அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
Logo
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
மேஷம்
......................................
ராகு- கேது பெயர்ச்சிப் பலன்கள்
......................................
ஒருவனே தேவன்!
......................................
மகான்களும்...
......................................
செப்டம்பர் மாத ராசி
......................................
இந்து தர்மம்...
......................................
அனுமனின் கதையே...
......................................
மூன்றடி கேட்டு மூவுலகு....
......................................
இயற்கையின் அதிசயம்!
......................................
தெய்வங்கள் வணங்கும்
......................................
என்றும் வாழும் சித்தர்கள்
......................................
தெய்வத்தில் வாழ்பவன்!
......................................
செப்டம்பர் எண்ணியல்...
......................................
சோமாஸ்கந்த வடிவம்
......................................
வைத்தீஸ்வரன் கோவிலில்
......................................
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாயகன்
......................................
அஸ்தியை பூக்களாக்கிய...
......................................
ஒன்றினால் ஒன்றும்...
......................................
தூங்கிக் கிடக்கும் பாம்பு!
......................................
மங்களமூர்த்தி மகாராஜா!
......................................




           ருநாள் திருவொற்றியூர்க் கோவிலிலில் ஒரு மூதாட்டியின் கரத்தில் வள்ளலார் கொடுத்த ஒரு பிடி மணல் முழுவதும் சின்னச் சின்னச் சிவலிலிங்கங்களாக மாறியதே? அப்போது ஓடிவந்து மூதாட்டியின் கையைப் பார்த்த எல்லாரும் வள்ளலாரை இருகரம் கூப்பித் தொழுதார்கள். ஆனால் சில நாட்களிலேயே ஒரு பெரிய நாகப்பாம்பு சீறிக்கொண்டு வந்து வள்ளலாரின் காலைச் சுற்றப் போகிறது என்பதை யாரும் அப்போது அறியவில்லை...

சென்னை வியாசர்பாடியில் ஓர் இரவு சொற்பொழிவு முடித்துவிட்டு வள்ளலார் தம் நண்பர்களோடு இருளில் நடந்து வந்துகொண்டிருந்தார். வழியில் திடீரென ஒரு கருநாகம் படமெடுத்து வள்ளலார் முன் வந்து நின்றது. மிகப் பெரிதாக இருந்த ஒரு ராஜநாகம் அது.

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்களே? நண்பர் படை நடுங்காமல் இருக்குமா? எல்லாரும் என்ன செய்வது என அறியாமல்  திகைத்து நின்றார்கள்.

ஆனால் வள்ளலார் பதற்றமே இல்லாமல் அமைதி காத்தார். "என்ன வேண்டும்?' என்று கேட்பதுபோல் அந்த நாகப்பாம்பைப் பரிவோடு பார்த்தார். அது ஊர்ந்துவந்து மிகுந்த உரிமையோடு வள்ளலாரின் காலைச் சுற்றிக் கொண்டது.

வள்ளலார் சிவபெருமானின் அவதாரமே தானோ? பாம்பு தானே வந்து அவர் காலைச் சுற்றிக் கொள்கிறதே? பார்த்தவர்கள் திகைத்தார்கள்; பயபக்தியோடு கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். ""சரி சரி, போதும் போய்வா'' என்றார் வள்ளலார். அந்தப் பாம்பு மெல்ல அவரை விட்டு இறங்கிப் புதருக்குள் சென்று மறைந்துவிட்டது. 

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நிறைய நடைபெறலாயின. இந்த நிகழ்ச்சிகளை நேரில் கண்டவர்கள் பரவசத்தோடு இதுபற்றித் தங்கள் உற்றாரிடமும் உறவினரிடமும் தெரிவிக்கத் தொடங்கினார்கள்.

வள்ளலாரின் மகிமை இத்தகையோர் பேச்சின் மூலம் பெரிதும் பரவத் தொடங்கியது. ஆனால் தன்னைப் பிறர் புகழ்வதைப் பற்றியெல்லாம் ஒருசிறிதும் லட்சியம் செய்யாமல் தொடர்ந்து தவம், தியானம் போன்றவற்றில் தீவிரத்தோடு ஈடுபட்டு வந்தார் வள்ளலார். அவர் பாடும் புதிய அருட்பாடல் களைக் கேட்கவும் அவரிடம் பழந்தமிழ் இலக்கியத்தில் சந்தேகம் கேட்கவும் பல அறிஞர் பெருமக்கள் அவரைத் தேடிவந்தார்கள்.



கவிதை நூல்களையே அதிகம் எழுதிவந்த வள்ளலார், அவரது நண்பரான சபாபதி முதலிலியார் பெரிதும் வேண்டிக் கொண்டதன் பேரில் ஓர் உரைநடை நூலையும் எழுதினார். "மனுமுறை கண்ட வாசகம்' என்ற தலைப்பிலான அந்நூல், சேக்கிழாரின் பெரிய புராணத்தில் சொல்லப்படும் மனுநீதிச் சோழன் சரித்திரத்தைப் பற்றிக் கூறுவது. தற்காலத் தமிழ் இலக்கியத்தில் அழியாப் புகழ்பெற்ற நூல் அது.

அரச குமாரனான வீதிவிடங்கன் ஓட்டிச் சென்ற தேரின் சக்கரத்தில் சிக்கி ஒரு கன்றுக் குட்டி உயிர்துறக்க நேர்கிறது. அதை அறிந்த வீதிவிடங்கனின் தந்தையான மனுநீதிச் சோழன் கண்ணீர் விட்டுப் புலம்புகிறான். "இந்தப் பெரும் துயரம் எனக்கு ஏன்?' என்று கேட்டுக் கொள்ளும் அவன், "முந்தைய பிறப்பில் ஏதேனும் பாவம் செய்திருப்பேனோ' என்று எண்ணியெண்ணி வருந்துகிறான். அப்போது வள்ளலார் கூறும் பாவங்களின் பட்டியல் நெஞ்சை அள்ளக் கூடியது. இன்றைய மக்களின் சிந்தனைக்கு ஏற்றது.

"நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சிநேகிதரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
வேலையிட்டுக் கூலிலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!
கோள்சொல்லிலிக் குடும்பங் கலைத்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ!
தவஞ்செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணை செய்தேனோ!
தெய்வம் இகழ்ந்து செருக்கடைந்தேனோ!'

 வள்ளலார் செய்யுள் நூல்களோடு சில உரைநடை நூல்களை எழுதினார். அது மட்டுமல்ல; சில அரிய நூல்களைப் பதிப்பிக்கவும் செய்தார். கொண்ணூர் ஐயாசாமி முதலிலியார் வேண்டுகோளின்படி, வள்ளலார் பார்வையிட்டுப் பதிப்பித்த நூல் "தொண்ட மண்டல சதகம்'. அது "தொண்டை மண்டல சதகமல்ல; தொண்ட மண்டல சதகம்தான்' என்று வள்ளலார் தொல்காப்பிய மேற்கோளோடு நிறுவும் இடத்தில் வள்ளலாரின் மிகப்பெரிய இலக்கணப் புலமையையும் நாம் உணரலாம்.

இலக்கியரீதியாக வள்ளலாரைச் சிலர் ஏமாற்ற முயன்று தோற்றதும் உண்டு. வள்ளலாரின் மிகக் கூர்மையான ரசனை, எதை யார் எழுதியது என்பதைச் சுலபமாகக் கண்டுபிடித்துவிடும்.

தொழுவூர் வேலாயுத முதலிலியார் என்பவர், தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் பெரும் புலமை நிறைந்தவர். அவர் தாமே பல சிலேடை வெண்பாக்களை எழுதினார். அவை யெல்லாம் பழைய சங்கச் சுவடிகளில் கிடைத் தவை என்று வள்ளலாரிடம் பொய்யுரைத்தார்.

அவற்றை வாங்கிப் பரிசீலிலித்த வள்ளலார், "சரிவர எழுதத் தெரியாத யாரோ ஒரு கற்றுக்குட்டி எழுதிய வெண்பாக்கள் இவை' என்று தெரிவித்து அவற்றைத் தூக்கிப் போட்டுவிட்டார். பதில் சொல்ல இயலாமல் திணறிய வேலாயுத முதலிலியார், வள்ளலாரின் ஆன்மிகப் பொலிலிவையும் இலக்கண அறிவையும் உணர்ந்தவராய் மெல்ல மெல்ல அவர் அடியவரானார். அவரிடம் பாடம் கேட்ட முதல் மாணாக்கரும் ஆனார். அது மட்டுமல்ல; வள்ளலாரின் அருட்பாக்களை முதன்முதலிலில் வெளியிட்டவரும் அவர்தான்.

வீராசாமி முதலிலியார், பொன்னேரி சுந்தரம் பிள்ளை, சீனிவாச வரதாச்சாரியார், ஞானசுந்தரமய்யர், பண்டார ஆறுமுக ஐயா போன்ற பற்பலர் அடுத்தடுத்து வள்ளலாரின் அடியவர்களாய் மாறினார்கள். இவர்களின் தூண்டுகோலிள் பேரில்தான் வள்ளலார் சிவநேச வெண்பா, நெஞ்சறிவித்தல், மகாதேவ மாலை போன்ற பல செய்யுள் நூல்களை எழுதினார்.

வள்ளலார் இறைவன் மேல் மட்டும்தான் பாடல்கள் எழுதினார். ஒருபோதும் மனிதர்கள் மேல் பாட்டுப் பாடியதில்லை. மகான் தியாக ராஜரைப்போல் மனிதர் மேல் பாடக்கூடாது என்பதில் ஒரு தெளிவான நிச்சயத்துடன் இருந்தார். மனிதர்களைப் பாட வேண்டிய சந்தர்ப்பங்கள் அவர் வாழ்விலும் வரத்தான் செய்தன. ஆனால் அவற்றை கவனமாக அவர் தவிர்த்துவிட்டார்.

கந்தசாமி முதலிலியார் தம் வறுமை அகல சில செல்வந்தர்களுக்குச் சீட்டுக் கவி எழுதிக் கொடுக்கும்படிக் கேட்டுக் கொண்டார். "ஆண்டவனை வேண்டுங்கள்' என்று சொல்லிலி அவர் வேண்டுகோளை மாற்றிவிட்டார் வள்ளலார். தம் சொந்தக்காரரான சுந்தரம் பிள்ளை வறுமையைத் தீர்த்தருள வேண்டிக் கொண்டபோதும், "ஆண்டவனை வேண்டு வதுதான் வறுமை தீர ஒரே வழி' என்றுதான் வள்ளலார் அறிவுறுத்தினார். கடவுளைப் பற்றி மட்டுமே பாடியவராய்- செல்வந்தர்களுடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாதவராய் வாழ்ந்த தனி கம்பீரம் வள்ளலாருடையது.

இல்வாழ்க்கை சில மகான்களை இல்லறக் கட்டுப்பாட்டுக்குள் அடைப்பது உண்டு. ராகவேந்திரர் மணமாகி ஒரு மகனுக்கும் தந்தையானார். ஸ்ரீஅரவிந்தரோ மிருணாலினி என்ற பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். ராமகிருஷ்ண பரமஹம்சர் சாரதாதேவியை மணந்தாலும், அவரை தெய்வமாகவே கருதி பூஜை செய்தார். சதாசிவப் பிரம்மேந்திரரோ தம் மனைவி புஷ்பவதியான தினத்தன்று உணவு கிட்டத் தாமதமானதைக் காரணம் காட்டி வீட்டை விட்டு வெளியேறி விட்டார். புத்தருக்கு யசோதரை என்ற மனைவியும் ராகுலன் என்ற ஆண்குழந்தையும் உண்டு. பல துறவிகள் மணம் புரிந்துகொண்ட பின்னரும், சிலர் குழந்தை பெற்ற பின்னரும் துறவியாகியிருக்கிறார்கள். 

வள்ளலாரை மணம் செய்துகொள்ளச் சொல்லிலி உறவினர்கள் பலரும் வற்புறுத்தினார் கள். வள்ளலார் அதற்கு உடன்படவில்லை. ஆனால் ஒரு விந்தையான சூழ்நிலை மூலம் அவர் மணவாழ்க்கைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் மதிக்கும் ஒரு சிவனடியார் மூலம் மணம் செய்துகொள்ளுமாறு அறிவுரை சொல்லச் செய்தார்கள். அந்தச் சிவனடியாரை மதித்த வள்ளலார் வேறுவழியின்றி மணம் செய்து கொள்ளச் சம்மதித்தார்.

மணமகள் வள்ளலாரின் உறவுப் பெண்தான். வள்ளலாரின் தமக்கை உண்ணாமுலை அம்மையாரின் புதல்வியும் பக்தி நெறிகளில் நாட்டமுள்ளவளுமான தனக்கோடி அம்மாள் தான் அந்தப் பெண்மணி. மணம் நிகழ்ந்தாலும் வள்ளலாரின் மனம் என்னவோ சிவபெருமான் திருவருளைத்தான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தது. அவர் மணவாழ்வு நடத்த வில்லை. பள்ளியறையிலும் தான் பெரிதும் மதிக்கும் மாணிக்கவாசகர் எழுதிய நூலான "திருவாசகத்தை'தான் படித்துக் கொண்டி ருந்தார். வான்கலந்த மாணிக்கவாசகரின் வாசகத்தைதான் கலந்து பாடும்போது, நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனித்த அந்த இனிப்பில் நெஞ்சம் தோய்ந்திருந்தார்.

மனைவியாக வாய்த்த தனக்கோடி அம்மாளால், தம் கணவரும் உறவு வகையில் தன் மாமாவுமான வள்ளலாரின் ஆன்மிக மனதை மெல்ல மெல்ல முழுமையாக உணர்ந்து கொள்ள முடிந்தது. வள்ளலாரின் ஞானப் பித்து குறித்தெல்லாம் ஏற்கெனவே அறிந்த பெண்தானே அவர்? தன் கணவர் மாறுபட்டவர் என்பதையும், இந்த உலகைச் சேர்ந்தவர் அல்ல; வேறு உலகைச் சேர்ந்தவர் என்பதையும் உணர்ந்த பெண்மணி அவர். எனவே வள்ளலாரது தவநெறிக்கு ஒரு சிறு இடையூறும் நேராதவாறு பார்த்துக் கொண்டார் அவர்.

உறவினர்கள் வள்ளலாரின் ஞானப் பித்து நாளுக்குநாள் முற்றுவதைப் பார்த்து திகைத் தார்கள். தாங்கள் வற்புறுத்தி அவருக்கு மணம் செய்துவைத்தது தவறு என்பதை அவர்கள் உணரத் தொடங்கினார்கள். வேறுவழியின்றி அவரை முற்றிலுமாக அவர் வழியிலேயே போக விட்டார்கள். தனக்கோடி அம்மையார் அவரை வணங்கி துறவு நெறியிலேயே இருக்குமாறு கூறி வழியனுப்பி வைத்தார்.

வள்ளலார் சிதம்பரம் சென்று பொன்னம் பல தரிசனம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். சின்னஞ்சிறு குழந்தையாக இருந்த போது திரை நீக்கியதும் சிதம்பர ரகசியத்தைக் கண்டு ஆனந்தமாய்ச் சிரித்தவர்தானே அவர்? நோய்வாய்ப்பட்டிருந்த தம் சகோதரர் பரசு ராமப் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு சிதம்பரம் சென்றார் வள்ளலார். அப்போது அவருக்கு வயது இருபத்துநான்குதான். மதுரை சிதம்பர சுவாமிகள், வீராசாமி நாயக்கர், சுந்தரம் பிள்ளை முதலிலிய வள்ளலார் அன்பர் களும் அவருடன் இணைந்துகொண்டார்கள்.

புதுவை வழியே சிதம்பரம் சென்றார் வள்ளலார். புதுவையில் சில நாட்கள் தங்கினார். அங்கு தர்மலிலிங்கச் செட்டியார் உள்ளிட்ட பல அன்பர்களின் ஆன்மிக சந்தேகங்களுக்கு விளக்கம் தந்தார். பின்னர் தில்லையம்பலத்தைச் சென்றடைந்தார். நடராசர் திருவுருவம் அவரை முற்றிலுமாக ஆட்கொண்டுவிட்டது. உள்ளம் உருகி சிவபெருமான் மேல் எண்ணற்ற தோத் திரப் பாடல்களைப் பாடினார். அருட்பாக்கள் அவர் உள்ளத்திலிலிருந்து மடை திறந்த வெள்ளம் போல் பொங்கின. தமிழ் அவரிடம் கொஞ்சி விளையாடியது. வள்ளலாரின் பாடல்களைக் கேட்டவர்கள் ஆனந்த பரவசத்தில் ஆழ்ந்தார் கள்.

ஒருநாள் வள்ளலாரைத் தேடிவந்தார் சுந்தர சுவாமிகள் என்பவர். வள்ளலாரின் ஆன்மிகப் பேரொளியில் ஈடுபட்ட அவர் சிறிதுகாலம் அவருடனேயே தங்கியிருந்தார். பின் பிரிய மனமில்லாமல் அவர் விடைபெற்றுப் பிரிந்த போது வள்ளலார் உருக்கத்துடன் அவரை வழியனுப்பினார். அவர் விடைபெற்றுச் சென்றபின், "அவருக்கு விடைகொடுத்தபோது வள்ளலாரின் நா தழுதழுத்தது ஏன்?' என்று அன்பர்கள் வினவினார்கள். அதற்கு வள்ளலார் சொன்ன பதிலைக் கேட்டு அவர்கள் துணுக் குற்றார்கள்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : kallathian Date & Time : 10/2/2012 12:10:06 PM
-----------------------------------------------------------------------------------------------------
v good incident read by me டுடே thanks . p.kallathian chennai
-----------------------------------------------------------------------------------------------------