24/7 செய்திகள்
நக்கீரன் சினிமா
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
முந்தைய செய்திகள்
சுற்றுலா
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
||
அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள்
||
புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
||
பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு
||
அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு
||
சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர்
||
இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை
||
1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ்
||
பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி
||
இந்திய டாக்டருக்கு சீன பிரதமர் பாராட்டு
||
உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை
||
காவிரிப் பிரச்சனையில் அனைவரும் ஒருமித்து எழுந்து குரல் கொடுக்க வேண்டும்: வைகோ
||
விவேக் தத் உள்ளிட்ட 4 பேரது சி.பி.ஐ. காவல் 5 நாட்கள் நீடிப்பு
||
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
மேஷம்
......................................
சனிப்பெயர்ச்சி பலன்கள்
......................................
கிருஷ்ணரின் முடிவை
......................................
அர்த்தநாரீஸ்வர தத்துவம்!
......................................
ராசிபலன்கள்
......................................
யுகக் யுகமாய்...
......................................
தென்பொதிகையில்...
......................................
நான்மறை ஓதிய...
......................................
அனுமனின் கதையே...
......................................
ஒருத்தி மகனாய்ப் பிறந்து...
......................................
ஆங்கோர் தாம் அதிசயம்!
......................................
முருகனுக்கு மாப்பிள்ளை!
......................................
ஆகஸ்ட் மாத எண்ணியல்
......................................
ஆளவந்தாரா... அருளவந்தாரா?
......................................
எதிர்ப்புகளை விலக்கி ...
......................................
பாரதப் போருக்காக...
......................................
அறம், அரசியல், இறைப்பணி...
......................................
என்றும் வாழும் சித்தர்கள்
......................................
பாசுரம் கேட்டு பக்தவத்சலனை...
......................................
01-08-12
|
: Email this Article
கடந்த இதழில் வெளியான "ஆண்டவனின் அரண்மனை- ஆங்கோர் வாட் அதிசயம்! கட்டுரையின் தொடர்ச்சி...
ஆங்கோர் வாட் கோவில் கட்டப்பட்டபோது சிவன், விஷ்ணு உள்ளிட்ட இந்து தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டு வந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆங்கோர் வாட் கோவிலின் நுழைவாயிலில் நின்று, சூரிய உதயத்தின் அழகிய காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.
இந்த அற்புதக் காட்சியைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க, காலை 5.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் திரண்டு விடுகின்றனர். உலக மக்கள் கண்டு வியக்கும் இந்தக் கோவிலில் 2,000 அப்சரஸ் தேவதைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியில் மின்னும் இவை உயிருள்ளவையோ என்னும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
இக்கோவிலில் பல பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு சந்நிதியின் நுழைவாயிலிலும் மிக அழகிய சிற்பங்கள் செதுக் கப்பட்டுள்ளன. மேற்பகுதியைப் பார்ப்பதற்கென்று தற்போதைய கம்போடிய அரசு, படிக்கட்டுகளை அமைத்துள்ளது. பழங்காலத் தில் உயரமான அப்பகுதிக்கு எப்படிப் போனார்கள் என்பது வியக்க வைக்கும் விஷய மாக உள்ளது.
இராவணன், தனது இருபது கைகளால் கயிலை மலையை உலுக்குவது போன்ற சிற்பம் இங்குள்ள சிற்பங்களில் சிறப் பம்சம் வாய்ந்தது எனலாம். சிவன், மகாவிஷ்ணு ஆகியோரின் சிற்பங்களும் உள்ளன. அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலைக் கடையும் சிற்பம், சுக்ரீவன்- வாலி சண்டை, சுக்ரீவனுக்காக ராமர் வாலியை வீழ்த்திய காட்சி, இலங்கைக்கு பாலம் கட்டுவதற்காக வானரங்கள் முயலும் காட்சி ஆகியவை மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன. சிவபெருமானின் ஆழ்நிலை தியானக் காட்சியும் நம்மை சிலிர்க்க வைக்கிறது.
மேலும் திருமாலின் தசாவதாரக் காட்சி, கம்சனைக் கொல்லும் கிருஷ்ணன், பத்துக் கரங்கள் கொண்ட சிவபெருமானின் நடனம், மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்திலிருந்து முகிழ்த்து வரும் பிரம்மா போன்ற சிற்பங்கள் நம்மை வியப்பின் எல்லைக்கே கொண்டு செல்கின்றன. இங்கு தெய்வங்களின் சிலைகள் தவிர மற்ற சிற்பங்கள் அனைத்தும் சுவர்களில் செதுக்கப்பட்டவை.
ஆங்கோர் வாட் கோவிலின் அருகே "ஆங்கோர் தாம்' (ஆய்ஞ்ந்ர்ழ் பட்ர்ம்) எனும் கோவிலும் உள்ளது. இது ஏழாம் ஜெயவர்மன் எனும் மன்னனால் உருவாக்கப்பட்டதாகும்.
இதன் நுழைவாயிலில் நான்கு முகம் கொண்ட கோபுரம் உள்ளது. நான்கு திசைகளை நோக்கியுள்ள இந்த முகங்கள் சிற்பங்கள் எனினும்- இவை சிரிப்பது போன்று காணப்படுவதால், இவற்றைப் பார்க்கும்பொழுது நம் மனதில் ஒருவித நூதனமான அமைதி தோன்றுகிறது. நுழைவாயிலின் இடப்பக்கமும் வலப்பக்கமும் உள்ள அழகிய யானைச் சிற்பங்களை இந்த முகங்கள் பார்ப்பதுபோலவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலின் மொத்தப் பரப்பளவு 900 ஹெக்டேர் ஆகும். கோவிலின் நுழைவாயிலில் அசுரர்களின் தலைகள் சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளன. நுழைவாயிலுக்கு ஐந்து கதவுகள் உள்ளன. ஒரு கதவைத் தவிர மற்ற நான்கு கதவு களும் ஒரே அளவிலும் வடிவிலும் அமைக்கப் பட்டுள்ளன. பிரம்மாண்டமான இக்கதவுகளில் ஐந்தாவது கதவு உள்ள இடம் மிகமிக சிறப்பா கவும் முழுமையானதாகவும் உருவாக்கப்பட் டுள்ளது.
இங்குள்ள கடவுளின் சிலைகளைப் பாதுகாப்பதற்காக இக்கதவுகள் இவ்விதம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். நுழைவாயிலில் இரு பக்கங்களிலும் ராட்சத சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. ஆங்கோர் வாட் கோவிலில் பெரும்பாலான சிற்பங்கள் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த ஆங்கோர் தாம் கோவிலில்
அனைத்துச் சிலைகளும் மிக பிரம்மாண்டமான சிற்பங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
இங்கேயுள்ள இரண்டாவது வாயில் வழியாக மாடியை
அடைந்தால் பற்பல கோபுரங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் நான்கு முகங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கே நாம் எண்ணற்ற முகங்களைக் காண்கிறோம். அத்தனையும் விநோதமான அழகு!
ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் இந்த முகங்களை எப்படித் தான் வடிவமைத்தார்களோ? இத்தகைய ஒரு கற்பனை வளம் உள்ள அந்த சிற்பிகளின் திறமை குறித்த பிரமிப்பிலிருந்து நம்மால் விடுபட முடியவில்லை.
ஆங்கோர் தாம் கோவிலில் பெண்கள், குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற சிற்பம், போரில் வீழ்ந்திருக்கும் மனிதனை முதலை தன் வாயில் கவ்விப் பிடித்திருக்கும் சிற்பம் போன்றவை சுவர்களில் வடிக்கப்பட் டுள்ளன.
ஆண்கள் வீரர்களாக போரில் ஈடுபட்டிருந்தபடியால், முற்காலத் திலேயே இங்கே பெண்கள்தான் அதிக அளவில் வணிகத் தில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்பதனை இங்கே யுள்ள போர் வீரர்களின் சிற்பங்களைப் பார்க்கும்பொழுது தோன்றுகிறது.
வீரர்களின் போர்க்கால அணிவகுப்பு வடிவமைக்கப்பட்டி ருக்கும் விதம் கண்கொள்ளாக் காட்சி! இந்தக் கோவிலில் ஏழு தலைகள் கொண்ட நாகம் கடலைக் கடைவது போன்ற சிலைகள் நிறைய காணப்படுகின்றன.
ஆங்கோர் கோவில்கள் அனைத்தும் சிமெண்ட் பூச்சு இல்லாமல் சதுர வடிவக் கற்களால் (Blocks) கட்டப்பட்டுள்ளன.
ஆங்கோர் தாம் கோவிலில் பதினாறு வாசல்கள் உள்ளன. அதற்கப்பால் புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப் பட்டுள்ளன. இந்த சிலைகளுக்கு மாலை அணிவித்து, ஊது பத்தி ஏற்றி வைத்து, உண்டியலுடன் சிலர் அமர்ந்துள்ளனர். பார்வையாளர்கள் விரும்பிக் கொடுக்கும் காணிக்கையை ஏற்றுக்கொள்கின்றனர்.
ஆங்கோர் வாட் மற்றும் ஆங்கோர் தாம் கோவில்களின் சிற்பங்களைப் பற்றி அறிந்த நாம், அடுத்ததாக "ட்டா ஃப்ரோம்' (Ta phrohm) எனும் அதிசயத்தைக் காணத் தயாராவோம்.
(தொடரும்)
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.