அண்மைச் செய்திகள்
குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு || ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது || 45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் || அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் || பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி || அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்! || சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு || திருவாருர்: 9 இடங்களில் சாலைமறியல் || மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை || சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள் || நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம் : நக்கீரன்கோபால் வாழ்த்து ( படம் ) || வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ || துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார். ||
Logo
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
மேஷம்
......................................
சனிப்பெயர்ச்சி பலன்கள்
......................................
கிருஷ்ணரின் முடிவை
......................................
அர்த்தநாரீஸ்வர தத்துவம்!
......................................
ராசிபலன்கள்
......................................
யுகக் யுகமாய்...
......................................
தென்பொதிகையில்...
......................................
நான்மறை ஓதிய...
......................................
அனுமனின் கதையே...
......................................
ஒருத்தி மகனாய்ப் பிறந்து...
......................................
ஆங்கோர் தாம் அதிசயம்!
......................................
முருகனுக்கு மாப்பிள்ளை!
......................................
ஆகஸ்ட் மாத எண்ணியல்
......................................
ஆளவந்தாரா... அருளவந்தாரா?
......................................
எதிர்ப்புகளை விலக்கி ...
......................................
பாரதப் போருக்காக...
......................................
அறம், அரசியல், இறைப்பணி...
......................................
என்றும் வாழும் சித்தர்கள்
......................................
பாசுரம் கேட்டு பக்தவத்சலனை...
......................................

ஆகஸ்ட் மாத ராசிபலன்கள்
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்


மேஷம்

இந்த மாதம் கோட்சார கிரக நிலைகள் அனுகூலமாக அமைகின்றன. மாத மத்தியில் செவ்வாய், சனி சேர்க்கை விலகுகிறது. கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் அன்பும் பரஸ்பர நல்லிணக்கமும் ஏற்படும். குடும்பத் தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வெளிவட்டார உலகத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு பெருகும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். தேக ஆரோக்கியத்திலும் தெளிவும் முன்னேற் றமும் எதிர்பார்க்கலாம். வைத்தியச் செலவு விலகும். கடன் சுமை குறையும். பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்

5-ல் இருந்த செவ்வாய், சனி சேர்க்கை இந்த மாத மத்தியில் விலகுகிறது. செவ்வாய் 6-ல் மறைந் தாலும், ஜென்ம குரு பார்க்கும் இடங்கள் சுப இடங்களாக இருப்பதால் நற்பலன்களை எதிர் பார்க்கலாம். உடன்பிறப்பு கள் வகையிலும் உறவினர் கள் வகையிலும் எதிர் பார்த்த காரியங்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்ளலாம். குடும்பத் தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படும். போட்டிகள் விலகும். பொறாமைகள் அழியும். திடீர் பயணங்கள் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும். உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டுவிட்டு அறிவுப்பூர்வமான செயல்களை மேற்கொள்வீர் கள். அது உங்கள் அந்தஸ்தை உயர்த்தும். செல்வாக்கும் பெருமையும் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

இந்த மாதம் தடைப்பட்ட பணிகளை ஆர்வத்தோடு செயல்படுத்தி முடிக்கலாம். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு உதவி கரமாக அமையும். வெளிவட்டார முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். இல்லறத் துணையின் வகையில் அனுசரணையும் ஆதரவும் பெருகும். குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளுக்காக சற்று அதிக செலவுகளைச் செய்வீர்கள். குழந்தை களுக்காகவும் தாராளமாக செலவு செய்வீர்கள். வீடு, மனை, வாகனம் சம்பந்தப் பட்ட 4-ஆம் இடத்துப் பலனில் சிலசமயம் தவிர்க்கமுடியாத விரயங் களையும் ஏமாற்றங் களையும் சந்திக்கலாம். மாதப் பிற்பகுதியில் செவ்வாய் பெயர்ச்சிக்குப் பிறகு மன நிறைவான பலன்களை எதிர்பார்க்க லாம். பொதுக் காரியங் களில் ஈடுபட்டு புகழும் பெருமையும் அடையலாம்.

கடகம்

கோட்சார கிரக நிலை அனுகூலமாக அமைகிறது. அதற்கேற்ற வகையில் ஜாதக தசா புக்திகளும் சாதகமாக அமைந்தால், இந்த மாதம் அற்புதப் பலன்களைச் சந்திக்கலாம். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் நம்பிக்கை யோடும் ஆர்வத்தோடும் செயல்படுவதால் திறமைக்குத் தகுந்த முன்னேற்றமும் வெற்றியும் எதிர்பார்க்கலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். பொருளாதார வசதியில் திருப்தியான பலனை எதிர்பார்க்கலாம். தாராளமான வரவு- செலவுகளும் பணப்புழக்க மும் காணப்படும். சிலருக்கு ஆடம்பரச் செலவு களும், தவிர்க்கமுடியாத பயணங்களும் ஏற்பட லாம். வாழ்க்கைத் துணை வகையில் சுபச் செலவுகளுக்கு இடமுண்டு. சிலர் ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்ளலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு விட்டகுறை தொட்டகுறையாக வக்ரத்தில் வந்த ஏழரைச் சனி அடுத்த மாதம் வரை நீடிக்கிறது. இந்த மாத மத்தியில் செவ்வாய், சனி சேர்க்கை விலகுகிறது. எனவே மாத முற்பகுதியில் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படாது என்றாலும், குடும்பச் சூழ்நிலையில் வேண்டாத விவகாரங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டிவரும். இருந்தாலும் ஒற்றுமைக் குறைவுக்கு இட மில்லை. "சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழலாம்' என்ற பாலிசிப்படி சமாதானமாகி விடலாம். மாதப் பிற்பகுதி முதல் உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் வெகுவேகமாக நிறைவேறும். சிலருக்கு தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.

கன்னி

மழை விட்டும் தூறல் நிற்கவில்லை என்பதுபோல, ஜென்மச் சனியும் செவ்வாயும் சேர்க்கையானது உங்களுக்குத் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தியது. வீண் பிடிவாதம் காரணமாக சில ஏமாற்றங்களையும் நஷ்டங் களையும் சந்திக்க வைத்தது. இம்மாத மத்தியில் செவ்வாய், சனி சேர்க்கை விலகுவதால், சில காரியங்களில் விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மையும், அனுசரித்துப் போகும் தன்மையும் ஏற்படும். அதனால் தோல்விகளைத் துரத்தியடிக்கலாம்; வெற்றிகளைத் தேடிப் போகலாம். பிள்ளைகள் வகையில் முக்கியமான சுபச்செலவுகளைச் சந்திப்பீர்கள். உறவினர்கள் வகையில் பழைய கசப்பான அனுபவங்களை மறப்பீர்கள்; மன்னிப்பீர்கள். தொழில் துறையில் அதிக கவனம் செலுத்தி லாபத்தைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

துலாம்

விரய ஸ்தானத்தில் செவ்வாய், சனி சேர்க்கையினால் தவிர்க்க முடியாத விரயங்க ளும் நஷ்டங்களும் உங்களை வேதனையடை யச் செய்தது. இந்த மாத மத்தியில் செவ்வாயை விட்டு சனி விலகுவதால், வீண் விரயங்களும் வெட்டிச் செலவுகளும் குறைந்துவிடும். சிலருக்கு தொழில், இடம் சம்பந்தப்பட்ட புது முயற்சிகள் உருவாகும். அதனால் சுபச்செலவு களும் உண்டாகும். சிலருக்கு இடப்பெயர்ச்சி உண்டாகும். அல்லது வெளியூர்ப் பயணம் ஏற்படும். முக்கியமானவர்களின் சந்திப்பு நிகழும். அது உங்கள் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தும். தொழில், வியாபாரத் தில் முன்னேற்றமும் லாபமும் பெருகும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும்.

விருச்சிகம்

இந்த வாரம் சிறிய வேலைகளைக்கூட அதிக பிரயாசையோடு செய்யும் சூழ்நிலை உண்டாகும். உழைப்புக்கேற்ற ஊதியமும் லாபமும் கிடைக்கும். அண்டை அயலார் களைப் பார்த்து சில புதிய அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுக்கொள்வீர்கள். விரதம், வழிபாடுகளில் நாட்டம் செல்லும். சிலர் புனித யாத்திரைப் பயணங்களை மேற்கொள்ளலாம். தொழில், வேலை சம்பந்தமான புதிய திட்டங் களை செயல்படுத்தலாம். அதன்மூலம் ஆதாயத்திற்கு  வழிபிறக்கும். எவ்வளவு லாபம் வந்தாலும் சேமிப்புக்கு இடமில்லாமல் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலரிடம் உங்கள் குறைகளையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி ஆறுதல் அடைவீர்கள். வழக்கமான வேலைகளைத் தடையின்றிச் செயல்படுத்தலாம்.

தனுசு

ராசிக்கு 10-ஆம் இடத்தில் இருந்த செவ்வாய், சனி சேர்க்கையால் உத்தியோகத்தில் அல்லது தொழில் துறையில் கெடுதலுக்கு இடமில்லை. என்றாலும் வளர்ச்சி இல்லாத நிலை- மன நிறைவில்லாத நிலையைச் சந்தித்தீர் கள். இந்த மாத மத்தியில் செவ்வாய் சனியை விட்டுப் பிரிவதால் 11-ஆம் இடத்துச் செவ்வாய் உங்களுக்கு லாபத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். தொழில் முன்னேற்றமும் திருப்தி யாக அமையும். உத்தியோகத்தில் உள்ள வேதனைகளை விலக்கி சாதனைகளைப் பெருக்கலாம். குடும்பத்தில் சுபமங்கள காரியங் களும் கைகூடும். சுபச் செலவுகளுக்கும் முதலீடு களுக்கும் இடமுண்டு. இனி ஆரோக்கியம் தெளிவாக இருக்கும்.

மகரம்

பல வாரங்களாக இழுபறியாக இருந்த வேலைகளும் திட்டங்களும் இந்த மாதப் பிற்பகுதியில் மளமளவென்று நிறைவேறும். சாதிக்க முடியாத பல பெரிய காரியங்களையும் சாதித்து பெருமையைத் தேடிக்கொள்வீர்கள். உறவினர்களின் வருகையால் ஒருபுறம் செலவுகள் அதிகமானாலும் வீட்டில் கலகலப்பு ஏற்படும். வருமானத்தைப் பெருக்கும் வழிவகை களை ஆராய்ந்து செயல்படுவீர்கள். உத்தி யோகத்திலிருப்பவர்கள் பணிகளில் இதுவரை காணப்பட்ட மந்தநிலை மாறிவிடும். வேகமும் ஆர்வமும் உருவாகும். சாதனை படைப்பீர்கள். அண்டை அயலாரிடம் கொடுத்த கைமாற்றுக் கடன் வசூலாகும். அதன்மூலம் உங்கள் தேவை களைப் பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்

8-ல் இருக்கும் செவ்வாய், சனி சேர்க்கை யினால் ஏமாற்றம், இழப்பு, பிரச்சினைகளைச் சந்தித்தவர்களுக்கு, இந்த மாத மத்தியில் சனியை விட்டு செவ்வாய் விலகுவதால் மன நிறைவான பலன்களைச் சந்திப்பீர்கள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த சில வேலைகளின் பலன் சரியாக அமையாத காரணத்தால், நீங்களே நேரடியாக ஈடுபட்டு அவற்றை நிறைவேற்றுவீர்கள். வியாபாரிகள் உற்சாகமாக தொழில் செய்வார்கள். வேலையாட்கள் ஆர்வ மாகப் பாடுபடுவார்கள். எல்லாருக்கும் உழைப்புக்கேற்ற பலன் உண்டாகும். செவ்வாயின் மாற்றத்திற்குப் பிறகு பிரபலமான வி.ஐ.பி.யின் அறிமுகமும் சந்திப்பும் உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக
அமையும்.

மீனம்

7-ல் நிற்கும் செவ்வாய், சனி சேர்க்கை மாத மத்தியில் மாறுவதால் அனுகூலமான திருப்பங் களை எதிர்பார்க்கலாம். மற்றவர்களை நம்பி ஒப்படைக்க முடியாத சில வேலைகளை நீங்களே நேரடியாக ஈடுபட்டு செயல்படுத்து வதால் ஓய்வுக்கு இடமில்லை. இருந்தாலும் உங்கள் ஆர்வமும் அக்கறையும் உங்களுக்கு வெற்றியையும் ஆறுதலையும் ஏற்படுத்தித் தரும். குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து பல முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். முக்கியமான பிரமுகர்களின் நட்பும் உதவியும் பக்கபலமாக அமையும். பொருளாதாரத்தில் முன்னேற்றமும் வளர்ச்சி யும் எதிர்பார்க்கலாம். சுபகாரியங்களுக்கான செயல்களை திட்டமிட்டுச் செயல் படுத்தலாம்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(2)
Name : M.THIRUVALLUVAN Date & Time : 8/8/2012 8:54:35 AM
-----------------------------------------------------------------------------------------------------
முடித்த அளவுக்கு தானம், நடப்பதே நன்மைக்கே என்று அனுபவித்து கொண்டு இருக்கும் பாவங்களை எண்ணி வருத்தி இனி புண்ணியங்களை செய்தல், அன்பு அறம் ஒழுக்கம் இவைகளை கடைபித்தல், பரந்த மனப்பான்மை, உள்ளார்ந்த வழிபாடு,
-----------------------------------------------------------------------------------------------------
Name : subramani Date & Time : 8/2/2012 2:18:45 PM
-----------------------------------------------------------------------------------------------------
நவக்கிரகங்கள் நம் வினைக்கு தகுந்தாற்போல் நன்மை தீமை தரும் என்பது நாடறிந்த விசயந்தான். ராசிபலன் படிப்பதால் என்ன மாற்றம் ஏற்படும்? வினை விட்டு விடுமா? இறைவனை காணாதவரை கோள்களின் பிடியில் சிக்கித்தான் இருப்போம். ஆகவே இறைவனைக்காண என்ன வழி? அதை எழுதுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படும். (சி.சுப்பிரமணி)
-----------------------------------------------------------------------------------------------------