அண்மைச் செய்திகள்
பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி || ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு || ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரிசெல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்:டெல்லி போலீஸ் ||
Logo



திரைப்பட இயக்குநர் "கண்ணெதிரே தோன்றினாள்' ரவிச்சந்திரன்

15-05-2002

மழை, இரவு முழுவதும் அடித்துப் பெய்திருந்தது. திரைச் சீலை விலக்கி ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். பிளாட்டைச் சுற்றி அங்கங்கே தண்ணீர்.

கண்ணாடிகளை தரை ஏந்தி யிருந்தது.

காலை நேர வெயிலைக் களவாடியிருந்தது வானிலை.

இனமறியாத சோகம் அவன் மனதை சூழ்ந்துகொண்டது.

அலுவலக வேலைகள் காத்திருக் கின்றன என்றபோதும், மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. ஏ.ஆர். ரஹ்மான் நெஞ்சுக்குள் உட்கார்ந்து சோகமயமாய் கஜல் பாடி, மனத்தவிப்பை அதிகரித்தார்.

அவனுக்கு அமுதாவைப் பார்க்கவேண்டும் போலிருந்தது. கூடவே அவளையும். சரி,

அலுவலகத்தை கொஞ்சம் தள்ளிப்போட்டுவிடலாம் என்றபடி வீட்டிலிருந்த கிஃப்ட் பார்சலை எடுத்துக்கொண்டு மாடிப்படி களில் தடதடத்து இறங்கினான். வீட்டு முகப்பில் நின்ற மரங்களில் இருந்து மழைநீர், கண்ணீர் சொட்டுக்களைப்போல் விட்டு விட்டு உதிர்ந்துகொண்டிருந்தது.

போர்டிகோவில் சாதுவாக தியானம் பண்ணிக்கொண்டிருந்த தனது டொயோட்டாவில் ஏறி உட்கார்ந்தான். அதன் தியானத் தை ஆக்ஸிலேட்டரால் கலைத்து, அதற்கு உயிர்கொடுத்து நகர்த்தி னான். சாலையில் விர்ரித்தான். கார், சென்னையின் போக்குவரத்து இடைஞ்சல்களை அனாயசமாய்க் கடந்து  அண்ணாநகரில் இருக்கும் ஸீபிராஸ் அபார்ட்மெண்ட் வளாகத்திற்குள் நுழைந்தது. காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு லிஃப்ட் பகுதிக்கு வந்தான். லிஃப்ட்டுக்குள் புகுந்து நான்கை அழுத்தினான். அப்போதுதான் லிஃப்டில் புகுந்திருந்த அந்த மலையாள சகீலாவைக் கவனித்தான். தன் கனதனமான தேகத்தை வைத்துக்கொண்டு உதட்டு ஓரத்தில் நாணப் புன்னகையைத் தவழவிட்டுக் கொண்டிருந்தாள் அம்மணி. இதையெல்லாம் ரசிக்க அவனுக்கு நேரம் ஏது? ஃபோர்த் ஃபுளோரில் கால் வைத்த அவன், சரசரவென இடது வலதாகத் திரும்பி 37-ஆம் இலக்க பிளாட்முன் நின்றான். மனம் கனத்துப்போய் இருந்தது. மனதில் மொய்க்கத் தொடங்கிய பழைய நினைவுகளைப் புறந்தள்ளியபடி, அழைப்பு மணிப் பொத்தானை அழுத்தினான்.

     
                       www.haihoi.com               
உள்ளே ஒருசில நொடி சலனங்கள் தென்பட்ட பின்னணியில், ""யாரு?'' என்ற பெண் குரலோடு கதவு படீரென்று திறந்தது. கதவு திறந்த வேகத்திலேயே
அவன், அவள்தான் என்று புரிந்துகொண்டான்.

தாட்டியாக, அழகாக, சிவப்பாக, நைட்டியில் காட்சி தந்த அந்த 28 வயதுப் பெண்மணி,

அவனைக் கண்டதும் மெல்லிய திகைப்பு காட்டினாள். புன்னகைக்கு  தடா போட்டு உதட்டில் இறுக்கத்தை வரவழைத்துக்கொண்டாள். கண்களில் திடீர் வில்லத்தனத்தை முளைக்க வைத்துக்கொண்டு, ""என்ன?'' என்றாள். அதில் அதீத செயற்கைத் தனமும் அந்நியத்தனமும் தெரிந்தது.

""அமுதா இல்லையா?'' என்றான் தயக்கத்தோடு.

""அமுதாதான் வேணுமா. வெயிட் பண்ணுங்க. குளிச்சிக்கிட்டு இருக்கா. உள்ளே வந்து உட்காருங்க'' என்றாள் வேண்டா வெறுப்பாக.  ""பரவால்ல. வாசல்லயே வெயிட் பண்றேன்'' என்றான்.

அப்போது அவனது பேஜரில் வந்த நண்பன் பாஸ்கரன், "ஆபீஸில் காத்திருக்கிறேன்' என்று மெசேஜினான். அதைப் பார்த்த அவன், தான் கொண்டு வந்த சாக்லெட் பாக்கெட் உள்ளிட்ட கிஃப்ட் பேக்கட்டை வீட்டு முகப்பில் வைத்து விட்டு, "செல்லமே, அப்புறம் வந்து உங்களை அப்பா சந்திக்கிறேண்டா' என்று முனகியபடி விடுவிடுவென லிஃப்ட் மூலம் தரைத்தளத்திற்கு இறங்கினான்.

அவன் வராந்தாவில் கால் வைத்தபோது

அவன்மீது சாக்லெட் மழை பெய்தது. நிமிர்ந்தான். அங்கே 12 வயது துருதுரு மகள் அமுதா... ""என்ன  டாடி கிளம்பீட்டிங்களா? அடுத்து எப்ப வருவீங்க?'' என்றபடி கைகளை ஆர்வமாக அசைத்தாள்.

""அடுத்த வாரம் வர்றேண்டா செல்லம்'' என்று கீழேயிருந்து உற்சாகமாகக் கூவியவன், மனதைக் கல்லாக்கிக்கொண்டு காரை நோக்கி நடந்தான்.

20-02-2010

இன்று ஓய்வு நாள். கடல் போன்ற வீடு.

ஆனால் புழங்கத்தான் ஆட்கள் இல்லை. நண்பர்களை சந்திக்கலாமென்று மருதவாணன், பாஸ்கரன், ஜெயகாந்தன், அசோக், பாபு, வின்சென்ட், தென்றல் சேகர், குபேந்திரன் என பலருக்கும் போன்போட்டுப் பார்த்தான்.

அவரவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்தனர். இனிமையாய் நேரத்தைக் கரைக்க ஒரு மெஷின் இல்லையே  என்று கவலைப்பட்டான். ஓட்டலில் வாங்கி வந்த மட்டன், சிக்கன், ஃபிஷ் ஃப்ரை போன்ற ஐட்டங்களைப் பிரித்து டைனிங் டேபிளில் பரப்பினான். பிரிட்ஜில் இருந்த பழங் களை எடுத்து தட்டில் அரிந்து வைத்தான். பின் நிதானமாக மது பாட்டிலைத் திறந்து கண்ணாடிக் கிண்ணத்தில் சரித்தான்.

தனியாகத் தண்ணியடிப்பது ஒருவகை ஒழுங்கு மீறல் என்பதுபோல அவனுக்குப் பட்டது. தனியாக அவன் இப்படி மது புட்டிக்கு முன் அமர்ந்தது இல்லை. அமராவதிதான் அவனை இப்படி அமரவைத்து விட்டாள்.

அமராவதி 26 வயதுப் புயல். அலுவலகத் தோழி. ராவ்ஜி சமூகத்துக்கே உரிய வெள்ளை வெளேர் நிறம். கணவனுடன் விவாகரத்தானவள். சில நாட்களாய் சம்பந்தா சம்பந்தமில்லாமல் சிரிப்பதும் பேசுவதுமாக இருந்தவள், நேற்று மாலை மனதை உடைத்துச் சொல்லிவிட்டாள்.

     
"சார், நீங்களும் இல்லற வாழ்க்கையில் தோற்றவர். நானும் அதில் தோற்றவள். நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஏன் வாழ்க்கையில் ஜெயிக்கக்கூடாது?' என்று சந்தடிசாக்கில் கேட்டு மனதிற்குள் ஒரு மாயச் சூறாவளியை ஏற்படுத்திவிட்டாள். அவள் அழகானவள் என்பதில் சந்தேகமில்லை. அன்பும் பண்பும் நிறைந்தவள் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. அவளைப் பார்த்து அலுவலகத்து ஆண்கள் பலரும் ஏக்கப் பெருமூச்சு விடுவதும் அவனுக்குத் தெரியும். ரவிவர்மாவின் நேர்த்தியான ஓவியம்போல இருக்கும் அவளுக்கு என் மீது இப்படி ஒரு எண்ணம் எப்படி முளைத்தது? என திகைத்த அவன், அந்த அமராவதி யிடமே நேரடியாக தன் எண்ணத்தைச் சொல்லிவிட்டான். "மேடம், உங்க அன்புக்கும் பரிவுக்கும் நன்றி. அதேசமயம் நானும் என் மனைவியும் பிரிஞ்சி வாழலாம். அதனாலேயே நாங்க எங்க வாழ்க்கையில் தோற்றதா அர்த்தமாகாது. நானும் அவளை மறக் கலை. அவளும் என்னை மறக்கலை. நாங்க பிரிஞ்சி இருப்பதற்குக் காரணமே எங்கள்மீது நாங்க வைத்தி ருக்கும் அடர்ந்த காதல்தான். எனக்கும் அவளுக்கும் மத்தியில் என் நண்பர்கள்கூட வரக் கூடாதுன்னு நினைக்கிறவ அவ. அவளுக்கு நான் மட்டும்தான் வேணும். ஆனா அவளை நேசிக்கும் எனக்கு, என் நண்பர்கள், உறவினர்கள், என் தொழில்னு எல்லாமே தேவை. இதில்தான் எங்களுக்குள் கருத்து வேறுபாடு. என்னை மட்டுமே யாசிக்கும் அவளை மறந்துட்டு எப்படி இன்னொரு பெண்ணோடு நான் வாழ்றது? எங்க ரெண்டு பேரின் காதல் சின்னமா, ஒரு தசைத் தாஜ்மஹாலா எங்க மகள் அமுதா கிடுகிடுன்னு வளர்ந்து நிக்கிறா. இந்த நிலையில் நான் எதை யோசிக்க முடியும்? சொல்லுங்க?' என்றான். அமராவதி குபீரென உடைத்துக்கொண்டு வந்த அழுகையோடு எழுந்து பாத்ரூம் போனாள். அரைமணி நேரம் கழித்து முகம் கழுவி பவுடர் பூசி அவன் முன்வந்து எதுவுமே நடக்காததுபோல் புன்னகைத்தாள். வலித் தாலும் மனம் இதத்தை உணர்ந்தது. அப்பாடா, ஒரு இனிய விபத்திலிருந்து தப்பித்தாகி விட்டது.


முதல் பெக் அடிக்கும்போதே செல்போன் சிணுங்கியது.

"அட! எதிர்முனையில் என் செல்லக்குட்டி அமுதா.'

""அப்பா எப்படி இருக்கீங்க? சாப்பிட்டீங்களா? அம்மா பாவம்ப்பா. எப்ப பார்த்தாலும் உங்க கல்யாண போட்டோவை எனக்குத் தெரியாம நெஞ்சில் அணைச்சிக்கிட்டு கண்ணீர் விடறாங்க. இவ்ளோ அன்பு வச்சிருக்கும் உங்களுக்கும் அவங்களுக்கும் என்னப்பா பிரச்சினை? ரெண்டு பேரின் அன்பு மழையிலும் நனையும் பாக்கியம் எனக்கு மட்டும் ஏன் இல்லைப்பா?'' என்றாள் கண்ணீர் கரித்த குரலில்.

""அம்மா என் உயிர்டா செல்லம். ஆனா சின்னச் சின்ன சுவர்கள் எங்களுக்கிடையில் முளைச்சிடிச்சி. அப்பாவுக்கு நிறைய நண்பர்கள். அதிலும் உண்மை யான நண்பர்கள். அப்பா இன்னைக்கும் வாழ்க்கையில் சரியா போய்க்கிட்டிருக்கேன்னா அதுக்குக் காரணம் என் நண்பர்கள்தான். அவங்கதான் என் பிளாட்பாரம். அவங்கதான் நான் ததும்பாதவாறு காத்த என் கரைகள். நானும் அம்மாவும் காதலிச்சப்ப எங்க ரெண்டு வீடுமே கடுமையா எதிர்த்தது. அப்ப எங்களுக்கு ஆறுதலாவும் அரணாவும் இருந்து எங்களுக்குக் கல்யாணம் பண்ணிவச்சதே என் நண்பர் கள்தான். எனக்கும் எங்க அப்பா, அம்மாவுக்கும் இடையில் கோபதாபம் வந்தப்பக்கூட, என் நண்பர் கள்தான் எங்களுக்கிடையே மீடியேட்டர்களா இருந்து உறவு கெடாம பார்த்துக்கிட்டாங்க. அப்படிப்பட்ட நண்பர்களை ஓரம் கட்டிட்டு என்னோடயே 24 மணி நேரமும் இருங்கன்னு அம்மா சொல்றா. அம்மா சொல்றதில் பிரதான காதல் இருந்தாலும், எப்படிம்மா நண்பர்களை ஒதுக்க முடியும்? ஒரு மோசமான நாளில், நான் கோபத்தில், "என் நண்பர்கள் வேண்டாம்ன்னு சொல்ற நீயே எனக்கு வேண்டாம்'னு  அவ கன்னத்தில்  ஒரு அறைவிட்டேன். என்னிடமிருந்து இப்படி யொரு மூர்க்கத்தை அவ எதிர்பார்க்கலை. இதை உடனே பேசித் தீர்த்திருக்கலாம். ஆனா உங்க அம்மா உடனே கோபமா போய் டைவர்ஸ் அப்ளி கேஷனை எனக்கு அனுப்பிட்டா. சரி. என்னைப் பொறுத்தவரை அம்மா நல்லவ. அவ என்மேல அதீதமா வச்சிருக்கும் காதலால்தான்  வெறுக்கிறா. அதனால தான் சொல்றேன். நீ எந்த நேரத்திலும் அவளை மதிப்புக் குறைவா நடத்தக்கூடாது. எனக்கு ஒண்ணுன்னா அவ இருக்கமாட்டா. நானும் அப்படித் தாண்டா'' என்றவன் வெட்கத்தைவிட்டு மகளிடம் தேம்பினான். எதிர் முனைக் குரலின் கண்ணீரை அவன் அறிந்திருக்க நியாயம் இல்லை.

14-11-2011

காலிங் பெல் அழுத்தினான்.

கதவு திறந்த அவள், ஒரு கணம் சங்கோஜமடைந்து பார்வையாலே "என்ன?' என்றாள்.

""அமுதாவை வெளியே கூட்டிட்டுப்போக ஆசைப் படுறேன். அனுப்ப முடியுமா?'' என்றான் தயக்கமாய்.

""இதை எங்கிட்ட ஏன் கேட்கறீங்க. அவ உங்க பொண்ணுதானே. விருப்பப்படும்போதெல்லாம் நீங்க அழைச்சிக்கிட்டுப் போகலாம்'' என்றாள் எங்கோ பார்த்தபடி.

""தேங்ஸ்'' என்றவன், வாசலில் நின்றபடியே, ""செல்லம் அமுதாம்மா கிளம்பிட்டியா...'' என்றான் உற்சாகமாக.

""ஹாய்... அப்பா வந்துட்டீங்களா? தோ ரெண்டே நிமிஷம்'' என்ற குரல் உள்ளே இருந்து வெளியே சங்கீதமாய் வந்தது.

""ஏன், உள்ளே வந்து உட்கார்றதுதானே. சொந்த வீட்ல எதுக்கு அந்நிய வேஷம்'' என்று முனகினாள் அவள். ரொம்ப நாளைக்குப்பின் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் அவன். அவள் கண்கள் கலங்கியிருந்தது. தலையில் இரண்டொரு முடிகள் நரைத்துக் காணப்பட்டன.

"இல்லறத்தில் இவ்வளவு நீண்ட இடைவெளியா' என மனதிற்குள் துணுக்குற்றான். அவளை வாஞ்சை யாய் அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. மனதை அடக்கிக்கொண்டு வாசலிலேயே காத்திருந்தான்.

அடுத்த சில நொடிகளில் ""ஹாய் அப்பா'' என்றபடி துள்ளிக் குதித்து வந்த அமுதா, அவனின் பருத்த வயிற்றோடு அவனைக் கட்டியணைத்தாள்.

""வாடா செல்லம்'' என்றபடி மகளோடு நடந்து லிஃப்ட்டில் இறங்கி காரில் ஏறினான். கார் பெசன்ட் நகர் பீச்சுக்குப் போனது.

அலைகள் சடுகுடு ஆடிக்கொண்டிருக்க, கடற்காற்று தலைக்கேசம் கலைத்து விளையாடியது. அவன் மௌனம் கலைத்தான். ""சொல்றா. ஏதோ மனம் விட்டுப் பேசணும்ன்னு சொன்னியே, சொல்லு'' என்றான்.

அமுதா, அப்பாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி, ""அப்பா, நான் சொல்றதைத் தப்பா புரிஞ் சிக்காதீங்க.'' அவள் கண்களில் கெஞ்சல் இருந்தது.

""நீ எம்பொண்ணு. தப்பா எதையும் யோசிக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். சொல்லு.''

""அப்பா, கௌதமன்னு ஒரு ஃபிரண்ட்ப்பா. அவர் எங்கிட்ட லவ்வ ப்ரப்போஸ் பண்றார்ப்பா. எனக்கு என்ன முடிவெடுக்கறதுன்னு தெரியலை. அதான் உங்களைக் கூப்பிட்டேன்'' என்றாள் தயக்கமே இல்லாமல்.

அவன் ஒரு கணம் நிலைகுலைந்தான். என்ன பதில் சொல்வது என்று திகைத்தான்.

தன்னை நீதிமன்றமாக்கும் மகளுக்கு என்ன தீர்ப்பு கூறுவது என்று தெரியாமல் ஒரு கணம் ஊசலாடினான்.

சட்டென தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டு,

""உனக்கு அவனை, சாரி அவரைப் பிடிச்சிருக்கா?'' என்றான்.

""தெரியலையேப்பா'' என்ற மகளை அணைத்துக் கொண்டான். அவனுக்கு அழுகை வந்தது.

""அம்மாடி, தைரியமா இரு. அவர் நல்லவரா'' என்றான்.

""நல்லவர்தாம்ப்பா'' என்றாள் அவள்.

""அப்புறம் என்ன? முடிச்சிடலாம்'' என்றான்.

அவளோ, ""அம்மாவுக்குதான் பயமாருக்குப்பா. நீங்க அம்மாக்கிட்ட பேசினா ஒத்துக்குவாங்கப்பா'' என்றாள் கெஞ்சலாய்.

""அம்மாகிட்டவா? நான் பேசினா அம்மா எப்படி ஒத்துக்கும்?'' என்றான் திகைப்பாய்.

அவளோ, ""அப்பா, உங்க நினைப்புதான் அம்மா வுக்கு சுவாசம். நீங்க சொல்ற வார்த்தை அவங்களுக்கு வேதம். எல்லாம் எனக்குத் தெரியும்ப்பா'' என்றாள்.

வெலவெலத்துப் போனான். அவளை இப்போதே பார்க்கவேண்டும் போலிருந்தது. அவள் மடியில் படுத்துக் கதறவேண்டும் போலிருந்தது. எனினும்
அவனது தன்மானம் அவனை உறுதியாகவே வைத்துக்கொண்டது.

அந்த நிமிடமே மகள் அமுதா, செல்போன் போட்டுக்கொடுக்க, ""நாந்தான் பேசறேன். மகளுக்கு திருமணம் பண்ணவேண்டிய வயசாச்சுதே'' என்றான். தொண்டை கமறியது. அவளோ, ""நம்மைப்போல காதல் மயக்கத்தில் மூழ்கி நம்ம பெண்ணும் தன் வாழ்க்கையைக் கெடுத்துக்காம இருப்பதே சந்தோஷம். அப்பாவான நீங்களே உங்க பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையா பாருங்க'' என்றாள். சொல்லும்போதே அவள் குரலில் அழுகை தொனி தெரிந்தது. மகளை உற்சாகத்தோடு ஃப்ளாட் வாசலில் இறக்கிவிட்டான்.

சுமாரான ஏழெட்டு ஆண்களின் படத்தையும் ஜாதகத்தையும் தேடிப்பிடித்து, அதற்கிடையே அந்த கௌதமின் ஜாதகத்தையும் புகைப்படத்தையும் இணைத்து அவளுக்கு அனுப்பினான். அவளோ இருப்பதிலேயே கௌதமின் ஜாதகமும் படமும்தான் பொருத்தமாக இருக்கிறது என்று தகவல் கொடுக்க, உற்சாகமானான். திடீரென அவனுக்கும் அவளுக்கும் இடையில் இருந்த தடைச்சுவர்களை ஒரு "கிக்' இரவில் உடைத்தவனாய் செல்போன் மூலம் அவள் காதில் ""மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்காடா?'' என அவன் கேட்டபோது அவளிடமிருந்து பதில் வர வில்லை. அழுகைதான் வந்தது. பின் ""உங்கள் பாடு உங்கள் மகள் பாடு'' என்ற பதில் வந்தது. ""இன்னும் உன்னை நேசிக்கிறேன்டா  செல்லம். முன்பைவிட பலமடங்காய். நான் சாகறதுக்குள் மீண்டும் உன் காதல் ராஜாங்கத்தை ஒரு நாளாவது முழுமையாக ஆண்டுவிட வேண்டும். பளீஸ் ப்ளீஸ்...'' என ஏதேதோ உளறிக்கொட்டினான். எதிர்முனை அதனை நெகிழ்ச்சி யாய் கேட்டது. சம்மதத்தை மௌனத்தின் மூலம் உணர்த்தியது.

அமுதாவுக்கும் கௌதமுக்கும் இனிதே திருமணம் நடந்தது. திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்ட வி.ஐ.பிக்கள் பலரும் திருமணத்தில் ஆஜராக, அவனும் அவளும் நெகிழ்ந்து போனார்கள்.

அவனுக்கும் அவளுக்கும் திருமணம் நடந்தபோது மண்டபத்தில் திருமண வேலைகளை இழுத்துப் போட்டு செய்த அவனது நண்பர்களே, அமுதாவின் திருமணத்தையும் தூக்கிச் சுமந்தார்கள். அவள் அந்த நண்பர்களைத் தேடிப்போய், ஒவ்வொருவரிடமும் ""எப்படி இருக்கீங்கண்ணே? ஹைய்யோ! உங்களை யெல்லாம் பார்த்து எத்தனை வருஷமாச்சு?'' என விசாரிக்க, அவன் மனம் குதூகலமடைந்தது. மண்டபத்தில் அவனும் அவளும் சந்திக்க நேர்ந்த போதெல்லாம் இருவரும் உணர்ச்சிவசப்பட்டனர்.

திருமணம் முடிந்த அன்றே மணமக்கள் இரவு பெங்களூர் புறப்பட்டனர். வழியனுப்பிவிட்டு மண்டப வாசலுக்கு வந்தவன் அவளைப் பார்த்தான். ""நீ இன்னும் போகலையா? வண்டி ஏற்பாடு பண்ணட்டுமா?'' என்றான் ஒருவித பரிதவிப்போடு. ""ஏன் நீங்க வீட்டில் கொண்டுவந்து விடமாட்டீங்களா?'' என்றாள் எதிர்பார்ப்போடு. ""சரி வா'' என அவளை அழைத்து பின் கதவைத் திறந்துவிட, அவளோ ஒன்றும் அறியாதவளைப்போல் முன்சீட்டில் ஏறி உட்கார்ந்துகொண்டாள். அவளை ஜாடையாகப் பார்த்துக்கொண்டே டிரைவினான். அவளும் அப்ப டியே. "ஸீபிராஸ்' அபார்ட்மெண்ட் முகப்புக்கு வந்தவன், காரை நிறுத்தி ""இறங்கிக்க'' என்றான்.

அவளோ ஒருசில நிமிட மௌனத்திற்கு பின், ""நீங்க அபார்ட்மெண்ட்டுக்கு வரமாட்டீங்களா?'' என்றாள். அவள் விழிகள் பளபளத்தன.

""நீ வீட்டுக்குப்போ. நம்ம கல்யாணத்துக்கு ஓடியாடிய நண்பர்கள், நம்ம பொண்ணு கல்யாணத் துக்கும் இன்னைக்கு உழைச்சிருக்காங்க. அவங்க ளோடு இன்னைக்கு நான் இருக்கணும். அவங்களை நான் கவனிக்கணும். அதனால்'' என்றான். அவளோ, ""அவங்க உங்க நண்பர்கள் மட்டும்தானா? எனக்கும் சகோதரர்கள். என்னையும் அவங்கக்கிட்ட அழைச் சிக்கிட்டுப் போங்க. அவங்களுக்கு நானும் நன்றி சொல்லணும்'' என்றபடி அவன் தோளிள் சாய்ந்தாள்.

சந்தோஷத்தில் திளைத்த அவன், ""என் செல்லமே.. என் உயிரே நீதான்'' என்றான். இத்தனை வருடங்களாய் மயக்கத்தில் இருந்த அவர்களின் காதல், குபீரென உயிர்த்தெழுந்தது புத்தம்புதிதாய். அவனும் அவளும் நெடுநேரம் தழுவல் சிலைகளாய் உட்கார்ந்திருந்தனர். அவன் தனக்குள் "நீ ஒரு காதல் சங்கீதம்' பாடினான். அவர்களின் வாழ்க்கை பௌர்ணமியாய் மலரத் தொடங்கவிட்டது.

(இன்னும் என்ன? அவர் களை அவர்கள் போக்கில் சுதந்திரமாக விட்டுவிட்டு நாம் புறப்படலாம்.)


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :