|
|
ஆஞ்சனேய சுவாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர்களுக்கு செய்யும் அனுக்கிரகங்களைப் பார்த்தால் அதில் என்ன விசேஷம் என்று தெரியும்."புத்திர் பலம் யசோ தைர்யம்நிர்பயத்வம் அரோகதாஅஜாட்யம் வாக்படுத்வம்ச ஹநூமத் ஸ்மரணாத் பதே!'ஆஞ்சனேயரை வணங்கு பவர்களுக்கு அவர் என் னென்ன அனுக்கிரகிக்கி றார் என்று இந்த சுலோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்குவண்மை- இத்தனையும் தருகிறார் அவர். சாதாரணமாக, இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையாது. நல்ல அறிவாளி ஆரோக்கியம் இல்லாமல் இருப்பான். பெரிய பலசாலி புத்தியில்லாமல் இருப்பான். இரண்டும் இருந் தாலும் கோழை, பயந்தாங் கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும் அவற்றைப் பிரயோகிக்கிற சுறு சுறுப்பு, விழிப்புணர்வு இல்லாமல் சோம்பேறி யாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்குவண்மை இல்லாமல் இருப்பான். இதுபோன்ற மாறுபாடுகள் இல்லாமல் எல்லா ஆற்றலையும் ஒரே இடத்தில் பொழிகிறார் ஆஞ்சனேயர். காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத பல குணங் கள், சக்திகள் அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருக்கின்றன. நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவைகூட அவரிடம் இயல்பாகவே சேர்ந்திருக் கின்றன. உதாரணமாகப் பெரிய பலசாலிக்கு விநயம் இருக் காது, பெரிய புத்திசாலிக்கு அகங்காரமில்லாத பக்தி இராது. ஆஞ்சனேயரோ தேக பலம், புத்தி பலம், விநயம், பக்தி எல்லாவற்றிலும் முதலாக நிற்கிறார்.வலிவு இருக்கிறவன் கெட்ட வழியில் போவதுண்டு. அவனுக்கு பக்தி இராது. பக்தி இருக்கிறவர்களுக்கேகூட அதில் ஞானத்தின் தெளிவு இல்லாமல் மூட பக்தியாகவோ, முரட்டு பக்தியாகவோ இருப்பதுண்டு. ஆஞ்சனேயரோ ராமச்சந்திர மூர்த்தியின் பரம பக்தராக இருக்கும்போதே பரமஞானியாகவும் இருந்தார்.இத்தகைய ஆஞ்சனேயர் கோவில் கொண்டுள்ள சிறப்புமிக்க தலங்களில் ஒன்று திருப்பதி திருமலையில் உள்ளது. திருமலைக்குச் செல்பவர்களில் பெரும் பாலோருக்கு இந்த ஆஞ்சனேயர் ஆலயம் இருப்பது தெரியாது. வேங்கடேசப் பெருமாள் ஆலயத்திலிருந்து பாபநாசத் தீர்த்தத்துக்குச் செல்லும் வழியில், சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. திருமலை தேவஸ்தான பேருந்துகள் செல்கின்றன.ஜாபாலி முனிவர் தவமிருந்ததாகச் சொல்லப்படும் இப்பகுதி அவர் பெயரா லேயே வழங்கப்படுகிறது. பஸ் நிறுத்தத்திலிருந்து சுமார் 250 படிகள் ஏறிச்சென்றால், எழிலார்ந்த இயற்கைச் சூழலில் அமைந் துள்ளது ஆலயம். இங்கு கோவில் கொண்டுள்ள தவக்கோல ஆஞ்சனேயர் ஜாபாலி ஆஞ்சனேயர் எனப்படுகிறார். மிகுந்த வரப்பிரசாதி யாகத் திகழ்கிறார் இவர்.இவர் சந்நிதிக்கு நேரெதிரே ஜாபாலி தீர்த்தம் என்னும் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் நீராடிவிட்டு வந்து இவரை வணங்கி னால், பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட எல்லா தீவினைகளும் அகன்று விடும். ஏழரைச்சனி நடப்பவர்களின் துன்ப மும் நீங்கும். மகப்பேறில் லாதவர்கள் மழலைச் செல்வத்தை அடை கின்றனர் என்பது இங்கு வரும் பக்தர்களின் அனுபவக் கூற்று.சுமார் 50 முறைகளுக்குமேல் இந்த ஆஞ்சனேயரை தரிசித்து வந்திருக்கிறேன். இந்த ஆஞ்சனேயரை வணங்கினால் தீராத துயரமில்லை. ராஜேஷ் என்னும் தொழிலதிபர் நஷ்டமடைந்து மிகவும் அவதிப்பட்டார். இந்த ஆலயத்துக்குச் சென்று வரும்படி கூறினேன். அவரும் பக்தியோடு ஆஞ்சனேயரை சரணடைந்தார். இப்போது தொழில் நஷ்டம் எல்லாம் மாறி மிகச் சிறப்பாக இருக்கிறார்.அதுபோல வடநாட்டைச் சேர்ந்த ஒரு மனிதர். சைக்கிளில் பிஸ்கட், இனிப்பு விற்று சிரமத்தோடு வாழ்ந்து வந்தார். அவரை இந்த ஆஞ்சனேயரிடம் சரணடையும்படிச் சொன்னேன். இப்போது வடசென்னையில் அவர் பல கடைகளுக்கு முதலாளி!ஒரு இளம்பெண் மனநிலை பாதிக்கப்பட்டு மிகுந்த துன்பம் அனுபவித்து வந்தாள். அவள் குடும்பத்தாருக்கும் பெரும் வேதனை. அவர்களை இவ்வாலயத்திற்கு செல்லும்படிச் சொன்னேன். தற்போது அந்தப் பெண் குணமாகி நல்ல முறையில் வாழ்ந்து வருகிறாள்.இப்படி இங்கு வரும் பக்தர்களின் அனுபவம் பலவாக இருக்கிறது. திருமலை செல்பவர்கள் அவசியம் இந்த ஜாபாலி ஆஞ்சனேயரை தரிசியுங்கள். நல்வாழ்வு நிச்சயம்!
|
|
|
Name |
: |
subramani |
Date & Time |
: |
6/26/2012 10:03:08 AM |
-----------------------------------------------------------------------------------------------------
ஓம் சரவணபவ இதலில் தவயோகி ஞானதேவபரதி சுவாமிகளின் ஆன்மீக சிவதரிசன கட்டுரைகளை வாசகர்கள் பயன்பெற தொடர்ந்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி. -----------------------------------------------------------------------------------------------------
|
|
|