24/7 செய்திகள்
நக்கீரன் சினிமா
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
முந்தைய செய்திகள்
சுற்றுலா
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
தங்கம் விலை மீண்டும் சரிவு
||
ஜூன் முதல் வாரத்தில் எம்.பி.பி.எஸ் ரேங்க் பட்டியல்
||
டெல்லியில் இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
||
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாமக எம்எல்ஏ குரு மனு
||
காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர்
||
நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு!
||
தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்!
||
போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு
||
ஈரோட்டில் அ.இ.அளவில் ஆண், பெண் கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. ஒன்றரை லட்சம் பரிசு
||
அந்தமான் - நிக்கோபார் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம்
||
எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு!
||
அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள்
||
இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்!
||
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
மேஷம்
......................................
சனிப்பெயர்ச்சி பலன்கள்
......................................
கிருஷ்ணரின் முடிவை
......................................
அர்த்தநாரீஸ்வர தத்துவம்!
......................................
ராசிபலன்கள்
......................................
யுகக் யுகமாய்...
......................................
தென்பொதிகையில்...
......................................
நான்மறை ஓதிய...
......................................
அனுமனின் கதையே...
......................................
ஒருத்தி மகனாய்ப் பிறந்து...
......................................
ஆங்கோர் தாம் அதிசயம்!
......................................
முருகனுக்கு மாப்பிள்ளை!
......................................
ஆகஸ்ட் மாத எண்ணியல்
......................................
ஆளவந்தாரா... அருளவந்தாரா?
......................................
எதிர்ப்புகளை விலக்கி ...
......................................
பாரதப் போருக்காக...
......................................
அறம், அரசியல், இறைப்பணி...
......................................
என்றும் வாழும் சித்தர்கள்
......................................
பாசுரம் கேட்டு பக்தவத்சலனை...
......................................
01-08-12
|
: Email this Article
அ
ண்ணன் சபாபதி, அன்புத் தம்பி ராமலிலிங்கத்தை தான் பயின்ற சபாபதி முதலிலியாரிடமே கல்வி கற்க அனுப்பி வைத்தார். ராமலிலிங்கத்திற்கு முறையான படிப்பில் நாட்டம் தோன்றவில்லை. அண்ணன், "பள்ளி செல்லாத தம்பியை வீட்டில் சேர்க்க வேண்டாம்- சாப்பாடு போட வேண்டாம்' என உத்தரவு போட்டார். கணவனின் உத்தரவு, மைத்துனன் மேல் கொண்ட தாய்ப்பாசம்... ஊசலாடியது அண்ணியின் மனம்.
"அண்ணன் இல்லாத வேளையில் புறக்கடை வழியாக வந்து சாப்பிட்டு விட்டுப் போ' என்று அண்ணி ராமலிங்கத்திடம் கெஞ்சினாள். கொஞ்ச காலம் ராமலிலிங்கத்தின் வயிற்றுப்பசி அப்படி அடங்கியது.
ராமலிலிங்கத்தின் தாயாரின் திவச தினம் வந்தது. எல்லாரும் அறுசுவை உணவுண் டார்கள். ஆனால் அண்ணி சாப்பிட வில்லை. புறக்கடையில் ராமலிலிலிங்கத் தின் வருகைக்காகக் காத்திருந்தாள்...
மாலை நான்கு மணிக்கு புறக்கடை வழியே வந்தார் ராமலிலிங்கம். அண்ணியின் கண்களில் கரகரவெனக் கண்ணீர் வழிந்தது. "என் மகனைப் போன்ற இந்தப் பிள்ளை மாலை நான்கு மணிவரை எதுவும் சாப்பிடாமல் இருக்கிறானே?' கண்ணீரைத் துடைத்துக் கொண்டே யாரும் அறியாமல் மைத்துனனுக்குப் பாசத்தோடு உணவு பரிமாறினார் அண்ணி.
""நீ சாப்பிடவில்லை என்பதால் நானும் பட்டினி கிடந்தேன். நீ என்னைப் பட்டினி போடுவது சரியா? நீ ஏன் பள்ளிக்குப் போவதில்லை? எல்லாரும்போல் இல்லாமல் நீ மட்டும் ஏன் வேறு மாதிரி இருக்கிறாய்? இன்னும் எத்தனை காலத்திற்கு அண்ணன் சொல்வதைக் கேட்காமல் இப்படி என்னைப் பட்டினி போடப் போகிறாய்?''
அண்ணி அழுதவாறே இவ்விதம் புலம்பியதும், ராமலிலிங்கத்தின் மனமும் கசிந்துருகியது. தம் கண்க ளில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட ராமலிலிங்கம் மெல்லிலிய குரலிலில்
சொன்னார்:
""அண்ணி! அண்ணனிடம் சொல்லிலி நம் வீட்டு மாடியில் எனக் கென்று ஒரு தனியறை தரச் சொல்லுங்கள். அதில் நாள் முழுவதும் நான் படிக்கிறேன். நான் திருந்திவிட்டது கண்டு அண்ணனும் மகிழ்ச்சி அடைவார்!''
அண்ணிக்கு அளவற்ற நிறைவு ஏற்பட்டது. "ராமலிலிங்கம் படிக்கிறானோ படிக்கவில்லையோ, அது அண்ணன்- தம்பி பாடு. ஆனால்
ராமலிலிங்கம் நாள்தோறும் வயிறார என் கையால் சாப்பிடுவானே? அதுபோதும் எனக்கு.' இப்படி நினைத்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டாள் அண்ணி.
அண்ணனுக்கும் தம்பிமேல் பாசம் தான். அவன் திருந்தவேண்டும் என்று தானே அண்ணன் சாப்பாடு போடக் கூடாது என்று சொன்னார்? இப்போது அண்ணன் ஏற்றுக்கொண்டபடி மாடியில் ராமலிலிங்கத்திற்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டது.
ராமலிலிங்கம் தனியறையில் மன ஒருமைப்பாட்டுடன் தவம் நிகழ்த்தலானார். ஒரு நிலைக் கண்ணாடி வாங்கி அறைச் சுவரில் ஆணியடித்து மாட்டினார். நாள்தோறும் மலர்மாலை வாங்கி
அந்த நிலைக்கண்ணாடிக்குச் சூட்டினார்.
கதவை உள்புறம் தாளிட்டுக் கொண்டு கண்ணாடியையே பார்த்து தியானம் செய்தவாறிருந்தார். நீண்ட நாள் இவ்விதம் பயிற்சி செய்த போது ஒருநாள் கண்ணாடியில் முருகன் திருவுருவம் தோன்றியது. தமிழ்க் கடவுள் முருகன் அருளால் ஓதாது உணர்ந்த உத்தமரான
அவர் உள்ளத்தில் தானாகவே தமிழ்க் கவிதை பொங்கிப் பெருகத் தொடங்கியது.
ராமலிலிங்கத்தின் அண்ணா சபாபதிப் பிள்ளையின் புராணச் சொற் பொழிவு அந்தக் காலத்தில் சென்னை யில் புகழ்பெற்ற ஒரு நிகழ்ச்சி.
அப்போதெல்லாம் புராணச் சொற்பொழிவுக்கு கையேடு வாசிக்கவென்று ஒரு தனி நபரை அமர்த்திக் கொள்வார்கள். கையேடு வாசிப்பவர் மூல நூலிலிலிலிருந்து புராணச் செய்யுட்களை சொற்பொழிவின் இடை யிடையே ஆங்காங்கே பொருத்தமாக எடுத்துப் படிப்பது வழக்கம். மக்கள் சொற்பொழிவாளரின் வியாக்கியானத்தைக் கேட்பதோடு, மூல நூலிலின் நயமிக்க செய்யுள்களையும் கேட்பார்கள்.
சபாபதிப் பிள்ளையின் சொற்பொழிவில் கையேடு வாசித்து வந்தவர் கணவனை இழந்த ஒரு பெண்மணி. அவர் திரைச் சீலைக்குப் பின்னிருந்து கையேடு வாசிப்பார். ஒருநாள் அந்த
அம்மையாருக்கு உடல் நலம் இல்லாது போயிற்று. புராணச் சொற்பொழிவில் கையேடு வாசிப்பவர் இல்லாவிட்டால் நிகழ்ச்சி சோபிக் காது. இப்போது என்ன செய்வது?
""கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு
அலைகிறீர்களே?''என்று கேட்டாள் ராமலிலிங்கத்தின் அண்ணி.
""அந்த வெண்ணெய்க்கு என்ன பெயர்?'' என்று கேட்டார் சபாபதிப் பிள்ளை. ""ராமலிலிங்கம் என்று பெயர்!'' என நம்பிக்கையோடு சொன்னாள் அண்ணி.
சபாபதிக்கு தயக்கம்தான். பள்ளிக்கே போகாத ராமலிலிங்கம் கையேட்டை ஒழுங்காகப் படிப்பானா? ஆனால் அண்ணியின் பலத்த பரிந்துரை யின் பேரில் அண்ணன் தன் தம்பியைக் கூட்டத்திற்கு அழைத்துப் போனார்.
அன்று அண்ணனுக்கு மட்டு மல்ல; கூட்டத்தினர்க்கே ஆச்சரியம். ராமலிலிங்கம் அவ்வளவு அழகாகக் கையேடு படித்தார். மூல நூலிலின் கவிதைகளை மூல நூலாசிரியர் எந்த உணர்வோடு எழுதியிருப் பாரோ அந்த உணர்வு அவர் படிக்கும் போது அவர் குரலிலில் பொங்கியது.
கேட்டவர்கள் சொக்கினார்கள். சபாபதிப் பிள்ளை அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். அதன்பிறகு தம்பிமேல் அவருக்குச் சற்று மரியாதை தோன்றியது.
அடுத்து விரைவிலேயே இன்னொரு சம்பவமும் நேர்ந்தது. சபாபதி சென்னை முத்தியாலுப் பேட்டையில் ஒரு செல்வந்தர் இல்லத்தில் பெரிய புராணச் சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார். தொடர் சொற்பொழிவு அது. ஒருநாள் சபாபதிக்கு நல்ல காய்ச்சல். சொற்பொழிவுக்குப் போக இயலாத நிலை. ஆனால் மக்கள் வந்து காத்திருப்பார்கள். சொற்பொழிவு செய்யாவிட்டால் ஊதியமும் வராது.
அண்ணன் தம்பியை அழைத்தார். ""அன்று பிரமாதமாகக் கையேடு படித்தாயே? இன்று போய் கொஞ்ச நேரம் சொற்பொழிவு செய்து விட்டு வா. உன்னால் முடியும். போய்வா!'' என்றார்.
ராமலிலிங்கம் செல்வந்தர் இல்லத்திற்குச் சென்றார். மேடையில் அழகிய சிவபெருமான் படம் வைக்கப்பட்டிருந்தது. எல்லாரும் சொற்பொழிவாளருக்காகக் காத்திருந்தார்கள். ஆனால் வந்ததோ சொற்பொழிவாளர் அல்ல. ஒரு சிறுபிள்ளை. பதினைந்து வயதிற்குள்தான் இருக்கும் இந்தப் பிள்ளைக்கு. சரிதான். சொற்பொழிவாளர் வர இயலவில்லை என்ற தகவலைச் சொல்வதற்காக இந்தச் சின்னப் பையனை அனுப்பியிருக்கிறார் போலிருக்கிறது.
பலர் இன்று சொற்பொழிவு இல்லை என்ற கண்ணோட்டத்தில் எழுந்து செல்லத் தலைப் பட்டார்கள்.
ராமலிலிங்கம் மேடையேறினார். சம்மண மிட்டு அமர்ந்தார். அங்கே இருந்த சிவபெருமான் நடனத் திருக்கோலத்தையே சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.
பையன் பேச்சு வராமல் பயந்து விட் டானோ? கூட்டத்தினர் திகைப்போடு
மௌனம் காத்தார்கள்.
சிவனருளை வேண்டி தியானம் செய்த
ராமலிலிங்கம், பக்திப் பரவசம் எய்தினார். தன்னிலை மறந்தார். சிவனது கருணைத் திறம் பற்றி வெள்ளம் போல் பேசலானார். மக்கள் வியந்தும் மெய்ம்மறந்தும் அந்தச் சிறுவனின் சொற்பொழிவைக் கேட்டார்கள். கேட்ட பலரின் கண்களில் பக்திக் கண்ணீர் வழிந்தது.
அன்றைய சொற்பொழிவு முடிந்ததும், மக்கள் கூட்டம் கூட்டமாக ராமலிலிங்கம் என்ற அந்தச் சிறுவனை மொய்த்துக் கொண்டார்கள். தொடர்ந்து அவனே பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
சபாபதிப் பிள்ளையைப் பேச அழைப்பது போல் ராமலிலிங்கத்தையும் தனியே பேச அழைக்க லானார்கள். ராமலிலிங்கத்தின் அற்புதமான சொற்பொழிவாற்றல் பற்றிய செய்திகள் விறுவிறுவெனப் பரவலாயின. அவர் பேசுகிறார் என அறிந்தால் கூட்டம் கூடுதலாகக் கூடத் தொடங்கியது.
இதையெல்லாம் அறிந்து அண்ணனுக்கே ஆச்சரியம். பள்ளிக்குச் செல்லாத ஒருவன் எவ்விதம் பற்பல பாடல் மேற்கோள்களோடு மேடையில் பேச முடியும் என்ற சந்தேகமும் தொடர்ந்து அண்ணனிடம் எழுந்தவாறிருந்தது.
சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள ஒரே வழி- தம்பியின் சொற்பொழிவை ஒருமுறையேனும் நேரில் சென்று கேட்பதுதான். ஒருநாள் கூட்டத்தோடு கூட்டமாகத் தானும் தன் தம்பியின் சொற்பொழிவைக் கேட்கப் போய் அமர்ந்தார் சபாபதி.
அவரால் அவர் கண்களையும் காதுகளை யுமே நம்ப முடியவில்லை. என்ன சொல்லாற்றல்! என்ன அநாயசம்! என்ன பக்திப் பெருக்கு!
அண்ணனின் விழிகளில் கண்ணீர் மல்கியது.
அன்றிரவு சொற்பொழிவு முடிந்ததும் வீட்டுக்கு வந்தார் அண்ணன் சபாபதி. மனைவியை அழைத்தார். ""ராமலிலிங்கம் சாதாரணப் பிள்ளை யல்ல; அவனைக் கண்டித்தேனே'' என்று வருத் தத்தோடு கண்ணைத் துடைத்துக் கொண்டார். அண்ணன் தன் தம்பியைப் புரிந்துகொண்டது பற்றி அண்ணியின் தாயுள்ளம் மகிழ்ச்சி
அடைந்தது.
பதினாறு வயது நிறைந்த வள்ளலார் திருவொற்றியூர் வடிவுடையம்மன் மேல்
அளவற்ற பக்தி செலுத்தத் தொடங்கியது
அந்தக் காலகட்டத்தில்தான். இங்கித மாலை, எழுத்தறியும் பெருமாள் மாலை போன்ற பல நூல்களை அவர் எழுதிக் குவித்ததும்
அப்போதுதான்.
வள்ளலார் எப்போதும் திருவொற்றியூர் தேரடித் தெரு வழியே நடந்து கோவிலுக்குச் செல்வது வழக்கம். அவ்விதம் அவர் செல்லும் போது ஒருநாள் விந்தையான நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
யாரோ அவதூதர் ஒருவர் ஓர் இல்லத்தின் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்தாலே அவர் பெரிய மகான் என்று தெரிந்தது. ஆனால் அவர் யார்- அவர் பெயர் என்ன என்பன போன்ற விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை.
அவர் அந்த வீட்டின் திண்ணையில்
அமர்ந்தவாறு தெருவில் போவோர் வருவோர் பற்றிய தம் அபிப்ராயத்தை உரக்கத் தெரிவித்துக் கொண்டிருந்தார். அவரவர் மன விகாரத்திற்கு ஏற்ப தம் கருத்தைக் கணித்து அவர் சொல்லிலிக் கொண்டிருந்தார். இந்த விளையாட்டை அங்கிருந்தவர்கள் எல்லாரும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நபர் போகும்போது, ""இதோ ஒரு நரி போகிறது!'' என்றார் அவர். இன்னொரு நபர் போகும்போது உற்றுப் பார்த்துவிட்டு, ""ஒரு நாய் போகிறது!'' என்றார்.
இப்படிச் சொல்லிலிக்கொண்டே வந்த அவர் வள்ளலார் செல்வதைப் பார்த்ததும் எழுந்து நின்று, ""இதோ ஓர் உயர்ந்த மனிதர் போகிறார்!'' என்று சொல்லிலி அவரைக் கைகூப்பித் தொழுதார். இதைக் கண்ட பொதுமக்கள் வள்ளலார்மேல் உயர்ந்த மதிப்பைக் கொண்டார்கள்.
அந்த அவதூதர் மறுநாளே அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார். வள்ளலார் வசித்த பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு அவரது பெருமையை அறிவிக்க இறைவனே அந்த
அவதூதரை அனுப்பியது மாதிரி எல்லாரும் உணர்ந்தார்கள்.
ஒருநாள் திருவொற்றியூர்க் கோவிலிலில்
அவரை வழிமறித்தாள் அன்பான ஒரு மூதாட்டி, ""நீ மகான் என்பது எனக்குத் தெரியும். ஏதேனும் ஓர் அற்புதத்தை நீ நிகழ்த்திக் காட்டத்தான் வேண்டும்!'' என்று வற்புறுத்தினாள் அவள்.
அந்த மூதாட்டியின் பாசத்திற்குக் கட்டுப் பட்ட வள்ளலார் கோவிலிலிலிருந்து ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி மூதாட்டியிடம் கொடுத்தார். ""சற்றுநேரம் கையை மூடி வைத்துக் கொண்டிருந்துவிட்டு, பிறகு கையைத் திறந்துபார்'' என்று சொல்லி வள்ளலார் சென்றுவிட்டார்.
சற்றுநேரம் கழித்துத் தன் கையை ஆவலோடு திறந்து பார்த்தாள் அந்த மூதாட்டி. என்ன ஆச்சரியம். மணல் முழுவதும் சின்னச்
சின்னச் சிவலிலிங்கங்களாக மாறியிருந்தது! ஓடிவந்து மூதாட்டியின் கையைப் பார்த்த எல்லாரும் "சிவ சிவ' என வள்ளலாரை
நினைத்து இருகரம் கூப்பித் தொழுதார்கள்.
ஆனால், சில நாட்களிலேயே ஒரு பெரிய நாகப்பாம்பு சீறிக்கொண்டு வந்து வள்ளலாரின் காலைச் சுற்றப் போகிறது என்பதை ஊரார் யாரும் அப்போது அறியவில்லை.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
கருத்துக்கள்(2)
Name
:
N SUBRAMANIAN
Date & Time
:
8/21/2012 2:40:54 PM
-----------------------------------------------------------------------------------------------------
தயவுசெய்து தொடர்ந்து வள்ளலர் பற்றி எழுதவும்.நன்றி.வணக்கம்.
-----------------------------------------------------------------------------------------------------
Name
:
subramani
Date & Time
:
8/2/2012 2:18:45 PM
-----------------------------------------------------------------------------------------------------
'' சிவனது கருணைத் திறம் பற்றி வெள்ளம் போல் பேசலானார். மக்கள் வியந்தும் மெய்ம்மறந்தும் அந்தச் சிறுவனின் சொற்பொழிவைக் கேட்டார்கள். கேட்ட பலரின் கண்களில் பக்திக் கண்ணீர் வழிந்தது '' என்ற வரிகள் உண்மை.உணர்ந்தவர்களுக்கு புரியும்.வள்ளல் இராமலிங்கசுவாமிகளின் வரலாற்றை தொடர்ந்து வெளியிடவும். நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.