அண்மைச் செய்திகள்
போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் || சூதாட்ட புகாரில் சிக்கிய 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புகார் ||
Logo
ஓம்
கல்வி, செல்வம், வீரம்
......................................
பகை விலக்கி மங்களம் தரும் உபாசனை!
......................................
ஆன்மாவின் சுதந்திரம்
......................................
ஒன்பது கோடியை இழந்து...
......................................
கம்பர் வணங்கிய கடவுள் யார்?
......................................
ஜூன் மாத ராசிபலன்
......................................
அனுமனின் கதையே..
......................................
வைகாசி விசாகம்
......................................
குழந்தை வடிவில் குமரன்!
......................................
மறுபிறப்பு அறுக்கும்
......................................
கந்தனின் 16 நாமங்கள்
......................................
கலியுகத் துன்பங்கள் எல்லாம்...
......................................
சக்கரத்தாழ்வார் ஜெயந்தி
......................................
ஜூன் மாத எண்ணியல் பலன்கள்
......................................
ஆனித் திருமஞ்சனம்
......................................
எட்டு இடங்களில் ஜீவசமாதி...
......................................



                   ஜாம்பவான் சொன்னதைக் கேட்ட நொடி, மற்ற வானர வீரர்கள் அவ்வளவு பேரும் அனுமனைத்தான் பார்த்தனர்.

அனுமனும் வேகமாய் முன் வந்தான். ""ப்ரபோ... கலக்கம் வேண்டாம். அந்த சஞ்ஜீவி மூலிகை எங்கு இருந்தா லும் சரி; அதை நான் கொண்டு வருகிறேன்'' என்றான்.

ஜாம்பவானும் அதைக் கேட்டு மகிழ்ந்தவராக, ""அனுமந்தா, உன்னால் மட்டுமே அது முடியும். இந்த சஞ்ஜீவி மூலிகை என்பது மிக அபூர்வமானது; நான்கு வித மானது. "அமிர்த சஞ்ஜீவினி, விசலயகரணி, ஸ்வர்ணகரணி, சம்தாணி' என்று நான்கு பெயர் களுடன் அது உள்ளது. இந்த நான்கில் ஒன்று கிடைத்தாலே போதும்; இளவலின் மூச்சுக் காற்று சீராகி நாடியும் சீராகி விடும். நான்கு மூலிகைகளும் கிடைத்துவிட்டாலோ காயங்கள் உடனுக்குடன் குணமாகி களைப்பு என்பதே தெரியாத வீரியமும் ஏற்படும். இங்கே இதுவரை நடந்த யுத்தத்தில் இராவணாதி வீரர்கள் மட்டுமல்ல; நம் தரப்பி லும் அநேக வானர வீரர்கள் மர ணித்துள்ளனர். அவர்களுக்கெல் லாமும் உயிர்ப் பிச்சை அளித்தது போல் இருக்கும்'' என்றார்.

அடுத்த நொடியே அனுமன் காற்றைச் சமன் செய்துகொண்டு வானவீதியில்  எழும்பிப் பறக்கத் தொடங்கிவிட்டான். தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய அவன் பயணத்தை தேவர் கூட்டமும் கண்ணுற்றது.

முதன்முதலாக சூரியனையே ஒரு கனியாக எண்ணி அதைப் பறித்து உண்பதற்காகப் பறந்தான்.

பின் சீதாதேவி நிமித்தம் சமுத் திரத்தின்மேல் பறந்தான். இப்போது பல உயிர்களை- குறிப்பாக லட்சுமணனையே காத்திட மீண்டும் பறக்கத் தொடங்கியுள்ளான்.

அனுமன் விழைந்து பறந்திடும் மேருவான இமயமும் எதிரில் காட்சி தந்தது. பூமி உருண்டையின்மேல் மிக உயரமான ஒன்று உண்டென்றால் அது இமயம் மட்டுமே! அதன் காரணமாகவே அங்கு நிலவும் ஐம்பூத விஷயங்களும் பிற இடங்களில் இருப்பதைப்போலன்றி விசேஷ ஆற்றலைக் கொண்டிருந்தன.

இங்கிருந்து உருகிப் பெருகி ஓடிவரும் நீர்தான் கங்கை எனப்படுகிறது. உலகில் உள்ள மற்ற ஆறுகள் எல்லாமே பொழி யும் மழையின் மிதமிஞ்சிய தன்மையால் உருவானவை.

ஆனால் கங்கை அப்படி அல்ல!

சூரிய சக்தியாகிய உஷ்ணத்தால் உருக்கப்பட்டு நீராகி ஓடிவருகிறது. இந்த நீருக்குள் சூரியனின் உஷ்ணம் கங்குபோல் ஒளிந்திருப்பதால் இதற்கு கங்கை என்று பெயர் வந்தது.

அதீதமான பனியும் ஒருவகையில் நெருப்பே! நெருப்பின் குணங்கள் இதனிடமும் இருக்கும். அதனால்தான் இது அனைத்துப் பாவங்களையும் சுட்டுப் பொசுக்கிவிடுகிறது. நெருப்பு இறுதியில் அனைத்தையும் வெண்ணிறச் சாம்பலாக்கிவிடும். இந்தப் பனியோ அதே நிறத்தில் பனியாக்கிவிடுகிறது.

அவ்வளவுதான் வித்தியாசம்.

நெருப்பில் அனைத்தும் உருமாறி விடும். ஆனால் பனிக்குள் புதையும் ஒன்று அப்படியே காலகாலத்துக்கும் இருக்கும்.

கங்கை குறித்து சிந்திக்க இப்படி பல விஷயங்கள் உண்டு. இப்படிப்பட்ட கங்கை நீரால் உருவாகி வளரும் தாவரங் களுக்கும் தனித்தன்மை உண்டு. அதிலும் இமயத்தின் குளிரை மீறிக்கொண்டு ஒரு தாவரம் வளர முடியுமென்றால், அதற் குள் பலவிதமான இயற்கையை விஞ்சும் சத்துக்களும் குணங்களும் இருந்தாலன்றி சாத்தியமில்லை.

இதனாலேயே பல சித்தர் பெருமக்கள் இமயத்தில் உபவாசத் தவம் இருந்தனர். உடலும் மனமும் இங்கு அடங்குவதோடு மிகுந்த கட்டுப்பாட்டிலும் இருக்கும்.

இப்படிப்பட்ட மேருவின் ஒரு பாகத் தில்தான் சஞ்ஜீவினி மூலிகைகளும் வளர்ந்திருந்தன. அனுமனும் அந்த பாகத் தைத் தேடியபடி பறந்து கொண்டிருந் தான்.



இடையில் இங்கேயும் அவனுக்கொரு சோதனை உருவாகத் தொடங்கியது. 

அதற்குக் காரணமும் இராவணனே!

தான் எய்த அஸ்திரம் விபீஷணனை வீழ்த்தவில்லை; அது லட்சுமணனைத்தான் சாய்த்துவிட்டது என்பது தெரிந்த நிலையில்- எப்படியோ தனக்கு ஒரு வெற்றி கிடைத்து விட்டதாகத்தான் எண்ணிக்கொண்டிருந் தான் அவன். ஆனால் அனுமன் சஞ்ஜீவி மூலிகையைக் கொண்டுவர புறப்பட்டுவிட்ட சேதி தெரிந்து இராவணனுக்குள்ளும் பெரும் பதட்டம். இவ்வேளையில்தான் இராவணனுக்கு "காலநேமி' எனும் மாயாவியின் நினைவும் வந்தது.

காலநேமி இராவணனின் நெருங்கிய நண்பன். சித்துக்களிலும், இந்திர மந்திர ஜாலங்களிலும் கை தேர்ந் தவன். இராவணனுக்கும் மாயப் பாடத்தைக் கற்பித்தவன். இராவணன் காலநேமியை அழைத்து, ""நீ என்ன செய்வாயோ ஏது செய் வாயோ எனக்குத் தெரியாது. அனுமன் இமயத்திலிருந்து சஞ்ஜீவி மூலிகையோடு வந்துவிடக்கூடாது'' என்றான்.

காலநேமியும் அடுத்த நொடியே தன் மாயா சக்தியால் இமயத்தை அடைந்து விட் டான். பழுத்த ஒரு முனியைப்போல வேடம் தாங்கி ஒரு குடிலையும் அமைத்துக் கொண்டு, "ராம் ராம் ராம்' என்று ஜெபித்தபடி உட்கார்ந்து விட்டான்!

விண்ணில் பறந்து வரும் அனுமன் காதிலும் காலநேமி உச்சரித்த ராம நாமம் விழுந்தது. "இங்கே யார் தன் ப்ரபுவின் நாமத்தை உச்சரிப்பது?' என்கிற கேள்வியோடும் வியப் போடும் கீழே பார்த்த அனுமன் கண்களில் காலநேமியின் ஆசிரமம் பட்டது.

மாயையும் தன் வேலையைச் செய்யத் தொடங்கியது. எப்போதும் நல்லதற்குத்தான் அநேக சோதனைகள்! இதற்கு பரந்தாமன் விஷயமும் விதிவிலக்கில்லை.

சாதாரணமாய் ஒன்று கிடைத்துவிட்டால் அதில் பெருமையும் இல்லையே? மாயைக்கு அனுமனும் ஆட்பட்டு, காலநேமி முன்போய் நின்றான். இதை சற்று மாற்றி ராம நாமம் முன்போய் நின்றான் எனலாம்.

காத்திருந்த காலநேமியும் அனுமனை சட்டென்று பிடித்துக்கொண்டான்.

""வானரனே, நீ யார்?'' என்று எதுவும் தெரியாதவன்போல் ஆரம்பித்தான்.

""என் பெயர் சுந்தரன். அனுமன் என்றும் அழைக்கப்படுபவன். கிஷ்கிந்தை மன்னனான சுக்ரீவனின் உற்ற மந்திரி. இதை எல்லாம்விட மேலாக, நீங்கள் உச்சரித்த நாமத்துக்குச் சொந்தமான ஸ்ரீராம ப்ரபுவின் அத்யந்த தொண்டன் நான்'' என்றான்.

""என்ன... ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி யின் தொண்டனா? ஆஹா அருமை... ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி எப்படி இருக்கிறார்? நலமாக இருக்கிறாரா?''

""இந்தக் கேள்விக்கு மகிழ்ச்சியான பதிலைக் கூறமுடியாத நிலையில் இருக்கி றேன். அவர் இப்போது யுத்த களத்தில் இருக்கிறார். உற்ற இள வலை இராவணாஸ்திரம் மூர்ச்சை யடையச் செய்துவிட்டது. உயிர்ப்பிக்கும் ஆற்றல் கொண்ட சஞ்ஜீவி பர்வதத்தைத் தேடியே நான் இப்போது வந்திருக்கிறேன். ராமபக்தராய் விளங்கும் தங்களுக்கு சஞ்ஜீவி பர்வதம் எங்குள்ளது என்று தெரிந்திருக்குமே?''

""நன்றாகத் தெரியும். ஆனால் அந்த பர்வதத் துக்குள் அத்தனை சுலபத்தில் நுழைய முடியாது. அபூர்வமானது என்பதால் அதை கந்தர்வர்கள் காவல் காக்கின்றனர். அவர்களை வெல்லாமல் சஞ்ஜீவி பர்வதத்தைக் காணமுடியாது'' என்றான் காலநேமி.

""யாராக இருந்தாலும் சரி- அவர்களை எதிர்கொள்ள நான் சித்தமாக இருக்கிறேன்.''

""அப்படியானால் ஒரு குறுக்கு வழியைச் சொல்கிறேன், கேட்பாயா?''

""என்ன?''

""இங்கே ஒரு மாயப் பொய்கை உண்டு. அதில் நீ மூழ்கி எழுந்தால் உன் தோற்றமும் கந்தர்வன்போல் ஆகிவிடும். ஒரு கந்தர்வனாக நீ அந்த பர்வதம் நோக்கிச் சென்று அந்த மூலிகைகளையும் பறித்துக்கொண்டு பின் வானில் பறந்து சென்றுவிடலாம்'' என்றான்.

காலநேமி அனுமனை அந்த மாயப் பொய்கை நோக்கி திசைதிருப்பி விட்டதில் ஒரு சதித் திட்டம் ஒளிந்திருந்தது. அந்தப் பொய்கைக்குள் மாலினி என்னும் அப்சரப் பெண், முனிவர் ஒருவர் சாபத்தால் முதலையாக மாறிக் கிடந் தாள். அந்தப் பொய்கைக்குள் யார் கால் வைத் தாலும் அவர்களை உயிரோடு விழுங்கித்தான் உயிர் வாழ்ந்து வந்தாள். அனுமனையும் அந்த முதலைக்கு இரையாக்குவதுதான் காலநேமியின் திட்டம். இது தெரியாமல் அனுமனும் காலநேமி சொன்னதை அப்படியே நம்பி அந்தப் பொய்கை நோக்கிச் சென்றான்.

நடப்பதைக் காண ஒளிந்து ஒளிந்து காலநேமியும் பின் செல்லத் தொடங்கினான்.

பொய்கை விரிந்து கிடந்தது. அதன்மேல் பனிப்புகையின் பரவல். அனுமனும் ராம நாமத்தை முணுமுணுத்தபடி பொய்கைக்குள் கால் வைத்த மாத்திரத்தில், பாய்ந்து வந்து அனுமன் காலைக் கவ்வியது அந்த முதலை.

அடுத்த நொடியே அனுமனுக்கும் விபரீதம் புரிந்துவிட்டது. ஒட்டுமொத்த தேவருலகமே அனுமனுக்கு எல்லாவிதமான வரங்களையும் அளித்திருப்பது அந்த முதலைக்குத் தெரியாது. கபட முனியான காலநேமிக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அனுமனின் வரசித்திதான் சமுத்திரத்தின் மேல் பறந்தபோது சிம்கிகை எனும் அரக்கியிலிருந்து இலங்கையின் காவல் பூதமான அரக்கி வரை அனைவரையும் அழித்திட துணை செய்தது. அதே சித்தி அனுமனிடம் இப்போதும் வேலை செய்தது.

நொடியில் மிகப் பெரும் விசுவரூப வடிவம் எடுத்த அனுமன்முன் அந்தப் பொய்கையும் சரி; முதலையும் சரி- சிறு சுவர் பல்லிபோலதான் தெரிந்தனர். முதலையைத் தொட்டுத் தூக்கி, அதன் வாயை இரு கூறாகக் கிழித்து தூக்கிப் போடுவதைக் கண்ட காலநேமிக்கு கண்கள் பிதுங்கிவிட்டன.

அதேசமயம் இரு கூறாகப் பிளவுபட்ட முதலையிடமிருந்து மாலினி என்கிற அந்த அப்சர கன்னிகை உயிர்த்தெழுந்தவளாக அனுமனை வணங்கி, தனக்கு அனுமனால் சாபவிமோசனம் ஏற்பட்டதையும் கூறினாள். அப்படியே காலநேமி முனிவனல்ல;  மாயாவி என்கிற உண்மையையும் கூறினாள். அடுத்த நொடி காலநேமி தன்னை மறைத்துக்கொண்டு தப்பிக்கப் பார்த்தான். ஆனால் அனுமன் அவனைத் தப்பிக்கவிடாமல் ஒரே அடியில் அடித்துக் கொன்றான். மாயை ஒழிந்தது. சஞ்ஜீவி பர்வதத்துக்கான வழியை மாலினியே காட்டினாள்.

ஆனால் அந்தப் பர்வதத்தில் எது அமிர்த சஞ்ஜீவி, எது விசலயகரணி, எது ஸ்வர்ணகரணி என்று தெரியாமல் அனுமன் குழம்பிப் போனான். மாலினிக்கும் அந்த மூலிகைகளை தனியே இனம் காணத் தெரியவில்லை. அந்த பர்வதம் முழுக்கவே பலநூறு மூலிகைகள்!

அவ்வேளையில் அனுமனுக்குள் ஒரு எண்ணம் உதயமாகியது. இங்கே நின்று குழம்பிக்கொண்டிருப்பதற்கு, இந்த பர்வதத் தையே பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டால் ஜாம்பவான் இவற்றைக் கண்டறிந்து கூறிவிடு வார் என்று யூகித்த அனுமன், அடுத்த நொடியே அந்த பர்வதத்தை அப்படியே தன் விசுவரூப கைகளாலே பெயர்த்தெடுத்துக் கொண்டான்.

மாலினி அதைப் பார்த்து விக்கித்துப் போனாள்!

தேவருலகமும் விழிவிரியப் பார்த்தது!

எப்போதும் சோதனைகளும், ஆபத்துகளும் அனுமனை பேராற்றலுக்கு இட்டுச் செல்கின் றன. அதிலும் சஞ்ஜீவி பர்வதத்தோடு வானில் எழும்பிப் பறக்கத் தொடங்கிய அனுமனின் ஆற்றல் அபாரம் என்கிற வார்த்தைக்கெல்லாம் மேலானது!

இந்தச் செயலால்தான், "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' போல், "வல்லவனுக்கு மலை யும் சிறுகடுகு' என்று சொல்லக்கூடிய பழ மொழிகள் பிறக்கவும் காரணமானது.

அனுமனின் இந்தச் செயலுக்குப் பின்னாலே பேராற்றல், மதியூகம், தியாகம், கருணை என்கிற அத்தனை குணங்களும் அல்லவா அடங்கிக் கிடக்கிறது!

(தொடரும்)



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(2)
Name : renga Date & Time : 6/15/2012 10:16:02 AM
-----------------------------------------------------------------------------------------------------
ஜெய் ஸ்ரீ ராம்
-----------------------------------------------------------------------------------------------------
Name : krishnan Date & Time : 6/5/2012 11:29:07 AM
-----------------------------------------------------------------------------------------------------
the ஒவேண்டேர்புல் story
-----------------------------------------------------------------------------------------------------