அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
Logo
ஓம்
கல்வி, செல்வம், வீரம்
......................................
பகை விலக்கி மங்களம் தரும் உபாசனை!
......................................
ஆன்மாவின் சுதந்திரம்
......................................
ஒன்பது கோடியை இழந்து...
......................................
கம்பர் வணங்கிய கடவுள் யார்?
......................................
ஜூன் மாத ராசிபலன்
......................................
அனுமனின் கதையே..
......................................
வைகாசி விசாகம்
......................................
குழந்தை வடிவில் குமரன்!
......................................
மறுபிறப்பு அறுக்கும்
......................................
கந்தனின் 16 நாமங்கள்
......................................
கலியுகத் துன்பங்கள் எல்லாம்...
......................................
சக்கரத்தாழ்வார் ஜெயந்தி
......................................
ஜூன் மாத எண்ணியல் பலன்கள்
......................................
ஆனித் திருமஞ்சனம்
......................................
எட்டு இடங்களில் ஜீவசமாதி...
......................................






               பாம்பன் சுவாமிகள் அப்பாவுவாக இருந்த காலத்தில், குடும்பப் பொறுப்புகளின் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க நேர்ந்த காலங்களும் உண்டு. அவர் இல்லற வாழ்வில் இருந்தபோது சில உறவினர்கள் அவருக்குப் பகையாளிகளாகச் செயல்பட் டார்கள். அவர் எந்தப் பகையையும் எப்போதும் பொருட்படுத்தியதில்லை என்றாலும்- பணம், பொருள், சொத்து போன்றவற்றில் ஆர்வம் காட்டியதில்லை என்றாலும் பிற உறவினரின் பொருட்டு வேறு வழியின்றி நீதிமன்றப் படியை அவர் மிதிக்க நேர்ந்தது.

அப்பாவு முருகனைத் தவிர வேறு எந்த நீதிபதியையும் அறியாதவர். "கந்தா சரணம் கடம்பா சரணம்!' என்றவாறேதான்  எப்போதும் நீதிமன்றம் செல்வார். நீதிமன்றத் தின் உள்ளும் முருகன் நாமத்தைத்தான் ஓயாமல் ஜெபித்துக் கொண்டிருப்பார்.

அங்கே அருள் தவழும் அவரது தோற்றத் தைப் பார்ப்பவர்கள் சற்று வியப்போடுதான் பார்ப்பார்கள்.  

 மகான் ஸ்ரீஅரவிந்தருக்கு நீதிமன்றத்தில் எல்லாருமே கையில் குழலோடு கண்ண     னாய்க் காட்சி தந்தார்களே! வழக்கறிஞரும் நீதிபதியும்- ஏன் டவாலிலியும் பொதுமக்களும் கூட அரவிந்தருக்குக் கண்ணனாய் காட்சி தந்தார்களே! சர்வம் கிருஷ்ணமயம் ஜகத் என்ற உண்மையை அப்போதுதானே அவர் உணர்ந்துகொண்டார்!

அதுபோல் பாம்பன் சுவாமிகளுக்கு நீதிபதி முருகப் பெருமானாய் காட்சி தருவார். அவர் அமர்ந்திருக்கும் நாற்காலிலிக்கு- அப்பாவு பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறக்கை முளைக்கும். அது முருகன் வாகனமான மயிலாய்த் தோற்றம் கொள்ளும். நீதிபதி கையிலிலிருந்த பேனா முருகன் திருக்கரத் தில் உள்ள வேலாய்த் தோன்றும். 

பேனாவாய் மாறிய வேலால் தீர்ப்பை அப்பாவு வுக்கு சாதகமாய் எழுதுவார் முருக நீதிபதி. ஒவ்வொரு முறையும் தீர்ப்பு அவருக்கே சாதகமாய் அமைவது பற்றி குடும்ப வழக்கு களில் ஈடுபட்ட உறவினர்கள் திகைப்பார்கள். பின்னாளில் அவர்கள், இறையருள் அவருக்கு என்றும் துணை நிற்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அவருக்கு இணக்கமாக நடக்கத் தலைப்பட்டார்கள்.



அப்பாவு உணவு நியமங் களில் மிகுந்த கண்டிப்போடு நடந்துகொண்டார். புளி, உப்பு, காரம் ஆகியவற்றை முற்றிலுமாக நீக்கிவிட்டார். பச்சைப் பயறு, பச்சரிசி இவற்றைக் கலந்து சமைத்த உணவை மட்டுமே உண்டு வந்தார். இரண்டு வேளை உணவு சாப்பிட்டு வந்த அவர், கொஞ்ச காலத்தில் ஒரே ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ளலானார். பின்னர் ஒருவேளை கோதுமைக் குருணைக் கஞ்சி மட்டுமே உண்ணத் தொடங்கினார்.

இப்படியெல்லாம் ஆகாரத்தைக் குறைத் துக்கொண்டே வந்தும்கூட, முருகப் பெருமானின் திருவருள் காரணமாக அவரது உடலிலில் எந்தவித நலிலிவும் தென்படவில்லை.

இளம் வயதில் அப்பாவு பல்வேறு உடல்பயிற்சி களைச் செய்து உடல் நலத்தைக்  காத்தவர்தான். சிலம்பம், மற்போர் போன்ற விளையாட்டுகளில் அவருக்குத் தீவிர ஆர்வம் உண்டு. குளத்தில் நீந்து வது என்பது அவருக்குப் பிடித்த பொழுதுபோக்கு. இறைவனடி சேர்ந்து பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க முயன்ற அவர், வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் ஆற்றிலும் குளங்களிலும் நீந்தி மகிழ மறந்த தில்லை.  

இயற்கையிலேயே அவருக்கு கட்டான ஒளிபொருந்திய உடல். கண் ணைக் கவரும் வசீகரமான சிவந்த நிறம். அருள் பொங்கும் அழகிய முகம். தோற்றப் பொலிலிவு காரண மாகவே பார்ப்பவர்களைக் கவர்ந்தார் அவர்.

மெய்ஞ்ஞானிகளில் தாயுமானவரும் மிக அழகிய தோற்றம் கொண்டவர். அந்த அழகிய தோற்றமே அவருக்கு இடையூறாய் இருந்தது.

அவர் எந்த அரசியிடம் பணிபுரிந்தாரோ, அந்த அரசியே அவர்மேல் நாட்டம் கொண்டாள். அதனால் தான் வாழ்ந்த திருச்சியை விட்டே வெளியேறினார் தாயுமானவர் என்கிறது அவரது திருச்சரிதம்.

பாம்பன் சுவாமிகள் அத்தகைய சிக்கல்கள் எதிலும் மாட்டிக் கொண்டுவிடாமல் குமரன் அவரைக் காத்தான். தென்னாடு முழுவதும் பயணம் செய்த அவர், பின்னர் வடநாட்டுக்கும் பயணம் சென்றார். காசி மாநகரம் சென்று அங்கே குமரகுருபர மடத்தில் சிலகாலம் தங்கினார். அங் குள்ள ஆலயங்களையெல்லாம் தரிசித்து இறைவனின் அருள்மழையில் நனைந்தார்.

காசியில் அவர் தங்கி யிருந்தபோது நடைபெற்ற ஒரு சம்பவம் விந்தையானது. அதுவரை வெள்ளை ஆடையே அணிந்திருந்த சுவாமி களை காவி ஆடையில் பார்க்க வேண்டும் என முருகன் விரும்பினான் போலும்.

ஒருநாள் அவர் பாதுகாத்து வைத்திருந்த அவரது வெள்ளை ஆடைகள் எங்கோ காணாமல் போய்விட்டன. எப்படிப் போயிற்று, எங்கு போயிற்று என அறியக்கூடவில்லை. சரியாக வெள் ளை ஆடைகள் காணாமல் போய் இவர் தேடிக் கொண் டிருந்த அந்த நேரத்தில், குமரகுருபர மடத்தைச் சேர்ந்த ஒருவர் அவரைத் தேடி வந்தார். அவ ரும் காவி ஆடைதான் கட்டியிருந்தார். இரு காவி உடைகளை சுவாமிகளிடம் கொடுத்தார் அவர்.

""தாங்கள் எங்கள் குமர குருபர மடத் தில் தங்கியிருக் கிறீர்கள். துறவு நிலையில் ஈடு பட்டு வாழ்ந்து வருகிறீர்கள். எனவே எங்கள் மடத்தின் நிறுவனரான குமரகுருபரர் போலவே தாங்களும் காவியுடை தரியுங்கள்'' என்று வேண்டினார். அந்தக் காவி ஆடையை ஓர் ஆசிபோல் பெற்றுக்கொண்ட பாம்பன் சுவாமிகள் அன்று முதல் காவியுடையே தரிக்கலானார். கொஞ்ச காலம் காசியிலிருந்து தவமும் தியானமும் நிகழ்த்தியபின் சென்னை திரும்பினார்.

ஒருநாள் சென்னை மாநகரில் தம்புசெட்டித் தெருவில் பாதையோரமாக நடந்து கொண்டிருந்தார் அவர். விறுவிறுவென்று அவரை இடிப்பதுபோல் ஓரமாக வந்தது ஒரு குதிரை வண்டி. எங்கே ஒதுங்குவது? வண்டி பாதையோரத்திற்கு நெருங்கி வந்தால் ஒதுங்க இடம்தான் ஏது? அவர் ஒதுங்க நினைப்ப தற்குள் அந்தக் குதிரை வண்டியின் சக்கரம் அவர் காலிலில் விருட்டென ஏறியது. அவர் தள்ளிவிடப் பட்டார்.

கீழே விழுந்த பிறகுதான் அவருக்கு உண் மை மெல்ல உறைத்தது.

அவரது கணுக் கால் மளுக் கென முறிந்து விட்டது. அரசு மருத்துவ மனையில் அவர் அனுமதிக் கப்பட்டார்.

அவருக்குக் கால்கட்டுப் போடப்பட் டது.   கால்கட் டே வேண் டாம் என்றல் லவா இல்லறம் துறந்து சென் னை வந்தார் அவர்? சென்னையில் இப்படியொரு கால்கட்டு! இந்த இக்கட்டு ஏன் நேர்ந்தது? என்மேல் உனக்கு அருள் இல்லையா முருகா? முருகப் பெருமானை நினைத்து அவர் மனம் உருகியது.

காலை எக்ஸ்ரே படமெடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து உதட்டைப் பிதுக்கினார்கள். வயது முதிர்ச்சி ஒருபுறம்; உப்பில்லாமல் சாப்பிடும் சுவாமி களின் உணவுப் பழக்கம் ஒருபுறம். இனி கால் எலும்பு ஒன்றுகூடாது என்று மருத்துவர்கள் இரு கைகளையும் விரித்து விட்டார்கள்.

மருத்துவர்கள் இரு கை விரித்தால் என்ன? பன்னிருகை வேலவன் தன் எல்லாக் கைகளை யுமா விரிப்பான்? அவன் அருள் வது திண்ணம். அசைவே இல்லாமல் முருக நாமத்தை ஓயாமல் மனதில் ஜெபித்தபடி படுத்திருந்தார் சுவாமிகள்.
 

"சண்முக கவசம் பாடினேனே அப்பா. நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று அடிய வர்கள் எல்லாம் அதைப் படிக்கி றார்களே? அதைப் பாடியவ னுக்கே நோய் என்றால் அடியவர்கள் என்ன நினைப்பார்கள்?  அன்பர்கள் உன் அருளைப் பற்றி இகழ்ந்து பேசக்கூடும் என்பதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை ஐயனே! மற்றபடி என் வலிலி என் முன்வினையால் வந்ததென்றால் அதை நான் பொறுத்துக் கொள்ளத்தானே வேண்டும்?' மனதில் இவ்விதம் பலவாறு புலம்பியவாறே சண்முக கவசத்தை மறுபடி மறுபடி சொல்லிலிக் கொண்டிருந் தார்.

அன்றிரவு அவர் தங்கியிருந்த மருத்துவமனையின் அறையில் ஓர் அற்புதம் நடந்தது. சிறியதும் பெரியதுமான இரண்டு பொன் மயில்கள் அந்த அறையில் தோகைவிரித்து ஆடின. ஆகா! அந்த மயில்கள்தான் என்ன தெய்வீக அழகு! கண்ணால்
அந்தக் காட்சியைப் பருகிய வாறே படுத்திருந்தார் அவர்.

எழிலெல்லாம் ஒன்று திரண்ட ஒரு சின்னஞ் சிறு குழந்தை அவர் அருகில் வந்து படுத்துக் கொண்டு கலகலவென்று சிரித்தது. கோடி நிலவுகள் ஒன்று சேர்ந்ததுபோல் கொள்ளை அழகு அந்தக் குழந்தை. யார் அது? குமரனே தானா? குழந்தை வடிவில் காட்சி தந்தானா? கொஞ்சநேரம் கண்ணுக்குத் தெரிந்த அந்த தெய்வீகக் குழந்தை பிறகு காட்சியிலிலிருந்து மறைந்து விட்டது.

இந்த அபூர்வ நிகழ்ச்சிகளைக் கண்டபின் பாம்பன் சுவாமிகள் உள்ளத்தில் கவலை முற்றிலு மாக மறைந்து பரிபூரண அமைதி ஏற்பட்டது. அவர் வலிலியை உணராதவராய் ஆனந்தமாய்த் தூங்கினார். மறுநாள் விழித்தபின் தன் அன்பர்களிடம், ""முருகனது மயூர வாகனம் இரு மயில்களாய் வந்து நடனமிட்ட அதிசயக் காட்சியைக் கண்டேன்; முருகனையே குழந்தை வடிவில் கண்டேன்'' என்றுசொல்லிலி நெகிழ்ந்தார்.

மருத்துவர்கள் மறுபடி வந்தார்கள். மீண்டும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அந்த அற்புதத்தைப்  பார்த்து அவர்கள் மூக்கின்மேல் விரல் வைத்தார்கள்! சுவாமிகளின் முறிந்த எலும்பு எந்த முறிவும் தெரியாமல் தானாய்க் கூடிக் கொண்டிருந்தது. சுவாமிகளுக்கு இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்று மருத்துவர்கள் அவரை அனுப்பிவைத்தார்கள்.

முருகப் பெருமானின் வாகனமான மயூரக் காட்சியைக் கண்ட நாள் ஒரு புனித நாள் அல் லவா? அந்தப் புனிதநாளை ஒரு திருநாளாக மயூர வாகன சேவை விழா எடுத்து ஆண்டு தோறும் கொண்டாடலானார் பாம்பன் சுவாமிகள். அந்த விழா தமக்குப் பின்னரும் தொடர வேண்டும் என சாசனமும் எழுதி வைத்தார்.

தாம் முக்தி அடையும் காலம் நெருங்குவதை பாம்பன் சுவாமிகளின் உள்மனம் உணர்ந்து கொண்டது. தாம் நன்கு அறிந்தவரும் தன் அடியவருமான சின்னசாமி ஜோதிடரை அழைத்தார். சென்னை திருவான்மியூரில் உடனடியாக ஒரு நிலத்தை வாங்கிக் கிரயம் செய்ய ஏற்பாடு செய்தார். மயூர வாகன சேவை விழாவைத் தொடர்ந்து நடத்துமாறு தன் அன்பர்களிடம் கூறினார். தான் உடலைவிட்டு விலகினால் உடலைத் திருவான்மியூரில் அடக்கம் செய்துவிடுமாறு அறிவுறுத்தினார்.

ஒருநாள் காலை. பக்தர்கள் குழுமியிருந்த வேளை. தன் மூச்சை உள்ளிழுத்துத் தனக்குள் ளேயே அடக்கிக் கொண்டார் சுவாமிகள். மருத்துவர்கள் அவர் மறைந்துவிட்டதாய் அறிவித்தார்கள்.

சுவாமிகளின் பொன்னுடல் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்ட பின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஏராளமான மக்கள் கூட்டம் அவரது பொன்னுடலைத் தொடர்ந்து சென்றது. சுவாமிகள் விரும்பியவாறே திருவான் மியூரிலுள்ள நிலத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு அங்கே சமாதி எழுப்பப்பட்டது.

சுவாமிகள், முருக பக்தர்களுக்காக மகா தேஜோ மண்டலம் என்ற ஆன்மிக அமைப்பை நிறுவிச் சென்றுள்ளார். நாடு, மொழி வேறு பாடு ஏதுமின்றி முருக பக்தர்கள் அனைவரும் கூடி வழிபாடு செய்ய வழிவகுப்பது அந்த அமைப்பு.

சண்முக கவசம், பஞ்சாமிர்த வண்ணம் போன்ற சுவாமிகளின் நூல்களை இன்றும் பாராயணம் செய்பவர்கள் தங்கள் நோய்நொடி நீங்கி, உடல் மற்றும் மன ஆரோக்கியம் பெறுவதை அனுபவத்தில் உணர்கிறார்கள். என்றென்றும் வாழ்ந்து அடியவர்களுக்கு

அருள்புரியும் சித்தராக பக்தர்களுக்கு வழி காட்டி வருகிறார் பாம்பன் சுவாமிகள்.

பாம்பன் சுவாமிகளைப் போன்ற சித்தர் களுக்கு மரணமில்லை. அவர்களது உடல் மரித்தாலும் சூட்சும ரூபமாய் அவர்களின் ஆன்மா தொடர்ந்து நிலையாக வாழ்கிறது. தம்மை வேண்டும் தம் அடியவர்களின் குறைகளை நீக்கி அவர்கள் வாழ்வில் அருளாட்சி நடத்துகிறது. 

இப்படி என்றென்றும் வாழும் சித்தர்கள் இந்தியாவில் இன்னும் பலர் உண்டு.

(தொடரும்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : rcmurukanandam Date & Time : 8/27/2012 12:25:56 PM
-----------------------------------------------------------------------------------------------------
வாழ்க பாம்பன் சுவாமி புகழ்
-----------------------------------------------------------------------------------------------------