Skip to main content

வாழ்த்து மழையில் ஜாஹிர்கான்!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

Zaheer Khan

 

இன்று 42-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்திய அணியின் மூத்த வீரர் ஜாஹிர்கானிற்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

 

ஜாஹிர்கான் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இன்று அவர் தன்னுடைய 42-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

 

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி தன்னுடைய வாழ்த்துப் பதிவில், "இந்த வருடம் மகிழ்ச்சியும், வெற்றியும் நிரம்பியதாக இருக்க வாழ்த்துகிறேன் ஜாஹிர்கான்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

இந்திய அணியின் மூத்த வீரரான யுவராஜ் சிங், "ஒவ்வொரு வருடமும் சோம்பேறியாக வளர்ந்து வரும் ஜாஹிர்கானிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்த்துகளும், அன்புகளும் ஜாஹிர்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

Ad

 

பி.சி.சி.ஐ, "தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜாஹிர்கானிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்நன்னாளில் அவர் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய போட்டியினை நினைவு கூறுவோம்" எனப் பதிவிட்டு இலங்கைக்கு எதிராக அவர் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய காணொளியைப் பகிர்ந்துள்ளது.