Skip to main content

விராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது!

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

virat anushka

 

இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும், நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த வருட இறுதியில், அனுஷ்கா - விராட் இணை, தங்களுக்கு குழந்தை பிறக்கப்போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும் ஜனவரி மாதம், குழந்தை பிறக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தனர்.

 

இதைத்தொடர்ந்து, மனைவிக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் அருகில் இருக்க வேண்டுமென, விராட் கோலி, நடந்து வரும் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு போட்டியில் விளையாடிவிட்டு இந்தியா திரும்பினார்.

 

இந்தநிலையில், விராட் கோலி - அனுஷ்கா இணைக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அனுஷ்காவும், குழந்தையும் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள விராட், இந்த நேரத்தில் எங்கள் தனிமையை மதிப்பீர்கள் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.