Skip to main content

தோனியின் பங்களிப்பு விராட் கோலிக்கு அவசியம்! - சுனில் கவாஸ்கர்

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
virat

 

 

 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விளையாட மாட்டார் என இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேர்வாணையம் அறிவித்தது. விராட் கோலி மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடரில் விளையாட மாட்டார் என்றாலும், தோனியின் பெயர் நீக்கப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. 
 

தோனி இனி டி20 அணியில் இடம்பெற மாட்டார் என்று நினைத்த ரசிகர்கள் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களைப் பதிவு செய்தனர். இதற்கு விளக்கமளித்த தேர்வாணையக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தோனிக்கு வழங்கப்பட்ட ஓய்வு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் பேக்-அப்புக்காக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். 

 

 

இந்நிலையில், இந்திய அணியில் தோனி இருக்க வேண்டியதன் அவசியத்தை, முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விளக்கியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்காக இந்திய அணி தயாராகிக் கொண்டிருக்கிறது. அப்போதைய சூழலில் விராட் கோலிக்கு தோனியின் பங்கு மிக அத்தியாவசியமாகத் தேவைப்படும். ஒருநாள் போட்டியென்பது நீண்ட கால அளவு எடுத்துக்கொள்ளும். அதில் தோனி இருந்தால் நிச்சயம் வீரர்களுடான அனுசரிப்பு, வீரர்களுடன் இந்தியில் உரையாடுவது, பந்தை எங்கே பிட்ச் செய்வது உள்ளிட்ட டிப்ஸ்களை வழங்குவார். இது நிச்சயமாக கோலிக்கு பேருதவியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.