அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
Logo




         வ்வாண்டு IAS தேர்வில் இந்திய அளவில் 115-வது ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்திருக்கும் R. ராமச்சந்திரன் பொது அறிவு உலகம் இதழுக்காக பேட்டியளித்தார்.

வணக்கம். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றதற்கு பொது அறிவு உலகம் இதழ் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்  கொள்கிறோம்.

நன்றி சார்...

இந்த வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்?

எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கஷ்டப்பட்டது வீண்போகலை. என்னை படிக்க வைத்து எனது வெற்றிக்கு உறுதுணை யாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் குடும்பம், படிப்பு பற்றி கூறுங்கள்?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுக்காவிலுள்ள கொல்லப்பட்டி கிராமம் எனது ஊர். அப்பா ஓய்வுப்பெற்ற அரசு அலுவலர். அம்மா குடும்பத் தலைவி. ஊத்தங் கரை வித்யா மந்திர் பள்ளியில் 12-ஆம் வகுப்புவரை படித்தேன். சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி. விலங்கியல் படித்து முடித்தபின், டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகத்தில் சட்டப் படிப்பு  படித்தேன். லயோலா கல்லூரியில் படிக்கும்பொழுது IAS ஆக வேண்டும் என தீர்மானித்தேன். அப்பொழுதிலிருந்து சிவில் சர்வீசஸ் தேர்விற்காக தயார் செய்து வந்தேன். நான்குமுறை முயற்சி செய்து ஐந்தாவது முறை வெற்றி பெற்றுள்ளேன்.

விலங்கியல் படிப்பே சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத போதுமானது, அப்படியிருக்க சட்டம் எதற்கு படித்தீர்கள்?

இந்திய அரசு நிர்வாகமே சட்டத்தின் அடிப்படையில்தான் நடைபெறுகிறது. ஒரு ஒஆந அதிகாரியாக பணியாற்றுபவர் சட்டம் படித்திருந்தால் பல நேரங்களில் அது கை கொடுக்கும். அந்த நோக்கத்தில்தான் சட்டப் படிப்பை படித்தேன். அதோடு எனது அண்ணன்கள் இருவரும் சட்டம் படித்தவர்கள். இதுவும் எனக்கு தூண்டுகோலாக அமைந்தது.

என்னென்ன விருப்பப்பாடங்களை தேர்ந்தெடுத்தீர்கள்?

மெயின் தேர்வில் புவியியல் மற்றும் உளவியல் பாடங்களை தேர்ந்தெடுத்தேன். உளவியல் பாடம் எனக்கு மிகவும் விருப்பமான பாடம் என்பதால் அதை தேர்ந்தெடுத்தேன்.

தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?

பொது அறிவு, புவியியல் பாடத்திற்கு NCERT  புத்தகங்களை படித்தேன். தினமும் 6 மணி நேரம் படிப்பேன். மேலும் நண்பர் களுடன் குழுவிவாதம் செய்தது மிகவும் உதவியாக இருந்தது. மாறி மாறி கேள்விகள் கேட்பது, படிக்க கேட்பது என குழுவிவாதம் சிறப்பாக இருந்தது. இதனால் தயார் செய்வதும் மிக எளிமையாக இருந்தது. எவ்வளவு நேரம் படிப்பது என்பதைவிட எவ்வளவு ஆழமாகவும் உன்னிப்பாகவும் படிப்பது என்பதே முக்கியம்..



CSAT தேர்வை எப்படி அணுகினீர்கள்?

CSAT தேர்வு எழுதுமுன் அத்தேர்வுதாளில் கணித கேள்விகள் அதிகமாக கேட்கப்படுமோ என நினைத்திருந்தேன். ஆனால் அவ்வாறு இல்லாமல் இரண்டு மூன்று கேள்விகள் மட்டும் கேட்டிருந்தார்கள். Comprehensive  கேள்விகள் அதிகளவில் கேட்கப்பட்டிருந்தன.  இருந்தாலும் நல்லமுறையில் தயார் செய்ததால் அத்தேர்வு எளிதாக இருந்தது. மேலும் மெயின் தேர்வுக்கான புவியியல் பாடத்திற்கு சங்கர் IAS அகாடமியில் சிறந்த பயிற்சி வழங்கியதால் மெயின்தேர்வு சிறப்பாக எழுதமுடிந்தது. உளவியல் பாடத்திற்கு டோர் IAS  அகாடமி  அருண்சார் பயிற்சி அளித்தார்.

நேர்முகத் தேர்வு எப்படி இருந்தது?

நேர்முகத்தேர்வில் அதிகாரிகள் மிக சகஜமாக கேள்வி கேட்டனர். அரை மணிநேரம் இயல்பாக கேள்விகளை கேட்டதால் பதற்றமில்லாமல் தெளிவான பதில்களை அளிக்க முடிந்தது. நேர்முகத் தேர்வை பொருத்த வரை நம்மை அதிகமாக பேசவைத்து உன்னிப்பாக கவனிக்கிறார்கள். நாட்டு நடப்பு, விருப்பப் பாடத்தில் ஆழ்ந்த அறிவு, அறிவு கூர்மையான கவனிப்பு இருந்தால் நேர்முகத்தேர்வை திறமையாக எதிர்கொள்ளலாம்.

சிவில் சர்வீசஸ் தேர்வை தயார் செய்பவர் களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

IAS தேர்வு மிக மிக கடினமான தேர்வல்ல. எளிமையானதுதான். பாடங்களில் எதைப் படிக்க வேண்டும், எதை படிக்கக்கூடாது என்பதை புரிந்து கொண்டு, நன்கு தயார் செய்தால் இந்தத் தேர்வில் மிக எளிதில் வெற்றி பெற்றுவிடலாம். அதேபோல்  CSAT   தேர்வு சமீபகாலங்களில் கொஞ்சம் கடினமாகத் தான் கேட்கப்படுகிறது. இந்த தேர்வை எழுதும் மாணவர்கள்  CSAT  தேர்வுக்கு முறைக்கு முன் ஏறக் குறைய 120 பேர் வெற்றிபெறுவார்கள்.  CSAT  தேர்வு முறைக்குபின் வெற்றி பெறுபவர் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது. இது இன்னும் குறைய வாய்ப்புள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆங்கிலத்தில் கேட்கப்படும் ஈர்ம்ல்ழ்ங்ட்ங்ய்ள்ண்ஸ்ங்  மற்றும் பிற கேள்விகள் மிக கடினமாக கேட்கப்படுவது தான். அதனால் சிவில் சர்வீசஸ் தேர்விற்கு படிப்பவர்கள் ஆங்கில அறிவை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். விருப்பப் பாடங்களை தொடர்ந்து படிக்க வேண்டும். இத்தேர்விற்கு இரண்டு வருடங்கள் அர்ப்பணிப்புடன் படித்தால் நீங்களும் ஒஆந  ஆகலாம்.

 நேர்காணல்: எஸ்.செல்வராஜ்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(4)
Name : Meongk Date & Time : 6/22/2012 10:41:48 AM
-----------------------------------------------------------------------------------------------------
The accindet of finding this post has brightened my day
-----------------------------------------------------------------------------------------------------
Name : mahalakshmikannan Date & Time : 6/21/2012 9:50:07 AM
-----------------------------------------------------------------------------------------------------
very very congratz and proud i am also an advocate practicing at mannargudi. you give your best
-----------------------------------------------------------------------------------------------------
Name : Babu Date & Time : 6/19/2012 2:16:43 PM
-----------------------------------------------------------------------------------------------------
காங்கிர்த்ஸ், நேர்மையான முறையில் நடந்து கொள்ளுங்கள் இந்தியவை உங்களால் முயன்றதை மாற்றுங்கள் நன்றி பாபு
-----------------------------------------------------------------------------------------------------
Name : manikumar Date & Time : 6/7/2012 2:23:29 PM
-----------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துக்கள் ராமச்சந்திரன் சார் ....
-----------------------------------------------------------------------------------------------------