Skip to main content

"நான் முயற்சி செய்வது இதைத்தான், புள்ளி விவரங்களெல்லாம்" - விருது குறித்து விராட் கோலி!

Published on 28/12/2020 | Edited on 28/12/2020
virat kohli

 

 

சர்வதேச  கிரிக்கெட் வாரியம், இந்த தசாப்தத்தின் சிறந்த வீரர், சிறந்த ஒரு நாள் வீரர் ஆகிய விருதுகளுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளது.

 

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து விராட் கோலி, "எனது ஒரே நோக்கம் அணிக்கு வெற்றிக்கான  பங்களிப்புகளை வழங்குவதாகும். ஒவ்வொரு ஆட்டத்திலும் அதைச் செய்ய நான் முயற்சி செய்கிறேன். மற்றபடி புள்ளிவிவரங்கள் எல்லாம் களத்தில் நீங்கள்  செய்ய விரும்புவதன் கூடுதல் பிரதிபலிப்பாக இருக்கும்" என கூறியுள்ளார்.

 

மேலும் விராட் கோலி, 2011 உலகக் கோப்பை வெற்றி, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றி மற்றும் 2018ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி ஆகியவை இந்த தசாப்தத்தின் சிறந்த நிகழ்வுகளாக தேர்ந்தெடுத்துள்ளார்.