24/7 செய்திகள்
நக்கீரன் சினிமா
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
முந்தைய செய்திகள்
சுற்றுலா
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு
||
சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா
||
உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா
||
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது
||
சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார்
||
தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம்
||
மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்
||
ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி
||
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம்
||
மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர்
||
மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண்
||
தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன்
||
சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு
||
ஓம்
தென்பொதிகையில்...
......................................
ஜூலை மாத...
......................................
யோகிகள் கூடும் சக்தி
......................................
அனுமனின் கதையே...
......................................
ஜூலை மாத எண்ணியல்...
......................................
கயிலைபோல் ரிபகாசிக்கும்
......................................
நீதியை நிலைநாட்டு...
......................................
ஆடி மாதம்...
......................................
குறையெலாம் தீர்க்கும்
......................................
வராத கடனையும்...
......................................
16 வகை நோய்களை...
......................................
ஈசனின் இணையடி...
......................................
வடிவுடை நாயகியே
......................................
சித்தம் கலங்காத வித்தகன்!
......................................
தர்மம் எங்கே வெற்றி எங்கே!
......................................
குடும்பத்தை தழைக்கச் செய்யும் ஆடி மாத நீத்தார் கடன்!
......................................
ஆண்டவனின் அரண்மனை...
......................................
01-07-12
|
: Email this Article
கே. சுவர்ணா
கா
விரியின் தென்கரையிலுள்ள பாடல்பெற்ற சிவத்தலங்கள் 127. அவற்றுள் 101-ஆவது தலமாக விளங்குகிறது பாஸ்கரேஸ்வரர் என்னும் பரிதியப்பர் திருக்கோவில். இவ்வாலயம் அமைந்துள்ள தலம் பரிதிகேஸ்வரம் ஆகும். பரிதிக்காடு, ரவியாரண்யம் என்ற பெயர்களும் உண்டு.
சிவபெருமானை பூமியில் பூஜிக்க விரும்பிய சூரிய பகவான், சோழ நாட்டிலுள்ள
அரசவனம் ஒன்றில் மணலால் லிங்கம் அமைத்து ஆகம முறைப்படி பூஜித்து வந்தார். ஒருநாள் மணல் கலைந்து, அதன் உள்ளிருந்து சுயம்புலிங்கம் ஒன்று வெளிப்பட்டது.
சூரிய பகவான் விசுவகர்மாவை
அழைத்து, கயிலாயம்போல் ஒளிவீசும் திருக்கோவிலையும்; மதில், கோபுரம், மண்டபம், தீர்த்தம் ஆகியவற்றையும் உருவாக்கும்படி பணித்தார். திருக்கோவில் நிர்மாணிக்கப்பட்டதும் அனைத்து மூர்த்திகளையும் ஸ்தாபித்து, ஆகம முறைப் படி வழிபாடுகள் நடைபெறச் செய்தார். சித்திரை மாத பஞ்சமி திதியில் ரிஷபக் கொடி ஏற்றி பிரம்மோற்சவத்தைத் தொடங்கி வைத்தார். சிவபெருமான் திரிபுரத்தை எரிக்க ஏறிச்சென்ற ரதத்தைவிட மேன்மையான தேரை உருவாக்கி, சிறப்பான தேரோட்டம் நடத்தி சிவபெருமானை வழிபட்டார் சூரிய பகவான்.
சூரியனின் வழிபாட்டில் திருப்தியுற்ற சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்து விரும்பும் வரங்களைக் கேட்கும்படி கூறினார். அஷ்டமூர்த்திகளுள் ஒருவனாகத் தான் இடம்பெற வேண்டும் எனவும்; வைதீக வழிபாட்டில் சிவபெருமானுடன் தனக்கும் பூஜை நடைபெற வேண்டும் எனவும் சூரியன் வரம் வேண்டினார்.
அவ்வாறே வரமருளிய சிவபெருமான், ""இத்தலம் கயிலைபோல் பிரகாசித்து ஊழிக்காலத்திலும் அழியாது நிலைபேறுடை யதாகத் திகழும். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடுபவர் அனைவருக்கும் சகல நன்மைகளும் உண்டாகும்'' எனவும் கூறி
அருளினார்.
பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில் நான்கு புறங்களில் மதில் சுவர்களும், இரண்டு பிராகாரங்களும் கொண்டு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் பரிதியப்பர் சுயம்புலிங்கமாக அருள் பாலிக் கிறார். நான்கு அடி உயரமுள்ள இந்த லிங்கத்தின் பீடமும், ஆவுடையும் சதுர வடிவில் அமைந்துள்ளன. இறைவனுக்கு எதிரே வணங்கும் கோலத்தில் சூரியனின் திருவுருவம் அமைந்துள்ளது.
அன்னை மங்களநாயகி என்னும் பெயரில் கருணை பொழிகிறாள்.
கோவிலுக்கு நேர்கிழக்கே சூரிய தீர்த்தம் அமைந்துள்ளது. சூரியன் தனது சூலை நோய் நீங்க உருவாக்கிய தீர்த்தம் இது எனப்படுகிறது. மாசி மாதத்தில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர் சகல நன்மை களையும் பெறுவர். இங்கு சந்திர புஷ்கரணி, தேவ புஷ்கரணி ஆகிய புனித தீர்த்தங்களும் உள்ளன. தேவ புஷ்கரணியின் கரையில் நீத்தார் கடன் செய்வது சிறப்பைத் தரும். ஆலயத்தினுள் உள்ள தீர்த்தக் கிணற்று நீரை அபிஷேகத்துக்குப் பயன் படுத்துகிறார்கள். இத்தலத்தின் தலவிருட்சம் அரச மரம்.
பங்குனி உத்திரத்தன்று இக்கோவிலில் பெருந்திருவிழா நடைபெறும். ஆவணி அவிட்டத்தன்று மூலவருக்கு அபிஷேகம் முடிந்தபின் முப்புரிநூல் அணிவிப்பர். அனைத்து பண்டிகை நாட்களிலும் இறைவனுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பங்குனி மாதம் 17, 18, 19 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் பரிதியப்பர் திருமேனியில் பிரகாசித்து ஒளிமயமாக்குகிறது. இந்நிகழ்வு சூரியன் இறைவனை நேரிடை யாக வழிபடுவதுபோல்
அமைந்துள்ளது.
தங்கள் பாவம் நீங்க பக்தர் கள் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதால், அனைத்துப் பாவங்களும் தன்னைப் பற்றிக் கொள்ளுமே என்று வருந்திய கங்கை, தன்னை வந்தடைந்த பாவங்கள் நீங்க பிரம்ம தேவனிடம் வழிகேட்டாள்.
பிரம்மா கங்கையிடம், "சூரியன் பூஜித்த தலமாகிய பரிதிகேஸ்வரத்தில் உள்ள சூரிய புஷ்கரணியில், ஒரு வருடகாலம் கற்கடக ராசியில் குரு இணைந்திருக்கும்போது நீராடினால் பாவங்கள் தீரும்' எனக் கூறினார். அவ்வாறே நீராடி கங்கை தன் பாவங்கள் நீங்கப் பெற்றாள் என்கிறது தல வரலாறு.
பாஸ்கரேஸ்வரர் கோவில் ஆரம்ப காலத்தில் சூரியனை மூலவராகக் கொண்டிருந்ததாகவும்; பின்னர் பரிதியப்பரை மூலவராகக் கொண்டு சிவாலயமாகத் திகழ்வதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
இத்தலம் தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேல உளூர் (உழவூர்) பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிளைச்சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.