Skip to main content

விராட் கோலியின் 100வது டெஸ்ட் - வழியெங்கும் பதாகைகளை வைத்து வரவேற்கத் திட்டம் !

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

virat kohli

 

இந்தியா- இலங்கை அணிகள் இருபது ஓவர் தொடரில் விளையாடி வரும் நிலையில், அடுத்தாக இரு அணிகளும் இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி, மார்ச் 4 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்கவுள்ளது. இந்த போட்டி இந்திய அணியின் நட்சத்திரம் விராட் கோலியின் 100 வது டெஸ்ட் போட்டியாகும்.

 

இதுவரை 10 வீரர்கள் மட்டுமே இந்தியாவிற்காக நூறு டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளார்கள் என்ற நிலையில், அந்த பெருமைமிகு பட்டியலில் விராட் கோலி மார்ச் 4 ஆம் தேதி 11-வது வீரராக இணையவுள்ளார். இந்தநிலையில் இந்த போட்டியில் பங்கேற்க வரும் விராட் கோலியை வரவேற்க விமானநிலையத்திலிருந்து, அவர் தங்கப்போகும் ஹோட்டல் வரை பதாகைகளை வைக்க பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

அதேபோல் ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு செல்லும்  வழியிலும் பதாகைகளை வைத்து விராட் கோலிக்கு வரவேற்பு அளிக்கவும் பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.