அண்மைச் செய்திகள்
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் || ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை || வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி || இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் நாளை விடுதலையாவார்கள்? || மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு || 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர் || 40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ || நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை || டெல்லி வந்தார் சீன பிரதமர் லீ கெகியாங் || திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை || இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டம் ||
Logo
ஓம்
தென்பொதிகையில்...
......................................
ஜூலை மாத...
......................................
யோகிகள் கூடும் சக்தி
......................................
அனுமனின் கதையே...
......................................
ஜூலை மாத எண்ணியல்...
......................................
கயிலைபோல் ரிபகாசிக்கும்
......................................
நீதியை நிலைநாட்டு...
......................................
ஆடி மாதம்...
......................................
குறையெலாம் தீர்க்கும்
......................................
வராத கடனையும்...
......................................
16 வகை நோய்களை...
......................................
ஈசனின் இணையடி...
......................................
வடிவுடை நாயகியே
......................................
சித்தம் கலங்காத வித்தகன்!
......................................
தர்மம் எங்கே வெற்றி எங்கே!
......................................
குடும்பத்தை தழைக்கச் செய்யும் ஆடி மாத நீத்தார் கடன்!
......................................
ஆண்டவனின் அரண்மனை...
......................................




20

             ண்மைக்காலத்தில் தோன்றி, தூய தவ வாழ்வு நடத்தி, தம் இறுதி நாளில் பஞ்ச பூதங்களாலான உடலை பஞ்ச பூதங்களிலேயே கரைத்துக் கொண்டவர் வள்ளலார். மறைந்தும் மறையாமல் சூட்சும உருவில் இன்றும் வாழ்ந்துவரும் சித்த புருஷர். ஜோதி வழிபாட்டின் மூலம் தம் அருளை நாடும் அடியவர்க்கெல்லாம் இன்றும்கூட அவர் அருள்பாலிலித்து வருகிறார்.

வள்ளலார் அம்பிகையை நேரில் கண்ட சித்தர். அண்ணனோடும்

அண்ணியோடும் அவர் சென்னையில் வசித்த காலம். திருவொற்றியூர் வடிவுடை

அம்மன்மேல் வள்ளலாருக்கு அதீத பக்தி.

அம்பிகையின் அருள்பொங்கும் முகம்தான் எத்தனை அழகு. அந்த தெய்வீகச் சிலையைப் பார்த்துக்கொண்டே மணிக் கணக்கில் அமர்ந்திருப்பார். "என் தாயை விட்டு இல்லம் போகும் நினைப்பே வரவில்லையே' என்று, கோவிலிலிலேயே பெரும்பாலான நேரம் வாசம் செய்வார். பல நாட்கள் இரவு வெகுநேரம் ஆலயத்திலேயே அவர் தியானத் தில் ஆழ்ந்திருப்பதுண்டு.

ஒருநாள் இரவு அவர் தியானத் தில் அமர்ந்து தன்னை மறந்தார். காலம் கடப்பதை அவர் அறியவில்லை. இரவு வீட்டுக்குப் போய் அண்ணி கையால் சாப்பிட்டுவிட்டு உறங்குவது அவர் வழக்கம். அன்று அம்பிகை அவரது நேரத்தை எடுத்துக் கொண்டுவிட்டாள்.

நள்ளிரவு தாண்டிய பிறகுதான் தியானத்திலிலிருந்து விழித்துக் கொண்டார். அம்பிகையின் நினைவில் தோய்ந்தவாறே இல்லம் சென்றார். வீடு உள்ளே பூட்டியிருந்தது. பாவம், அண்ணி எத்தனை நேரம் காத்திருந்தாரோ! அகாலத்தில் அண்ணியை எழுப்பித் தொந்தரவு செய்யவேண்டாம் என வெளித் திண்ணையிலேயே படுத்துக் கொண்டுவிட்டார்  வள்ளலார். 

அப்போது அவர் முன்னே அண்ணி வடிவில் தோன்றினாள் அம்பிகை. அவரைப் பார்த்து கலகலவெனச் சிரித்தாள். ""என்ன, இவ்வளவு தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்?'' என்று விசாரித்தாள்.



வந்தது அம்பிகை என வள்ளலார் அப்போது அறியவில்லை. அண்ணி என்றே கருதினார். ""ஆலயத்தில் திருவொற்றியூர் வடிவுடை அம்மனை தியானம் செய்ததில் நேரம் போனது தெரியவில்லை, அதுதான் தாமதமாகிவிட்டது!'' என்றார்.

""அம்பிகையை ஆலயத்தில் போய் பார்ப்பானேன்? என்னைப் பார்த்தால் போதாதோ?'' என்றாள்
அண்ணி!

வள்ளலார் திகைத்தார். ""என்ன அண்ணி சொல்கிறீர்கள்?'' என்று குழப்பத்துடன் கேட்டார்.

""எல்லாப் பெண்களுமே அம்பிகையின் வடிவம்தானே என்றேன்!'' என்றாள் அம்பிகை.

பிறகு, ""சரி, சரி, உட்கார். முதலிலில் பசிதீரச் சாப்பிடு!'' என்று அம்பிகை திண்ணையிலேயே வாழையிலையை விரித்தாள். உணவு பரிமாறினாள். வள்ளலாருக்கு

அன்று நல்ல பசி. அந்தப் பசிக்கு

அந்த உணவு தேவாமிர்தமாக இருந்தது!

""அண்ணி! வழக்கத்தைவிட இன்று சாப்பாடு மிக ருசியாக இருக்கிறதே? இன்று யார் சமைத்தார்கள்?'' என்று கேட்டார் வள்ளலார்.

""ஆமாம். தேவலோகத்திலிலிருந்து ஆள் வந்தார்கள் சமைக்க. போயேன். போய் கைகழுவு! பிறகு போய்ப் படுத்துத் தூங்கு'' என்ற அம்பிகை மெல்ல நடந்து மறைந்தாள். வள்ளலார் உணவின் சுவை பற்றி அதிசயித்தவாறே கை கழுவிவிட்டு உறங்கலானார்.

சற்று நேரத்தில் வீட்டுக் கதவு உள்ளிருந்து திறந்தது. வள்ளலாரின் உண்மையான அண்ணி வந்து அவரை எழுப்பினாள்.

""என்ன இது, கதவைத் தட்டி என்னை எழுப்பக் கூடாதா? சாப்பிடாமலேயே தூங்குகிறாயே?'' என்று கோபித்துக் கொண்டாள்.

""இப்போதுதானே சாப்பிட்டேன் அண்ணி! நீங்கள்தானே உணவு பரிமாறினீர்கள். சாப்பாடுகூட தேவாமிர்தமாக இருந்தது என்று உங்களிடம் இப்போதுதானே சொன்னேன்.' அதற்குள் நீங்களே மறுபடி வீட்டுக்குள்ளிருந்து வருகிறீர்களே?'' என்று ஆச்சரியத்தோடு வினவினார் வள்ளலார்.

அதன்பிறகுதான் புரிந்தது- சற்றுமுன் வந்தது அண்ணி அல்ல; அம்பிகை என்பது. வள்ளலாருக்குத் தன்னை தெய்வம் கவனித்துக் கொள்ளும் என்ற மன உறுதி வந்தது

அப்போதுதான். வள்ளலார் கண்களிலிலிருந்து கண்ணீர் வழிந்தது.

அம்பிகையின் அருள்

அவரை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

வள்ளலாரின் திருச்சரிதம் இப்படிப்பட்ட இன்னும் பல அற்புதமான சம்பவங்களை உள்ளடக்கியது. என்றும் வாழும் சித்த புருஷரான அவர் செய்த சித்து வேலைகளும் பலப்பல....

பல ஆண்டுகளுக்கு முன் ஒருநாள். சின்னம்மையின் வீடு. உச்சி வெய்யிலிலில் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தவாறு பிட்சை கேட்டு ஒரு துறவி சின்னம்மை வீட்டு வாயிலிலில் நின்றார்.

அவரைப் பார்த்து சின்னம்மை அதிசயித்தாள்.

அப்படியொரு ஒளிவீசும் திருமுகம். மேனியெங்கும் சிவச் சின்னமான திருநீறு. கண்களில் பார்த்தவர்களைக் கவர்ந்திழுக்கும் காந்த சக்தி.

தாய்மைக் கனிவோடு அவரை வீட்டுக்குள் அழைத்து விருந்தளித் தாள் சின்னம்மை. ஒரு துறவியான தனக்கு பாசத்தோடு விருந்து பரிமாறிய சின்னம்மை யையே கனிவோடு பார்த்தார் துறவி. உண்மையிலேயே அன்று அவருக்கு கடும் பசி. சின்னம்மையல்லவோ ஒரு தாய்போல் அவருக்கு உணவு பரிமாறினாள்! தேவி பராசக்தியின் திருவுருவம் தானே இந்தியத் தாய்மார்கள் எல்லாம்! துறவி மனம் நெகிழ்ந்தார். சின்னம்மையை மனமார வாழ்த்தினார்.

""பசித்த வயிற்றுக்கு அன்னமிட்டீர்கள். உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் உலகோருக்கெல்லாம் அன்னமிட முற்படுவான். மனிதர் களை மட்டுமல்லாமல் மிருகங்களையும்கூட நேசிப்பான். புலால் உணவை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வான். ஏன், தன் அளப்பரிய அன்பால் தாவரங் களைக்கூட நேசிப்பான்.

அவன் பெற்றோர் என்ற வகையில் உங்கள் பெயரும், உங்கள் கணவர் பெயரும் வரலாற்றில் இடம்பெறும்!''

துறவி திருநீறை எடுத்து சின்னம்மையின் கைகளில் இட்டார். உளமார்ந்த பக்தியோடு திருநீற்றைக் கண்மூடி நமச்சிவாய என ஜெபித்து நெற்றியில் இட்டுக் கொண்டாள் அவள். பின் கண்திறந்து பார்த்தாள். என்ன இது! எதிரே யாரையும் காணவில்லை.

ஓடோடிச் சென்று வாசலிலிலும் கொல்லையிலும் பார்த்தாள். எங்கும் யாரும் வந்த சுவடே தென்படவில்லை. அவர் சாப்பிட்ட இலையும் அவள் நெற்றியில் இருந்த திருநீறும் மட்டும் அவர் வந்ததன் அடையாளங்களாய் மிச்சமிருந்தன. அவள் கண்மூடி சிவபெருமானைத் தொழுதாள்.

அந்த மகான் வந்துசென்ற பிறகு சின்னம் மைக்கு ஒரு மகன் பிறந்தான். சின்னம்மை- ராமையா தம்பதிக்குப் பிறந்த ஐந்தாவது குழந்தை அவன். ராமலிலிங் கம் என பெயர்சூட்டி மகிழ்ந்தார் தந்தை.
பாசம்பொங்க அவனையே பார்த்துக் கொண்டிருப்பார் தந்தை. தெய்வீகக் களை அவன் முகத்தில். அவனைப் பார்த்தாலே மனதில் சாந்தி பிறந் தது. மக்களெல்லாம் வந்து வந்து குழந்தை யைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தார்கள். சின்னம்மைக்கு ராமலிலிங்கத்தைப் பற்றிதான் ஓயாத கவலை. எங்கே திருஷ்டி தோஷம் வந்துவிடுமோ என்று மணிக்கொரு முறை திருஷ்டி சுற்றிப் போடலானாள்.

அப்படி திருஷ்டி சுற்றிப் போட்டுப் போட்டு அவளுக்குக் கை வலிலித்தது!

ராமலிலிங்கம் பிறந்து ஐந்து மாதங்கள்தான் ஆகியிருக்கும். சிவபக்தர்களான அந்தத் தம்பதியினர் சிதம்பரம் கோவிலுக்குக் குழந்தையுடன் சென்றார்கள். முதலிலில் நடராஜர் தரிசனத்தை முடித்துக் கொண்டு பின்னர், இறைவனின் சந்நிதிக்கு வலப்புறத் தில் உள்ள சிதம்பர ரகசியத்தைப் பார்க்கச் சென்றார்கள்.

அன்றும் வழக்கம்போல் ஆராதனை நேரத்தில் சிதம்பர ரகசியமான வெட்ட வெளியின் திரை திறக்கப்பட்டது.

அந்த வெட்டவெளிக்கு தீபாராதனை நிகழ்த்தப்பட்டது. அடியவர்கள் எல்லாம் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.

அந்த நேரத்தில் திடீரென கலகலவென ஒரு குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டது. சிரித்தது ராமலிலிங்கக் குழந்தைதான்!

ஆனந்தத்தில் பரவசத்தோடு சிரித்துக் கொண்டே இருந்தது அது. பேரின்பம் பொங்கித் ததும்பிய அந்தக் குழந்தையின் முகத்தை தரிசிப்பதே ஒரு தெய்வீகக் காட்சியாக இருந்தது.

அந்தக் கணத்திலேயே- அந்த ஐந்தாவது மாதத்திலேயே ராமலிலிங்கக் குழந்தைக்கும் சிவபெருமானுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டு விட்டது. குழந்தை வளர்ந்து சிவபெருமானின்மேல் உள்ளத்தை உருக்கும் பக்திப் பாடல்களைப் புனையப் போகிறதே! அந்த அருட்பாக்க ளால் குழந்தையின் புகழ் உலகெல்லாம் பரவப்போகிறதே!

அதற்கான வித்து

அதன் ஐந்தாம் மாதத்திலேயே ஆழமாக ஊன்றப் பட்டுவிட்டது.

குழந்தை பெரும் பாலும் தனிமையை விரும்பியது. அதன் கண்களில் எப்போதும் ஒரு தேடல். துயரம் என்பதை அதன் எந்த நடவடிக்கையிலும் பார்க்க முடியவில்லை. கையில் எந்தப் பொருள் கிடைத்தாலும் எடுத்து வருவோரிடம் கொடுத்துக் கொண்டிருந்தது குழந்தை. ஆட்டுக் குட்டிகளிடமும் கன்றுக் குட்டிகளிடமும் மரம், செடி, கொடிகளி டமும் மிகுந்த பிரியம் காண்பித்தது குழந்தை.

குழந்தைக்கு ஆறுமாதம் இருக்கும்போது அந்தத் துயரச் சம்பவம் நடந்தது. அதாவது குழந்தை சிவதரிசனம் பெற்ற மறுமாதம்.

அந்தக் குழந்தையின் தந்தை காலமானார். சின்னஞ்சிறு வயதிலேயே தகப்பனில்லாத குழந்தை ஆயிற்று அது.

ஆனால் இந்தப் பிறவியில் வந்த தகப்பனைப் பற்றி அது அக்கறைப்பட வில்லை போன்று தோன்றியது. எல்லாப் பிறவியிலும் தகப்பனாக இருக்கும் சிவபெருமான்மேல் இளம்வயதிலேயே  குழந்தைக்குப் பாசம் தோன்றியது. 

தந்தையை இழந்த ஐந்து குழந்தைகளுடன் தாய் சின்னம்மை எப்படிக் காலம் தள்ளு வாள்? புதல்வர்கள் சபாபதி, பரசுராமன், ராமலிலிங்கம் என மூவர்; புதல்விகள் சுந்தரம்மாள், உண்ணாமுலை அம்மாள் என இருவர். இந்த ஐந்து மக்கட்செல்வங்களோடு சின்னம்மை தன் பிறந்த ஊரான சின்னக் காவனத்திற்குச் சென்றாள். தற்போதைய திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி அருகில் அமைந்த கிராமம் அது.

நீண்ட காலம் சின்னம்மை அந்த ஊரில் வசிக்கவில்லை. விரைவில் குழந்தைகளுடன் சென்னை சென்றாள். சென்னையில் குடியேறிய சிறிது காலத்தில் சின்னம்மை உயிர் நீத்தாள்.

அதன்பின் ராமலிலிங்கத்தின் அண்ணியே அவரது தாயும் ஆனாள். தன் சொந்த மகன் போன்றே ராமலிலிங்கத்தின்மேல் பாசம் காட்டி வளர்த்தாள் அந்த அபூர்வமான அண்ணி. 

அண்ணன் சபாபதி, காஞ்சி சபாபதி முதலிலியாரிடம் முறையாகத் தமிழ் கற்றவர். தமிழின் இலக்கண இலக்கியங்கள் அனைத் திலும் தேர்ச்சி அடைந்தவர். தமிழாசிரியரா கவும் சிவபுராண விரிவுரையாளராகவும் பணிபுரிந்து அதில் கிடைத்த பொருளைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். அவரது பெரியபுராணச் சொற்பொழிவுகளால் கவரப்பட்ட செல்வந்தர்கள் பலர் அவரை ஆதரித்தார்கள்.

அண்ணன் தன் அன்புத் தம்பியை நல்ல முறையில் கல்வி கற்பித்து வளர்க்க முற்பட்டார். தான் பயின்ற சபாபதி முதலியாரிடமே தம்பியையும் கல்வி கற்க அனுப்பி வைத்தார்.

இயற்கையிலேயே மெய்ஞ்ஞானம் பெற்ற ராமலிலிங்கத்திற்கு முறையான படிப்பில் ஒரு சிறிதும் நாட்டம் தோன்றவில்லை. இலக்கணம் பயிலும் முன்னரே கவிதை எழுதத் தொடங் கிய ராமலிலிங்கத்தின்மேல் அந்த ஆசிரியருக் கும் அக்கறை பிறக்கவில்லை. ராமலிலிங்கத்திற் குக் கல்வியில் நாட்டமில்லை என்ற தகவலை அண்ணனுக்கு அறிவித்தார் அவர். 

அண்ணன் அடைந்த வருத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. பள்ளிக்குச் செல்லாத தம்பியை இனி வீட்டில் சேர்க்க வேண்டாம்; சாப்பாடு போட வேண்டாம் என உத்தரவு போட்டார் அண்ணன். சொந்த மகனைப்போல் கருதி மைத்துனன்மேல் பாசம் செலுத்திய அண்ணி யின் மனம் உருகிக் கரைந்தது. அண்ணனுக் கும் தம்பிமேல் தாளாத பாசம் உண்டுதான். ஆனால் தம்பியைத் திருத்த வேண்டும் என்று தான் அண்ணன் அவ்விதம் நடந்து கொண்டார்.

கணவனின் உத்தரவு, மகனே போன்ற மைத்துனன்மேல் கொண்ட தாய்ப்பாசம்... இரண்டுக்கும் இடையில் ஊசலாடியது அண்ணியின் மனம். அவள் ஒரு முடிவெடுத் தாள். "அண்ணன் இல்லாத வேளையில் புறக் கடை வழியாக வந்து சாப்பிட்டுவிட்டுப் போ' என்று அண்ணி ராமலிலிங்கத்திடம் கெஞ்சினாள். கொஞ்ச காலம் ராமலிலிங்கத் தின் வயிற்றுப்பசி அப்படி அடங்கியது. யாரும் அறியாதவாறு தனிமையில் தியானமும் தவமும் செய்து வந்தார் ராமலிலிங்கம்.

அந்தக் காலத்தில்தான் ராமலிலிங்கத்தின் தாயாரின் திவச தினம் வந்தது. அண்ணன் சபாபதி திவச சடங்கை நடத்தி முடித்தார். எல்லாரும் அறுசுவை உணவுண்டார்கள்.

ஆனால் அண்ணி சாப்பிடவில்லை. சாப்பாடு அவள் தொண்டையில் இறங்க வில்லை. ராமலிலிங்கம் சாப்பிடாமல் தான் சாப்பிடுவதா? அவள் புறக்கடையில் ராமலிலிங் கத்தின் வருகைக்காக காத்திருந்தாள்...

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :