|
|
கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
உயர்ந்த லட்சியங்களைக் கொண்டு, விடா முயற்சியுடன் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்ட கடக ராசி அன்பர்களே!கடந்த ஆறு மாதகாலமாக சனி 3-ல் சஞ்சரித்து நற்பலன்களை அளித்தாலும், வரும் 12-9-2012 முதல் 16-12-2014 வரை வாக்கிய சித்தாந்தப்படி 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டமச் சனி நடைபெற இருக்கிறது. இது சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விலும் இடையூறுகள் ஏற்படும். உடல்ரீதியாகவும் சிறுசிறு பாதிப்புகள் உண்டாவதால் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலையும், எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலையும் உண்டாகும். வீடு, மனை, வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். சனி பார்வை ஜென்ம ராசிக்கும் 6, 10-ஆம் வீட்டிற்கும் உள்ளதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானமுடனிருப்பது நல்லது. சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனி நடைபெறும் இக்காலங்களில், 28-5-2013 வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் ஆண்டுக்கோளான குரு பகவான் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். கடன்கள் சற்று குறையும். பொன், பொருள் சேரும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புதிய வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்க்கும் லாபம் அமையும். குரு 28-5-2013 முதல் 13-6-2014 வரை விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டிலும், 13-6-2014 முதல் 5-7-2015 வரை ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்ய விருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.உடல் ஆரோக்கியம்: உங்கள் ஜென்ம ராசிக்கு 4-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டச் சனி நடைபெறுகிறது. இதனால் உடல் நிலையில் சோர்வு, எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட இயலாத நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச் சல்கள் அதிகரிக்கும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாதபடி சுகவாழ்வு பாதிப்படையும். குடும்பத்திலுள்ளவர்களாலும் சிறுசிறு விரயங்களை சந்திப்பீர்கள்.குடும்பம்- பொருளாதார நிலை: குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறைய நேர்ந்தாலும் உடனடியாக சரியாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். எதையும் வாங்கி அனுபவிக்க தடைகள் உண்டாகும். நேரத்திற்கு சாப்பிட முடியாமல் அலைச்சல் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனு சரித்துச் செல்ல பழகிக் கொள்வது நல்லது. சுகவாழ்வு, சொகுசு வாழ் வில் தடைகள் ஏற்படும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய கார், பங்களா வாங்கும் முயற்சிகளில் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து வழக்குகள் இழுபறி நிலையிலேயே இருக்கும். வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.உத்தியோகம்: உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளை பிறர் எளிதில் தட்டிச் செல்வார்கள். எவ்வளவு தான் உழைத்தாலும் திறமைக்கேற்ற பலனை அடைய முடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் வீண் பழியை சுமக்க வேண்டியிருக்கும். ஊதிய உயர்வுகள் கிடைத்தாலும் வேலைப் பளுவும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் ஓரளவுக்கு ஒத்துழைப்பாக நடந்துகொண்டால், உடன் பணிபுரிபவர்களால் வீண் பிரச்சினை களை சந்திக்க வேண்டி வரும்.தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். எதிலும் சற்று மந்தமான நிலை நிலவி னாலும் பொருட் தேக்கம் ஏற்படாமல் சமாளிக்க முடியும். நிறைய போட்டி, பொறாமைகள் ஏற்பட்டு, வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவும். கூட்டாளிகளிடமும் வேலையாட்களிடமும் சற்று விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. நவீனகரமான கருவிகள் பழுத டைவதால் அபிவிருத்தி குறைவதோடு வீண் செலவுகளும் ஏற்படும். என்றாலும் எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும்.பெண்கள்: உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவினாலும் உற்றார்- உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். சிலருக்கு அழகான குழந்தை பாக்கியமும் கிட்டும். பணிபுரிவோர்க்கு எதிர் பாராத இட மாற்றங்கள் ஏற்படுவதோடு வேலைப் பளுவும் அதிகரிக்கும்.கொடுக்கல்- வாங்கல்: பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருந்தாலும் சில நேரங்களில் பெரிய தொகைகளை கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்ப தாலும் வீண் பிரச்சினைகளில் சிக்குவீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் ஏற்றத் தாழ்வான நிலையிருக்கும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும்.அரசியல்: கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் சிறுசிறு இடையூறுகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சிற்கு மக்களிடையே மதிப்பிருக்கும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே அவர்களின் ஆதரவை தடையின்றிப் பெறமுடியும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் அலைச்சல்களும் உண்டாகும்.விவசாயிகள்: பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் நஷ்டம் ஏற்படாது. சந்தையில் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். புதிய நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். கால்நடைகளுக்கு நோய்கள் தாக்குவதால் சிறுசிறு விரயங்கள் உண்டாகலாம்.கலைஞர்கள்: கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. தேவையற்ற கிசுகிசுக்கள் உங்கள் மனதில் பாதிப்பினை ஏற்படுத்தும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்களும் உண்டாகும். புதிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். வரவேண்டிய சம்பள பாக்கிகளைப் போராடி வாங்க நேரிடும். உடல் நிலையில் கவனம் செலுத்தவும்.மாணவ- மாணவியர்: கல்வியில் முழு முயற்சியுடன் செயல் பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். ஞாபக மறதியால் எல்லா வகையிலும் பாதிப்படைவீர்கள். கல்விக்காக சிலர் குடும்பத்தை விட்டுப் பிரியவேண்டிய நிலை உண்டாகும். சிலருக்கு தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற நட்புகளைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.சனி பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 12-9-2012 முதல் 9-11-2012 வரைசனி பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் துலா ராசியில் ஜென்ம ராசிக்கு 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறவுள்ளது. இது சாதகமற்ற அமைப்பு என்றாலும், இக்காலங்களில் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே இருக்கும். திருமண சுபகாரியங்களும் தடபுடலாக நடைபெறும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும்.சனி பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 10-11-2012 முதல் 16-2-2013 வரைசனி பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங் களில் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, உடல் ஆரோக்கி யத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினைப் பெறமுடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகளும் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது கவனம் தேவை. வரும் 2-12-2012 முதல் சர்ப்ப கிரகங்களான ராகு 4-ஆம் வீட்டிலும், கேது 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவுள்ளனர். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலன் அமையும்.சனி பகவான் வக்ரகதியில் 17-2-2013 முதல் 4-7-2013 வரைஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சுபிட்சங்கள் உண்டாகும். உற்றார்- உறவினர்களாலும் நற்பலன் அமையும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன் சுமைகள் சற்றே விலகும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வரும் 28-5-2013 முதல் குரு விரய ஸ்தான மான 12-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.சனி பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 5-7-2013 முதல் 13-12-2013 வரைசனி பகவான் 4-ல் ராகுவின் நட்சத்திரத்தில் ராகுவின் சேர்க்கையுடன் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் குடும்பத்தில் தேவையற்ற வீண் பிரச்சினைகள் உண்டாகும். எதிர் பாராத பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். உற்றார்- உறவினர்களால் சிறு சிறு மனசஞ்சலங்கள் ஏற்படும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருப்பதால் தேவைகளைப் பூர்த்தி செய்ய திண்டாட வேண்டி வரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிப்பதுடன் வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். வீண் விரயங்கள் அதிகரிக்கும்.சனி பகவான் விசாக நட்சத்திரத்தில் 14-12-2013 முதல் 1-3-2014 வரைசனி பகவான் குருவின் நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரித்து உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெற்றாலும், 12-ல் சஞ்சரிக்கும். குரு பகவான் வக்ரகதியிலிருப்பதால் மகிழ்ச்சிகரமான நிலையே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபத்தினைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று அலைச்சல்கள் ஏற்பட்டாலும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.சனி பகவான் வக்ரகதியில் 2-3-2014 முதல் 17-7-2014 வரை அர்த்தாஷ்டமச் சனி நடைபெற்றாலும் சனி வக்ரகதியிலிருப்பதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். வரும் 21-6-2014 முதல் ராகு 3-ஆம் வீட்டிலும், கேது 9-லும் சஞ்சரிக்கவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு பகவான் வரும் 13-6-2014 முதல் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிக்க விருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பண விஷயங்களில் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது, பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாகக் கொடுக்காதிருப்பது உத்தமம். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். அனுசரித்துச் செல்வது நல்லது.சனி பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 18-7-2014 முதல் 8-9-2014 வரைசனி பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதும், குரு ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும், ராகு 3-ல் இருப்பதால் எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்களால் சில மனசஞ்ச லங்கள் ஏற்பட்டாலும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். பணவரவுகளில் ஏற்றத்தாழ்வான நிலையே இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். சேமிப்பு சற்று குறையும்.சனி பகவான் விசாக நட்சத்திரத்தில் 9-9-2014 முதல் 16-12-2014 வரைசனி பகவான் குருவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங் களில் ஏற்றத்தாழ்வான பலன்களையே பெறுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன் னேறுவீர்கள். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுக்காமலிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்றே மந்தநிலை ஏற்பட் டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் வீண் பிரச்சினை களைத் தவிர்க்கலாம்.புனர்பூசம் 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு: கூர்மையான அறிவுத்திறனும் தான- தர்மம் செய்யும் பண்பும் கொண்ட உங்களுக்கு சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் சுகவாழ்வில் பாதிப்பு உண்டாகும். திருமண சுபகாரியங்கள் குடும்பத்தில் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர் களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படும்.பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு: தன்னடக்கமும், ஒழுக்கமும், சந்தோஷமான வாழ்வும் ஒருங்கே அமையப் பெற்ற உங்களுக்குச் சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரச் செலவு களைக் குறைப்பது நல்லது குடும்பத்திலுள்ளவர்களையும் உற்றார்- உறவினர்களையும் அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். தொழில், வியாபாரம்ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களால் சற்றே அலைச்சல்களும் உண்டாகும்.ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு: நல்ல பேச்சாற்றலும், கலை, இசை போன்றவற்றில் ஆர்வமும் கொண்ட உங்களுக்கு, அர்த்தாஷ்டமச் சனி நடைபெறு வதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கட்டுப் பாட்டுடன் இருப்பது அவசியம். பொருளாதாரநிலை தேவைக் கேற்றபடி இருக்கும். பொன், பொருள் சேரும். சிலர் நினைத் தவரையே கை பிடிப்பர். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல் படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக நேரம் உழைக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப் பவர்களை அனுசரித்துச் செல்லவும்.அதிர்ஷ்டம் தருபவைஎண்: 1, 2, 3, 10, 11.நிறம்: வெள்ளை, சிவப்பு.திசை: வடமேற்கு.கிழமை: ஞாயிறு, திங்கள்.கல்: முத்து.தெய்வம்: வெங்கடாசலபதி.பரிகாரம்ஜென்ம ராசிக்கு 4-ல் சனி சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும் நற்பலனை உண்டாக்கும்.
|
|