அண்மைச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: லண்டன் நகரில் தமிழர்கள் பேரணி || களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் ||
Logo
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
மேஷம்
......................................
ராகு- கேது பெயர்ச்சிப் பலன்கள்
......................................
ஒருவனே தேவன்!
......................................
மகான்களும்...
......................................
செப்டம்பர் மாத ராசி
......................................
இந்து தர்மம்...
......................................
அனுமனின் கதையே...
......................................
மூன்றடி கேட்டு மூவுலகு....
......................................
இயற்கையின் அதிசயம்!
......................................
தெய்வங்கள் வணங்கும்
......................................
என்றும் வாழும் சித்தர்கள்
......................................
தெய்வத்தில் வாழ்பவன்!
......................................
செப்டம்பர் எண்ணியல்...
......................................
சோமாஸ்கந்த வடிவம்
......................................
வைத்தீஸ்வரன் கோவிலில்
......................................
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாயகன்
......................................
அஸ்தியை பூக்களாக்கிய...
......................................
ஒன்றினால் ஒன்றும்...
......................................
தூங்கிக் கிடக்கும் பாம்பு!
......................................
மங்களமூர்த்தி மகாராஜா!
......................................




         டந்த இதழில் வெளியான "ஆங்கோர்தாம் அதிசயம்' கட்டுரையின் தொடர்ச்சி...

கடந்த இரு இதழ்களில் கம்போடியாவின் ஆங்கோர் வாட், ஆங்கோர் தாம் ஆலயங்களைப் பற்றி அறிந்த நாம், இவ்விதழில் "த்தா ஃப்ராம்' என்னும் கம்போடிய ஆலயம் பற்றிப் பார்ப்போம்.

இக்கோவிலின் பாரம்பரியப் பெயர்  "ராஜ விஹாரம்' என்பதாகும். ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது இவ்வாலயம். என்றாலும் இரண்டாம் இந்திரவர்மன் எனும் மன்னனால் விரிவாக்கம் செய்யப்பட்டதென்பர்.

ஜெயவர்மன் தன் தாயாரின் விருப்பத்திற் கேற்ப இக்கோவிலைக் கட்டியதாகவும்; தந்தையின் விருப்பத்திற்கிணங்கி இக்கோவில் கோபுரத்தில் லோகேஸ்வரரின் நான்கு முகங்களை அமைத்தான் என்பதும் வரலாறு கூறும் செய்தி. ஆங்கோர் வாட், ஆங்கோர் தாம் கோவில்களிலுள்ள அதிசயங்களையும் மிஞ்சி நிற்கும் மாபெரும் அதிசயம் ஒன்று "த்தா ஃப்ராம்' எனும் இக்கோவிலில் உள்ளது.

இங்கே ஆலய வளாகத் திற்குள் வித்தியாசமான மரங்கள் வளர்ந்துள்ளன.  இவை சில்க் காட்டன் மரங்கள் (Silk cotton Trees).

சில்க் காட்டன் மரங் களின் வேர்கள் மிக அசாதாரணமான தோற்றத்திலும், மிகமிக உறுதியாகவும் உள்ளன. இதன் தோற்றத்தை வார்த்தைகளால் வர்ணித்துக் கூறமுடியாது.

பலம் பொருந்திய உறுதியான வேர்கள்! இவற்றை ராட்சத வேர்கள் என்று கூட கூறலாம். அவ்வேர்களைத் தாங்கும் மரங்கள்! சில இடங்களில் இந்த ராட்சத வேர்களும் வேர்களால் தாங்கப்படும் மாபெரும் மரங்களும் கோவில் கட்டடத்தைத் தாங்குவதுபோலவும் காணப்படுகிறது. சில இடங்களில் இந்த மரங்கள் கட்டடத்தை இடித்து அழிப்பது போலவும் காணப்படும் விந்தை ஒரு புரியாத புதிர்! நேரில் பார்த்தால் மட்டுமே இவற்றின் வினோதத்தை அறிய முடியும்; உணரமுடியும். இப்படிப்பட்ட வேர்கள் கொண்ட மரங்கள் உலகில் வேறெங்கும் இல்லையென்கிறார்கள்.

இந்த மரங்களுக்கும் கோவில் கோபுரங்களுக் கும் ஏதோ ஒரு இனம் புரியாத பிணைப்பு இருப்பதுபோல் தோன்று கிறது. மரங்கள் காரண மாக கோவில் கட்டடம் அழிந்து வருவதைத் தடுத்துப் பாதுகாக்கும் வகையில், அரசாங்கம் மிக உறுதியான இரும்புக் கம்பிகள் கொண்டு மரங்களுக்குத் தாக்கம் கொடுத்து நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஆலயமும் மரங்களும் ஒருசேர பாதுகாக்கப்படுகின்றன. இது ஒரு முயற்சி; அவ்வளவே.



மகாபாரதப் போர்க்காட்சிகள் இங்கு சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ண பகவான் கோவர்தன மலையை ஒற்றை விரலால் தாங்கிப் பிடித்தபடி நிற்கும் அருமையான சிற்பம் வெகு அற்புதம்!

கிருஷ்ண பகவான் உட்பட பெரும்பான்மை யான இந்துக் கடவுள்கள் காணப்படும் இக்கோவில்களில் புத்தர் சிலைகள் இருப்பதற் குரிய காரணம் ஆதாரப்பூர்வமாக அறியப் படவில்லை.

கம்போடியாவில் ஆங்கோர் கோவில்கள் வரிசையில் இன்னும் பல கோவில்கள் உள்ளன. அத்தனையையும் பார்த்து ரசிக்க பல நாட்கள் தேவைப்படும். வாய்ப்பு கிடைப்பவர் கள், கம்போடியா சென்று மேற்கூறிய மூன்று கோவில்களையாவது கண்டு ரசிக்க வேண்டும். இவற்றின் கலைநயங்களைப் பார்த்து அதிசயித்து அகம் மகிழவேண்டும்.

12-ஆவது நூற்றாண்டு வரை இந்து மதம்தான் இங்கே பின்பற்றப்பட்டதாகவும்; அதன் பின்னரே புத்த மதம் பரவியதாகவும் கூறுகிறார்கள்.

கம்போடியாவில் முதலில் பரவிய புத்த மதம் "மகாயானம்' எனும் பிரிவைச் சேர்ந்தது எனவும்; அதன்பின் உருவாகிய புத்த மதம் "தெரவாட' எனும் பிரிவானது என்றும் அறியப் படுகிறது. இன்றைய காலகட்டம் வரை "தெரவாட' புத்தமதம் பின்பற்றப்பட்டு வருகிறது. "மகாயான' புத்தமதம்தான் மிகவும் போற்றுதலுக்குரிய மற்றும் துதிப்பதற்குரிய புத்தமதமாக முன்னா ளில் இருந்திருக்கின்றது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஏழாம் ஜெயவர்மன் எனும் மன்னனின் காலத்தில் புத்தமதம் வெகுவாகப் பரவி வந்துள்ளது.

ஆங்கோர் கோவில்களை சுமார் 30 லட்சம் வெளிநாட்டு மக்கள் காணச் செல்கிறார்கள் என்பது சிறப்புச் செய்தியாகும்.

அதே நேரத்தில் வருத்தப்படக்கூடிய ஒரு விஷயம் இங்கே நிகழ்ந்து வருகிறது. அது என்னவென்றால் இங்கே சிற்பங்கள் பல திருடுபோகின்றன. புத்தர் சிலைகளின் தலைகள் திருடப்பட்டு, அவை வெளிநாடு களில் விற்கப்படுகின்றன என்று கூறுகிறார் கள்.

தற்போது கம்போடிய அரசு இக்கோவில் களைப் பாதுகாப்பதற்காக அரண்களைக் கட்டி வருகிறது. சில பகுதிகளில் "இதற்குமேல் போகாதீர்கள்' என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் கம்போடியா சென்று இந்த கலைக்கோவில்களை கண்டு களிக்க வேண்டுமென்பது என் எண்ணம்.

இவற்றைக் கண்டு ரசிக்கும் பெரும் பேறும், நல்வாய்ப்பும் கிடைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். எனது அனுபவங்களை "ஓம் சரவணபவ' வாசகர் களிடம் பகிர்ந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :