24/7 செய்திகள்
நக்கீரன் சினிமா
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
முந்தைய செய்திகள்
சுற்றுலா
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது
||
ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி
||
பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது!
||
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு
||
உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி
||
குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட்
||
பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு
||
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு
||
ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்)
||
கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல்
||
உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக
||
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு!
||
ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
||
ஓம்
கல்வி, செல்வம், வீரம்
......................................
பகை விலக்கி மங்களம் தரும் உபாசனை!
......................................
ஆன்மாவின் சுதந்திரம்
......................................
ஒன்பது கோடியை இழந்து...
......................................
கம்பர் வணங்கிய கடவுள் யார்?
......................................
ஜூன் மாத ராசிபலன்
......................................
அனுமனின் கதையே..
......................................
வைகாசி விசாகம்
......................................
குழந்தை வடிவில் குமரன்!
......................................
மறுபிறப்பு அறுக்கும்
......................................
கந்தனின் 16 நாமங்கள்
......................................
கலியுகத் துன்பங்கள் எல்லாம்...
......................................
சக்கரத்தாழ்வார் ஜெயந்தி
......................................
ஜூன் மாத எண்ணியல் பலன்கள்
......................................
ஆனித் திருமஞ்சனம்
......................................
எட்டு இடங்களில் ஜீவசமாதி...
......................................
01-06-12
|
: Email this Article
சு
தர்சனர் என்ற சொல்லுக்கு நல்வழி காட்டுபவர், காண்பதற்கு இனியவர் என்று பொருள். ஆனி மாத சித்திரை நட்சத்திர நாளில் சுதர்சன ஜெயந்தி விழா கொண்டாடுவார்கள்.
சுதர்சனரின் வடிவங்களை சில்ப ரத்தினம் என்ற நூல் வர்ணிக்கிறது. பொதுவாகத் திருக்கோவில்களில் எட்டு அல்லது பதினாறு கரங்களுடன் வீறுகொண்டு எழும் தோற்றத் துடன் இருக்கும் வடிவை கல்லிலும் செம்பிலும் காணலாம்.
வழிபாட்டு முறை
ஸ்ரீசுதர்சனர் வழிபாட்டில் ஆறு மற்றும் அதன் மடங்குகளில் மௌனமாகப் பிரதட்சிணம் செய்வதுண்டு. இதனை ஆசாரமாகச் செய்தல் நலம். இதனைத் துவங்குகையில் நெய்விளக்கேற்றி வைத்துவிட்டு, ஒவ்வொரு பிரதட்சிணத்திற் கும் ஒரு பழமோ அல்லது வேறு பொருட் களோ சந்நிதி வாசலில் வைத்து எண்ண வேண்டுமென்ற நியமங்கள் உள்ளன. மண்டலத்தை முடிக்கும்போது கோதுமைப் பாயசம் நிவேதனம் செய்வது இந்த பகவானுக்கு உகந்ததாகும். (இவையனைத் தையும் கும்பகோணம் சக்கரபாணி சுவாமி சந்நிதியில் பக்தர்கள் பின்பற்றுவதைக் காணலாம்.)
சுதர்சன வழிபாட்டில் எந்திர உபாசனை மிக முக்கியமானது. சுதர்சன சக்கர எந்திர
அமைப்பு இருவகையால் ஆனது. செப்புத் தகட்டில் வரிவடிவில் முக்கோணம், ஷட் கோணம் போன்ற கோண அமைப்பில் வழிபடுவது ஒரு முறை; விக்ரக ஆராதனை மற்றொரு முறை. சிவப்பு மலர்கள் உகந்தவை.
சுதர்சன உபாசனை வீரம் அளிக்க வல்லது; தீராத நோய்களைத் தீர்க்கும்; போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். சுருங்கக்கூறின், எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது. சிறந்த சுதர்சன உபாசியாக விளங்கிய சுவாமி தேசிகர் ஸ்ரீ சுதர்சன அஷ்டகம் என்ற பாமாலையினை சக்கரத்தாழ்வாருக்குச் சூட்டியிருக்கிறார்.
மகாவிஷ்ணுவின் வாமன
அவதாரத்தின்போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில்
அமர்ந்து சுக்கிரனின் கண்ணைக் கிளறி அழித்த வர் சுதர்சனர். இராவண னின் முன்னோர்களான மால்யவான், சுமாலி என்ற கொடுமையான
அரக்கர்களை தண்டிக்க கருடாரூடனாய் இலங்கை சென்ற பகவான், சுதர்சன சக்கரத்தால் அவர்களை அழித்தான்.
காசிநகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து, "நானே உண்மையான வாசுதேவன்' என்று பௌண்டரீக வாசுதேவன் என்ற வலிமைமிக்க மன்னன் கூறிவந்தான். கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தான். கருடன்மேல் ஏறிச்சென்ற கண்ணன் ஆழியினால் அவனைக் கொன்றான்.
கண்ணனின் நெருங்கிய நண்பனான சீமாலி, எல்லா ஆயுத பிரயோகங்களையும் தனக்குக் கற்பித்த கண்ணன் சக்கராயுதத் தைப் பயிற்றுவிக்க வில்லை என குறை கூறினான். தனக்கே யுரிய அதனை வேறு எவராலும் ஆள முடி யாது என கண்ணன் எவ்வளவோ எடுத் துரைத்தும், ஆணவம் கொண்ட சீமாலி தன்னால் முடியாதது ஒன்றுமில்லை என்று கூறினான். வற்புறுத்தலின் பேரில் கண்ணன் தன் சக்கரத்தைத் தந்தான். கண்ணனைப் போலவே
அதை ஆகாயத்தில் வீசி எறிந்து மீண்டும் கையில் ஏந்த முயன்ற சீமாலியின் தலை அறுபட்டது.
தேவர்கோன் முதலான சகல தேவர்களும் பரமசிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து சக்கரத்தாழ்வாரை வழிபட்டு திருவருளைப் பெற்றார்கள்.
"ஸ்நானே, தானே, ஜபாதௌச
ச்ராததே சைவ விஷேத
சிந்தநீய சக்ரபாணி: ஸ்ர்வா
கௌக விநாசந ஸர்வ கர்மஸு
பூர்ணம் ஸ்யாத் ஸத்யம் ஸத்யம்
ஹி நாரத.'
ஸ்ரீ சுதர்சனர், ஸ்நானம், தானம், தவம், ஜெபம் முதலியவற்றை எடுத்துக்காட்டி, எக்காலத் தும் தியானிக்கத்தக்கவர் என பிரம்மன் நாரதருக்குக் கூறுவதாகத் தெரிவிக்கிறது புராணம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சுதர்சனரின் அற்பு தத் திருமேனிகளை வணங் குங்கள்; நலம் பெறுங்கள்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.