|
|
ஜூன் மாத எண்ணியல் பலன்கள்
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:இதுவரை உங்களை வாட்டி வதைத்த மன வேதனையிலிருந்து விடுதலை பெற்று நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். பிள்ளைகளாலும் உற்றார்- உறவினர்களாலும் இருந்து வந்த தொல்லைகள் மாறும். பொருளாதாரத்தில் நல்ல உயர்வைப் பெறுவீர்கள். வீடு மாற்றம் செய்ய, வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிட்டும். விலகிச் சென்ற சொந்தங்கள் வந்து சேரும். தொழிலதிபர்கள் புதிய ஆர்டர்கள் பெற்று நல்ல லாபத்தை அடைவார் கள். வியாபாரிகள் தங்கள் விற்பனைப் பிரிவை விரிவு படுத்த போட்ட திட்டம் நிறை வேறும்; நல்ல லாபத்தையும் பெறுவார்கள். அரசு ஊழியர் கள் அதிகாரிகளால் பாராட் டப்படுவார்கள். நிலுவைத் தொகைகள் கிடைக்கும். பெண்கள் தாங்கள் நினைத்த படி காரியங்களை முடிப்பார்கள். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் பயின்று முன் னேறுவார்கள். அரசியல் வாதிகள் திட்டமிட்டபடி வெற்றியைப் பெறுவார்கள்.அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.தவிர்க்க வேண்டிய தேதி: 3; 4, 22, 31; 8, 17, 26.வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:இந்த மாதம் வருவாய் இரட்டிப்பாகும். மகான்களின் தரிசனம் கிட்டும். நல்லவர்களின் வழிகாட்டுதலால், இதுவரை உங்களுக்கு இருந்து வந்த குழப்பம் நீங்கும். வருவாய்க்குத் தகுந்தாற்போல் செலவுகளும் கூடும். குடும்பத்தில் உள்ளோர் மனம் திருந்தி உங்களுடன் நேசமாக வாழ்வார்கள். உடல்நிலை யில் சற்று கவனம் தேவை. மருத்துவ செலவுகள் குறையும். தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகம் வரப்பெற்று உற்பத்தி பெருகும். வியாபாரிகள், போட்டி வியாபாரத்தைத் தவிர்க்க வேண்டும். எப்போதும்போல் செயல்பட்டால் நல்ல லாபத்தைப் பெறலாம். கணவன்- மனைவியிடையே இருந்து வந்த பிரச்சினைகள் சுமூக முடிவுக்கு வந்து, புதிய வாழ்க்கையாக அமையும். அரசு ஊழியர்கள் அதிகாரிகளினால் பாராட்டப்படு வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டில் சுபகாரிய பேச்சுகள் கைகூடும். பெண்கள் தங்கள் நகைகளை இரவலாகக் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. அரசியல்வாதிகள் சமூகத்தில் மதிப்பைப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள்.அதிர்ஷ்ட தேதி: 2, 11, 20, 29; 14; 7, 25. தவிர்க்க வேண்டிய தேதி: 8, 26; 9 18. வணங்க வேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:இந்த மாதம் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். நீண்ட காலமாக தடைப்பட்டு வந்த காரியங்கள் உங்கள் முயற்சியால் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புகள் உள்ளன. எனவே வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். வீடு வாங்க போட்ட திட்டம் தள்ளிப்போகும். தொல்லை கொடுத்து வந்த பிள்ளைகள் நல்லவர் களாக மாறுவார்கள். தொழிலதிபர்கள் தொழிலாளர்களை நிதானமாக அணுக வேண்டும். வியாபாரிகள் நல்ல லாபத் தைப் பெறுவார்கள். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் சிறிய பரிகாரம் வாயிலாக குழந்தை பாக்கியத்தை அடைவர். அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் மனம் அறிந்து செயல்படுவதால் அவர்களால் பாராட்டப்படுவார்கள். பெண்கள் தாய்வீட்டிலிருந்து வரவேண்டிய பங்கை வழக்கின்றிப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியை ஆர்வமாகப் பயில்வார்கள். அரசியல் வாதிகளுக்கு சோதனையான காலம்; நிதானம் தேவை.அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.தவிர்க்க வேண்டிய தேதி: 3; 4, 13, 22; 6, 24; 8, 17, 26,வணங்க வேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள்.4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: மகான்களின் தரிசனம் கிட்டும். தொலைபேசி, கடிதத் தொடர்புகளில் நல்ல தகவல்கள் வந்துசேரும். குடும்பத்தார் மற்றும் சுற்றத்தார் மத்தியில் பேரும் புகழும் ஏற்படும். கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். இளைஞர்கள் தகுதிக் கேற்ற நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள். வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோர்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள். மண மாகாத ஆண்- பெண் இருபாலருக்கும் நல்ல வரன்கள் வந்துசேரும். தள்ளிச் சென்ற சுபகாரியம் இனிதே நடக்கும். தொழிலதிபர்கள் தொழிலாளர்கள் உழைப்பால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்; ஆனால் பங்குதாரர்களினால் பிரச்சினைகளைச் சந்திப்பார்கள். வியாபாரிகள் விற்பனையைப் பெருக்குவார்கள். விளம்பரம் போன்ற யோசனைகள் நல்ல பலனைத் தரும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்துக்கு மாறுதலைப் பெறுவார்கள். சொத்துப் பிரச்சினை நல்லபடியாக முடியும். வழக்குகள் வெற்றியாகும். அரசியல் பிரமுகர்கள் புதிய பதவிகளைப் பெறுவார்கள்.அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.தவிர்க்க வேண்டிய தேதி: 8, 17, 26.வணங்க வேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர் மற்றும் துர்க்கையம்மன்.5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:இந்த மாதம் உங்களுக்கு சாதகமான சூழல்கள் அமைந்துள் ளன. எதிர்பார்த்த வரவுகள் வந்துசேரும். வீட்டில் நடக்கவுள்ள சுபகாரியப் பேச்சுகள் தள்ளிப் போகலாம். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை கூடும். மேலைநாடுகளில் வாழ்ந்து வரும் பிள்ளைகள் வந்து சேர்வார்கள். பிள்ளைகள் கல்வியில் உயர்வார்கள். தொழிலதிபர்களின் விடாமுயற்சியால் வளர்ச்சி கூடும். வியாபாரிகளுக்கு இதுவரை வசூலாகாத பழைய பாக்கிகள் வசூலாகும். விலகிச் சென்ற வாடிக்கையாளர்கள் வந்து சேர்வார்கள். பெண்கள் கணவர் வீட்டாரால் பாராட் டப்படுவார்கள். இதுவரை தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகிச் செல்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். அரசியல்வாதிகள் தங்களது அயராத உழைப்பினால் சாதனைகள் படைத்து தலைமையால் பாராட்டப் படுவார்கள்.அதிர்ஷ்ட தேதி: 5; 14, 23, 9. தவிர்க்க வேண்டிய தேதி: 3, 12, 21.வணங்க வேண்டிய தெய்வம்: விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி.6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:இந்த மாதம் முழுவதும் அலைச்சல் உண்டு. யாதொரு காரியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். வரவுக்கு மீறிய செலவுகளை எதிர் கொள்ள வேண்டி வரும். சிக்கன வாழ்க்கை பலன் தரும். தாய்- தந்தையர் பேச்சைக் கேட்டு செயல்படுவார்களே யானால் வளர்ச்சி கூடும். சுப காரியப் பேச்சுகள் தள்ளிப் போகலாம். பெண்களைப் பொறுத்தவரை கடின வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது. நீங்கள் சொல்லும் நல்ல கருத்துகளும் மற்றவர் களுக்கு எதிர்மறையாகத் தெரியும். அரசு ஊழியர்கள் சக ஊழியர்களிடம் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். தொழிலதிபர்கள் புதிய முதலீட்டையும், ஒப்பந்தங் களையும் தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் போட்டி வியாபாரிகளால் நஷ்டத்தை அடையும் நிலை உள்ளது. எனவே போட்டி வியாபாரம் கூடாது. அரசியல்வாதிகள் செய்யும் முயற்சியிலும், வளர்ச்சி நிலையிலும் தேக்கம் உருவாகும். எனவே நிதானத் தைக் கடைப்பிடிக்க வேண்டும்.அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18. தவிர்க்க வேண்டிய தேதி: 3, 12, 21, 30.வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, ஸ்ரீவெங்கடாசல பதி.7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலன்களே அதிகம். இதுவரை நடைபெறாமல் தடைப்பட்டு வந்த திருமணம் நல்லபடியாக முடிவாகும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட தொல்லைகள் மாறும். உறவினர்கள் உங்களுக்கு சாதகமாகவும், உதவியாகவும் இருப்பார்கள். எந்த ஒரு காரியத்திலும் பட்டும் படாமலும் நடப்பதால் காரிய வெற்றிகளை அடைவீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். கணவன்- மனைவி ஒற்றுமை மேலோங்கும். தொழிலதிபர் கள் புதிய தொழிற்சாலை தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார் கள். அரசு ஊழியர்கள் பழைய நிலுவைகள் கிடைக்கப் பெறுவார்கள். கேட்ட இடத்திற்கு மாறுதலைப் பெறுவார்கள். மாணவர்கள் அதிக கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். ரகசியத்தைப் பாதுகாக்கும் பெண்கள் மற்றவர்கள் தொல்லைகளிலிருந்து விடுபடுவார்கள். புதிய வீடு வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். அரசியல் பிரமுகர்கள் சாதனைகளைச் செய்வார்கள்.அதிர்ஷ்ட தேதி: 2, 11, 20; 1, 10, 19. தவிர்க்க வேண்டிய தேதி: 7, 16.வணங்க வேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:இந்த மாதம் நீங்கள் செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றி லும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உடல்நிலையில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாறும். வரவேண்டிய பழைய நிலுவைகள் வந்துசேரும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். தடைப்பட்டு வந்த சுபகாரிய பேச்சு இனிதே நடைபெறும். ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறு வார்கள். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் நல்ல பலனைப் பெறுவார்கள். உடன்பிறந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தொழிலதிபர்கள் கூடுதல் வருமானம் அடைவார்கள். வியாபாரிகள் நல்ல விற்பனையோடு அதிக லாபத்தையும் அடைவார்கள். ஒரு சிலர் வாடகைக்கு இயங்கி வரும் வியாபார ஸ்தலத்தை விலைக்கு வாங்கு வார்கள். மாணவர்கள் இயற்கையாகவே நன்றாகப் படிப்பார்கள். அரசியல் பிரமுகர்கள் தலைமையிடம் அதிக பலன்களைப் பெற்று மகிழ்வார்கள்.அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.தவிர்க்க வேண்டிய தேதி: 4, 13, 22, 31.வணங்க வேண்டிய தெய்வம்: ஸ்ரீ வெங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:இந்த மாதம் உங்கள் உழைப்பின் முழுப் பலனையும் அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும். உடன் பிறந்த வர்களிடையே இருந்துவந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துகள் பங்கீடு செய்வதில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல்நிலை சீராக இருக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை சீராக இருக்கும். பிரிந்து சென்ற கணவன்- மனைவி ஒன்று சேர்வார்கள். குழந்தை பாக்கிய மும் கிட்டும். வீட்டில் சுபகாரிய பேச்சுகள் கூடும். இதுவரை வெளிநாட்டில் இருந்த பிள்ளைகள் வந்து சேர்வார்கள். தொழிலதிபர்கள் திட்டமிட்டபடி புதிய தொழிலைத் துவங்கி நல்ல லாபத்தையும் பெறுவார்கள். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களை அடைவார்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் கண்டு பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்ப்பார்கள். அரசியல்வாதிகளைத் தேடி வெற்றி வாய்ப்புகள் ஓடி வரும். புதிய நண்பர்கள் அறிமுகமும், மக்களிடையே செல்வாக்கும் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.தவிர்க்க வேண்டிய தேதி: 2, 11, 20, 29.வணங்க வேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.
|
|