அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
Logo
ஓம்
தென்பொதிகையில்...
......................................
ஜூலை மாத...
......................................
யோகிகள் கூடும் சக்தி
......................................
அனுமனின் கதையே...
......................................
ஜூலை மாத எண்ணியல்...
......................................
கயிலைபோல் ரிபகாசிக்கும்
......................................
நீதியை நிலைநாட்டு...
......................................
ஆடி மாதம்...
......................................
குறையெலாம் தீர்க்கும்
......................................
வராத கடனையும்...
......................................
16 வகை நோய்களை...
......................................
ஈசனின் இணையடி...
......................................
வடிவுடை நாயகியே
......................................
சித்தம் கலங்காத வித்தகன்!
......................................
தர்மம் எங்கே வெற்றி எங்கே!
......................................
குடும்பத்தை தழைக்கச் செய்யும் ஆடி மாத நீத்தார் கடன்!
......................................
ஆண்டவனின் அரண்மனை...
......................................



இந்திரா சௌந்தர்ராஜன்
47


          ப்படியோ அனுமன் சஞ்ஜீவி பர்வதத்தை அடைந்து, அதைச் சுமந்து கொண்டு பறக்கவும் தொடங்கிவிட்டான். இலங்கையின் யுத்த களத்திலோ லட்சுமணனிடம் நாடித் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியபடி இருந்தது. வானர வீரர்களும் ஜாம்பவானும் அவர்களுடன் சுக்ரீவனும் வான்வெளியையே பார்த்தபடி இருந்தனர்.

அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை.

தொலைவில் அனுமன் சஞ்ஜீவி பர்வதத்தோடு பறந்து வருவது பெரும் ஒளியோடு தெரிந்தது. அந்த பர்வதம் மேல்பட்ட சூரியக் கதிர்கள் பொன்னைப் போல ஜொலித்தன.

அந்த அழகிய அரிய காட்சியை வானர வீரர்கள் மட்டுமல்ல; இலங்கை நகர மக்களும் பார்த்தனர்.

அரண்மனை முற்றத்திலிருந்து இராவணனும் பார்த்தான். அவன் விழிகளில் வெம்மை கொப்பளிக்கத் தொடங்கியது.

அனுமனும் சஞ்ஜீவி பர்வதத்தை உகந்த இடமாகப் பார்த்து இறக்கவும், வானர வீரர்கள் உற்சாகமாய் ஓடி வந்தனர்.

ஜாம்பவானும் சுக்ரீவனும் வந்து அனுமனை ஆரத்தழுவிக் கொள்ள, ராமபிரானும் நம்பிக்கையோடு எழுந்து நின்றார்.

ஜாம்பவான் மிக வேகமாக அந்த பர்வதத்தில் சஞ்ஜீவ கரணியையும், விசலய கரணியையும், ஸ்வர்ண கரணியையும் தேடி எடுத்து வந்தார்.

சுக்ரீவனோ, ""சஞ்ஜீவி மூலிகையோடு வருவாய் என்று பார்த்தால் இப்படி மலையையே பெயர்த்தெடுத்து வந்துவிட்டாயே?'' என்றான்.

""என்ன செய்வது... எனக்கு மூலிகை ஞானமில்லையே! நான் ஏதாவது காட்டுக் கொடியை எடுத்து வந்து காலநேரம் விரயமாவதற்கு இதுவே எனக்கு உற்ற வழியாகத் தோன்றியது'' என்றான் அனுமன்.
அனுமனின் பதில் ராமபிரான் உள்ளத்தைப் பெரிதும் குளிரச் செய்தது. அதேசமயம் மயங்கிக் கிடந்த வீரர்கள் சஞ்ஜீவி பர்வதக் காற்று பட்டே மயக்கம் நீங்கியதுபோல எழுந்து கொண்டனர்.

ஜாம்பவான் லட்சுமணனின் நாசித்துவாரம் வழியாக சஞ்ஜீவி மூலிகைச் சாற்றினைவிட்டு அது உடம்பில் பரவும்முன், அதன் காற்றே அவனையும் எழுப்பி விட்டது.

அனைவரிடமும் பேரானந்தம்.

லட்சுமணன் முதல் காரியமாக அனுமனைத் தேடிவந்து கட்டிக்கொண்டான்.

""அற்புதம்... அற்புதம்...'' என்று சுக்ரீவனும் பாராட்டிட, ஜாம்பவான் அனுமனைப் பார்த்து, ""சுந்தரா... தயவு செய்து திரும்பவும் மேரு மலைக்கே சென்று, இந்த பர்வதத்தை எங்கிருந்து எடுத்தாயோ அங்கேயே வைத்துவிட்டு வந்துவிடு'' என்றார்.

""ஜாம்பவானே! இராவண யுத்தம்  இன்னும் நிகழவே இல்லை. நிச்சயமாக ஒரு கடிய யுத்தம் காத்திருக்கிறது. அதில் நம் தரப்பிலும் இழப்புகள் நேரலாம். அப்போது இந்த சஞ்ஜீவி பர்வதம் இங்கேயே இருப்பதுதானே நமக்கு பாதுகாப்பு?'' என்று கேட்டான் நீலன் என்கிற வானரன்.

""உண்மைதான்... ஆனால் நீ ஒரு உண்மையை மறந்து பேசுகிறாய். பஞ்ச பூதங் களும் அதன் சேர்க்கையால் விளையும் தாவரங்களும் உலகிற்குப் பொதுவானவை. நீ குறிப்பிட்ட நமக்கான பாதுகாப்பு என்பது இராவணன் படைக்கும் பொருந்தும். இந்த பர்வதக் காற்று அவர்களுக்கும் அல்லவா துணை செய்யும்? இதனால் ஒரு முடிவில்லாத யுத்தமாக இது ஆகிவிடும். யுத்தம் என்றால் ஒருவர் அழிந்தால்தானே ஒருவர் வெற்றி பெறமுடியும்?'' என்று ஜாம்பவான்  கேட்ட நொடி, அனுமன் சஞ்ஜீவி பர்வதத்தை திரும்பக் கையில் எடுத்துவிட்டான்.



மீண்டும் வான்வெளியில் அவனது உலா தொடங்கியது. அதைத் தன் இடத்திலிருந்து பார்த்தபடியே இருந்த இராவணன் அடுத்து அழைத் தது கும்பகர்ணனைத்தான்!

கும்பகர்ணனும் அனுமனின் வீரதீரத்தைப் பார்த்துவிட்டே வந்திருந்தான். அதனால் இராவணனிடம் அவன் சில கருத்துகளை முன்வைக்க நேர்ந்தது.

""அண்ணா... நடக்கின்ற ஒவ்வொன்றும் அவர் களுக்கே சாதகமாய் உள்ளது. அவர்கள் அவ்வளவு பேருக்கும் அனுமன் என்னும் அந்த ஒற்றை வானரனே போதும்போல உள்ளது. நான் சொல்கிறேன் என்று தவறாகக் கருத வேண்டாம். பேசாமல் ஜானகி தேவியாரை அவர்களிடம் ஒப்படைத்து விடு. அதுதான் விவேகம்'' என்றான்.

அடுத்த நொடியே இராவணன் சினத் தோடு மூர்க்கமாகி, ""உனக்கும் விபீஷணன் புத்திதான் என்றால் உடனே வெளியேறிவிடு. இல்லை நீ என் நன்றிக்குரிய சோதரன்தான் என்றால் என் கட்டளையை நிறைவேற்று. ஒரு விஷயத்தை நன்றாய் மனதில் வை. நான் எந்த நிலையிலும் முன்வைத்த காலை பின்வைப்பதாய் இல்லை. மன்னிப்பு கோருவது, சரணாகதி அடைவது, அடைய நினைத்ததிலிருந்து பாதியில் விலகுவது போன்ற எல்லாமே அசுர லட்சணங்கள் அல்ல. அவ்வளவும் அவலட்சணமாகும். புரிந்துகொள்'' என்றான்.

அடுத்த நொடியே கும்பகர்ணன் யுத்தத் துக்குத் தயாராகிவிட்டான். ஒரு மாமிச மலைபோல நடந்து யுத்த களத்தில் அவன் கதையை வீசி யுத்தம் செய்ததைப் பார்க்க கோரமாய்தான் இருந்தது. அதில் வானர வீரர்களும் தெறித்து விழுந்து ஓடினர்.

ஆனால் ராமபிரானின் சில மந்திர பாணங்கள் கும்பகர்ணனின் அஸ்திரப் படையை தகர்த்துக்கொண்டு அவன் கரத்தை முதலிலும், நின்றபடி இருந்த காலை பிறகும், இறுதியாக கழுத்தையும் வெட்டிச் சாய்த்தது. குறிப்பாக நாராயணாஸ்திரம் அவன் கதையை முற்றாக முடித்தது.
இராவணனைப் பொறுத்தவரையில் இது மிகப்பெரும் தோல்வி. இனி அவனுக்கென இருப்பவன் இந்திரஜித் என்றும் மேகநாதன் என்றும் அழைக்கப்படும் அவன் மகன் ஒருவன்தான்.

அவன் முன்னால் நின்றபடி இருந்த இராவணன் இந்திரஜித்திடம், "என்ன செய்யப் போகிறாய்?' என்பதுபோல் பார்த்தான்.

""தந்தையே... தைரியமாயிருங்கள். இனி யுத்த களத்தில் வெறும் வீரத்தோடு மட்டும் நின்று ஜெயிப்பது என்பது அசாத்யமே... இந்தக் கூட்டத்தை தந்திரத்தால்தான் வெற்றிகொள்ள முடியும்'' என்றான்.

""தந்திரத்தால் என்றால்?''

""அதைச் செயல்படுத்தி வெற்றியுடன் நான் வந்தபிறகு நீங்களே உணர்வீர்கள்'' என்று கூறிய இந்திரஜித்தை இராவணனும் பெரிதும் நம்பிக்கையுடன் பார்த்தான்.

""மகனே, நீதான் உண்மையில் என் மகன். பெரும் படை நம் வசமிருக்க நாம் துணிவோடு இருப்பதிலும் பேசுவதிலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இப்படி நிர்கதிக்கு ஆளாகும்போதும் நிமிர்ந்து நிற்பதே அசுர வீரம்- அதுவே வீரலட்சணம். உன்னிடம் நான் அதை மிகவே பார்க்கிறேன்'' என்றான்.

இந்திரஜித் போருக்குப் புறப்படப் போகும் செய்தி அவன் மனைவியான சுலோச்சனாவிற்கும் சென்று சேர்ந்தது. அவள் தேவி உபாசகி.

அஷ்டதசபுஜ காளியை அனுதினமும் உபாசிப்பவள். அந்த தெய்வத்திடமே மனமுருகி நின்றாள். ""தாயே என் கணவனுக்கு நீயே துணையாயிருக்க வேண்டும்'' என்று பிரார்த்தனை செய்துகொண்டு, தேவி குங்குமத்தோடு வந்து யுத்தாபரணங்களோடு நிற்கும் இந்திரஜித்துக்கு அந்த குங்குமத்தையும் வைத்து, ""நான் இப்போது உங்களுக்கு ஒரு உபாயம் சொல்லப் போகிறேன்'' என்று அவன் காதோடு ஒரு விஷயத்தைக் கூறினாள்- அதுவும் மிகமிக ரகசியமாக.

அதைக் கேட்ட நொடி இந்திரஜித்தின் ஒளிமிகுந்த முகத்தில் மேலும் சூரியப் பிரகாசம். ""சுலோச்சனா. உற்ற நேரத்தில் சரியான ஆலோசனை அளித்தாய். என் தர்மபத்தினி நீ என்பதையும் நிரூபித்தாய்!'' என்று அவளைத் தழுவி மகிழ்ந்தான்.

இந்தப் பக்கமாய் ராமனோடு நிற்கும் லட்சுமணனிடமும் இந்திரஜித் யுத்த களத்துக்கு வரப்போவது குறித்து பலத்த சிந்தனை. குறிப்பாக ஜாம்பவான் லட்சுமணனிடம், ""இளவலே... இந்திரஜித் வழக்கமான அசுரன் அல்ல. அவன் இராவணனைவிட மகாத்மியம் உடையவன் என்பேன். குறிப்பாய் அவன் வரசித்தி ஒன்றை இவ்வேளையில் குறிப்பிட விரும்புகிறேன். பன்னிரண்டாண்டுகள் இரவில் உறங்காமலும் உண்ணாமலும் இருக்கும் ஒருவனாலேயே தனக்கு மரணம் நிகழவேண்டும் என்று அவன் வரம் பெற்றவன். அந்த வரசித்திப்படி பார்த்தால் தாங்களே வனவாசத்தின்போது உண்ணாமல் உறங்காமல் பணியாற்றிய மாவீரர் ஆவீர். ஆகவே தங்களால் மட்டுமே அவனை வீழ்த்த முடியும்.

ஆனால் அவன் கபடமும் நிரம்பியவன். ஆகவே இந்த யுத்தம் இதுவரை நிகழ்ந்ததுபோல் இருக்காது. இதில் தங்களிடம் மிகுந்த எச்சரிக்கை தேவை. உங்களுக்கு பெரும்துணை ஒன்றும் தேவை. அந்த துணையாக அனுமனைத் தவிர எவரும் இருக்கவும் வாய்ப்பில்லை'' என்று ஜாம்பவான் கூறவும், அனுமனும் சஞ்ஜீவி பர்வதத்தை எடுத்த இடத்தில் வைத்துவிட்டுத் திரும்பியிருந்தான். ஜாம்பவான் சொன்ன மறுநொடி லட்சுமணனோடு சேர்ந்து கொண்டு, ""வாருங்கள் இளைய பிரபு... இரண்டில் ஒன்று பார்ப்போம்'' என்றான்.

யுத்தமும் தொடங்கியது.

இந்திரஜித் தன்வசமுள்ள சிறப்புமிகுந்த பிரம்மாஸ்திரத்தை எடுத்து மொத்த படையின்மீதும் ஏவிவிட்டான். அதற்கு யாராக இருந்தாலும் சில நாழிகைகளாவது கட்டுண்டே தீரவேண்டும். ராமன்கூட அதற்கு விதிவிலக்கின்றிக் கட்டுண்டுவிட, லட்சுமணனும் அனுமனும் மட்டும் முன்பே அதைச் சந்தித்த காரணத் தாலும், இந்திரஜித் ஏவுவான் என்று அறிந்திருந்ததாலும் தங்களை பிரம்மாஸ்திர எல்லைக்கு வெளியே சென்று நிறுத்திக் கொண்டனர்.

குறிப்பிட்ட நாழிகை கழிந்து பிரம்மாஸ் திர மாயை தெளிந்துவிட, அனைவரும் எழுந்தபோது களத்தில் இந்திரஜித் இல்லை!

எங்கே அவன் என்று ஆரவாரத்தோடு தேடியும் பயனில்லை. அஞ்சி ஓடி விட்டானா அல்லது ஒளிந்துகொண்டு விட்டானா? எங்கே இந்திரஜித் என்று அவ்வளவு பேரும் தேடியபோது, அதற்கான விடையை சரண்புகுந்துவிட்டிருந்த விபீஷணனால் மட்டுமே கூறமுடிந்தது.

""ப்ரபோ! இந்திரஜித் களத்தில் இல்லை என்பதால் அவன் நம்மை அழிக்க தந்திரமாக முயலுகிறான் என்றே பொருள். இந்திரஜித் மனைவி சுலோச்சனா ஒரு தேவி பக்தை. சாக்த உபாசனைகளில் நாட்டமுடைய அவளுக்கு ஆதிசக்தியின் கிருபாகடாட்சம் மிக உண்டு.

நிகும்பலை என்னும் யாகம் பற்றி அவள் நன்கு அறிவாள். அந்த யாகத்தை மட்டும் ஒருவர் தடையின்றிப் புரிந்துவிட்டால் அவரை வெல்ல யாராலும் முடியாது. நிகும்பலா யாகத்தில் ஒரு வெற்றி ரதம் வெளிப்படும். அதில் ஏறி வரும் ஒரு வீரனை எவராலும் வீழ்த்த முடியாது. எனவே இந்திரஜித் இப்போது அந்த வேள்வியில் தான் மூழ்கியிருக்க வேண்டும்'' என்றான்.

அடுத்த நொடி அந்த யாகம் நடக்கும் இடத்தை வானிலிருந்தபடியே அறிந்துவந்த அனுமன், தன் தோளில் லட்சுமணனையும் ராமனையும் சுமந்து கொண்டு யாகம் நடக்கும் இடம் நோக்கிப் பறந்தான்.
யாகமும் முடிவை நெருங்கி வெற்றி ரதமும் வேள்விக் குண்டத்திலிருந்து எழும்பியபடி இருந்தது!

(தொடரும்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : renga Date & Time : 7/6/2012 11:07:53 AM
-----------------------------------------------------------------------------------------------------
ஜெய் ஸ்ரீ ராம்
-----------------------------------------------------------------------------------------------------