Skip to main content

"என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்!" - வீடு திரும்பிய சச்சின் ட்வீட்!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

SACHIN

 

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு, கடந்த 27ஆம் தேதி கரோனா தொற்று உறுதியானது. முதலில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட அவர், பின்னர் மருத்துவர்களின் அறிவுரைப்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

இந்தநிலையில் சச்சின், குணமாகி வீடு திரும்பியுள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், "ஓய்வெடுத்துக்கொண்டு, மீண்டும் நலம்பெறும் வேளையில், தொடர்ந்து தனிமையில் இருக்கப்போகிறேன். உங்களின் நல்வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர், "என்னை மிகவும் அக்கறையாகக் கவனித்துக்கொண்ட மருத்துவப் பணியாளர்களுக்கும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, ஓய்வில்லாமல் உழைக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்" எனக் கூறியுள்ளார்.