24/7 செய்திகள்
நக்கீரன் சினிமா
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
முந்தைய செய்திகள்
சுற்றுலா
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒருவர் கைது: ஸ்ரீசாந்த் டைரி சிக்கியது: மும்பை காவல்துறை இணை ஆணையர்
||
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் விழாவில் பங்கேற்பாரா? பீதியில் தூது விடும் அதிமுக அமைச்சர்கள்!
||
மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது
||
சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி
||
ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை
||
இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சொல்கிறார் ராஜபக்சே
||
சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது
||
ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை
||
புதுக்கோட்டை: ஈழப் போரில் உயிர் நீத்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு அஞ்சலி (படம்)
||
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு
||
மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி!
||
மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?
||
மகனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றுங்கள்! முன்னாள் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் மனு!
||
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
மேஷம்
......................................
சனிப்பெயர்ச்சி பலன்கள்
......................................
கிருஷ்ணரின் முடிவை
......................................
அர்த்தநாரீஸ்வர தத்துவம்!
......................................
ராசிபலன்கள்
......................................
யுகக் யுகமாய்...
......................................
தென்பொதிகையில்...
......................................
நான்மறை ஓதிய...
......................................
அனுமனின் கதையே...
......................................
ஒருத்தி மகனாய்ப் பிறந்து...
......................................
ஆங்கோர் தாம் அதிசயம்!
......................................
முருகனுக்கு மாப்பிள்ளை!
......................................
ஆகஸ்ட் மாத எண்ணியல்
......................................
ஆளவந்தாரா... அருளவந்தாரா?
......................................
எதிர்ப்புகளை விலக்கி ...
......................................
பாரதப் போருக்காக...
......................................
அறம், அரசியல், இறைப்பணி...
......................................
என்றும் வாழும் சித்தர்கள்
......................................
பாசுரம் கேட்டு பக்தவத்சலனை...
......................................
01-08-12
|
: Email this Article
சென்ற இதழ் தொடர்ச்சி...
ஆ
திசித்தன் சிவனுக்கு அடுத்த சித்தனாம் அகத்திய முனிவர் தவமிருந்த இடம் காணும் ஆவலில், 28 கிலோமீட்டர் தூர நடைப் பயணத்தைப் பற்றிய தயக்கம் ஏதுமின்றி போலக்காடு பகுதியிலிருந்து பயணத்தைத் தொடங்கினோம். கேரள அரசின் மூன்று வழிகாட்டிகள் துணையிருந்தனர்.
செங்குத்தான மலையேற்றம், மலைச்சரிவு, காட்டாற்றைக் கடத்தல் என எங்கள் பயணம் ஒரு சாகச அனுபவத்தைத் தந்தது. சுற்றிலுமிருந்த காணக்கிடைக்காத இயற்கைச் சூழல் எல்லையற்ற மன அமைதியைத் தந்தது. வானளாவிய மரங்கள் விழிவிரிய வைத்தன. மூலிகைகளின் சக்தியை சுமந்து வந்த இனிய காற்று புத்துணர்வைத் தந்தது. பல இடங்களில் ஊன்றுகோலின் உதவி தேவை என்பதால், எல்லாருக்குமே ஒரு மூங்கில் ஊன்றுகோலைக் கொடுத்திருந்தார்கள்.
பகல் முழுவதும் மலையேறிய நாம் இருள் சூழும் நேரத்தில், எங்களைப் போன்ற பயணிகளுக்கென்று ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த காட்டுக்குடிலை அடைந்தோம். அனைவரும் அங்கு தங்கினோம். மாசற்ற இயற்கையின் பாசமிகு அரவணைப்பில் சுகமாக உறங்கினோம்.
பொழுது புலர்ந்ததும் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு மீண்டும் பயணமானோம். உயரே செல்லச் செல்ல புதர்களின்
அடர்த்தி மிக நெருக்கமாக இருந்தது.
அட்டைப் பூச்சிகள் நம்மை சோதித்தன. பாதையோரத்தில் திடீர் திடீரென கருநிறப் பாம்புகள் மின்னல் வேகத்தில் கடந்து சென்றன. கடும் விஷத்தன்மை கொண்ட கருநாகங்கள் அவை என்றார் வழிகாட்டி. பாதையைவிட்டு விலகிச் செல்லாமல் நடுவிலேயே நடந்து வந்தால் அவற்றால் எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் கூறினார். என்றாலும் அத்தகைய வனாந்தர சூழலில் பாம்புகளைக் காண்பதென்பது பதறவைக்கும் விஷயம்தான். என்றாலும், இந்தப் பயணத்தை அகத்தியர் இனிதே முடித்து வைப்பார் என்ற நம்பிக்கை எல்லாரிடமும் இருந்தது.
திகைக்க வைத்த- மலைக்க வைத்த- திளைக்க வைத்த பலவகை அனுபவங்க ளுடன் மலையேறிய எங்கள் குழு நண்பகல் நேரத்தில் அகத்தியர் மொட்டைப் பகுதியை அடைந்தது. அந்த நேரத்தில் ஒரு அதிர்ச்சி தரும் செய்தியும் வந்தது. அதாவது எங்களுக்கு அடுத்ததாக வந்த குழுவை யானைகள் கூட்டம் துரத்தியிருக்கிறது. சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவு ஓடி தப்பினார்கள் என்ற செய்திதான் அது. நல்ல வேளையாக யாருக்கும் எதுவும் நேரவில்லை என்ற தகவலால் ஆசுவாசமடைந்தோம்.
""இந்த அகத்தியர் மொட்டைப் பகுதியில் அரிய வகை ராஜநாகங்கள் உள்ளன. அவை தீண்டினால் நிமிடத்தில் மரணம்தான். மாற்று வழியே இல்லை. ஆனால்,
அகத்தியரை நம்பி வருவோரை அவரே முன்னின்று பாதுகாப்பதால் இந்த நாகங்கள் எதுவும் செய்யாது'' என்று ஆச்சரியப்படுத்தினார் மூர்த்தி.
பின்னர் ஆர்வமுடன் சென்று அகத்திய முனிவர் தவம் செய்த இடத்தைக் கண்டு கைகூப்பித் தொழுதோம். எத்தகைய புண்ணிய இடமது! பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த தமிழ் முனிவர்- ஈசனின் திருக்கோலத்தை விரும்பிய போதெல்லாம் காணும் பேறு பெற்றவர்- மனித குலம் வாழ பல்வேறு மருத்துவ முறைகளையும் இன்னும் பிற கலைகளையும்
அருளியவர்- இறைநெறியில் செல்ல ஆலயங்கள் பல அமைத்தவர்... அத்தகைய
அகத்தியர் வீற்றிருந்த இடத்தைக் காணும்போது நம்மையறியாமல் உடல் சிலிர்த்தது. வெட்டவெளியில் அங்கே கம்பீரமாகக் காட்சி தருகிறது கல்லாலான அகத்தியரின் திருவுருவச் சிலை. அகக் கண்ணில் கண்ட ஐயனை புறக்கண்களால் கண்டு மகிழ்ந்தோம்.
எங்களுடன் வந்த பூசாரி பாண்டி,
அகத்தியரை அலங்கரித்து சிறப்பாக பூஜைகள் செய்தார். எல்லாரும் மனமுருக வணங்கி நின்றோம். இவரை வணங்கினால், அனைத்து சித்தர்களின் ஆசி கிடைப்பதோடு, இறுதியில் முக்தியும் சித்திக்கும் என்பது நம்பிக்கை.
பொருளாதார உயர்வு, தொழில் மேன்மை, குடும்ப பிரச்சினை தீருதல், நோய் நீக்கம் என அவரவரும் பல்வேறு வேண்டுதல்களை மனதில் சுமந்து வந்திருந்தோம். ஆனால் அகத்தியர்முன் நிற்கும்போது அவையெல்லாமே மறந்து போய்விட்டன.
"அய்யா அகத்தியரே! எங்களைப் பாதுகாப்பாக திரும்பவும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்' என்ற ஒரேயொரு வேண்டுதல்தான் மனதிலிருந்தது. உண்மையில் இதுதான் ஞானத்தின் முதல் படியோ!
அகத்தியரிடம் ஆசிபெற்றுத் திரும்பினோம். வரும் வழியிலும் எங்களிடம் வேண்டுதல்கள் எதுவுமில்லை- "எங்களை பாதுகாப்பாகக் கொண்டு போய் சேர்க்க வேண்டும்' என்னும் ஒன்றைத் தவிர!
அதேசமயம், அகத்தியரை வணங்கிவிட்டு நாம் வீடு போய் சேர்வதற்குள் நம் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திருப்பார்
அகத்தியர் என்பதுதான் இங்கு சிறப்பு.
அகத்தியரைக் காணச் செல்லும் இந்த நான்கு நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் பக்தர்களுக்கு, ஒரு மாதகாலம் காய்ச்சல், தும்மல் போன்ற நோய்கள் எதுவுமே அண்டாதாம். இதற்குக் காரணம் இயற்கையான மூலிகைக் காற்றால் கிடைக்கும் நோய் எதிர்ப்பாற்றல்தான்.
சிரமப்படாமல் எதையும் அடைய முடியாது. உடல் தூய்மை, உள்ளத் தூய்மை, எண்ணியவை ஈடேறல் என அனைத்துக்கும் ஒரு தீர்வாய் விளங்குகிறது- இந்த அகத்தியர் மலைப் பயணம்!
படங்கள்: ராம்குமார்
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.