24/7 செய்திகள்
நக்கீரன் சினிமா
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
முந்தைய செய்திகள்
சுற்றுலா
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
மே 29-ல் கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: சித்தராமையா
||
இடஒதுக்கீட்டு கொள்கை முழுமை பெற கிரீமிலேயரை நீக்க வேண்டும்: கலைஞர்
||
குடிபோதையில் பைக் ஓட்டிய 92 பேர் மீது வழக்கு
||
காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு
||
பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்! (படம்)
||
மே18 - மாணவர்கள் நினைவேந்தல் கூட்டம் - வீடியோ
||
சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு
||
பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை
||
டெல்லி வருகிறார் சீன பிரதமர்
||
மத்திய பிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 4 பேர் கைது
||
மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு
||
கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒருவர் கைது: ஸ்ரீசாந்த் டைரி சிக்கியது: மும்பை காவல்துறை இணை ஆணையர்
||
மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது
||
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
மேஷம்
......................................
ராகு- கேது பெயர்ச்சிப் பலன்கள்
......................................
ஒருவனே தேவன்!
......................................
மகான்களும்...
......................................
செப்டம்பர் மாத ராசி
......................................
இந்து தர்மம்...
......................................
அனுமனின் கதையே...
......................................
மூன்றடி கேட்டு மூவுலகு....
......................................
இயற்கையின் அதிசயம்!
......................................
தெய்வங்கள் வணங்கும்
......................................
என்றும் வாழும் சித்தர்கள்
......................................
தெய்வத்தில் வாழ்பவன்!
......................................
செப்டம்பர் எண்ணியல்...
......................................
சோமாஸ்கந்த வடிவம்
......................................
வைத்தீஸ்வரன் கோவிலில்
......................................
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாயகன்
......................................
அஸ்தியை பூக்களாக்கிய...
......................................
ஒன்றினால் ஒன்றும்...
......................................
தூங்கிக் கிடக்கும் பாம்பு!
......................................
மங்களமூர்த்தி மகாராஜா!
......................................
01-09-12
|
: Email this Article
சி
வாலயங்களில் விளங்கும் மகேஸ்வரத் திருமேனிகளில் மிகச் சிறப்புடையது சோமாஸ்கந்த திருமேனியாகும். இந்தத் திருமேனி பஞ்சமூர்த்தங்களில் ஒன்று. மிகப் பழமையான சிவாலயங் களில் கருவறையின் பின்னால் சுவரை ஒட்டி னாற்போல் சிலை அல்லது ஓவிய வடிவில் சோமாஸ்கந்த மூர்த்தி காணப்படுகிறது. இத்திருமேனியின் முன் சிவலிங்கம் விளங்கும். தொன்றுதொட்டு சோமாஸ்கந்த திருமேனி தியாகராஜராகப் போற்றி வழிபடப்படுகிறார்.
சிவன், சக்தி இருவருக்கும் இடையில் கந்தன் அமர்ந்த நிலையில் தோன்றும் வடிவமே சோமாஸ்கந்த வடிவம். சிவன், சக்தி, கந்தன் ஒருங்கிணைந்தருளும்- உண்மை அறிவானந்த வடிவான சச்சிதானந்த வடிவே சோமாஸ்கந்த வடிவம். சச்சிதானந்தம் என்பது சத்து, சித்து, ஆனந்தம் ஆகிய மூன்றையும் குறிக்கின்றன.
இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் கந்தன் இருக்கும் சோமாஸ்கந்த வடிவை கோவில் சிலைகளில் மட்டுமின்றி கோவில்
அமைப்பு, மலைகளின் அமைப்பு, ஆறுகளின் கூடுதுறை ஆகியவற்றிலும் நம் முன்னோர்கள் உருவகம் செய்து கூறியுள் ளனர்.
திருவாரூர், திருநள்ளாறு, திருநாகை, திருக்காறாயில், திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு ஆகிய சப்தவிடங்கத் தலங்களில் சோமாஸ்கந்தப் பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராஜர் (சோமாஸ்கந்த மூர்த்தி) திருமாலின் இதயத்தாமரையில் வீற்றிருந்து, அவரால் முதலில் பூஜிக்கப்பட்டவர். திருமால் பூஜித்த அந்த மூர்த்தியை இந்திரன் பெற்று பூஜித்து வந்தான். இந்த சோமாஸ்கந்த மூர்த்தியை முசுகுந்த சக்ர வர்த்தி தான் பூஜிக்க விரும்புவதாகக் கேட்ட போது, இந்திரன் இந்த மூர்த்தியுடன் மேலும் ஆறு திருமேனிகளையும் கொடுத்தான். அவற்றில் திருமால் பூஜித்த மூர்த்தியை திருவாரூரிலும், மற்றவற்றை பிற ஆறு தலங்களிலும் ஸ்தாபித்ததாக வரலாறு.
தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள மலைகள் வெள்ளிமலை, நீலிமலை, மருதமலை ஆகியவை. சிவனுறையும் மலையான வெள்ளி மலை சிவன் உருவாகவும், உமையம்மைக்கு உரியதான நீலிமலை உமை உருவாகவும், முருகன்
உறையும் மருதமலை கந்தன் உருவாகவும்
அமைந்து,
வெள்ளிமலை- சோம
நீலிமலை- உமா
மருதமலை- ஸ்கந்தன்
என மூன்று மலைகளும் சோமாஸ்கந்த வடிவில் விளங்குவதாக பேரூர்ப் புராணம் கூறுகிறது.
மலைகளைப்போல் ஆறுகளும் சோமாஸ்கந்த வடிவ அமைப்பில் உள்ளதாக திருவாரூர் நான்மணிமாலை கூறுகிறது.
திரிவேணி, பிரயாகை என்றெல்லாம்
அழைக்கப்படும் அலஹாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கின்றன. இவற்றுள் கங்கை நதி சிவபிரானை ஒத்து செந்நிறமாயும், யமுனை நதி உமையவளை ஒத்ததாய் நீலநிறம் உடையதாயும், சரஸ்வதி நதி கந்தன் நிறத்தினதாய் வெண்மை யாகவும் இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
ஒரே இருக்கையில் சிவபெருமான், உமையவள் இருவருக்குமிடையே கந்தன் இருக்கும் காட்சி கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகளின் சங்கம மாகிய திரிவேணியை உணர்த்துவதாக
அமைந்துள்ளது என குமரகுருபரர் கூறுகிறார்.
சோமாஸ்கந்த வடிவத்தில் சிறுத் தொண்டருக்கு சிவபெருமான் காட்சி தந்த
சிறப்பை,
"அவர்தாம் மலை பயந்த
தையலொடுஞ் சரவணத்துத்தனய
ரோடுந் தாம் அணைவார்'
என சேக்கிழார் அடிகள் பாடியுள்ளார்.
(அவர்தாம்- சிவபெருமான்; மலை பயந்த தையல்- உமாதேவி; சரவணத்துத் தனயர்- கந்தன்).
வைத்தீஸ்வரன் கோவில், திருக்கருகாவூர் போன்ற சில தலங்களில் சோமாஸ்கந்த வடிவமைப்பில் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள் ளதாகக் கூறப்படுகிறது.
அனைத்து நலன்களையும் அருளும் சோமாஸ்கந்த பெருமானை இயற்கைத்
தோற்றங்களிலும் ஆலயத்தில் எழுந்தருளி யிருக்கும் இறைத் தோற்றங்களிலும் கண்டு வழிபட்டு நலம்பெறுவோம்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.