|
|
இந்து மதம் இந்திய மண்ணின் கண் போன்றதாகும். ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள தாய்லாந்து, பாங்காக் போன்ற இடங்களிலும் நமது புராணகால வழிபாடுகள் இருந்துள்ளன; இருந்து வருகின்றன. புத்த மதம் தோன்றிப் பரவுவதற்குமுன் ஆசிய கண்டத்திலுள்ள பல நாடுகளில் இந்து மதம் பின்பற்றப்பட்டு, போற்றப்பட்டு வந்துள்ளது. அவற்றில் கம்போடிய நாடும் ஒன்று.கம்போடியா, இந்தோ பெனின்சுலாவின் தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது.இது 1,81,035 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நாடு. இதன் வடமேற்கு திசையில் தாய்லாந்தும், கிழக்கில் வியட்நாமும் உள்ளன.கம்போடிய நாட்டின் மக்கள் தொகை 14.8 மில்லியன் ஆகும். கம்போடிய நாட்டு மக்களில் 95 சதவிகிதத்தினர் "தெரவாட' எனும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் கிமர் (ஃட்ம்ங்ழ்) எனும் மொழி பேசுகின்றனர். இம்மொழியில் கம்போடியா என்பது கம்ப்போச்சியா என்று அழைக்கப் படுகிறது. கம்போடிய நாடு கிமர் ராஜ்ஜியம் (ஃட்ம்ங்ழ் ஃண்ய்ஞ்க்ர்ம்) என்று அழைக்கப்படுகிறது. இங்கு வியட்நாம் மக்கள், சீன மக்கள், ச்சார்ம்ஸ் எனப்படும் மக்கள் ஆகியோர் வாழ்கின்றனர். கம்போடிய நாட்டின் தலைநகரம் ஃப்நாம் ஃபென் (டட்ய்ர்ம் டட்ங்ய்) ஆகும். கம்போடியா, 19-ஆம் நூற்றாண்டு வரை மிகவும் செல்வச் செழிப்புள்ள நாடாக இருந்து வந்துள்ளது.பட்டுத்துணி நெய்தல், அழகிய துணி வகைகள் தயாரிப்பு, விவசாயம், கட்டிடக் கலை, சுற்றுலாத் துறை ஆகியவற்றில் ஈடுபடும் இந்நாட்டு மக்களுக்கு மேற்கூறிய தொழில்கள் பல நாடுகளுட னான வர்த்தக மேம்பாட்டிற்கு பெருமளவு உதவியாக உள்ளன.அரிசி சாதம் மற்றும் மீன் வகைகள் இவர்களது உணவில் முக்கியமாக இடம்பெறுகின்றன. உலகத்திலேயே அதிக அளவில் அரிசி உணவு சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் கம்போடிய மக்கள். பொரித்த அரிசி கேக், பசலைக்கீரை, க்ரில் (ஏழ்ண்ப்ப்) செய்யப்பட்ட மீன் வகைகளையும் காய்கறிகளையும் சாப்பிடுகின்றனர். தவளை, வெட்டுக்கிளி, தட்டான், ஈசல் போன்றவற்றை எண்ணெயில் பொரித்து உண்கின்றனர்.சமையலுக்கு பட்டை, கிராம்பு போன்ற மசாலா பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். "அமோக்' எனப் படும் குறிப்பிட்ட சில மளிகைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட மசாலா தூள், இவர்களது சமையலில் பிரசித்தி பெற்றதாகும்.மசாஜ் எனப்படும் உடல் தேய்ப்பு, கால் தேய்ப்பு தொழில்கள், இங்கே ஒரு கலையாகப் போற்றப்படும் தொழில்களாக நடத்தப்பட்டு வருகின்றன.இங்கே விவசாயம், வியாபாரம், கடைகள் ஆகிய வற்றை பெரும் பாலும் பெண்கள் தான் நடத்தி வருகின்றனர். இப்பெண்களின் சுறுசுறுப்பு காண்போரை வியக்க வைக்கும்.சுற்றுலா தலங்களில் மிக முக்கியமானதாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் மதிக்கப்படும் ஆங்கோர் (ஆய்ஞ்ந்ர்ழ்) எனப்படும் மிகப் பழம்பெரும் கோவில்கள், இந்நாட்டின் சிறப்புகளுக்கு மணிமகுடமாகத் திகழும் பெருமைக்குரியதாகும்.உலக அளவில், இந்து மதத்தின் அடையாளமாக இக்கோவில்கள் மதிக்கப்படுகின்றன.இவற்றுள் "ஆங்கோர் வாட்' (ஆய்ஞ்ந்ர்ழ் ஜ்ஹற்) என்று அழைக்கப்படும் கோவிலின் வரலாறு, சிறப்பம்சங்கள் பற்றி இப்போது பார்ப்போம். சுமார் 12-ஆம் நூற்றாண்டில், இரண்டாம் சூரிய வர்மன் என்ற மன்ன னால் திருப்பணி தொடங்கப் பெற்ற இவ்வாலயம், அதன்பின் ஜெயவர்மன் எனும் மன்ன னால் தொடர்ந்து கட்டப்பட்டது. ஜெயவர்மனுக்குப் பின்னர் கம்போடிய நாட்டை ஆண்ட மன்னர்கள் கோவிலை மேம்படுத்தியுள்ளனர்.ஒரே மன்னனால் இக்கோவிலை அவனது காலத்திற்குள் கட்டி இருக்க முடியாது. ஏனென்றால் இக்கோவில், தொடர்ந்து 300 ஆண்டுகள் முதல் 400 ஆண்டுகள் வரை கட்டப்பட்டு வந்துள்ளது என்று குறிப்புகள் உள்ளன.தற்போது இக்கோவிலின் சிற்பங்கள் பல சிதிலமடைந்து இருப்பினும், இங்கு காணப் படும் சிற்பங்களின் கலைநயம், அழகு, கற்பனை வளம் ஆகியவை பிரமிக்க வைக்கின்றன. மன்னர்கள், போரில் தாங்கள் வெற்றி பெற்றதைக் கொண்டாட கோவிலைக் கட்டியுள்ளனர்.ஆங்கோர் வாட் கோவிலின் முன்பக்க நுழைவாயில், அடுக்கடுக்காக மூன்று கோபுரங்களை உடையதாக அமைந்துள்ளது. இக்கோவில், இடது புறமிருந்து வலது புறம் வரை 230 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. இக்கோவிலின் சிற்பங்களைக் கண்டு ரசிக்க நமது இரண்டு கண்கள் போதாது.மன்னர்கள் ஆண்ட காலத்தில் யானை, ரதம் (ஈட்ஹழ்ண்ர்ற்) போன்றவை செல்லும் வசதிக்கேற்ப பாதை அமைக்கப்பட்டுள்ளது.இங்கே மூலவராக நிர்மாணிக்கப் பட்டிருந்த விஷ்ணு பகவானின் உருவச்சிலை இப்போது இடம்மாறி, கோவிலின் வலது பக்கம் வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷ்ணுவுக்கு எட்டுக் கரங்கள் உள்ளன. இந்த விஷ்ணு சிற்பம் மிகப் பெரியதாக இருப்பதால், மூலவராக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இக்கோவில், விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும், கடவுளின் அரண்மனை என்றும் கூறப்படுகிறது. ஆதியில் சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களை மையப்படுத்தி கட்டப்பட்ட இக்கோவிலில், பின்னர் புத்தர் சிலைகளும் இடம்பெற்றுள்ளன. இந்து மத தெய்வங் களான சிவன், விஷ்ணு ஆகியோர் இருக்க, இடையில் புத்தர் உருவச் சிலைகள் உருவானதற்குரிய காரணம் என்ன? இக்கோவில் சிற்பங்கள் சிதிலமடைந்ததற்குக் காரணம் என்ன? இங்குள்ள சிற்பங்கள் விளக்கும் காட்சிகள் மற்றும் அவை புலப்படச் செய்யும் நிகழ்ச்சிகள் என்ன? மனதிற்குள் ஆர்வமான கேள்விகள் தோன்றுகின்றன அல்லவா? அடுத்த "ஓம்' இதழ் வரும் வரை காத்திருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.(தொடரும்)
|
|
|
Name |
: |
arumugam |
Date & Time |
: |
7/24/2012 4:08:32 PM |
-----------------------------------------------------------------------------------------------------
வெரி உஸ் புல் ஓல்ட் ஹிச்டோரி . நக்கீரன் க்கு நன்றி . -----------------------------------------------------------------------------------------------------
|
|
|