அண்மைச் செய்திகள்
கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் || கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி || பேஸ்புக்கில் டாக்டர்கள் பெயரில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி : 2 வாலிபர்கள் கைது || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம் || நடிகர் கலாபவன்மணி சரணடைந்தார் || பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம் || அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது || கொதிக்கும் எண்ணையில் கையை அமுக்கி சித்ரவதை || விபத்தில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் || வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளி ஜாமீனில் விடுதலை || ஜாமினில் விடுவிக்க வேண்டும்: கோர்ட்டில் குருநாத் வக்கீல் வாதம் || அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கொடைக்காணல் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா ||
Logo
ஓம்
தென்பொதிகையில்...
......................................
ஜூலை மாத...
......................................
யோகிகள் கூடும் சக்தி
......................................
அனுமனின் கதையே...
......................................
ஜூலை மாத எண்ணியல்...
......................................
கயிலைபோல் ரிபகாசிக்கும்
......................................
நீதியை நிலைநாட்டு...
......................................
ஆடி மாதம்...
......................................
குறையெலாம் தீர்க்கும்
......................................
வராத கடனையும்...
......................................
16 வகை நோய்களை...
......................................
ஈசனின் இணையடி...
......................................
வடிவுடை நாயகியே
......................................
சித்தம் கலங்காத வித்தகன்!
......................................
தர்மம் எங்கே வெற்றி எங்கே!
......................................
குடும்பத்தை தழைக்கச் செய்யும் ஆடி மாத நீத்தார் கடன்!
......................................
ஆண்டவனின் அரண்மனை...
......................................



ஆடி சுவாதி 25-7-2012
ஆர். ராதாபாய்

     ந்திய சமூகத்தில் நட்புக்கும் கற்புக்கும் பெரிய மதிப்புண்டு. இந்தியாவின் பெருங்காவியங்களான இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் நட்பையும் கற்பையும் போற்றும் முன்னுதாரணப் பாத்திரங்கள்  பல உள்ளன.

தன் கற்பின் வலிமையால் எமனிடமிருந்து தன் கணவன் சத்தியவானின் உயிரை மீட்டு வந்த சாவித்திரி கதையை நாம் அறிவோம். தன் நட்பின் வலிமை யால் தன் தோழனுக்கும் கயிலாயத்தில் இடம்பெற்றுத் தந்த கதையை அறிவீர் களா? சுந்தரர்- பெருமாக் கோதையார் கதை, நட்பின் பெருமையை மட்டுமின்றி ஆடி மாத சுவாதித் திருநாளின் அருமையையும் பேசுகிறது.

சேரநாட்டை ஆண்டு வந்த பெருமாக் கோதையார் என்ற மன்னன் சிறந்த சிவபக்தன். திருவஞ்சிக்குளம் உமாமகேஸ்வரர்மேல் தீராக் காதல் உடையவன். அவன் உள்ளத் தூய்மையுடன் சிவனை வணங்கும்போதெல்லாம் தில்லை அம்பலக்கூத்தனின் சிலம்பொலி கலீர் கலீரெனக் கேட்கும். சிலம்பொலி நாதம் கேட்டபின்பே மன்னன் அமுதுண்ணுவது வழக்கம்.

ஒருநாள் சேரமான் இறைவனை வழிபடும்போது சிலம்பொலி கேட்க வில்லை. மன்னன் திகைப்படைந்தான். "தன் பக்தியில் குறை நேர்ந்துவிட்டதோ! அதனால்தான் சிலம்பொலி கேட்கவில்லையோ' எனக் கருதி, தன் உடைவாளால் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தான். அப்போது சிலம்பொலி அதிர சேரமான் முன்பு ஈசன் தோன்றி, ""வருந்தாதே மன்னா! என் பக்தன் சுந்தரன் தேனினும் இனிய பாடல்களால் தினமும் என்னை அபிஷேகம் செய்வான். இன்று, அதில் நான் மெய்மறந்துவிட்டேன். எனவேதான் சிலம்பொலி கேட்க சற்று தாமதமாகிவிட்டது'' என்றார்.

ஈசனின் இதயத்தையே உருக்கும் பாடல்களைப் புனையும் இத்தகையதோர் சிறப்புமிக்க சிவனடியாரை அறியாது போனோமே என்றெண்ணிய சேரன், தில்லை சென்று அம்பலவாணரைத் தரிசித்தான். பின் திருவாரூர் சபாபதி யைத் தரிசித்துவிட்டு சுந்தரரின் இல்லம் தேடிச் சென்றான். அவருடன் நட்பு கொண்டு அளவளாவி மகிழ்ந்தான். சேரன் தனது பூர்விகமான திருவஞ்சிக்குளத்துக்கு வருமாறு சுந்தரருக்கு அழைப்பு விடுத்தான்.

அவரது அழைப்பையேற்று வஞ்சிக்குளம் சென்று, சிறிது காலம்

அங்கு கோவில் கொண்டுள்ள ஈசனை ஆராதித்து மகிழ்ந்தார் சுந்தரர்.

பின் தன் நாடு திரும்பிய சுந்தரர் தொண்டை மண்டலம், பாண்டி நாடு என பல சிவத் தலங்களையும் தரிசித்து விட்டு மீண்டும் திருவஞ்சிக்குளம் சென்றார். சேரனின் நட்பு அவரை காந்தமென ஈர்த்தது. தன்னைக் காண வந்த சுந்தரரை மன்னன் மேளதாளங்களுடன் வரவேற்று, யானைமீது அமரச் செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்று, அரியணையில் அமர்த்தி பாத பூஜை செய்து கௌரவித்தான். சுந்தரரும் அங்கேயே தங்கி மலைநாட்டுப் பதிகள்  பல கண்டு வழிபட்டார்.

சுந்தரர் கயிலை செல்ல வேண்டிய நேரம் வந்தது. "தலைக்குத் தலை மாலை' என்ற பதிகம் பாடிக்கொண்டிருந்த அவரை, வெள்ளை யானையை அனுப்பி அழைத்துவரும்படி சிவகணங்களுக்கு உத்தரவிட்டார் ஈசன்.

அமரர்கள் சூழ யானையின்மீது கயிலாயம் சென்ற சுந்தரரின் நெஞ்சம் நண்பனையே நினைத்தபடி இருந்தது.

தன் உள்ளுணர்வால் இதையறிந்த சேரமான், சுந்தரர் விண்ணிலேறி கயிலை செல்வதைக் கண்டான். உடனே தன் வெண்புரவியில் ஏறியமர்ந்து, அதன் காதில் நமசிவாய எனும் ஐந்தெழுத்தை ஓத, விண்ணில் சென்ற யானையைத் தொடர்ந்து சென்றது குதிரை. இருவரும் கயிலையை அடைந்தாலும் காவலர்கள் சேரமானை உள்ளே அனு மதிக்கவில்லை. சுந்தரர் இறைவனை அடைந்து அவரை வணங்கி, ""என் ஆருயிர் நண்பன் சேரமான் வாயிலில் காத்திருக்கிறார். கருணை கூர்ந்து

அவரையும் உள்ளே அழையுங்கள்'' என்று வேண்டி நின்றார். அடியார்க்கு அருளாமல் வேறு யாருக்கு ஈசன் அருளுவான்? சேரனை உள்ளே அனுமதித்ததும் அல்லாமல், ""இனி நீங்கள் இருவரும் சிவகணங் களுக்குத் தலைவர்களாக இருப்பீர்'' என அருள் புரிந்தார். இவ்வாறு சுந்தரனுக்கும் சேரமானுக்கும் ஈசன் கயிலாயப் பதவி அருளிய நன்னாள்தான் ஆடி சுவாதித் திருநாள்.



திருவஞ்சிக்குளத்தில் இந்த நன்னாளை ஆண்டுதோறும் பெரிய திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். இவ்விழாவில் தமிழகத்திலிருந்து நூற்றுக்கணக்கான சிவபக்தர்கள் சென்று கலந்துகொள்வர்.

விழாவின் முதல் நாள் இரவன்று கொடுங் கலூர் பகவதியம்மன் ஆலயத்திலுள்ள சுந்தரர், சேரமானின் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை செய்து, யானை மற்றும் குதிரை வாகனத்தில் அமரவைத்து மேள தாளங்களுடன் அஞ்சிக்குளத் திற்கு ஊர்வலமாக அழைத்து வருவர். மறுநாள் காலை சுந்தர மூர்த்தி நாயனாருக்கு தமிழக பாணியில் கோலாகலமான குருபூஜை விழா நடைபெறும். மேலும் அன்றைய தினம்

அஞ்சிக் குளத்திலுள்ள அத்தனை உற்சவ மூர்த்தி களுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெறும்.



திருவஞ்சிக்குளம் ஆலயம் மட்டும்தான் கேரளத்திலேயே தேவாரச் சிறப்புப் பெற்ற தலமாகும். சுந்தரரால் பாடப்பெற்ற மலைநாட்டுத் தலம் என்ற சிறப்பும் இதற்குண்டு. கேரளா விலேயே பள்ளியறை பூஜை நடக்கும் ஒரே தலம் இதுவாகும்.

சேரமானுக்கும் தில்லை சிதம்பரத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதால், இத்தலத்தை மேலைச் சிதம்பரம் என்றும் கூறுவர். இவ்வாலயத்தின் கிழக்குக் கோபுரத்தின் அடித்தளத்தில் யானைமீதமர்ந்த சுந்தரர் கோலமும், குதிரைமீதமர்ந்த சேரமான் கோலமும் சிறப்பாக வடிக்கப் பட்டுள்ளது.

சுந்தரரையும் சேரமானையும் உள்ளம் உருகச் செய்த அஞ்சிக்குளத்து உமையொரு பாகனின் அருள்வேண்டி அத்தலம் சென்று வரலாமே!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : subramani Date & Time : 7/5/2012 2:52:04 PM
-----------------------------------------------------------------------------------------------------
சுந்தர நாயனாரின் சிவாதரிசன வரலாற்றை ' ஈசனின் இணையடி சேர்த்த நட்பு' கட்டுரையில் அழகாக வெளியிட்டிருந்தீர்கள் .நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------