அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
Logo
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
மேஷம்
......................................
சனிப்பெயர்ச்சி பலன்கள்
......................................
கிருஷ்ணரின் முடிவை
......................................
அர்த்தநாரீஸ்வர தத்துவம்!
......................................
ராசிபலன்கள்
......................................
யுகக் யுகமாய்...
......................................
தென்பொதிகையில்...
......................................
நான்மறை ஓதிய...
......................................
அனுமனின் கதையே...
......................................
ஒருத்தி மகனாய்ப் பிறந்து...
......................................
ஆங்கோர் தாம் அதிசயம்!
......................................
முருகனுக்கு மாப்பிள்ளை!
......................................
ஆகஸ்ட் மாத எண்ணியல்
......................................
ஆளவந்தாரா... அருளவந்தாரா?
......................................
எதிர்ப்புகளை விலக்கி ...
......................................
பாரதப் போருக்காக...
......................................
அறம், அரசியல், இறைப்பணி...
......................................
என்றும் வாழும் சித்தர்கள்
......................................
பாசுரம் கேட்டு பக்தவத்சலனை...
......................................




ஆவணி அவிட்டம் 1-8-2012

         நிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை நாமறிவோம். அதுபோல உள்ளத்தைத் தூய்மை செய்ய என்ன வழி? மந்திரங்களில் சிறந்த காயத்ரி மந்திரத்தை ஓதுவதால் ஆத்ம சுத்தி கிடைக்கும். அதனால் தான் கீதையில், "மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்' என கிருஷ்ண பகவான் கூறியுள்ளார்.

விஷ்ணு பகவான் உலகை சிருஷ்டிக்க திருவுளம் கொண்டபோது அவரது முகத்திலிருந்து காயத்ரி மந்திரம் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

ஞானம் பெற விரும்பிய முனிவர்கள் வேதக் கடலைக் கடைந்த போது "த்ரயி' என்ற வேதசாரம் கிடைத்தது. அதனை காணமதி என்ற மத்தினால் கடைந்த போது காயத்ரி தேவியின் வடிவம் தோன்றியது எனச் சொல்லப்படுகிறது.

விஸ்வாமித்திரரின் தவத்தால் மகிழ்ந்த காயத்ரிதேவி இந்த மந்திரத்தை அவருக்கு உபதேசித்தாள். உலக நன்மையைக் கருத்தில்கொண்டு அவர் அதை நமக்கு வழங்கினார். விஸ்வாமித்திரரிடம் காயத்ரி மந்திர உபதேசம் பெற்றதாலேயே ஸ்ரீராமபிரான் இராவணனை வென்றதாகவும் சொல்லப்படுகிறது. நாடு சுபிட்சமடையவும்  கொடிய நோய்கள் அகலவும் இம்மந்திரம் உதவும்.

இத்தனை சிறப்புமிக்க காயத்ரிதேவிக்கு சரஸ்வதி, பார்வதி, மகேஸ்வரி, லட்சுமி, மனோன்மணி எனும் ஐந்து முகங்கள் உண்டென்பர். அதுபோல ஒருமுகம் பவளம்போல் செந்நிறமாகவும், ஒரு முகம் பொன்னிறமாகவும், ஒருமுகம் ஆகாய நீல நிறத்திலும், நான்காம் முகம் தூய வெண்ணிறமாகவும், ஐந்தாம் முகம் முத்துப்போல் ஒளி வீசுவதாகவும் அமைந்துள்ளன. இந்த ஐந்து முகங்களும் சிவனைப்போல் ஐந்தொழிலையும் செய்கின்றன.

காயத்ரிதேவி காலையில் குழந்தையாகவும், நண்பகலில் நடுத்தர வயதினளாகவும், மாலையில் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவளாகவும் மூவகைத் தோற்றம் தருகிறாள் என்பர். இதனையே வேறுவித மாக- காலையில் சரஸ்வதியான பிரம்ம சொரூபிணியாய், நண்பகலில் சாம்பவியான ருத்ர சொரூபிணியாய், மாலையில் வைஷ்ணவியான விஷ்ணு சொரூபிணியாக அருளாட்சி புரிவதாகவும் சொல்வதுண்டு.

காயத்ரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது.
"ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.'

காயத்ரி வேதங்களின் தாய். இவள் பாவங்களைப் போக்குபவள். பூமியிலும் சொர்க் கத்திலும் காயத்ரி மந்திரத்தைவிடவும் பரிசுத்தம் செய்யும் பொருள் வேறில்லை. இந்த மந்திரத்தை நாள்தோறும் மூன்று முறை ஜெபித்தால் மங்களம் உண்டாகும். நான்கு வேதங்களை ஓதியதன் பலன் கிடைக்கும். ஆரோக்கியம், பலம், அழகு, அறிவு, பிரம்மதேஜஸ் போன்றவை உண்டாகும். இதனை ஜெபிப்பவர்க்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அஷ்டமாசித்திகளையும் தரும் என்பர் பெரியோர்.

காயத்ரி மந்திரம் சூரியனை பிரதான தெய்வமாகக் கொண்டது. ஒவ்வொரு தெய்வத்தையும் முழுமுதலாகக் கொண்ட காயத்ரி மந்திரங்களும் உண்டு. விநாயகர் காயத்ரி, சண்முக காயத்ரி, அனுமன் காயத்ரி என எல்லா தெய்வங்களின் பேரிலும் காயத்ரி மந்திரம் உண்டு. நவகிரகங்களுக்கும் உண்டு.

சிதம்பரம் அருகேயுள்ள கஞ்சித்தொட்டி பஸ் நிறுத்தத்துக்கு அருகிலுள்ள காயத்ரி தேவி ஆலயம் மிகவும் அபூர்வமானதாகும். ஐந்து முகங்கள், பத்துக் கரங்களுடன் வெண்தாமரையில் வீற்றிருப்பது போன்ற எழிலான தோற்றத்தில் காயத்ரிதேவி காட்சி தருகிறாள். இரு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறுடைய இக்கோவிலுக்கு 1997-ல் கும்பாபிஷேகம் நடந்தது. பௌர்ணமிதோறும் இக்கோவிலில் ஹோமம், அபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம் நடக்கும். இக்கோவிலில், பிரார்த்தனை பலித்தவர்கள் அம்மனுக்கு ஆறு கஜம் புடவை சாற்றி அபிஷேகம் செய்கின்றனர்.

சேலம் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தி லுள்ள காயத்ரி தேவியும் புதுமையான தோற்றம் உடையவள்தான். பஞ்சலோக மூர்த்தியான தேவி ஐந்து முகங்கள், மூன்று கண்கள், பத்துக் கரங்கள், மூன்று தனங்கள், மூன்று கால்களுடன் காட்சி தருகிறாள்.

திருப்பட்டூர் பிரம்மன் ஆலயத்திலும், சென்னையில் அரும்பாக்கம் ஜெய் நகரிலும், இன்னும் தமிழ்நாட்டில் வேறு சில இடங் களிலும் காயத்ரிதேவி சந்நிதி அமைந்துள் ளது.

பூணூலுக்கும் காயத்ரி ஜெபத்துக்கும் தொடர்புண்டு. ஒருவன் பூணூல் அணிந்த பின் தினமும் மூன்று வேளை காயத்ரி மந்திரம் ஜெபித்தாக வேண்டும். எனவே இதனுடன் தொடர்புடைய ஆவணி அவிட்டம் எனும் பூணூல் மாற்றும் திருநாள் குறித்துக் காண்போம்.

நான்கு வயதுவரை பிள்ளைப் பருவம். ஐந்து வயது முதல் குழந்தையானது அறிவுத் தேடலைத் தொடங்க வேண்டும். அதற்கான தொடக்கமாகத்தான் உபநயனம் எனும் பூணூல் கல்யாணம் நடத்தப்படுகிறது. தங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு மூன்று வயது முதல் ஐந்து வயதிற்குள் குரு மூலமாக காயத்ரி மந்திரம் ஓதி, தந்தை மடியில் அமரச் செய்து பிரம்மோபதேசம் செய்தபின், புதிய பூணூலை அணிவிப்பர். இதனை ஒரு திருமண விழா போன்றே சிறப்பாக நடத்துவதால் பூணூல் கல்யாணம் எனப் பெயர் பெற்றது. வசதி வாய்ப்பற்றவர்கள் தங்களது உறவினர் வீட்டுத் திருமண விழாவில் மணமக்கள் அமர்ந்த மேடையில், குழந்தையை அமர்த்தி இந்தப் பூணூல் கல்யாணத்தைச் செய்வதும் உண்டு.

பூணூல் அல்லது முப்புரிநூல் அணிவது- கடவுள் தேடல், ஞானத் தேடல், உடலைப் பேணுதல் ஆகிய மூன்றையும் சிரமேற் கொண்டு சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதாகும். முப்புரி நூலிலுள்ள மூன்று நூல்களும் கற்பது, கேட்பது, குரு உபதேசத்தின் மூலம் ஞானம் வளர்ப்பதையும், உரிய உணவு, ஓய்வின் மூலம் உடலைப் பேணுவதையும், எக்கணத் திலும் கடவுள் குறித்து விழிப்போடிருந்து கடவுள் தேடலை மேற்கொள்வதையும் குறிப்பதாகும்.

ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத் தன்று பூணூல் அணிபவர்களான பிராமணர்கள், பொற்கொல்லர்கள், தேசிகர்கள் ஆகியோர் இந்தத் திருநாளை பக்தியுடன் கொண்டாடுவார்கள். குருவை வைத்து பூஜை செய்தபின் பழைய பூணூலைக் கழற்றிவிட்டு புதிய பூணூல் அணிந்து விருந்துண்பார்கள். இதனை வீட்டில் மேற்கொள்ள இயலாதவர்கள் கோவிலுக்குச் சென்று குருக்கள் பூஜை செய்தபின் புதிய பூணூல் மாற்றிக் கொள்வார்கள். இந்து மதத்தின் எல்லா விழாக்களிலும் சடங்குகளிலும் ஆழ்ந்த பொருளுண்டு. அதற்கொரு எடுத்துக்காட்டு இந்த ஆவணி அவிட்டத் திருநாள்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :