|
|
கால்களைப் பற்றி நம்மில் எத்தனை பேர் உரிய கவனம் செலுத்துகிறோம்?நம் வாழ்நாள் முழுவதும் நம்மைச் சுமக்கும், கால்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கவனமும், அக்கறையும் எத்தனை பேருக்கு இருக்கிறது?நடப்பதும், நிற்பதும், ஓடுவதும் ஏன் உட்காரும் போதும் கூட, அந்த நேரத்திற்கான விசையுடனும், வேகத்துடனும் நம்மைத் தாங்கி நிற்கும் கால்களைப் பராமரிக்க வேண்டியது அவசியத்திலும், அவசியமானது. எண்சாண் உடலில் சிரசே பிரதானம் என்பார்கள். ஆனால், கால்களும், பாதமும் அதற்குச் சற்றும் குறையாத முக்கியத்துவம் உடையவை என்பதுதான் உண்மை.இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் இருந்துவிட்டு, தற்போது கணுக்கால்களுக்கு மேலே கருத்தும், தடித்தும், புண்ணாகவும் காணப்படும் நிலையில், கலங்கிய கண்களுடன் எனைத் தேடி வந்திருந்தார் அந்த நண்பர். வேட்டியை மடித்து அவரது கால்களின் நிலையை என்னிடம் காட்டினார்.அதைப் பார்க்கையில் எனக்கே வலித்தது.அத்தனை ரணமாகவும், கருத்தும் காணப்பட்டது அவரது கால்களுக்கு மேலே உள்ள பகுதி. மனித உடலில், வாதம், பித்தம், கபம் என மூன்று வகையுண்டு. அவற்றில் கப உடம்புக்கு இது போன்ற பாதிப்பு வரும்.அதிலும் சர்க்கரை வியாதி இருந்தால் கேட்கவே வேண்டாம். உப்புச்சத்து அதிகரிப்பதாலும் இத்தகைய நோய் உண்டாகும்.இது வெறும் தோல் நோய் அல்ல என்பது மட்டும் உண்மை. அதையும் தாண்டி, உடல் ரீதியான வேறு சில குறைபாடுகளுடன், நெருங்கிய தொடர்புடையது.அவரது நோயின் பூர்வாங்கக் காரணங்கள் குறித்து ஆய்வு செய்த நான், தொடர்ந்து மூன்று மாதங்கள் சிகிச்சை அளித்தேன். இப்போதெல்லாம் தைரியமாக வேட்டியை மடித்துக் கட்டுவதாக என்னிடம் ஒரு நாள் கூறினார்.புண்ணும், புரையுமாக காணப்பட்ட அவரது கால்கள், இப்போது தேக்குமரத்தில் கடைந்தெடுத்ததைப் போலத் தெளிவுடனும், பளபளப்பாகவும் காணப்படுகிறது.நோயின் மூலத்தைக் கண்டறிய வர்மமும், அதற்கான சிகிச்சைக்கு சித்தமருத்துவமும் என்பதுதான், எமது தனித்துவம் மிகுந்த மருத்துவக் கோட்பாடு. கருவிகளால் கண்டறிய முடியாத எத்தகைய நோய்களையும் வர்மத்தின் மூலம் கண்டறிந்துவிட முடியும்.தீராத, நாட்பட்ட நோய்களுக்கு, சித்த மருத்துவத்தைத் தவிர வேறு எந்த மருத்துவ முறையிலும் மருந்துகளோ, சிகிச்சையோ கிடைப்பதில்லை. இத்தகைய இரண்டு மருத்துவ முறைகளும் இணைந்தால், குணமடையக் கேட்கவா வேண்டும்.வர்மமும் சித்தமும் இணைந்தால் எந்த நோயும் வந்த வழிபார்த்துப் புறமுதுகிட்டு ஓடுவதென்னவோ நிச்சயம்....
|
|
|
Name |
: |
Mr. Muthu |
Date & Time |
: |
6/26/2012 10:03:08 AM |
-----------------------------------------------------------------------------------------------------
Dear Sir,
Thank you for ur information. ple. advise us to take treatment for me my toe is very rough and very hard. to cure ple.give me a solution.
Regards.
Mr. Muthu -----------------------------------------------------------------------------------------------------
|
|
Name |
: |
Japones |
Date & Time |
: |
6/22/2012 10:42:22 AM |
-----------------------------------------------------------------------------------------------------
You've captured this preftcely. Thanks for taking the time! -----------------------------------------------------------------------------------------------------
|
|
Name |
: |
Mansurali |
Date & Time |
: |
4/17/2012 4:09:52 PM |
-----------------------------------------------------------------------------------------------------
I want you ph. no. or address, my father have same problem pls. -----------------------------------------------------------------------------------------------------
|
|
Name |
: |
sundar |
Date & Time |
: |
4/17/2012 10:58:02 AM |
-----------------------------------------------------------------------------------------------------
DOCTORS CONTACT DETAILS PLEASE . -----------------------------------------------------------------------------------------------------
|
|
Name |
: |
Ragee Arasu |
Date & Time |
: |
4/4/2012 10:09:46 AM |
-----------------------------------------------------------------------------------------------------
ப்ளீஸ் சென்ட் யுவர் போன் நம்பர் இ வில் கால் யு -----------------------------------------------------------------------------------------------------
|
|
|