Skip to main content

கைலாசா செல்வதற்கு விசா எப்படி எடுப்பது..? நித்தியை வம்பிழுத்த அஸ்வின்!

Published on 04/12/2019 | Edited on 05/12/2019

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நித்தியானந்தாவின் புதுநாடான கைலாசா குறித்து வெளிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது. நித்தியானந்தா உருவாக்கிய தனிநாடு கைலாசா தான் கடந்த  சில தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்கு வருவதற்கு என்ன வழிமுறை என்றும் விசா எப்படி பெறுவது என்றும் அல்லது நாட்டிற்கு சென்றவுடன் விசா பெற்றுக்கொள்ளலாமா? என அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.



இதைப்பார்த்த ரசிகர்கள் அஸ்வின் மீது செம்ம காண்டாகியுள்ளனர். அஸ்வினின் இந்த கேள்விக்கு நித்தியானந்தா பாணியிலேயே அவருக்கு பதில் அளித்து கடுப்பாக்கி வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் வெளியிட்ட பதிலில், "சும்மா நாட்டை சுற்றிப்பார்த்தால் போதுமா அல்லது குடியுரிமை வேண்டுமா?" என கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த அஸ்வின் இந்தியாவில் இரட்டை குடியுரிமை என்பது பெரிய விஷயமே இல்லை. என பதில் அளித்திருந்தார். மேலும் சிலர் நித்தியானந்தா உங்களை விட சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஒருவர், "கைலாசாவுக்குள் உள்ளே செல்வது சுலபம் , ஆனால் வெளியே வருவது ரொம்ப கஷ்டம்" என குறிப்பிட்டுள்ளார்.