அண்மைச் செய்திகள்
தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம் || ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் || ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம் || ’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
Logo
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
மேஷம்
......................................
ராகு- கேது பெயர்ச்சிப் பலன்கள்
......................................
ஒருவனே தேவன்!
......................................
மகான்களும்...
......................................
செப்டம்பர் மாத ராசி
......................................
இந்து தர்மம்...
......................................
அனுமனின் கதையே...
......................................
மூன்றடி கேட்டு மூவுலகு....
......................................
இயற்கையின் அதிசயம்!
......................................
தெய்வங்கள் வணங்கும்
......................................
என்றும் வாழும் சித்தர்கள்
......................................
தெய்வத்தில் வாழ்பவன்!
......................................
செப்டம்பர் எண்ணியல்...
......................................
சோமாஸ்கந்த வடிவம்
......................................
வைத்தீஸ்வரன் கோவிலில்
......................................
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாயகன்
......................................
அஸ்தியை பூக்களாக்கிய...
......................................
ஒன்றினால் ஒன்றும்...
......................................
தூங்கிக் கிடக்கும் பாம்பு!
......................................
மங்களமூர்த்தி மகாராஜா!
......................................





       "காசியை விட வீசம் உயர்ந்த தலம் கும்ப கோணம் என்று கூறப்படுகிறது. இத்திருத் தலத்தை கோவில் மாநகரம் என்றும் அழைப் பர். புனிதத் தீர்த்தங்கள் ஒன்றுசேர காட்சி யளிக்கும் மகாமகக் குளத்தின் பெருமை சொல்லில் அடங்காது. பல பெருமைகள் பெற்ற இத்தலத்தில், காவேரிக் கரையோரம் மடத்துத் தெருவில் எழுந்தருளியுள்ளார் பகவத் பிள்ளையார்!

இந்தப் பிள்ளையார் ஆரம்ப காலத்தில் தற்போதுள்ள மடத்துத் தெருவிற்கு அருகில், அரசமரத்தடியில் எழுந்தருளியிருந்தார்.

அப்போது வேதாரண்யம் தலத்தில் பகவத் முனிவர் என்பவர் தன் சீடர்களுடன் குடில் அமைத்து வாழ்ந்து வந்தார். இவரின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறக்கும் தறுவாயில் தன் மகனிடம், "நான் இறந்ததும் என் அஸ்தியை ஒரு கலசத் தில் சேகரித்து புனிதத் திருத்தலங்களுக்கு எடுத்துச் செல். எங்கு என்னுடைய அஸ்தி மலர்களாக மாறி காட்சி தருகிறதோ, அங்கு ஓடும் புனித நதியில் கரைத்து விடு!' என்று சொல்லிவிட்டு உயிர்துறந்தார்.

அவர் சொன்னது போல், தன் தாயாரின் அஸ்தியை ஒரு மண் கலசத்தில் சேகரித்து, துணியில் மூட்டைபோல் கட்டி வைத்துக் கொண்டார். அதை ஒரு ஓலைக்கூடை யில் வைத்துக் கொண்டு சீடர் களில் ஒருவனை அழைத்துக்கொண்டு பயண மானார்.

காசி புனிதமான திருத்தலம்; அங்கு ஓடும் கங்கை புனிதமானது என்பதால், "காசியில்தான் தன் தாயாரின் அஸ்தி பூக்களாக மாறும்' என்று கருதிய பகவத் முனிவர் காசி நோக்கிப் பயணமானார். வழியில் கும்பகோணம் திருத் தலத்திற்கு வந்ததும், அங்கு ஓடும் காவேரியில் நீராட விரும்பினார். அஸ்தி கலசக்கூடையை அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பிள்ளையார் முன்பு வைத்தவர், தன் சீடனைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு காவேரியில் நீராடச் சென்றார்.

குருநாதர் நீராடிக்கொண்டிருக்கும்போது சீடனுக்கு பசியெடுத்தது. கூடையில் ஏதாவது பலகாரங்கள் இருக்கும் என்று எண்ணியவன், மண்பாண்டமான அஸ்திக்கலசத்தை ஆவலுடன் திறந்து பார்த்தான். கலசத்திற்குள் பூக்கள் நிறைந்திருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தவன், மறுபடியும் முன்பிருந்ததுபோல் வைத்து பத்திரப்படுத்திவிட்டு குருநாதருக்காகக் காத்திருந்தான். நீராடிவிட்டு வந்த பகவத் முனிவர் விநாயகரை வழிபட்ட பின், மேற் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

சில நாட்களில் காசிமாநகரத்தை அடைந்து கங்கைக் கரைக்குச் சென்றார். கங்கையில் நீராடிவிட்டு அஸ்திக்கலசத்தைத் திறந்து பார்த்தார். மண் கலசத்திற்குள்ளிருந்த எலும்பு மற்றும் சாம்பல் (அஸ்தி) அப்படியே இருந்தது. அப்போது பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டி ருந்த சீடன், "கும்பகோணத்தில் கலசத்திலிருந்த பூக்கள் எப்படி அஸ்தியாக மாறியது' என்று குழப்பமடைந்தான்.

பகவத் முனிவர், ""அஸ்தி மலர்களாக மாறும் என்று நினைத்தேன், மாறவில்லையே'' என்று முணுமுணுத்தார். உடனே சீடன், ""குருவே, என்னை மன்னித்துவிடுங்கள். இது அஸ்திக் கலசம் என்று எனக்குத் தெரியாது. தாங்கள் கும்பகோணத்தில் காவேரியில் நீராடும்போது, எனக்கு பசி எடுத்தது. மண்பாண்டத்தில் ஏதாவது பலகாரங்கள் இருக்கும் என்று திறந்து பார்த்தேன். அப்போது இந்தக் கலசத்தில் பூக்கள் மலர்ந்திருந்தன'' என்று பயத்துடன் கூறினான்.

""இதை ஏன் அங்கேயே கூறவில்லை?'' என்று கோபித்துக்கொண்ட பகவத் முனிவர், திரும்ப கும்பகோணம் நோக்கிப் பயணமானார். கும்பகோணம் வந்தடைந்ததும் முன்பு நீராடிய இடத்துக்கு வந்து, காவேரியில் நீராடி, அங்கு அரசமரத்தடியில் எழுந்தருளியிருந்த விநாயகர் முன் அஸ்திக்கலசத்தை வைத்து விநாயகரை வேண்டினார். பிறகு கலசத்தைத் திறந்து பார்க்க, அதிலிருந்த அஸ்தி பூக்களாக மாறியிருந்ததைக் கண்டு மகிழ்ந்தார். அந்தப் பூக்களை அதற்குரிய வழிபாடுகள் செய்து காவேரியில் சங்கமம் செய்தார். இதனால்தான் "காசியைவிட வீசம் அதிகம் கொண்ட திருத்தலம்' என்று கும்ப கோணம் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

அஸ்தியானது பூக்களாக மாறிய காவேரிக் கரையே பகவத் படித்துறை என்றும், பகவத் முனிவர் வழிபட்டதால் இந்தப் பிள்ளையார் "ஸ்ரீபகவத் விநாயகர்' என்றும் போற்றப்படுகிறார்.

ஆரம்ப காலத்தில் பகவத் விநாயகர் காவேரிப் படித்துறையையொட்டியே இருந்தார். கால ஓட்டத்தில் காவேரி குறுகி விட்டது. தற்பொழுது, இங்கே கோவில் கிழக்கு நோக்கி தனியாகவும், பகவத் படித்துறை தனியாகவும் உள்ளதைக் காணலாம்.

அரசமரத்தடியிலிருந்த பிள்ளையாருக்கு பகவத் முனிவர் அங்குள்ள பக்தர்கள் உதவியுடன் கோவில் கட்டினார். மிகவும் பழங் காலக் கோவிலான இது தற்பொழுது பலவித மாற்றங்கள் கொண்டு புதுமையாகத் திகழ்கிறது. இத்திருக்கோவிலில் பகவத் முனிவருக்கு விக்ரகம் உள்ளது.

காஞ்சி மகாபெரியவர் கும்பகோணம் சங்கரமடத்திற்கு வரும் போதெல்லாம் இந்த விநாயகரை வழிபடுவது வழக்கம்.

1952-ஆம் ஆண்டு, காஞ்சி சங்கர மடத்திற்குச் சொந்தமான ஸ்ரீசந்திரமௌலீஸ்வரன் என்னும் யானை திருவிசநல்லூரில் இறந்தது. அப்போது காஞ்சி மகாபெரியவர் யானையின் இரண்டு தந்தங்களையும் இந்த விநாயகருக்கு சமர்ப்பித்து வழிபட்டார். மூன்று அடி உயரமுள்ள இரு தந்தங்கள் விநாயகரின் இருபுறமும் அலங்கார மாக வைத்து அருளினார்.  மகாபெரியவர் அளித்த இரண்டு யானைத் தந்தங்களை சங்கட ஹர சதுர்த்தி,  விநாயக சதுர்த்தி மற்றும் சிறப்பு நாட்களில் ஸ்ரீ பகவத் விநாயகருக்கு அருகே வைத்து அலங்கரிப்பார்கள்.

இந்தப் பகவத் விநாயகரை வழிபட்டால் கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்குவதுடன், பாவங்கள் விலகி புண்ணியங்கள் சேரும் என்பது ஐதீகம்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : Dr.Pushpavanam Date & Time : 9/15/2012 2:24:36 PM
-----------------------------------------------------------------------------------------------------
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் இது மாதிரி ஒரு வரலாறு உண்டு தனிமனித வழக்கில் நடந்தது போல இருக்கும்
-----------------------------------------------------------------------------------------------------