24/7 செய்திகள்
நக்கீரன் சினிமா
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
முந்தைய செய்திகள்
சுற்றுலா
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
||
இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை!
||
ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம்
||
சீமான் மீது வழக்குப்பதிவு
||
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
||
வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு
||
ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு
||
திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு
||
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
||
38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி
||
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
||
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
||
கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த்
||
ஓம்
தென்பொதிகையில்...
......................................
ஜூலை மாத...
......................................
யோகிகள் கூடும் சக்தி
......................................
அனுமனின் கதையே...
......................................
ஜூலை மாத எண்ணியல்...
......................................
கயிலைபோல் ரிபகாசிக்கும்
......................................
நீதியை நிலைநாட்டு...
......................................
ஆடி மாதம்...
......................................
குறையெலாம் தீர்க்கும்
......................................
வராத கடனையும்...
......................................
16 வகை நோய்களை...
......................................
ஈசனின் இணையடி...
......................................
வடிவுடை நாயகியே
......................................
சித்தம் கலங்காத வித்தகன்!
......................................
தர்மம் எங்கே வெற்றி எங்கே!
......................................
குடும்பத்தை தழைக்கச் செய்யும் ஆடி மாத நீத்தார் கடன்!
......................................
ஆண்டவனின் அரண்மனை...
......................................
01-07-12
|
: Email this Article
ஆர். ராதாபாய்
தெ
ய்வ வாகனங்களுள், திருமாலின் வாகனமாகிய கருடனுக்கு தனிச்சிறப்பு உண்டு. கருடனைத் துதிப்பவர்களுக்கு நாக தோஷம் மற்றும் பதினாறு வகை நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பர். மேலும் கருடனை வழிபடுபவர்களது வீட்டில் விஷ ஜந்துக்கள் அண்டாததோடு, தொலைந்த பொருட்களும் உடனே கிடைக்கும். இத்தனை சிறப்புமிக்க கருடன் ஆடி மாத சுக்ல பட்ச பஞ்சமியில், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தார். இந்நாள் கருட ஜெயந்தி எனும் பெயரில் வைணவ ஆலயங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு கருட ஜெயந்தி 23-7-2012 அன்று கொண்டாடப்பட உள்ளது.
காசிப முனிவருக்கும் அவரது முதல் மனைவியான வினதைக்கும் மகனாகப் பிறந் தவர் கருடன். சூரியனின் தேர்ச் சாரதியான அருணன் இவரது சகோதரர் ஆவார். சிவா லயங்களில் நந்திக்கு இருக்கும் முக்கியத்துவம், வைணவ ஆலயங்களில் கருடனுக்கு உண்டு. எந்நேரமும் எல்லா விதங்களிலும் திருமாலுக்கு திருப்பணிகள் செய்பவர்களை நித்யசூரிகள் என்பர். அவர்களில் கருடனும் ஆதிசேஷனும் பிரதானமானவர்கள். இந்திரனே வல்கிய முனிவரின் சாபத்தால் கருடனாகப் பிறந்த தாகவும் கூறப்படுகிறது.
திருநரையூர் என்ற நாச்சியார் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் பெருமாளைவிடவும் தாயாருக்கே முதலிடம். பூஜை, ஆராதனை, திருமஞ்சனம், புறப்பாடு எல்லாமே முதலில் தாயாருக்குத்தான். இக் கோவிலில் வேறெந்தக் கோவிலிலும் இல்லாத வகையில் கல்லாலான கருட வாகனம் காணப்படுகிறது. இதில்தான் கருட சேவையும் நடக்கி றது. கல்லாலான வாகனத்தில் கருட சேவை நடக்கும் ஒரே ஆலயம் இது மட்டும்தான்.
இக்கோவிலில் பத்துக்குப் பத்தடி சதுரக் கருவறையை நிறைத்தபடி கல்லாலான கருடன் காட்சி தருகி றார். ஒரே கல்லாலான சிலை இது. பறக்கும் இறக்கை, கூரிய மூக்கு, பெரிய கண்கள், ஏந்திய கரங்கள், ஒரு காலை மடித்து மண்டியிட்ட கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்த கருட வாகனத்தில்தான் பெருமாளும் தாயாரும் எழுந்தருள்வார்கள். மார்கழி விழாவின் நான்காம் நாள், பங்குனி விழாவின் நான்காம் நாளென வருடம் இருமுறை கருட சேவை நடைபெறும்.
இந்த கல்லாலான கருட சேவை யில் இரண்டு அதிசயங்கள் நிகழ் வதை இன்றும் காணலாம். கருவறை யிலிருந்து கல் கருடன் புறப்படும் போது அதனை நான்கு பாதந்தாங்கி கள் சுமந்து வருவர். நேரம் செல்லச் செல்ல அதன் கனம் கூடும். கருவறையை விட்டு வந்தபின் எட்டு பேர் சுமப்பர். பிராகாரத்தில் 16 பேரும், ஆலய வாயிற்படியில் 32 பேரும், கோவிலைவிட்டு வெளிவந்ததும் 64 பேரும், வீதியுலாவின்போது 128 பேரும் கருடனைச் சுமப்பர். சுமப் பவர்களைவிடவும் கருடனுக்கே அதிகம் வியர்ப்பது முதல் அதிசயம். இரண்டாவது அதிசயம் எப்படி கருடன் வெளியே வரவர கனம் அதிகரித்ததோ அதுபோல வீதியுலா முடிந்து கருவறை திரும்பும்போது அதன் கனம் குறைய ஆரம்பிக்கும். இப்போது 128 பேர், 64 32, 16, 8 பேர் என சுமப்பவர்கள் குறைந்த படி செல்வர். கருவறையில் கருடனை இறக்கி வைக்கும்போது முன் போலவே நால்வர் மட்டும் இறக்கி வைத்துவிடுவர்.
இதுபோலவே ஆழ்வார் திருநகரி கருடனுக்கும் சிறப்பு அதிகம். இங்கும் தாயாருக்கே முதலிடம். ஆடி மாத திருவாதிரை தொடங்கி ஆடி சுவாதி வரை பத்து நாட்கள் விழா நடத்துவார்கள். விஷேச திருமஞ்சனம் செய்து
அமிர்த கலச நைவேத்தியம் செய்வர். பாசுரங்கள் பாடி திருவாய்மொழி நூற்றியெட்டையும் ஓதுவார்கள்.
ஆடி சுவாதித் திருநாளன்று கருடனுக்கு பல்வேறு ஆலயங்களில் சாயா பரிவட்டம் கட்டுவார்கள். இது பாம்பு, தேள், பூரான் வரையப் பட்ட நீண்ட வஸ்திரமாகும்.
சென்னை சவுகார்பேட்டை வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் கார்த்திகை மாத விழாவின்ஆறாம் நாளன்று தாயார் பெண் கருட வாகனத்தில் வீதியுலா வருவார். வேறு எந்த ஆலயத்திலும் பெண் கருட வாகனம் கிடையாது என்பது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.