அண்மைச் செய்திகள்
சென்னை : கல்லூரியில் தீ விபத்து || யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி || பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல் || விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு || ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது || காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி || உயிரிழந்த மின்சார ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி || ஐ.பி.எல்., சூதாட்டம்: குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை || பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர் || ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர் || சென்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் புழல் சிறையில் அடைப்பு || கிரிக்கெட் சூதாட்டம்: சிக்கும் தமிழ் நடிகைகள் || பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வீட்டில் சோதனை ||
Logo
ஓம்
தென்பொதிகையில்...
......................................
ஜூலை மாத...
......................................
யோகிகள் கூடும் சக்தி
......................................
அனுமனின் கதையே...
......................................
ஜூலை மாத எண்ணியல்...
......................................
கயிலைபோல் ரிபகாசிக்கும்
......................................
நீதியை நிலைநாட்டு...
......................................
ஆடி மாதம்...
......................................
குறையெலாம் தீர்க்கும்
......................................
வராத கடனையும்...
......................................
16 வகை நோய்களை...
......................................
ஈசனின் இணையடி...
......................................
வடிவுடை நாயகியே
......................................
சித்தம் கலங்காத வித்தகன்!
......................................
தர்மம் எங்கே வெற்றி எங்கே!
......................................
குடும்பத்தை தழைக்கச் செய்யும் ஆடி மாத நீத்தார் கடன்!
......................................
ஆண்டவனின் அரண்மனை...
......................................

ஜூலை மாத ராசிபலன்
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்


மேஷம்

இந்த மாதம் கோட்சார கிரக நிலைகள் உங்களுக்கு மிகவும் அனுகூலமாக அமைவதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்; கருதிய காரியங்கள் கைகூடும்; திட்டங்கள் வெற்றியடையும். 2-ல் குரு. பொருளாதாரத்திலும் நிறைவு, நிம்மதி, மகிழ்ச்சி உண்டாகும். 6-ல் உள்ள சனி கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி, போட்டி, பொறாமைகள் நிவர்த்தி ஆகிய பலனைத் தரும். 3-ஆம் இடம் சகோதர ஸ்தானத் தைப் பார்ப்பதால், உடன்பிறப்புகள் வகையிலோ அல்லது தாயார் வகையிலோ எதிர்பாராத வைத்தியச் செலவுகளை ஏற்படுத்தலாம். என்றாலும் சனியை குரு பார்ப்பதால் மலையென வரும் துன்பம் பனியென விலகும். சிலருக்கு தெய்வ ஸ்தல யாத்திரையும் தரிசனமும் ஏற்படலாம். தெய்வ பிரார்த்தனைகளும் நிறைவேறும். சொத்துகள் அல்லது தொழில் துறையில் புதிய முதலீடுகள் செய்யலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியில் குருவும் கேதுவும் நிற்க, 7-ஆம் இடத்தில் ராகு நிற்க, அவரை சனி பார்ப்பதால் கணவன்- மனைவிக்குள் சிலசமயம் கருத்து வேறுபாடுகளும் உடன்பாடு இல்லா நிலையும் உருவாகும். 5-ல் உள்ள சனியை குரு பார்ப்பதால் நிவர்த்தியும் உண்டாகும். ஊடல் இருந்தால்தான் தேடல் இருக்கும்; வாடல் மறையும்; கூடல் மகிழ்ச்சி தரும். பிள்ளைகள் வகையில் அன்புத் தொல்லைகளும் இருக்கும். வம்புப் பிரச்சினைகளும் இருக்கும். தொழில் நிறைவாகவும் நிம்மதியாகவும் இருந்தாலும், வருமானம் குறையாமல் வந்தாலும், சேமிப்புக்கு இடமிருக்காது. ஆயிரம் வந்தாலும் செலவு; ஐயாயிரம் வந்தாலும் செலவு. அப்படி வரும் செலவுகளை சுபச்செலவுகளாக அமைத்துக் கொள்வதுதான் உங்களுடைய சாமர்த்தியம். 2012- செப்டம்பருக்குள் சுபமுதலீடு செய்துகொள்வது நல்லது. இல்லாவிட்டாலும் தேவையற்ற செலவுகள் அல்லது வைத்தியச் செலவுகள் வந்துவிடும். அல்லது பழகியவர்களும் தட்ட முடியாதவர்களும் கைமாற்றுக் கடன் வாங்கி திருப்பித் தராமல் போய்விடுவார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்கு 4-ல் உள்ள சனி 10-ஆம் இடத்தையும் ஜென்ம ராசியையும் பார்ப்பதால், உங்கள் முயற்சிகள் வளர்ச்சியடையும். தளர்ச்சியில்லாத உழைப்பு உயர்வு தரும். 9-க்குடைய சனியை 10-க்குடைய குரு பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அதனால் 10-க்குடைய குரு 12-ல் மறைந்தாலும் தொழில் துறையில் கேடு கெடுதிக்கு  இடமில்லை. அதேபோல உத்தியோகத் துறையிலும் பாதிப்புக்கு இடம் வராது. ஆனால் தொழில் ஸ்தானாதிபதி குரு 10-ஆம் இடத்துக்கு 3-ல்,
ஜென்ம ராசிக்கு 12-ல் மறைவதால் சிலருக்கு (அரசு ஊழியருக்கு) உத்தியோக மாற்றம் ஏற்படலாம். அல்லது குடியிருப்பு மாற்றம் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் சிலரின் ஆரோக்கியம் பாதிக்கலாம். அறுவை சிகிச்சைக்கும் இடமுண்டு. அப்படிப்பட்டவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வைத்தியநாதர், தையல்நாயகியம்மன், தன்வந்திரி பகவானை வழிபட்டால் ஆபரேஷனைத் தவிர்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்கு  11-ல் குரு இருப்பதும் 3-ல் சனி நிற்பதும் சிறப்பு. குருவும் கேதுவும் ராகுவும் சம்பந்தப்படுவதால், ஒருசிலருக்கு எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்கவில்லை என்ற மாதிரி சில ஏமாற்றங்கள் ஏற்படலாம். அந்த ஏமாற்றம் எதிர்பார்த்த பண உதவி அல்லது எதிர்பார்த்த தொழில்வாய்ப்பு அல்லது எதிர்பார்த்த திருமண வாய்ப்பு போன்றவற்றில் அமையலாம். வேறு சிலருக்கு வெளிநாட்டுப் பயண வாய்ப்பு தள்ளிப்போகலாம். ஒருசிலருக்கு கூட இருப்பவர்களே மறைமுகமாக கெடுதல் செய்யலாம். ஆனால் எது நடந்தாலும் அது ஒரு நன்மைக்கே என்று ஆறுதல் அடைய வேண்டும். "நண்பன்' திரைப்படத்தில் "ஆல் இஸ் வெல்' என்று சொல்லுவதுபோல் தேற்றிக்கொண்டால் எல்லாம் நன்மையாகவே முடியும். "நல்லதே நினை- நல்லதே நடக்கும்' என்ற தத்துவம் இதுதான். அதுமட்டுமல்ல; ஒரு கதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு செப்டம்பர் வரை மீண்டும் ஏழரைச் சனி- வக்ரச் சனியாக நடக்கிறது. இது விட்ட குறை தொட்ட குறை. 2009 முதல் 2011 வரை நடந்த பாதச் சனி சிலரை வாழவைத்தது; பலரை வாட வைத்தது. சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சில முன்னேற்றத்தின் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தாலும், அதன் பின்னணியில் சில சங்கடங்களும் தெரிய ஆரம்பித்தன. பசியோடு இருந்தவனை அழைத்துவந்து பந்தியில் உட்கார வைத்து இலைவிரித்து உணவைப் பரிமாறி, சாப்பிடப் போகும்போது கையைப்பிடித்து கிளப்பிவிட்ட கதியாக சில ஏமாற்றம் நடந்தது. ஏமாற்றம் என்பதை விட தகாத செயல்- பாவச் செயல். சம்பளம், போனஸ் எல்லாம் வாங்கி பையில் வைத்துக்கொண்டு பஸ்ஸில் வரும்போது பணத்தை பிக்பாக்கெட் டில் பறி கொடுத்த மாதிரி திகைப்பு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு கூப்பிட்டு பதவி கொடுத்த ஒருசில நாளில் அதைப் பிடுங்கிக் கொண்ட அனுபவமும் உண்டு. விரைவில் இந்த நிலை மாறும்.

கன்னி

கன்னி ராசிக்கு செப்டம்பர் வரை ஜென்மச் சனியாகவும், 2014- டிசம்பர் வரை ஏழரைச் சனியில் பாதச் சனியும் இருக்கிறது. இந்தச் சனி சிலரை வாழ வைத்தது; பலரை தாழ வைத்தது. அது அவரவர் பூர்வ புண்ணிய விதி என்பதோடு, ஜாதக தசாபுக்திகளையும் அனுசரித்தது. தசாபுக்தி பலன் 80 சதவிகிதம்; கோட்சார பலன் 20 சதவிகிதம். அதேசமயம் அவரவர் எண்ணம், செயல்பாடு, நடவடிக்கை மூலமாக கோட்சார பலன் 80 சதவிகிதமாகவும் தசாபுக்தி பலன் 20 சதவிகிதமாகவும் மாறி விடும். அதாவது கெடுதல் அதிகமாகவும் நல்லது குறைவாகவும் மாறிவிடும். அது எப்படி என்றால், ஒரு குடம் பாலை  ஒரு உப்புக்கல் கெடுத்துவிடுவதுபோல! கன்னிச் சனி பகவான் 3-ஆம் இடம், 7-ஆம் இடம், 10-ஆம் இடங்களைப் பார்ப்பதால், சகோதர வகையிலும் நண்பர்கள் வகையிலும் சில சிக்கல்களை உருவாக்கும். மனைவி வகையிலும் தொழில் வகையிலும் சங்கடங்களைச் சந்திக் கச் செய்யும். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டதாகச் சொல்லுவார்கள். பறப்பதற்கு ஆசைப்பட்டு கையில் இருப்பதைக் கோட்டை விடும் பரிதாபமும் இந்த ராசி நேயர்களுக்கு ஏற்படுவதுண்டு. எனவே எதிர்கால திட்டத்தை நன்கு சிந்தித்துச் செயல்படுத்தவும்.

துலாம்

துலா ராசிக்கு 8-ல் குரு மறைவது ஒரு வகையில் நல்லது. அதாவது  6-க்குடையவர் 8-ல் மறைவதால் எதிரி, கடன், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமை போன்ற 6-ஆம் இடத்துக் கெடுதல்கள் எல்லாம் மறைந்துவிடும் என்பது பலன். அதேசமயம் 3-க்குடைய குருவும் 8-ல் (3-க்கு 6-ல்) மறைவதால், "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பதை நடத்தும். ஆனால் இயற்கையில் குரு சுபகிரகம். குரு பார்க்க கோடி நன்மை என்பது விதி. கோடி தோஷமும் விலகும். அப்படிப்பட்ட குரு மறைவதால் குருவருளும் திருவருளும் மறைகிறது என்று பொருள். அதனால் உங்களுக்கு தெய்வானுகூலம் கெடுகிறது என்பதால், எந்த ஒரு முயற்சியிலும் ஆரம்பம் தெளிவாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் அமையும்; ஆனால் முடிவில் ஏமாற்றமாகவும் தோல்வியாகவும் அமையும். இதற்கு சனியின் வக்ரமும் ஒரு காரணம். ஏழரைச் சனியில் 3-ஆவது சுற்று நடப்பவர்களுக்கு இது நம்பிக்கையற்றதாக அமையும். சிலருக்கு பொருளாதாரத்தில்- சிலருக்கு தொழில் துறையில்- சிலருக்கு ஆரோக்கியத்தில் சங்கடங்கள் உண்டாகலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு 2012- ஜனவரியில் ஏழரைச் சனி ஆரம்பம். ஆனால் சனி உடனே வக்ரமாகி விரயச் சனியாகிவிட்டார். செப்டம்பர் வரை விரயச் சனி. பிறகு ஜென்மச் சனி. விரயச் சனி என்பது உங்களுக்கு சுபவிரயச் சனி. புதிய வீடு, வாகனம், தொழில் அமைப்பு, வேலைவாய்ப்பு, திருமணம் போன்ற சுபச் செலவுகளைத் தரும் காலமாக அமையும். சிலர் கடல் கடந்து வெளிநாடு போகலாம். தொழில், வேலை, படிப்பு சம்பந்தமாக நன்மைகளும் எதிர்பார்க்கலாம். ராசிநாதன் செவ்வாய் அனுகூலமாக இருப்பதால் புதிய முயற்சிகள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்திலும் தெளிவு உண்டாகும். பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும். சுபமங்கள காரியங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகமும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை யோகமும், வேலையில்லாதோருக்கு வேலை யோகமும் உண்டாகும். செவ்வாய் ராசிநாதனும் 6-க்குடையவரும் ஆவார் என்பதால் கடனும் இருக்கும்; அது சுபக்கடன்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு 6-ல் மறைவு. அது பலவீனம்தான். ஆனால் 10-ஆம் இடம், 12-ஆம், 2-ஆம் இடங்களைப் பார்ப்பதால் தொழில் யோகம், தன யோகம் குறையாது. வரவும் உண்டு; செலவும் உண்டு. ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் அது சுபமங்களச் செலவு. பாதகமாக இருந்தால் வீண்விரயச் செலவு, வெட்டிச் செலவு, தண்டச் செலவு, வைத்தியச் செலவு. திருமணம், புத்திர பாக்கியம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வேலையில் முன்னேற்றம், தொழில் பெருக்கம் போன்ற நன்மைகள் உண்டாகும். ராசிநாதன் 10-ஆம் இடத்துக்கு 9-ல் நின்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால், அடிமை வேலையில் இருந்தவர்கள் சொந்தத் தொழில் அல்லது கூட்டுத் தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது அடிமை வேலையைவிட உயர்ந்த வேலையிலும் சிறப்பான வருமானத்திலும் சேரலாம். மொத்தத்தில் குரு 6-ல் இருப்பதால்  கெடுதல் இல்லையென்றாலும் நல்லவை தாமதமாக நடக்கும்.

மகரம்

மகர ராசிநாதன் சனி 9-ல் இருப்பது எல்லா வகையிலும் நன்மைதான். அதை விட நன்மை அவரை 2, 11-க்குடைய, குரு பார்ப்பது தான். எனவே உங்களுடைய திட்டங்களும் காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேறும். புதிய வீடு, வாகனம் போன்ற வாழ்க்கை வசதி களும் பெருகும். மற்றவர்களின் நலனுக்காகவும் நன்மைக்காகவும் அதிகம் பாடுபடுவீர்கள். ஆனால் சொந்த வீட்டுக் காரியங்களில் அதிக அக்கறை காட்ட மாட்டீர்கள். அதனால் குடும்பத்தில் சிலசமயம் பட்டாசு வெடிக்கும். சிலசமயம் அது புஸ்வாணமாகிவிடும். எப்படிச் செய்தால் அவர்கள் வாயை அடைக் கலாம் என்ற ரகசியம் தெரிந்து, அந்த ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி சமாதானப் படுத்துவீர்கள். ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலமும் சிறப் பாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிநாதன் 8-ல் மறைவு பெற்றா லும் 2, 11-க்குடைய குரு பார்ப்பதால், "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடிய மாதிரி குறையுமில்லை; அதே சமயம் நிறைவுமில்லை. பையில் பைசா இல்லையென்றாலும் வாழ்க்கைத் தேவைகள் எல்லாம் எப்படியோ பூர்த்தியடைகிறது. வசதிகளையும் சௌகர்யங்களையும் அனுபவிப்பீர்கள். இன்று மதுரையில் இருப்பீர்கள், நாளை சென்னையில் இருப்பீர்கள்; அடுத்த நாள் மும்பையில் இருப்பீர்கள்; பிறகு டில்லியில் இருப்பீர்கள். இப்படி ஊர் சுற்றிக் கொண்டே ஒவ்வொரு வரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இதனால் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் என்ன லாபம்? எதுவுமில்லை. சூரியன் யாருடைய பாராட்டை எதிர்பார்த்து  ஒளிகொடுக்கிறார்? சந்திரன் யார் சொல்லி நிலவொளி பரப்புகிறார்? இரண்டுமில்லை. அப்படித்தான் உங்கள் நிலையும். உடனடியாக இல்லையென்றாலும் பலன் கிடைக்கத்தான் செய்யும். கல்லை விட்டெறிவோம். காய் விழுந்தாலும் சரி; கல் விழுந்தாலும் சரி.

மீனம்

மீன ராசிநாதன் குரு 3-ல் மறைந்தாலும் ராசிக்கு 7-ஆம் இடம், 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களைப் பார்க்கிறார். எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். சுக்கிரன் அனுகூல மாக இருப்பதால் பெண்கள், பயணங்கள், மற்ற பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபாடும் காரிய ஜெயமும் உண்டாகும். அரசுப் பணிகளில் இருப்போருக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் எதிர்பார்க்கலாம். சகோதர வகையில் நல்லுறவும் நட்பும் நீடிக்கும். குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். கடமைகளைச் செயல்படுத்தலாம். ஆடம்பரப் பொருட்களும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்களும் சேகரிக்கலாம். தேக ஆரோக்கியத்தில் பாதிப்புக்கு இடமில்லையென்றாலும், தொடர்ந்து சிகிச்சை பராமரிப்பை மேற்கொள்ளலாம். பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :