|
|
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
பிறர் நலனுக்காக பாடுபடக்கூடிய குணமும் சூதுவாது அறியாத வெள்ளை உள்ளமும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!உங்களுக்கு ஏழரைச் சனி முடிவடைந்திருந்தாலும் கடந்த ஆறு மாதகாலமாக சனி பகவான் 2-ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் விட்ட குறை தொட்டகுறையாக ஏழரைச் சனி தொடர்ந்தது. வாக்கிய சித்தாந்தப்படி வரும் 12-9-2012 முதல் 16-12-2014 வரை முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் உச்சம் பெற்று சஞ்சரிக்கவிருப்பதால், கடந்தகால பிரச்சினைகள் யாவும் சூரியனைக் கண்ட பனிப்போல மறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொருளாதார நிலையிலிருந்த நெருக்கடிகள் யாவும் குறைந்து கடன்களும் விலகும். பணம் பலவழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான வரன்கள் தேடி வரும். சிலர் நினைத்தவரையே கைபிடிப்பர். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். 3-ல் சஞ்சரிக்கும் சனி 5, 9, 12 ஆகிய வீடுகளைப் பார்வை செய்வதால் சிறுசிறு பிரச்சினைகள் நேரிட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. சேமிப்பு பெருகும். சமுதாயத்தில் கௌரவமான நிலை உண்டாகும். கடன்கள் குறையும். சனி 3-ல் பலமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் 28-5-2013 வரை குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை எதிலும் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறமைகளை வெளிப்படுத்தாத சூழ்நிலை ஏற்படும். 28-5-2013 முதல் 13-6-2014 வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்யவிருப்பதால் லாபங்கள் பெருகும். தொட்டதெல்லாம் துலங்கும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையிலிருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில், வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் குறைந்து அபிவிருத்தி பெருகும். சமுதாயத்தில் கௌரவமான நிலை உண்டாகும். புதிய பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரி வடையும். 13-6-2014 முதல் 5-7-2015 வரை குரு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதிர்பாராத திடீர் விரயங்களை சந்திக்க வேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபமடைய முடியும்.உடல் ஆரோக்கியம்: உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சனி உச்சம் பெற்று சஞ்சாரம் செய்வதால் இதுவரை நடைபெற்ற ஏழரைசனி முழுவதும் முடிவடைகிறது. இதனால் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக அமையும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய வலிமை உண்டாகும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகள் மற்றும் வயதில் மூத்தவர்களும் ஓரளவுக்கு மகிழ்ச்சிகரமாகவே இருப்பார்கள். கடந்த காலங்களிலிருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.குடும்பம்- பொருளாதார நிலை: கணவன்- மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருப் பவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலர் விரும்பியவரையே மணம் முடித்து மகிழ்வார்கள். அழகான புத்திர பாக்கியமும் கிடைக்கப் பெறும். சொந்த வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். புதிய வீடு கட்டும் திட்டங்களும் புதிய வீடு மாறும் வாய்ப்பும் உண்டாகும். பொன், பொருள் சேரும். இதுவரை பகைமை பாராட்டிய உற்றார்- உறவி னர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளகூடிய அளவிற்கு பொருளாதாரநிலை சிறப்பாக அமையும். புதிய நவீனகரமானப் பொருட்களையும் வாங்கிச் சேர்ப்பீர்கள்.உத்தியோகம்: பணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த உயர் பதவிகளைப் பெறமுடியும். இது நாள் வரை இருந்த வந்த பணிச் சுமைகளும், வீண்பழிச் சொற்களும் விலகி நிம்மதியான நிலை உண்டாகும். உங்களின் திறமைகளை உயரதிகாரிகள் புரிந்து கொண்டு பாராட்டுவார்கள். உடன் பணிபுரிபவர்களும் ஒற்றுமை யுடன் செயல்படுவார்கள். ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறுவ தால் பொருளாதார நிலையும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் தேடிவரும். போட்டி, பொறாமைகள் யாவும் விலகும். மறைமுக எதிர்ப்புகளை வெல்லக்கூடிய அளவிற்கு வலிமையும் வல்லமையும் உண்டாகும். தொழில்ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளி களிடமும் தொழிலாளர்களிடமும் இருந்த பிரச்சினைகள் விலகி சுமுகமான நிலை உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் கிட்டும். அரசு வழியிலும் கடனுதவிகள் கிடைக்கப் பெறுவதால் புதிய நவீனகரமான கருவிகளை வாங்கி அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள்.பெண்கள்: உடல் ஆரோக்கியத்திலிருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்ப தால் குடும்பத் தேவைகள் யாவும் தீரும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரி யங்கள் கைகூடும். புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு நல்ல கௌரவமான பதவிகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும்.கொடுக்கல்- வாங்கல்: பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலும் சரளமாகவே இருக்கும். என்றாலும் சில நேரங்களில் பணவிஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பிறரை நம்பி பெரிய தொகைகளைக் கொடுக்கும் போதும் முன்ஜாமீன் கொடுக்கும்போதும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கமிஷன், ஏஜென்ஸி போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும்.அரசியல்: அரசியல்வாதிகளுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகி மாண்புமிகு பதவிகள் தேடிவரும். உங்கள் பேச்சிற்கு மக்களிடையே நல்ல கௌரவம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதால் அவர்களின் முழு ஆதரவினைப் பெறுவீர்கள்.விவசாயிகள்: நல்ல விளைச்சல் பெருகுவதால் லாபமும் அதிகரிக்கும். உழைப்பைவிட லாபத்தைப் பன்மடங்கு பெறமுடியும். அரசு வழியில் உண்டாகக் கூடிய எதிர்பாராத உதவிகளால் கடன் சுமைகள் குறையும். புதிய பூமி, வண்டி, வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கமும் நிறைவேறும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளாலும் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.கலைஞர்கள்: கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப் படுத்தக் கூடிய அளவிற்கு சிறப்பான கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக வராமல் தடைப்பட்ட சம்பள பாக்கிகளும் வீடு தேடி வரும். புதிய கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. பயணங்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.மாணவ- மாணவியர்: மாணவ- மாணவியருக்கு கல்வியிலிருந்த மந்தநிலைகளும், தடைகளும் விலகுவதால் பல சாதனைகளைச் செய்யக்கூடிய வாய்ப்புண்டாகும். கல்விக்காக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கையும் கிடைக்கப் பெறும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும்.சனி பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 12-9-2012 முதல் 9-11-2012 வரைசனி பகவான் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்திலிருந்த பிரச்சினைகள் யாவும் விலகி மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்திலிருந்த கருத்து வேறுபாடுகளும் மறையும். எடுக்கும் முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாவதுடன் உங்களுக்கிருந்த கடன் பிரச்சினைகளும் படிப்படியாக விலகும். தொழில், வியாபாரத்திலிருந்த மந்தநிலை போட்டி, பொறாமைகள் யாவும் மறையும்.சனி பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 10-11-2012 முதல் 16-2-2013 வரைசனி பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் அற்புதமான நற்பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரரீதியாக நல்ல லாபங்கள் பெருகும். பயணங் களால் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். இதுவரை 4, 10-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்களான ராகு- கேது வரும் 2-12-2012 முதல் ராகு 3-ஆம் வீட்டிலும்; கேது 9-லும் சஞ்கரிக்கவுள்ளனர். இதுவும் சாதகமான அமைப்பாகும். செல்வம், செல்வாக்கு சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். பூமி, மனை வாங்கும் யோகம் அமையும்.சனி பகவான் வக்ரகதியில் 17-2-2013 முதல் 4-7-2013 வரைசனி பகவான் வக்ரகதியில் சஞ்சரித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். குரு பகவான் வரும் 28-5-2013 முதல் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி அபிவிருத்தியைப் பெருக்கிகொள்ள முடியும்.சனி பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 5-7-2013 முதல் 13-12-2013 வரைசனி பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் ராகு சேர்க்கையுடனி ருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் உங்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் உண்டாகாது. பொன், பொருள் சேரும். கடன் சுமைகளும் குறையும். உற்றார்- உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தொழில், வியாபார ரீதியாகவும் உயர்வுகள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒத்துழைப்பாக இருப் பார்கள்.சனி பகவான் விசாக நட்சத்திரத்தில் 14-12-2013 முதல் 1-3-2014 வரை சனி பகவான் குருவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங் களில் சுபிட்சமான நிலையே தொடரும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வதும், கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவதும் நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெறமுடியும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல கௌரவமான உயர்பதவிகளும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதார நிலை உயர்வடையும்.சனி பகவான் வக்ரகதியில் 2-3-2014 முதல் 17-7-2014 வரைசனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குரு லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். என்றாலும் வரும் 13-6-2014 முதல் குரு ஜென்ம ராசிக்கு 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். சர்ப்ப கிரகங்களான ராகு- கேது வரும் 21-6-2014 முதல் ஜென்ம ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவுமாக சஞ்சரிக்கவுள்ளனர். இதனால் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பதும் உத்தமம்.சனி பகவான் சுவாதி நட்சத்தில் 18-7-2014 முதல் 8-9-2014 வரை சனி பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் குடும்பத்தில் சாதகமான பலன்களே உண்டாகும். குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது எச்சரிக்கை தேவை. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சிலகாலம் தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். தொழில், வியாபாரரீதியாக சற்று மந்தநிலை நிலவினாலும் தேக்கம் உண்டாகாது. கடன் சுமைகள் சற்றே குறையும்.சனி பகவான் விசாக நட்சத்திரத்தில் 9-9-2014 முதல் 16-12-2014 வரைசனி பகவான் குருவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங் களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின்தான் வெற்றி கிட்டும். எந்தவொரு விஷயத்திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு: பிறருக்கு எந்தக் காலத்திலும் அடிமையாக இருக்க விரும்பாத உங்களுக்கு, சனி பகவான் 3-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் நினைத்த தெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமைக் கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக இருக்கும். பொன், பொருள் சேரும். உத்தியோகத்தில் கௌரவமான பதவிகள் கிட்டும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு: பகைவரை வெல்லக்கூடிய வலிமையும் நல்ல அறிவாற்றலும் கொண்ட உங்களுக்கு, சனி பகவான் 3-ஆம் வீட்டில் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக இருந்த எதிர்ப்புகள் மறையும். வெளியூர், வெளி நாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறு பாடுகள் மறைந்து அந்நியோன்னியம் அதிகரிக்கும். அழகான புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். நினைத்தது நிறைவேறும். உற்றார்- உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடை வார்கள்.உத்திரம் 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு: பிறர் மனதைப் புண்படுத்தத் தெரியாத குணம் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 3-ல் சனி பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் யாவும் பனிபோல மறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். அசையும்- அசையா சொத்துகள் சேரும். ஆடை, ஆபரண சேர்க்கைகளும் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இட மாற்றங்களைப் பெறுவர். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் மறைந்து லாபங்கள் பெருகும்.அதிர்ஷ்டம் தருபவைஎண்: 1, 2, 3, 10, 11.கிழமை: ஞாயிறு, திங்கள்.நிறம்: சிவப்பு, வெள்ளை.கல்: மாணிக்கம்.திசை: கிழக்கு.தெய்வம்: சிவன்.பரிகாரம்சனி பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். குரு சாதகமற்று சஞ்சரிக்கும் காலங்களில் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது. ராகு- கேதுவுக்கும் பரிகாரம் செய்யலாம்.
|
|