அண்மைச் செய்திகள்
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் || ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை || வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி || இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் நாளை விடுதலையாவார்கள்? || மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு || 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர் || 40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ || நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை || டெல்லி வந்தார் சீன பிரதமர் லீ கெகியாங் || திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை || இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டம் || சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு ||
Logo
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
மேஷம்
......................................
சனிப்பெயர்ச்சி பலன்கள்
......................................
கிருஷ்ணரின் முடிவை
......................................
அர்த்தநாரீஸ்வர தத்துவம்!
......................................
ராசிபலன்கள்
......................................
யுகக் யுகமாய்...
......................................
தென்பொதிகையில்...
......................................
நான்மறை ஓதிய...
......................................
அனுமனின் கதையே...
......................................
ஒருத்தி மகனாய்ப் பிறந்து...
......................................
ஆங்கோர் தாம் அதிசயம்!
......................................
முருகனுக்கு மாப்பிள்ளை!
......................................
ஆகஸ்ட் மாத எண்ணியல்
......................................
ஆளவந்தாரா... அருளவந்தாரா?
......................................
எதிர்ப்புகளை விலக்கி ...
......................................
பாரதப் போருக்காக...
......................................
அறம், அரசியல், இறைப்பணி...
......................................
என்றும் வாழும் சித்தர்கள்
......................................
பாசுரம் கேட்டு பக்தவத்சலனை...
......................................



பா.சி. ராமச்சந்திரன்


யுகங்கள் நான்கு!

கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் என்பன அவை. ஒவ்வொரு யுகங்களும் லட்சக்கணக்கான வருடங்கள் உடையனவாகும். இந்தக் கணக்கு மனித உயிர்கள் வாழும் நம்முடைய பூமிக்கு மட்டுமே சொந்தம். மற்ற கிரகங்களுக்குப் பொருந்தாது. ஏனெனில், மனித குலம் எங்கு வாழ்கின்றதோ அந்த கிரகத்திற்கு மட்டுமே யுகக் கணக்கு பொருந்தும். இதன்படி நாம் இப்போது கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கலியுகம் தோன்றி ஐயாயிரம் ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. கலியுகம் தோன்றும் முன்தான் துவாபர யுகம் முடிந்து ஸ்ரீகிருஷ்ணாவதாரமும் முடிவிற்கு வந்தது. சூரியனுடைய ஒரே நேர்க் கோட்டில் ஒன்பது கிரகங் களும், பூமியும் வரும்போது, நாம் வாழும் இவ்வுலகம் அழிந்துவிடும் என்று உலகின் பல ஜோதிடர்கள் கணித்துக் கூற, சில ஆண்டுகளுக்குமுன் சிங்கப்பூர், தாய்லாந்து முதல் அமெரிக்காவின் மேற்குப் புறம் உள்ள சியாட்டில் போன்ற நகரங்கள் வரை- அங்கு வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகம் அழியப்போகிறது என்கிற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால் உலகம் அழியவில்லை. உலக அழிவு என்பது ஜோதிடத்தினால் கணிக்க முடியாது. அது இறைவனின் திருவிளையாட்டு.

"புனரபி ஜனனம்- புனரபி மரணம்' என்று ஆதிசங்கர பகவத் பாதர் பஜகோவிந்தத்தில் மனித உயிர்களைப் பற்றிச் சொன்னதைப்போல, யுகங்களும் மீண்டும் மீண்டும் அழிந்து தோன்றுவன என்பது தெய்வ சித்தம். கலியுகம் முடிந்த வுடன் மறுபடியும் கிருதயுகம் தோன்று மென்று புராணங்கள் கூறுகின்றன.

இறைவன் என்பவன் யார்?

அதற்கு துவைத சித்தாந்தம் பதில் கூறுகிறது.

மகாவிஷ்ணுவும்- பரமேஸ்வரனுமே முழுமுதற்கடவுள் ஆவர். அவர்களிலிருந்து அவர்களுடைய அம்சமாக விளங்கு பவர்கள் நாம் வணங்கும் மற்ற கடவுளர்கள்.

கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர் சதுர்முகப் பிரம்மா, நாரதர் போன்றோர்.

அதற்கடுத்து வருவோர் இந்திரன் போன்ற தேவர்கள்.

இப்படி ஒவ்வொரு நிலையையும் அழகாக விவரிக்கிறார் ஸ்ரீமத் மத்வாச்சாரியார். அவர் தான் ஜீவாத்மா வேறு- பரமாத்மா வேறு என நம்மையும் தெய்வத்தையும் பிரிக்கிறார். அதே சமயம், நாமாகிய ஜீவாத்மா- பரமாத்மா எனும் இறைவனை அடைய, ஒரு உத்தமமான குருவினால் தான் வழிகாட்ட முடியும் என்கிறார்.

இந்த உலகத்தைத் தோற்றுவித்து, அதற்குள் மனித குலம் வாழ வழி உண்டாக்கியவர் பரமாத்மாவே. அந்த மனித குலத்திற்கு யுகங்களின் கணக்குப்படி ஆயுளை நிர்ணயித்தவர் பிரம்மா. இவருக்கு தனி உலகம் உண்டு. அதை சத்திய லோகம் அல்லது பிரம்ம லோகம் என்றும் கூறுவர். பரந்தாமனுக்கு பாற்கடலும், பரமேஸ்வரனுக்கு கயிலையும் வசிப்பிடங்களாகும்.

கிருதயுகத்தில் மனித குலம் தோன்றும் முன்னரே பரந்தாமனாகிய மகாவிஷ்ணுவிற்கு ஒரு பேருண்மை புரிந்தது. மனித குலம் தோன்றி அது என்ன மாதிரியான காரியங்களைச் செய்யும் என்று யோசித்தார். அவை பாவ- புண்ணியங்களைச் செய்யும் என்பது அவருக்குத் தெரிந்தது. புண்ணி யாத்மா நற்கதி அடைவான்; பாவாத்மா நரகத்தை அடைவான். இப்படி அவன் நரகத்தை அடை யாமல் புண்ணியம் செய்பவனாக மாற்றி நற்கதி அடைய வைக்க வேண்டும்; புவியைக் காக்க வேண்டும் என்பதற்காக பெருமாள் பத்து அவதாரங்கள் எடுக்க விரும்பினார்.

பரந்தாமனாகிய மகாவிஷ்ணு பல அவதாரங் களை எடுக்கப் போகிறார் என்பது பிரம்ம தேவனுக்குத் தெரிந்துவிட்டது. ஏனெனில் அவர் தானே படைப்புத் தொழிலைச் செய்பவர்!

பகவான் அவதாரம் எடுக்கும் முன்னரே அவை என்னென்ன அவதாரங்கள்- எந்தெந்த யுகத்தில் நிகழப் போகின்றன என்பதையும் பிரம்மா தெரிந்து கொண்டார். பிரம்மாவின் மனத் திலேயும், மனிதர்களைப்போல் ஒரு ஆசை உண்டாயிற்று. அந்தந்த அவதாரங்களை மனதில் நிலை நிறுத்தி, அவற்றுக்கு முதல் நபராகத் தானே முன்னின்று பூஜை செய்தால் என்ன என்பதே அவருடைய எண்ணம். அர்ச்சாவதார மூர்த்தியாய் பூஜை செய்ய விரும்பினார். ஆனால் பூஜைக்குரிய நறுமணமுள்ள மலர்களும், இனிய பழங்களும் அவர் வாழும் சத்திய லோகத்தில் இல்லை. அவை பூமியில்தான் உள்ளன. பூமிக்குச் சென்று இவற்றை தினமும் பறித்து வருபவர் யார்? தனக்கு நம்பிக்கையான ஒரு தேவ குமாரனைத் தேடினார் பிரம்மா. முடிவில் அவருக்கு நன்னெறி உடைய தேவமகன் ஒருவன் கிடைத்தான். அவன் பெயர் சங்கு கர்ணன்.

பிரம்மா, ""சங்கு கர்ணா...'' என்றழைத்தார். உடனே ஓடோடி வந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, பிரம்மாவின் பாதங்களை கண்களில் ஒற்றிக்கொண்டு எழுந்து பணிந்து நின்றான்.

அவனை உற்றுப் பார்த்தார் படைப்புக் கடவுள். ஒரு பேருண்மை அவருக்குப் புரிந்தது. பிரம்மா அவனிடம் விஷ்ணுவின் தசாவதார சங்கல் பத்தைக் கூறி, ""அதற்கான மலர்களையும் கனி களையும் பூமிக்குச் சென்று தினமும் எடுத்து வரவேண்டியது உன் கடமை'' என்றார். பெருமாள் எடுக்கப் போகும் பத்து அவதாரங்களை பிரம்மனுக்குப் பிறகு காணக் கொடுத்து வைத்த பெரும்பேறு தனக்குக் கிடைத்ததை நினைத்து, மீண்டும் பிரம்மதேவனை விழுந்து வணங்கினான் சங்கு கர்ணன்.

ஒரு நாளில் தசாவதார மூர்த்தங்களுக்குப் பூஜை செய்ய ஆரம்பித்தார் பிரம்மதேவன். அவர் அருகில் பவ்யமாக நின்று மலர்த் தட்டினை எடுத்து நீட்டிக் கொண்டிருந்தான் சங்கு கர்ணன். கிருதயுகத்தில் மகாவிஷ்ணு என்னென்ன அவதாரங்கள் எடுக்கிறாரோ, அவற்றுக்கு சிறப் பாக பூஜை செய்து முடித்தார் பிரம்மா. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அவதாரத்துக்கும் பூஜை முடிந்தது.

அடுத்து, திரேதா யுகத்தின் அவதார புருஷனாக விளங்கப் போகும் ஸ்ரீராமச்சந் திரனுக்கு பூஜை. சங்கு கர்ணன் வியப்போடு ஸ்ரீராமனைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஸ்ரீராமனுடைய அழகும், கம்பீரமும், சாந்தமும், மனித குலத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கப் போகிற தன்மையும், வீரமும், ஏகபத்தினி விரதமும், தந்தை- தாய் சொல் கேட்டு நடந்து உத்தமனாயும் வாழப் போகிற ஸ்ரீராம தரிசனத் தையும், மகாலட்சுமியான சீதாதேவியையும் கண்ணாரக் கண்டு, ஆனந்தம் பொங்க பரவசத்து டன் தன்னை மறந்து நின்றான் சங்கு கர்ணன். பூஜை ஆரம்பித்துவிட்டதை உணராமல், மலர்த் தட்டை எடுத்து பிரம்மதேவனின் அருகே நிற்கா மல், கண்களில் ஆனந்த பாஷ்யம் பெருக நின்று கொண்டிருந்த சங்கு கர்ணனைப் பார்த்தார் பிரம்மதேவன்.

""சங்கு கர்ணா...'' பிரம்மதேவன் அழைத்தது அவன் செவிகளில் விழவில்லை. மீண்டும் பிரம்மா, ""சங்கு கர்ணா'' என்றழைக்க, தூக்கத்திலிருந்து எழுபவன் போல சங்கு கர்ணன் பிரம்மாவின் குரல் கேட்டு திடுக்கிட்டான்.

""பூஜையை ஆரம்பித்துவிட்டேன். அர்ச்சனைக் குரிய மலர்களைக் கொடுக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?'' என்றார் பிரம்மா.

""சுவாமி! மன்னித்தருள வேண்டும். அவதாரங் களிலேயே மிகச் சிறந்த அவதாரமாக விளங்கப் போகும் ஸ்ரீராமனுடைய அழகிலே மெய்ம் மறந்து நின்றுவிட்டேன். மன்னிக்கவும். இதோ மலர்கள்...'' தட்டை நீட்டினான் சங்கு கர்ணன்.

பிரம்மதேவன் சிரித்தார்.

""சங்கு கர்ணா... இப்போது நான் உனக்கு ஒரு சாபம் தரப்போகிறன். எந்த அவதார மூர்த்தங் களைக் கண்டு மகிழ்ந்தாயோ, அந்த அவதாரங் கள் வசிக்கப் போகும் பூமியிலே நீ பிறப்பாய். ஸ்ரீராம நாமத்தை பூமியில் பரப்பி, கலியுகத்தில் நீ மீண்டும் சத்திய லோகம் வருவாய்.''

""சுவாமி! உங்களைவிட்டு நான் எவ்வாறு பிரிந்திருப்பேன்? பல ஆயிரக்கணக்கான ஆண்டு கள் நான் பூமியில் மனிதனாக வாழ வேண்டுமா? என்னை மன்னித்துவிடுங்கள் சுவாமி...''

""இல்லை சங்கு கர்ணா. இது நான் உனக்கு கொடுத்துவிட்ட சாபம். இதை மாற்ற முடியாது. பூலோகத்தில் மனிதனாகப் பிறந்து செயற்கரிய செயல் களை நீ செய்யப் போகிறாய். யுகங்கள் தோறும் உன் பெயர் நிலைத்து நிற்கும்...'' என அவனை ஆசீர்வதித்தார் பிரம்மா. ஆனால் அவன் எப்படி எப்படிப் பிறந்து வாழப் போகிறான் என்று சொல்ல வில்லை அவர். அந்த பிரம்ம ரகசியத்தை பிரம்மனுடைய அத்யந்த சீடனுக்கே அவர் சொல்லவில்லை.

அந்த சங்கு கர்ணன்தான்-

பிரகலாதன் (கிருதயுகம்).

பாஹ்லீக மகாராஜன் (துவாபர யுகம்).

ஸ்ரீ வியாசராஜர் (கலியுகம்).

ஸ்ரீராகவேந்திரர் (கலியுகம்)

முதல் மூன்று பிறவிகள் வரை தான் யார் என்பது சங்கு கர்ணனுக்குத் தெரியவில்லை. நான்காவதாக சிதம்பரத்திற்கு அருகிலுள்ள புவனகிரியில் பிறந்து, "நீ மடாதிபதியாக வேண்டும். இது ஸ்ரீ மூலராமனின் கட்டளை' என்று சொன்ன ஸ்ரீசுதீந்திர தீர்த்தருடைய பேச்சைக் கேட்காமல், தன் மனைவி, மகனின் எதிர்காலத்தைப் பற்றி எண்ணி மடாதிபதி யாகாமல், "அந்த மூலராமனே என்னிடம் சொல்லட்டும்...' என்றுரைத்த வேங்கடநாதனின் எதிரே தோன்றினாள் ஸ்ரீ சரஸ்வதிதேவி.

""வேங்கடநாதா... நான் பிரம்ம தேவனுடைய பத்தினி சரஸ்வதிதேவி. என்னை ஏற்படுத்தியவர் வேத வியாசர். உனது குருவான சுதீந்திர தீர்த்தர் வரை பலரும் பல நூல்களை இயற்றி எனக்கு ஆபரணங்களாக்கியுள்ளனர். இப்போது உன் முறை. நீ சந்நியாசி ஆகவேண்டும். இது பிரம்மதேவனின் கட்டளை. எனது தந்தை ஸ்ரீ வேதவியாசர், "யார் மூலராமனை வைத்துப் பூஜை செய்கிறாரோ அவரிடம் நான் உறைய வேண்டும்' என்று கட்டளையிட்டுள்ளார்.

நீ யார் தெரியுமா? நீயே பிரகலாதன். நீயே ஸ்ரீகிருஷ்ணரைத் துதித்த பாஹ்லீக மகாராஜன். நீயே கிருஷ்ண தேவராயனின் குலகுரு ஸ்ரீ வியாஸராயன். இப்போது நீயே வேங்கடநாதன். இனி உன் பெயர் ஸ்ரீராகவேந்திரர். எனக்காக நீ பல நூல்களை எழுத வேண்டும். நீ சந்நியாசியாகி அதைச் செய்வாயாக!'' என்று கூறி மறைந்தாள் கலைவாணி.

கி.பி. 1601-ஆம் ஆண்டு புவனகிரியில் தோன்றி, தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை போன்ற பெரும் புலவர்கள் உள்ள ஊர்களில் கற்று, கி.பி. 1671-ஆம் ஆண்டு ஜீவன் முக்தராகி மந்திராலயம் எனும் ஊரில் உறைந்து, இன்றும் பக்தர்களைக் காக்கிறார் ஸ்ரீராகவேந்திரர்.

எழுபது ஆண்டுகள் கர்ம சரீரத்துடனும், முந்நூறு ஆண்டுகள் பிருந்தாவனவாசியாய் இருந்தும், பின்னர் எழுநூறு ஆண்டுகள் நம்மோடு வாழ்ந்தும் நமக்கு நல்லருள் புரிந்துகொண்டிருக்கிறார் அவர். இந்த எழுநூறு ஆண்டுகள் முடிந்ததும் அவர் மீண்டும் சங்கு கர்ணனாய் பிரம்ம லோகம் சென்று விடுவார் என்பது ஸ்ரீ ராகவேந்திர சரித்திரம் கூறும் பேருண்மை.

ஜாதி, மத வேறுபாடில்லாமல் தன்னை நாடும் பக்தர்களுக்கு இன்றும் வாழ்வளித்து வருகிறார் அவர். இவ்வாண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதியன்று, அவருடைய பிருந்தாவனம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு சென்று வழிபடுவோம். செல்ல முடியாதவர்கள் அன்றைய தினம் நீராடிய பின்னர், மிகுந்த ஆசாரத்துடனும், மனசுத்தியுடனும், "ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம:' என்று முடிந்த அளவு தியானம் செய்வோம்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(2)
Name : subramani Date & Time : 8/2/2012 2:18:45 PM
-----------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தைத் தோற்றுவித்து, அதற்குள் மனித குலம் வாழ வழி உண்டாக்கியவர் பரமாத்மாவே. மனித குலம் பாவ- புண்ணியங்களைச் செய்யும் . புண்ணியாத்மா நற்கதி அடைவான்; பாவாத்மா நரகத்தை அடைவான். என்று சில மனிதன் மறந்துவிட்ட உண்மையை நன்றாக விளக்கியுள்ளார்.நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------
Name : lakshmiramanan87@gmail.com Date & Time : 8/2/2012 2:18:11 PM
-----------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ குரு ராகவேந்திரரின் ஆராதனையை முன்னிட்டு எழுதிய இந்த கட்டுரை மிக விரிவாக நன்றாக இருக்கிறது. அவரின் குரு பக்தி, அவர் செய்த அற்புதங்கள், அவரின் பல்வேறு திறமைகள் குறித்த அடுத்த கட்டுரை எதிர்பார்க்கிறோம்.
-----------------------------------------------------------------------------------------------------