24/7 செய்திகள்
நக்கீரன் சினிமா
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
முந்தைய செய்திகள்
சுற்றுலா
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது
||
காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது
||
விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை
||
கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
||
திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு
||
கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை
||
இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
||
சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை
||
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
||
உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு
||
திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
||
கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி
||
இளையான்குடி கைதி புழல் சிறையில் மரணம்
||
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
மேஷம்
......................................
சனிப்பெயர்ச்சி பலன்கள்
......................................
கிருஷ்ணரின் முடிவை
......................................
அர்த்தநாரீஸ்வர தத்துவம்!
......................................
ராசிபலன்கள்
......................................
யுகக் யுகமாய்...
......................................
தென்பொதிகையில்...
......................................
நான்மறை ஓதிய...
......................................
அனுமனின் கதையே...
......................................
ஒருத்தி மகனாய்ப் பிறந்து...
......................................
ஆங்கோர் தாம் அதிசயம்!
......................................
முருகனுக்கு மாப்பிள்ளை!
......................................
ஆகஸ்ட் மாத எண்ணியல்
......................................
ஆளவந்தாரா... அருளவந்தாரா?
......................................
எதிர்ப்புகளை விலக்கி ...
......................................
பாரதப் போருக்காக...
......................................
அறம், அரசியல், இறைப்பணி...
......................................
என்றும் வாழும் சித்தர்கள்
......................................
பாசுரம் கேட்டு பக்தவத்சலனை...
......................................
01-08-12
|
: Email this Article
யா
க குண்டத்தில் ரதம் எழும்பியபடி இருப்பதைக் கண்ட அனுமன், அது முழுவதுமாக எழும்பிவிடாதபடி தடுக்க, அதன்மேல் சென்று அதைத் தன் பலத்தால் அழுத்தியபடி நின்றான்.
இதை சற்றும் எதிர்பார்த்திராத இந்திரஜித் வேள்விபுரிவதை நிறுத்திவிட்டு ஒரு வாளெடுத்து
அனுமனோடு மோத முற்பட, அடுத்த நொடியே வேள்வி தடைப்பட்டது. அனுமனுடைய பிரயாசை துளியுமின்றி ரதமானது யாக குண்டத்திலேயே
அமிழ்ந்து அடங்கியும் விட்டது.
இந்திரஜித்தின் வாள் வீச்சிலிருந்து எகிறி குதித்து தப்ப முற்பட்ட அனுமனை, லட்சுமணனின் பாணாஸ்திரங்கள் அரண்கட்டி காப்பாற்றத் தொடங்கின.
இதனால் இந்திரஜித்தின் கவனம் லட்சுமணன் பக்கம் திரும்பவும் இருவரிடையேயும் போர் மூண்டது. அதனைத் தொடர்ந்து லட்சுமண பாணங்கள் ஒவ்வொன்றும் இந்திரஜித்தை ஓட ஓட விரட்டின. இந்திரஜித் வானில் ஏறி மேகக் கூட்டங்களுக்கு நடுவில் புகுந்து ஒளியப் பார்த்தான். ஆனால் அவன் எங்கு சென்றபோதும் லட்சுமண பாணங்கள் அவனை விடவில்லை. இறுதியில் லட்சுமண பாணம் இந்திரஜித்தின் இடது கரத்தை முதலில் வாங்கியது. இந்திரஜித் துடிக்கும்போதே அடுத்த பாணம் வலக்கரத்தை துண்டித்து வாங்கியது.
பின்னர் அந்த இரண்டு பாணங்களும் அந்தக் கரங்களோடு லட்சுமணனின் விருப்பத்திற்கு ஏற்ப சென்றன. ஒரு கரம் இராவணனின் மடியில் சென்று விழுந்தது. இன்னொன்று இந்திரஜித்தின் மனைவி சுலோச்சனாவின் மடியில் சென்று விழுந்தது.
அவள்தானே நிகும்பலை யாகம் புரிய எடுத்துக் கொடுத்தவள்? எந்தக் கரத்தால் இந்திரஜித் ஆகுதிகளை அளித்து யாகம் புரிந்தானோ அதே கரம் வெட்டுப்பட்டு சுலோச்சனாவிடம் வந்து விழவும், சுலோச்சனா அதைக் கண்டு அப்படியே மயங்கி விழுந்துவிட்டாள்.
இராவணனோ அரண்மனையே நடுங்கும் வண்ணம், ""மகனே மேகநாதா... நீயும் என்னை விட்டுப் போய்விட்டாயா... ஐயோ! என் பரம்பரையே அழிந்துவிட்டதே... ஒருவர்கூட மிச்சமின்றி அனைவரையும் இழந்துவிட்டேனே!'' என்று கதறினான்.
இதற்கு நடுவில் இந்திரஜித்தின் தலையைத் துண்டித்த லட்சுமண பாணம், அதை ராமனின் காலடியில் சென்று போட்டது. இந்திரஜித்தின் சிரசைக்கண்ட ராமனிடம், போர்க்களத்து யுத்த கோபத் தையும் மீறிக்கொண்டு கருணைதான் பீறிட்டது. "இப்படி முடிந்து போகவேண்டும் என்பதே உன் விருப்பமாகிவிட்டதே' என்று மனதில் நொந்துகொண்டபோது லட்சுமணனும் வந்து சேர்ந்தான்.
அதேசமயம் இராவணனின் அரண் மனையில் சுலோச்சனா தன்வசம் சேர்ந்த கரத்தோடு இராவணனைக் காண வந்தாள். இராவணன் வசமிருந்த கரத்தைப் பார்த்த தும் மேலும் கண்ணீர் சிந்தினாள்.
அப்போது ஒற்றர்களில் ஒருவன் ஓடி வந்து இந்திரஜித்தின் சிரசு ராமனின் காலடியில் விழுந்து கிடப்பதைக் கூறி, உடலும் வானிலிருந்து விழுந்து கிடப்பதை யும் கூறினான்.
சுலோச்சனா இராவணனை கண்ணீரு டன் பார்த்தபோது, மண்டோதரியும் பெருத்த அழுகுரலோடு வந்து நின்றாள்.
""உங்களுக்கு இப்போது திருப்திதானா? அனைவரையும் இழந்துவிட்டோம். எஞ்சியிருப்பது தாங்கள் மட்டும்தான். உங்களையும் இழந்து இவளைப்போல நான் விதவைக் கோலம் பூணவேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமா? அல்லது இழந்தது போதும் என்று அந்தப் பெண்ணை அவர் கள் வசம் ஒப்படைக்கப் போகிறீர்களா?'' என்று கண்ணீருடனும் கோபத்துடனும் கேட்டாள்.
""மண்டோதரி... நீ லங்காதிபதியின் மனைவி. ஆனால் சராசரி வீரனின் மனைவிபோல பேசுகிறாய்...''
""ஐயோ... இன்னமும் உங்களிடம் அகந்தை குறையவில்லையே... என் பேச்சைக் கேளுங்கள். அழிந்ததும் இழந்ததும் போதும். மிச்சமிருப்பது நீங்கள் மட்டுமே... உங்களையும் இழந்து விடுவேனோ என்கிற அச்சத்தில்தான் நான் இவ்வாறு கூறுகிறேன்.''
""அனைவரும் இறந்த நிலையில் நான் மட்டும் வாழநினைத்தால் நான் ஈனன். அதே சமயம் நான் வாழ்ந்து கொண்டிருப்பதே
அந்த ராமனுக்குப் பாடம் கற்பிக்கத்தான் என்பதை மறந்துவிடாதே...''
""நீங்கள் இப்போது கற்பிப்பவரல்ல- கற்பவர் என்பதை மறந்துவிடாதீர்கள்.''
மண்டோதரிக்கும் இராவணனுக்குமான வாக்குவாதத்தின் ஊடே, ""அத்தை... மாமா... தயவு செய்து என்னை கவனியுங்கள்'' என்று அவர்களைக் கலைத்தாள் சுலோச்சனா. அதே வேகத்தில் கண்ணீருடன், ""உங்கள் வசமுள்ள அந்த கரத்தினைத் தாருங்கள். அந்த ராமச் சந்திரமூர்த்தியின் பாதங்களில் விழுந்த என் மணவாளரின் சிரத்தையும் நான் கேட்டுப் பெற்று, அவருக்கான ஈமக்கிரியை புரிந்து நானும் அவ்வேளையில் உடன்கட்டை ஏறிட இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றாள்.
விக்கித்து நின்ற இராவணன் வசமிருந்த இடக் கரத்தைப் பெற்றுக்கொண்டவள், துண்டுபட்ட இரு கரங்களையும் பார்த்துப் பொங்கி அழுதாள். மெல்ல அங்கிருந்து விலகத் தொடங்கினாள்.
அவள் பேச்சும் செயலும் இராவணனின் நாடி நரம்புகளைக் குடைந்திடவும், அவன்
அண்ணாந்து வானத்தைப் பார்த்து, ""அடேய் ராமா... உன்னை என்ன செய்கிறேன் பார்!'' என்று கர்ஜித்தான்.
இராவண கர்ஜனை அசோகவனத்தில் சீதையிடமும் எதிரொலித்தது. உடனிருந்த திரிசடை, ""அம்மா... இது என் பெரியப்பாவின் ஓலக்குரல். மிச்சமிருப்பது அவர் மட்டும்தான். அதனால்தான் ஓலமிடுகிறார்!'' என்றாள்.
சீதையிடம் ராமனின் வீரச் செயலை எண்ணி மௌனம் மற்றும் பரவசம். கூடவே முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளி பரவுவதையும் திரிசடை உணர்ந்தவளாகவே பேசினாள்.
""அம்மா... தங்கள் பிரபுவின் இளவல் பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்துவிட்ட நிலையில், அனுமன் காட்டிய தீரச் செயல்தான் இன்று பெரியப்பா இப்படி ஓலமிடக் காரணம். தாங்க ளும் வான் வீதியில் அனுமன் ஒரு மலையையே தூக்கி வந்ததைப் பார்த்தீர்கள்தானே?'' என்று கேட்கவும் சீதை ஆமோதித்தாள்.
""ஆம் திரிசடை! அந்த சிரஞ்ஜீவி சஞ்ஜீவி மலையைச் சுமந்து வந்ததைத்தான் இந்த இலங்கையே கண்டதே. நல்ல வீரனுக்கு குன்றுகூட ஒரு துரும்பு என்னும் பதத்தை
அனுமன் மெய்யாக்கிவிட்டான். என் பிரபுவின் உத்தமத் தொண்டனுக்கே இவ்வளவு வீரமிருந் தால் அவருக்கு எவ்வளவு இருக்கும்?''
""உண்மைதானம்மா... என் சகோதரன் இந்திரஜித்தையும் என் பெரியப்பா இழந்து விட்டார். இனி அவருக்கும் உங்கள் பிரபுவுக்கும் தான் நேருக்கு நேரான யுத்தம்...''
""இதைத்தான் நானும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இந்த நாளுக்காகத்தான் நான் நோன்பே நோற்றேன். என் பிரபு எனக்காகவே யுத்தம் செய்யப் போகிறார். அதில் இராவணன் வீழ்ந்து மடியப் போவதும் உறுதி'' என்று உணர்ச்சியோடு பேசினாள் சீதை.
போர்க்களத்தில் ஒரு அதீத பரபரப்பு!
பல்லக்கு ஒன்று வந்தபடி இருந்ததுதான் காரணம்.
இராவணன்தான் பயந்துபோய் சீதையைத் திருப்பி அனுப்பிவிட்டானா என்று ஒவ்வொரு வரும் ஊன்றிப் பார்த்தபடி இருக்க, அதனுள் வந்தவள் இந்திரஜித்தின் மனைவியான சுலோச்சனா!
விதவைக் கோலம் பூண்டு காஷாயம் உடுத்தியவளாக அவள் பல்லக்கிலிருந்து இறங்கி ராமபிரானை நோக்கித்தான் நடந்தாள்.
ராமபிரானும் அவளை ஏறிட்டார்.
அவள் அந்த நிலையிலும் ராமபிரானை வணங்கினாள்.
கண்களில் ஈரம் வழிந்தோடியது. அங்கே இருந்த விபீஷணன் கலங்கிப் போய் ஓடிவந்து, ""சுலோச்சனா...'' என்று விம்மலுடன் நின்றான்.
""நலமாய் இருக்கிறீர்களா மாமா?'' என்றாள் மிக வினயமாக.
""சுலோச்சனா, இது உபசாரம் பேசும் நேரமோ, இடமோ அல்ல. நீ எதற்கு வந்திருக்கி றாய் என்பதை என்னால் உணரமுடிகிறது... இரு வருகிறேன்'' என்ற விபீஷணன் ராமபிரானி டம் சென்று, ""ஐயனே... இவள் இந்திரஜித்தின் மனைவி சுலோச்சனா... அவனது சிரசு இங்கே தங்கள் திருவடிகளில் விழுந்ததல்லவா? அதை பெற்றுச் செல்ல வந்திருக்கிறாள்'' என்றான்.
ராமன் மறுப்பேதும் கூறிடாத நிலையில், இந்திரஜித்தின் சிரம் அவளை அடைந்தது.
அதைப் பார்த்த அவள் விழிகளில் கண்ணீர் மேலும் பெருக்கெடுத்தது.
""அம்மா, அழாதே... உனக்கு ஆறுதல் கூற இயலாது என்பது எனக்குத் தெரியும். ஆனா லும் இந்திரஜித் நிச்சயம் சுவர்க்கம் சேர்ந்தி ருப்பான். காரணம் அவன் இளைய பிரபுவால் வதம் செய்யப்பட்டவன். அழிவதில்கூட ஒரு அழகிருக்கிறதம்மா... அது இந்திரஜித்துக்கு கிடைத்துள்ளது. இதற்காக நீ மகிழ வேண்டும்'' என்றான்.
சுலோச்சனா எதுவும் கூறாமல் அங்கிருந்து விலகத் தொடங்கினாள். விலகும்முன் ராமபிரானை ஏறிட்டு நீர் நிரம்பிய விழிகளோடு திரும்பவும் வணங்கினாள்.
அங்கேயிருந்த எல்லாரையுமே அவள் செயல் உருக்கிக் கொண்டிருந்தது. குறிப்பாய் அனுமன் அவளை ஆச்சரியத்தோடு பார்த்தான்.
இத்தனை வினயமும் தன்மையும் கொண்ட வள் எப்படி இராவணனுக்கு மருமகளானாள் என்கிற வியப்பு அனுமனிடம்...
அவர்களிடமிருந்து விலகிச் சென்ற சுலோச்சனா இந்திரஜித்தின் உடல் கிடக்கும் இடத்தை அடைந்து, வெட்டுப்பட்ட கரங்கள் மற்றும் சிரத்தை ஒன்றாக்கி அவனுக்கான ஈமக்கிரியை புரியத் தொடங்கினாள்.
இறுதியாக அவனுக்கென மூட்டப்பட்ட சிதை நெருப்பில் குதித்து தன் இன்னுயிரையும் விட்டாள்.
சுலோச்சனா இப்படி தீப்புகுந்த செய்தி இராவணனை எட்டவும், புஜங்கள் புடைக்க எழுந்த இராவணன் அப்போதே போர் முரசு ஒலிக்க ஆணையிட்டான்.
இது இப்படித்தான் முடியும் என்று யூகித்து வைத்திருந்த அனுமனும் ராமபிரானிடம், ""ப்ரபோ... நமது யுத்தம் முடிவை நெருங்கி விட்டதாகக் கருதுகிறேன்'' என்றான்.
ராமபிரானிடம் ஒரு மந்தாரப் புன்னகை. அனுமனிடம் வேறு விதமான எண்ணங்கள். உடனிருந்து கவனித்தபடி இருந்த மாமா மாலி கேட்டார்.
""என்ன சுந்தரா... எது குறித்து இவ்வேளையில் தீவிரமாக யோசிக்கிறாய்?''
""இராவணனும் நிச்சயம் யுத்த களத்தில் ஏதாவது மாயங்கள் செய்வான் என்று கருதுகிறேன்.''
""அதிலென்ன சந்தேகம். அவன் எதைச் செய்தாலும் நாம் அதை சந்தித்துத்தானே தீரவேண்டும்?''
""எனக்கென்னவோ இந்த யுத்தம் இன்றோடு முடிவடையாது என்றே தோன்றுகிறது.''
""பிரபு நினைத்தால் ஒரு பாணத்தில் முடிந்துவிடும்.''
""ஆனால் அவர் அப்படி நடப்பதை விரும்ப மாட்டார். படிப்படியாகத்தான் ஆர்த்தெழுவார்...''
அனுமன் கூறியதுபோலத்தான் நடந்தது. இராவணன் ஜகஜ்ஜாலங்கள் அவ்வளவையும் காட்டினான். ஆனால் அவ்வளவையும் ராம பிரான் தன் அஸ்திரங்களால் அடக்கி ஒடுக்கி னார். களத்தில் அவர் இராவணனுக்கு எதிராக நின்ற கோலம் விஷ்ணு ரூபமாய்- விஸ்வரூபமாய் வானிடை பார்த்தபடி இருக்கும் தேவர்களுக் கெல்லாம் காட்சியளித்தது. அற்புதக் காட்சி அது...!
ஒரு கட்டத்தில் இராவணனின் கதாயுதமே ராமபாணத்தால் பொடிப் பொடியாகிட, இராவணன் நிராயுத பாணியாக நின்றான். இந்த நிலையில் அவன் மார்பைப் பிளக்க ஒரு சாதாரண பாணம் போதும். ஆனால் ராம பிரான் அதை நாடாமல் அவனை நேருக்கு நேராக உற்று நோக்கினார்.
நிலைகுலைந்து நிற்கும் அவன் காதுகளில், ""இராவணா! நிராயுதபாணியான உன்னோடு நான் இனி யுத்தம் புரியமாட்டேன். உனக்கு இப்போதும் அவகாசம் தருகிறேன். இன்று போய் நாளை வா! மீண்டும் சந்திப்போம்'' என்றார்.
(தொடரும்)
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
கருத்துக்கள்(2)
Name
:
renga
Date & Time
:
8/25/2012 1:35:39 PM
-----------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ ராம ஜெயம்
-----------------------------------------------------------------------------------------------------
Name
:
subramani
Date & Time
:
8/2/2012 2:18:45 PM
-----------------------------------------------------------------------------------------------------
ஜெகம் புகழும் புண்ணியக்கதை எங்கள் அகம் குளிர இருந்தது.புராணங்களை அதன் மறைந்திருக்கும் உட்கருத்துடன் விளக்கினால் பலரும் உணர்வார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.