அண்மைச் செய்திகள்
முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மோதல்! லத்தியால் தாக்கி மண்டை உடைப்பு! || வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை (படங்கள்) || பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்! || மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண் || சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் || அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் || புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் || பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு || அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு || சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர் || இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை || 1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ் || பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி ||
Logo
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
மேஷம்
......................................
சனிப்பெயர்ச்சி பலன்கள்
......................................
கிருஷ்ணரின் முடிவை
......................................
அர்த்தநாரீஸ்வர தத்துவம்!
......................................
ராசிபலன்கள்
......................................
யுகக் யுகமாய்...
......................................
தென்பொதிகையில்...
......................................
நான்மறை ஓதிய...
......................................
அனுமனின் கதையே...
......................................
ஒருத்தி மகனாய்ப் பிறந்து...
......................................
ஆங்கோர் தாம் அதிசயம்!
......................................
முருகனுக்கு மாப்பிள்ளை!
......................................
ஆகஸ்ட் மாத எண்ணியல்
......................................
ஆளவந்தாரா... அருளவந்தாரா?
......................................
எதிர்ப்புகளை விலக்கி ...
......................................
பாரதப் போருக்காக...
......................................
அறம், அரசியல், இறைப்பணி...
......................................
என்றும் வாழும் சித்தர்கள்
......................................
பாசுரம் கேட்டு பக்தவத்சலனை...
......................................

முருகனுக்கு மாப்பிள்ளை!
எம்.எஸ். சுப்பிரமணியம்

         முருகனுக்கு மால்மருகன் என்றொரு திருநாமம் உண்டு. மருகன் என்றால் மாப்பிள்ளை. முருகனே திருமாலுக்கு மாப்பிள்ளை.

அவனுக்கோ தேவியர் இருவர் உண்டு. ஆனால் மக்கள் இல்லையே!

அப்படியிருக்க முருகனுக்கு எப்படி மாப்பிள்ளை வருவான் என்று சிந்திக்கத் தோன்றும். இதற்கு விடையறிய முருகனடியாராகிய முசுகுந்த சக்ரவர்த்தியின் வரலாற்றை அறிய வேண்டும்.  அந்த வரலாறு எங்குள்ளது?

நாயன்மார்களைப் (சிவனடியார்கள்) பற்றி பெரிய புராணம் உள்ளது.

அதுபோல் முருகனடியார்களைப் பற்றி ஒரு புராணம் உள்ளது! அதன் பெயர் சேய்த் தொண்டர் புராணம்.

முருக பக்தருள் சிறந்தவரும் தமிழறிஞருமான செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் அறுபதாண்டுகளுக்குமுன், "முருகன் பன்னிரு திருமுறைகள்' என்று ஒரு தொகுப்பு நூலை வெளியிட்டார். அதில் பன்னிரண்டாவது திருமுறையாக வருவதுதான் சேய்த்தொண்டர் புராணம். சேய் என்பது முருகனைக் குறிப்பது!

முருகன் திருமுறைகள் பன்னிரண்டு.

அருணகிரிநாதர் அறுபடை வீடுகளைப் பாடிய திருப்புகழ் முதல் ஆறு திருமுறைகள். ஏழாம் திருமுறை பொதுவான மற்ற தலங் களைப் பற்றிய திருப்புகழ். திருவாசகத்திற்கு நிகரானவை கந்தர் அலங்காரமும், கந்தர்

அந்தாதியும். இவை இரண்டும் எட்டாம் திரு முறை. கந்தர் அனுபூதி திருமூலரின் திருமந்திரத் திற்கு நிகரானது. எனவே இது ஒன்பதாம் திருமுறை வேல்விருத்தம் முதலியவை பத்தாம் திருமுறை. நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படையும், குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவும் பதினோ ராம் திருமுறை. தேனூர் வரகவி சொக்கலிங்கனார் இயற்றிய சேய்த் தொண்டர் புராணம் பன்னிரண்டாம் திருமுறையாய் அமைந்தது.

இந்த சேய்த் தொண்டர் புராணம் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்துடன் சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. திருத் தொண்டர் புராணத்தில் தில்லை வாழ் அந்தணர் சருக்கம் உள்ளதுபோல் இதில் செந்தில் வாழ் அந்தணர் பெருமை கூறப் பட்டுள்ளது.

சேய்த் தொண்டர் புராணத்தில் இரண்டாவ தாய் வருவது முசுகுந்தன் வரலாறு. உமாமகேசு வரன் கயிலையில் அமர்ந்திருந்தார். அருகே ஒரு வில்வ மரம். அதில் குரங்கு ஒன்று அமர்ந் திருந்தது. குளிர் தாங்காமல் அது இலைகளைப் பறித்துப் போட்டுக் கொண்டேயிருந்தது.

அவை உமையவள் மீதும் சிவன்மீதும் விழுந்தன. சிவராத்திரியன்று இவ்வாறு  செய்த குரங்கை சிவன் அருகில் அழைத்தார். பயந்து போன குரங்கு, ""பெருமானே! அறியாமல் தங்கள்மீது இலைகளைப் போட்டதற்கு மன்னித்து அருள்க'' என்றது.

""எமக்கு உகந்த வில்வதளங்களால் எம்மை அர்ச்சித்திருக்கிறாய். ஆகவே உனக்கு பூவுலகில் அரச பதவி அளிக்கிறோம்'' என்றார் சிவபெருமான்.

""பெருமானே, தங்களைப் பிரிந்து வாழ என்னால் முடியாது. அப்படிப் பிறந்தாலும் தங்களை மறவாதிருக்க இதே குரங்கு முகத்துடன் பிறந்திட அருள்க'' என்றது குரங்கு. சிவபெருமானும் அவ்வாறே அருள் புரிந்தார்.

அரிச்சந்திரனின் உறவு முறையாக- குரங்கு முகத்துடன் சோழ வம்சத்தில் பிறந்தது அந்தக் குரங்கு. முசுகுந்தன் எனப் பெயரிடப்பட்டது. (முசு-குரங்கு). முசுகுந்தன் கருவூரைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டு வந்தான்.

திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம். இதற்கு முதல் அழைப்பே முசுகுந்தனுக்குத்தான் அனுப் பப்பட்டது. திருமணத்தின் போது முசுகுந்தன் அகத்திய ரைச் சந்தித்தான். அவரிடம் சுக்ரவார விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் ஆகியவற்றைக் கேட்டறிந்தான்; அவற்றைக் கடைப்பிடித்து வந்தான். அதனால் மகிழ்ந்த முருகன் முசுகுந்தனுக்கு காட்சி தந்து, ""என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்க, ""தங்கள் படை வீரர்களாகிய வீரபாகு முதலிய ஒன்பதின்மரை எனக்குத் துணையாகத் தந்தருள்க'' என்றான். (நவவீரர்களும் முருகனின் தம்பிகளே.)

முருகனைப் பிரிய மனமில்லாத வீரபாகு முதலியோர் தயங்கினர்; மறுத்தனர்.

""எனது ஆணையை மறுத்ததால் மனிதராய்ப் பிறந்து, சிலகாலம் முசுகுந்தனுக்கு ஏவல் செய்து பிறகு எம்மிடம் வருவீராக'' என்றார் முருகன்.

மனிதராய்ப் பிறந்த வீரபாகு புஷ்பகந்தியை மணந்தார். அவர்களுக்கு சித்திரவல்லி என்ற மகள் பிறந்தாள். அந்தப் பெண்ணை முசுகுந்தனுக்கே மணம் முடித்து வைத்தனர்.

முருகனின் தம்பி வீரபாகுவுக்கு முசுகுந்தன் மருமகன். அப்படியானால் அண்ணன் முருகனுக்கும் முசுகுந்தன் மாப்பிள்ளை தானே!   

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : subramani Date & Time : 8/2/2012 2:18:45 PM
-----------------------------------------------------------------------------------------------------
முருகன் திருமுறைகள் பன்னிரண்டு. முருகனடியார்களைப் பற்றி புராணம் உள்ளது! அதன் பெயர் சேய்த் தொண்டர் புராணம். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் முதல் ஆறு திருமுறைகள். ஏழாம் திருமுறை மற்ற தலங்களைப் பற்றிய திருப்புகழ்.கந்தர் அலங்காரமும், கந்தர் அந்தாதியும் எட்டாம் திரு முறை. கந்தர் அனுபூதி ஒன்பதாம் திருமுறை வேல்விருத்தம் பத்தாம் திருமுறை.திருமுருகாற்றுப்படையும், கந்தர் கலிவெண்பா பதினோ ராம் திருமுறை. சேய்த் தொண்டர் புராணம் பன்னிரண்டாம் திருமுறையாய் அமைந்தது. என்று சேய்த் தொண்டர் புராணம் பற்றி விளக்கமாக வெளியிட்தற்கு பாராட்டுக்கள்.நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------