Skip to main content

இந்தியாவுடன் தொடர் தோல்வி: உலகக்கோப்பை வாய்ப்பை இழந்த இலங்கை அணி!

Published on 01/09/2017 | Edited on 01/09/2017
இந்தியாவுடன் தொடர் தோல்வி: உலகக்கோப்பை வாய்ப்பை இழந்த இலங்கை அணி!

இந்திய அணியுடனான அடுத்தடுத்த தோல்விகளால், இலங்கை அணி 2019-ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை போட்டிகளில் கலந்துகொள்ளும் தகுதியை இழந்துள்ளது. 



இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளை விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகளையும் வென்று இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி. தற்போது, நேற்று நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இதன் மூலம் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்று முன்னிலையில் உள்ளது. ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி ஒயிட்வாஷ் செய்யப்படும் நிலையில் தான் உள்ளது.

இந்நிலையில், ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் ஏழு இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே, உலகப்போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறும். தற்போது இலங்கை அணி 8-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவுடனான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில், 88 புள்ளிகளைப் பெறும். ஆனால், உலகக்கோப்பைக்கு தகுதிபெற 88 புள்ளிகள் போதாது.

இலங்கை அணிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, அடுத்ததாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுடன் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளுடனும் தலா ஒரு போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றாலே, 88 புள்ளிகளைப் பெறும். 

இதனால், கடந்த காலங்களில் உலகக்கோப்பைப் போட்டிகளில் கலக்கிவந்த இலங்கை அணி, 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் நேரடியாக கலந்துகொள்ளும் வாய்ப்பையே இழந்துள்ளது, கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்