் தேவை. கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபம் கிட்டும்.

அரசியல்: அரசியல்வாதிகளுக்கு மக்களின் செல்வாக்கு குறையக் கூடிய காலமாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உயர்பதவிகளில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பத்திரிகை நண்பர்களைப் பகைத்துக் கொள்வதால் வீண் சிக்கலில் மாட்டுவீர்கள். சிலருக்கு உடல்ரீதியாக உண்டாகக் கூடிய பிரச்சினைகளால் கட்சிப் பணிகளைத் தொடர முடியாமல் போகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

விவசாயிகள்: பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்தாலும் புழு பூச்சிகளின் தொல்லைகளால் மகசூல் குறையும். பட்ட பாட்டிற்கு பலனின்றிப் போகும். சந்தையில் சுமாரான விலைக்கே போகும் என்றாலும் நஷ்டம் ஏற்படாது. கால்நடைகளால் ஓரளவுக்கு அனு கூலத்தை அடைய முடியும். அரசு வழியில் கிடைக்கும் எதிர்பாராத உதவிகளால் கடன்கள் நிவர்த்தியாகும். மழைவளம் சிறப்பாக அமையும்.

கலைஞர்கள்: கலைஞர்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டதால் பொருளாதார தடையின்றி வாழமுடியும். சுகவாழ்வில் சிறுசிறு இடையூறுகள் உண்டாகும். தேவையற்ற கிசுகிசுக்களால் மனநிம்மதியும் குறை வடையும். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் பணிபுரிய இயலாமல் போகும்.

மாணவ-மாணவியர்: கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. குடும்ப சூழ்நிலை களை மனதில் வைத்துக் குழப்பிக் கொள்ளாமல் படிப்பில் நாட்டம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள் என்பதால் உடன்பழகுபவர்களிடம் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

சனி பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 12-9-2012 முதல் 9-11-2012 வரை

சனி பகவான் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் ஏழரைச் சனியில் குடும்பச் சனி நடைபெறுகிறது. இது சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது என்றாலும் குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சற்றே அனுகூலப் பலனைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சனி பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 10-11-2012 முதல் 16-2-2013 வரை

சனி பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங் களிலும் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. 9-ல் சஞ்சரிக்கும் குருவும் வக்ரகதியிலிருப்பதால் பண வரவுகளில் இடையூறுகள் உண்டாகும். வரும் 2-12-2012 முதல் சர்ப்ப கிரகங்களான ராகு 2-லும், கேது 8-லும் சஞ்சரிக்கவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலை நிலவும்.

சனி பகவான் வக்ரகதியில் 17-2-2013 முதல் 4-7-2013 வரை

ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சற்றே ஒற்றுமை உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பதால் கடன்களைத் தவிர்க்கலாம். இதுவரை 9-ல் சஞ்சரித்த குரு பகவான் வரும் 28-5-2013 முதல் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். கூட்டாளிகளால் பிரச்சினைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர் களுக்கும் பணியில் வீண்பழிச் சொற்கள் ஏற்படும்.

சனி பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 5-7-2013 முதல் 13-12-2013 வரை

சனி பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் ராகு சேர்க்கையுடன் 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் தனகாரகன் குரு பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ் தர்களுக்கு வேலைப் பளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க நேரிடும். இதனால் உடல்நிலை பாதிப்படையும். மருத்துவச் செலவுகள் உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சினைகளில் சிக்குவீர்கள். குடும்பத்திலும் நிம்மதி குறைவடையும்.

சனி பகவான் விசாக நட்சத்திரத்தில் 14-12-2013 முதல் 1-3-2014 வரை

சனி பகவான் குருவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங் களில் 10-ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலிருப்பதால் ஏற்ற இறக்க மான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பணியிலிருந்த நெருக்கடிகள் குறையும். பண வரவுகளும் தேவைக்கேற்றபடியிருக்கும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகள் ஏற்படாது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய தேவையற்ற பாதிப்பு களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். மனதை ஒருநிலைப் படுத்துவது, கோபத்தைக் குறைப்பது, எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

சனி பகவான் வக்ரகதியில் 2-3-2014 முதல் 17-7-2014 வரை

சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும். குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உற்றார்- உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் அனுசரித்து நடந்து கொண் டால் மன சஞ்சலங்கள் ஏற்படாது. நீங்கள் உண்டு; உங்கள் வேலை யுண்டு என இருந்து கொண்டால் எந்த கஷ்டங்களும் உங்களை நெருங்காது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடனிருப்பது அவசியம். உத்தியோ கஸ்தர்கள் என்னதான் பாடுபட்டாலும் திறமை வெளிப்படாது. உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வுகளைப் பிறர் தட்டிச் செல்வார்கள்; சேமிப்புகள் குறையும்.

சனி பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 18-7-2014 முதல் 8-9-2014 வரை

சனி பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில், 13-6-2014-ல் ஏற்பட்ட குருப் பெயர்ச்சியின் மூலம் குரு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். 21-6-2014 முதல் ராகு ஜென்ம ராசியிலும் கேது 7-லும் சஞ்சரிப்பதால் ராகு- கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கிருந்த போட்டி, பொறாமைகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

சனி பகவான் விசாக நட்சத்திரத்தில் 9-9-2014 முதல் 16-12-2014 வரை

சனி பகவான் குருவின் நட்சத்திரத்தில் சஞ்சரித்து ஏழரைச் சனி நடைபெற்றாலும் குரு லாபஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கைகூடும். பொன், பொருள் சேரும். புதிய பூமி, மனை வாங்கும் யோகம் கிட்டும். கடன்கள் படிப்படியாகக் குறையும். 1, 7-ல் ராகு- கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக விலகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரத்தில் அரசு வழியில் ஆதரவுகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும்.

உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு: நன்றி மறவாத தன்மையும், தர்ம நெறி தவறாது விளங்கும் பண்பும் கொண்ட உங்களுக்கு, ஏழரைச் சனியில் குடும்பச் சனி நடைபெறு வதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறு பாடுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். ஆடம்பரமாக செலவுகள் செய்வது,. பெரியதொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். உடன்பணிபுரிபவர்களிடம் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு: அனைவரிடமும்  மரியாதையாக பழகும் குணமும் உயர்ந்த பண்பும் கொண்ட உங்களுக்கு ஏழரைச் சனியில்  பாதச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தி லுள்ளவர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். உற்றார்- உறவினர்கள் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் உண்டாகி, வரவேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும்.

சித்திரை 1, 2-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு: மனம் திறந்து பேசும் ஆற்றலும் நல்ல அறிவுக் கூர்மையும் கொண்ட உங்களுக்கு, ஏழரைச் சனியில் பாதச் சனி நடைபெறுவதால் குடும்பத்திலுள்ள வர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் செலவுகளைக் கட்டுக்குள் வைப்பது நல்லது. உற்றார்- உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனமுடனிருப்பது நற்பலனைத் தரும்.

அதிர்ஷ்டம் தருபவை

எண்: 5, 6, 7, 8, 15, 16.

கிழமை: புதன், சனி.

திசை: வடக்கு.               

கல்: மரகதப் பச்சை.

நிறம்: பச்சை, நீலம்.           

தெய்வம்: விஷ்ணு.

பரிகாரம்

ஏழரைச் சனியில் குடும்பச் சனி நடைபெறுவதால் தொடர்ந்து சனி பகவானைக்கு பரிகாரம் செய்வது. சனிப் ப்ரீதியாக ஆஞ்ச நேயரை வழிபாடு செய்வது நல்லது. திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்து விட்டு வருவதும் நற்பலனை உண்டாக்கும். குரு சாதகமற்று சஞ்சரிக்கும் காலங்களில் தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :