அண்மைச் செய்திகள்
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா? || உதயநிதியின் காரை திருப்பிக் கொடுத்தது சி.பி.ஐ. || ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர் || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: 15 பேர் மீது வழக்கு பதிவு || ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை || சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது || நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார் || சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம் || அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும் || மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது || கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம் ||
Logo
ஓம்
கல்வி, செல்வம், வீரம்
......................................
பகை விலக்கி மங்களம் தரும் உபாசனை!
......................................
ஆன்மாவின் சுதந்திரம்
......................................
ஒன்பது கோடியை இழந்து...
......................................
கம்பர் வணங்கிய கடவுள் யார்?
......................................
ஜூன் மாத ராசிபலன்
......................................
அனுமனின் கதையே..
......................................
வைகாசி விசாகம்
......................................
குழந்தை வடிவில் குமரன்!
......................................
மறுபிறப்பு அறுக்கும்
......................................
கந்தனின் 16 நாமங்கள்
......................................
கலியுகத் துன்பங்கள் எல்லாம்...
......................................
சக்கரத்தாழ்வார் ஜெயந்தி
......................................
ஜூன் மாத எண்ணியல் பலன்கள்
......................................
ஆனித் திருமஞ்சனம்
......................................
எட்டு இடங்களில் ஜீவசமாதி...
......................................

ஜூன் மாத ராசிபலன்

மேஷம்

இந்த மாதம் உங்கள் தகுதி, திறமை, ஆற்றல், கௌரவம் ஆகியவை அற்புதமாக விளங்கும். "கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' என்பதுபோல உங்கள் கௌரவம் காப்பாற்றப் படும். படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மேற்படிப்புக்கான முயற்சிகளில் வெற்றி ஏற்படும். விருப்பப் பாடத்திட்டம் கைகூடும். சிலர் பெற்றோரைவிட்டுப் பிரிந்து வெளி யிடத்தில் தங்கிப் படிக்கும் வாய்ப்பு உண்டா கும். பொதுவாக, அனைவருக்கும் ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். இந்த ராசிப் பெண்கள் சிலருக்கு மாமியார்- மருமகள் பிரச் சினையில் 'ஈகோ' உணர்வு ஏற்படும். பெரியவர்கள் சில விஷயங்களில் புத்தி சொல்லுவது உங்களுக்கு நல்லது தான். அதனால் வாலிப வயதினர் வருத்தப்படக்கூடாது. ஏனென்றால் முதுமையடைந்ததும்  சரித்திரம்  உங்கள் பக்கம் திரும்பும்.

ரிஷபம்

இந்த மாதம் உங்களுக்கு ஆயுளைப் பற்றிய கற்பனை பயமும் கவலையும் ஏற்படலாம். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எந்த வேலையைத் தொட்டாலும் நினைத்தோம் முடித்தோம் என்ற நிலை மாறி, வழவழா கொழகொழா என்று ரப்பர் மாதிரி இழுத்துக் கொண்டே போகும். பசித்தவன் பழங்கணக் கைப் பார்த்த மாதிரி, பழைய கால அனுபவங் களை ஒப்பிட்டுப் பார்த்து ஏங்குவீர்கள். அன்று உங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு செயல்பட்டவர்கள்  எல்லாம் இன்று உங்களை உதாசீனம் செய்தும் ஓரம் கட்டியும் உங்களை "ஓவர் டேக்' செய்தும் செயல்படும்போது, எல்லாமே உங்களுக்கு வெறுப்பாகிவிடும். உங்கள் அருமையும் பெருமையும் இப்போது தெரியாது. உங்களுக்குப் பிறகுதான் உணருவார் கள். ஓல்டு இஸ் கோல்டு! காய்ந்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம். அதுவும் ஒருநாள் காய்ந்த சருகாகிவிடும் என்ற உண்மை இப்போது புரியாது. இதுதான் காலத்தின் கட்டாயம்.

மிதுனம்

இந்த மாதம் எந்தக் காரியத்திலும் எந்தச் செயலிலும் மந்த நிலையும் அசமந்தமும் காணப்படும். ஆனா லும் மனம் தளராமல், விடாமுயற்சியும் நம்பிக்கையும் கொண்டு முடிவில் நினைத்ததை முடிப்பீர்கள். அதைத் தான் திருவள்ளுவர் "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்' என்றார். அது உங்கள் வகையில் சரியாக அமையும். அதுமட்டுமல்ல; "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியராகப் பெறின்' என்றும் கூறியுள்ளார். வைராக்கியமும் முயற்சியும் உங்களுக்கு வெற்றி தேடித் தரும். முயற்சி திருவினையாக்கும் என்றாலும், அதற்கு தெய்வானுகூலமும் அமைந்துவிட்டால் போனஸ் கிடைத்த மாதிரி- ஊக்கத்தொகை (இன்சென்டிவ்) கிடைத்துவிடும். நினைப்பதும் செயல்படுத்து வதும் உங்கள் கடமை; அதை நிறைவேற்றி வைப்பது இறைவன் திருவருள்!

கடகம்

இந்த மாதம் உங்கள் செயல்பாடுகளில் முன்னேற்றமும் வளர்ச்சியும் வெற்றியும் நன்றா கத் தெரியும். தெரிந்தோ தெரியாமலோ சக்திக்குமீறிய சில செயல்களில் ஆழம் தெரியாமல் காலைவிட்ட மாதிரி துணிந்து இறங்கிவிடுவீர்கள். பிறகு தயங்கித் தடுமாறு வீர்கள். அதனால்தான் திருவள்ளுவர், "எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்றார். கடக ராசி அன்பர்கள் இருவகையினர். சுயநலத்தோடு செயல்படுபவர் ஒருவகை; பொதுநலத்தோடு செயல்படுபவர் இன்னொரு வகை. சுயநல வாதிகள் பக்கா கிரிமினல்வாதிகள். காரியமா கும் வரை காலைப் பிடிப்பார்கள்; காரியம் நிறைவேறியதும் காலைவாரி விடுவார்கள். பொதுநலமாகச் செயல்படுகிறவர்கள் தியாக உள்ளம் படைத்தவர்கள். போட்டிருக்கும் சட்டையைக்கூட கழற்றிக் கொடுத்துவிடும் அன்பாளர்கள். முன் ரகத்துக்கு ஆண்டவன் அள்ளிக்கொடுப்பான்; ஆனால் கைவிட்டு விடுவான். பின் ரகத்துக்கு கஷ்டத்தில் கை தூக்கிக் காப்பாற்றுவான். ஆகவே கடவுளின் அனுதாபத்துக்குரிய நல்லவர்களாக மாறுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் எதிலும் தலைமை நிர்வாகம், தனித்தன்மையாகச் செயல்படக் கூடியவர்கள் என்றாலும், நரித்தந்திரம் படைத்த வர்களிடம் ஏமாந்து போய்விடுவார்கள். துரியோதனன் நல்லவன்தான். அவனை சகுனி கெட்டவனாக மாற்றிவிட்டான். பங்காளிப் பகையைத் தூண்டிவிட்டு பகை நெருப்பைத் தூண்டிவிட்டான். அதேபோல இராவணன் நல்லவன்தான். அவனை மாற்றான் மனைவி மேல் மையல் கொள்ளும்படி தங்கை சூர்ப்ப னகை தூண்டிவிட்டாள். ஒருவன் மண்ணாசை யால் கெட்டான்; இன்னொருவன் பெண் ணாசையால் கெட்டான். நீங்கள் ஆணவத்தை அடக்கி ஆண்டவன் அருளைத் தேடினால் காட்டரசன் மாதிரி வீட்டரசனாகி, மற்றவர் களின் பாராட்டுக்கு ஆளாகலாம். உங்களுக்குள் அடங்கிக்கிடக்கும் ஆற்றல், அறிவு, செயல்பாடு ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்தினால் எல்லாருக்கும் இனியவராக வாழலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு ஜென்மச் சனி (வக்ர சனியாக) செப்டம்பர் வரை நடந்தாலும் குருப்பெயர்ச்சி அனுகூலமாக அமைகிறது. 9-ல் இருக்கும் குரு சனியைப் பார்ப்பது ஒரு திருப்புமுனை. அதேசமயம் 9-ல் கேதுவும் 3-ல் ராகுவும் சம்பந்தப்படுவதால், தீக்குச்சிக்குச் சமமாக உங்கள் செயல்பாடுகள் அமையும். தீக்குச்சி தீபம் ஏற்றவும் பயன்படும்; ஒரு வீட்டைக் கொளுத்தவும் பயன்படும். "தினை விதைத்தவன் தினை அறுப்பான்-. வினை விதைத்தவன் வினையறுப்பான்' என்று முன்னோர்கள் சொன்ன மாதிரி,  உங்கள் எண்ணமும் செயலும் நல்லதாக அமைந்தால் எல்லாம் நல்லதாகவே அமையும். சகவாச தோஷத்தால் நம்பக்கூடாதவர்களை நம்பி, நம்ப வேண்டிய நல்லவர்களை வருந்தச் செய்தால், யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டமாதிரி- நுனி மரக்கிளையில் அமர்ந்து அடிமரக்கிளையை வெட்டுவதாக அமைந்துவிடும்.

துலாம்

இந்த மாதம் முழுவதும் எட்டில் குருவும், பன்னிரண்டில் சனியும் நிற்பது உங்களுக்கு அனுகூலமில்லாத நிலைதான். எதையும் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து செயல்பட்டு வெற்றியைத் தழுவிய உங்களுக்கு, இப்போது எதிலும் தடை, தாமதம், வீண் விரயம், தவிர்க்க முடியாத அலைச்சல் போன்ற பலன்கள் புதிய அனுபவமாகத் தோன்றும். என்றாலும் 11-ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால், தடை, தாமதமானாலும் முடிவில் முழு நன்மையாகவும் வெற்றியாகவும் அமையும். அதற்குக் காரணம் உங்கள் தெய்வ பக்திதான்! கிரகங்கள் உங்களை சோதனை செய்தாலும் இறைவன் உங்கள் வேதனைகளைப் போக்கி சாதனைகளைச் செய்ய வைப்பார். அதுவரை நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால், யாரையும் கோபிக்காமல் ஆத்திரப்படாமல் நம்பிக்கை யோடும் பொறுமையோடும் காத்திருப்பதுதான். சூப்பர் ஸ்டார் சொன்ன வசனம் மாதிரி "லேட்டானாலும் எல்லாம் லேட்டஸ்ட்டாக' அமையும்.

விருச்சிகம்

இந்த மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பதோடு, மனம்போலவும் அமையும். ஆரோக்கியம், பொருளாதாரம், தொழில் துறை, உத்தியோகம் எல்லாவற்றிலும் திருப்திகரமான பலன்களை எதிர்பார்க்கலாம். சிலருக்கு வேலை மாற்றம், சிலருக்கு படிப்பு நிலையில் பள்ளி மாற்றம், சிலருக்கு வீடு மாற்றம், சிலருக்கு ஊர் மாற்றம் போன்ற மாற்றங்களும் ஏற்படும். எந்த மாற்றமானாலும் ஏற்றுக்கொள்ளலாம்; அது ஏற்றமான முன்னேற்றமாகத்தான் அமையும். ஜென்ம ராகு சிலருக்கு திருமணத் தடை, தாமதம் ஏற்படுத்தினாலும், ஜாதக தசாபுக்திக் கேற்ற பரிகாரம் செய்தால் உடனடி பலன் கிடைக்கும். யார் யாரோ எங்கெங்கேயோ பரிகாரம் செய்தாலும், என் அனுபவத்தில் தேவிபட்டினத்தில் செய்யும் பரிகார பூஜை திருப்திகரமாக இருக்கிறது. சக்தி சீனிவாச சாஸ்திரி, செல்: 99435 46667-ல் தொடர்பு கொள்ளலாம்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு- மாதம் முழுவதும் 6-ல் இருப்பது ஒருவகையில் சரியல்ல என்றா லும்; 10-ஆம் இடம் தொழில் ஸ்தானத்தையும், அங்கு நிற்கும் சனி பகவானையும் பார்ப்பதால் தொழில், வேலை, உத்தியோகத்தில் கெடுதல் ஏற்படாது. ஜூன் 21-ல் தொழில்காரகன் சனி வக்ரநிவர்த்தி ஆனதும் தொழில், உத்தியோகத் தில் நிலவிய தொல்லைகளும் இடையூறுகளும் தொய்வுகளும் அகன்றுவிடும். மேலிடத்தாரின் கெடுபிடி நடவடிக்கைகள் மாறி பாராட்டும் ஆதரவும் உண்டாகும். உங்களுக்கு டென்ஷன் குறைந்துவிடும். பொறுப்பான பதவிகளில் இருப்போர் எட்டு மணி நேர உழைப்புக்கு பதிலாக பத்து மணி நேரம் பாடுபட நேரும். அது உங்கள் பேரேட்டில் பிளஸ் மார்க் குறிக்கப்பட்டு, பின்னர் அதற்குப் பலன் கிடைக் கும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சபலப்பட்டாலும், எங்கே போனாலும் நமது நிழல் நம்முடன்தான் தொடரும் என்று சமாதானப்படுத்திக் கொண்டு, இருப்பிடத் திலேயே செயல்பட்டால் பொறுப்புக்கேற்ற பலன் விருப்பப்படி கிடைக்கும்.

மகரம்

இந்த மாதம் மகர ராசிக்கு கோட்சாரக் கிரக அமைப்பு மிகவும் சாதகமாக இருப்பதால் உங்கள் உழைப்புக்கேற்ற நற்பலன்கள் கிடைக்கும். வெற்றியைத் தேடி அலைந்த காலம் போய், இப்போது வெற்றி உங்களை விரட்டி வரும் யோகமாகிவிட்டது. "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்ற பழமொழிப்படி சந்தர்ப் பங்களை சாதகமாக்கிக் கொள்ளுங்கள். சில செயல்களில் அசுரவேகப் பலனும், சில காரியங் களில் ஆமை வேகப் பலனும் காணப்பட்டாலும், எல்லாம் நன்மைக்கே என்பதையும் எது, எப்போது, எப்படி நடக்க வேண்டுமோ அது, அப்போது, அப்படியே நடக்கும் என்பதையும் நினைவில் நிறுத்தி பலனை எதிர்பாருங்கள். புதிய தொழில் திட்டங்கள் கைகூடும். நடக்கும் தொழிலும் விருத்தியடையும். குருபார்வை உங்களுக்கு மலர்ப்பாதை விரிக்கும்.

கும்பம்

எட்டில் சனி இருந்தாலும் குரு பார்ப்பதால் அட்டமச் சனியின் அட்டகாசம் குறையும். நாலாமிடத்து குரு 10-ஆம் இடத்தையும், 12-ஆம் இடத்தையும் பார்ப்பதால், வெளியூர், வெளி இடங்களில் வேலை, வருமானம், சம்பாத்தியம் ஏற்படும். உடன்பிறப்புக்கள் உங்கள் குடியிருப்புகளுக்கு வருவதால் உங்களுக்கு இடம் மாற்றம் ஏற்பட இடமுண்டு. எப்படி தனியே போவது என்று தர்மசங்கடத்தை அனுபவித்தவர்களுக்கு சந்தர்ப்பம் சாதகமாக அமைந்துவிடும். தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளுமை என்று தள்ளியிருப்பது எல்லாருக்கும் நல்லதுதானே! வேலை, வருமானம் இல்லா தோருக்கு வேலை, பொறுப்பு, வருமானம் அமையும். வேலையில் இருப்போருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பாராட்டு கிடைக்கும். ஜூன் கடைசி வாரம் அட்டமச் சனி வக்ரம் தெளிவதும் உங்களுக்கு முன்னேற்றமான திருப்பம். ஆரோக்கியம், தெம்பு, உடல்நலத்தில் தெளிவு ஏற்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கேடு கெடுதி எதுவும் இல்லையென்றாலும், அலைச்சல், திரிச்சல்- முக்கியமான பயணம் தவிர்க்க முடியாத படி அமையும். பொருளாதாரம், வருமானம் திருப்திகரமாக அமையும். நீண்ட நெடுங்கால மாக திட்டமிட்ட காரியங்கள் இந்த மாதம் கைகூடும். பிள்ளைகள் வகையிலும் குடும்பச் சூழ்நிலையிலும் நல்லது நடக்க வாய்ப்புண்டு. மாணவர்கள் விடாமுயற்சியோடு படிப்பில் ஆர்வம், அக்கறை காட்டுவது அவசியம். குரு மூன்றில் மறைந்தாலும் 7-ஆம் இடம், 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களைப் பார்ப்பதால், குடும்பத்தில் மங்கள காரியம் நடக்கும். மேளச்சத்தம் கேட்கும். தெய்வ பக்தி, வழிபாடு, பூஜைகள் பலன் தரும். வெற்றி மேல் வெற்றி உங்களை வந்தடையும். சில காரியங்கள் நினைத் தவுடன் நடந்துவிடும். சில காரியங்கள் கடின முயற்சிக்குப் பிறகு தாமதமாக நடக்கும். எப்படி இருந்தாலும் முடிவு சாதகமாக அமைவது திருப்திதானே!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : Senthil Date & Time : 6/26/2012 10:03:08 AM
-----------------------------------------------------------------------------------------------------
Very nice, Thank you.
-----------------------------------------------------------------------------------------------------